எனக்கு மிகவும் பழக்கமான ஒருகம்பனியின் முதலாளி ஒருவர் உண்டு அவர்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்களை மிகவும் கடினமாக நடத்தி அழ அழ வைத்துவிடுவார்கள்.வெளியிடங்களில் கிடைப்பதுபோல் சரியான சம்பளம் கொடுப்பது கிடையாது. பிறருக்கு கொடுப்பது சம்பந்தமான எந்த ஒரு காரியத்திலும் மிகுந்த கஞ்சத்தனம் பிடித்து எல்லோருடைய வயிற்றேரிச்ச்சலை கட்டிகொள்வார்கள்.
நான் இதுசம்பந்தமாக அவர்களிடம் எடுத்துசொல்லியும் எந்த மாறுதலும் இல்லை! ஆனால் அவர்கள் என்னை பார்க்கும்போதெல்லாம் "சுந்தர் உங்களை போல நல்லவரை நான் பார்த்ததே இல்லை. உங்களிடம் ஏதோ அபூர்வசக்தி இருக்கிறது அப்படி இப்படி என்று என்னை புகழ்ந்து வார்த்தைகளால் உயர தூக்கிவிடுவார்.
இவர்களின் உண்மை குணத்தை அறிந்த எனக்கோ இவர்கள் என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டாலே அதிகமான கோபமும் எரிச்சலுமே உண்டாகுமேயன்றி அவைகள் வார்த்தையை கொஞ்சமும் கேட்கவோ ஏற்க்கவோ மனது வராது. "நானும் உங்களைபோல மனிதன்தான் இவ்வளவுக்கும் உங்கள் அளவு எனக்கு வசதியில்லை அப்படியிருந்தும் நான் நேர்மையாக வாழ்வதாக சொல்லும் நீங்கள் அதை என் முயர்ச்சிக்ககூடாது? என்று கேட்டால் நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒருபடி மேல், நாங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் உங்கள் போல எங்களால் இருக்கமுடியாது என்று சொல்லி நழுவி விடுவார்கள்.
செய்யவேண்டிய காரியங்களை ஒழுங்காக செய்யாமல் என்னை பெரியவனாக தூக்கி வைத்து பேசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுவதோ அல்லது அவர்கள் என்னை உயர்த்திவிட்டார்கள் என்று எண்ணி அவர்கள்மேல் எனக்கு மதிப்போ உயர்வது இல்லை மாறாக வெறுப்புதான் மேலோங்கும்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்!
நமதாண்டவர் மனிதனை பார்த்து சொல்கிறார் "ஆவியில் எழிமையாய் இரு, இரக்கம் உள்ளவனாக இரு, நீதி நேர்மை அன்பு உள்ளவனாக சாந்த குணம் உள்ளவனாக இரு" என்று. ஆனால் இதையெல்லாம் அநேகர் ஒரு பொருட்டாக எடுத்துகோள்வதே இல்லை! இதற்க்கு மாறாக நமது இஸ்டப்படி அவரது வார்த்தையை கண்டுகொள்ளாமல் வாழ்ந்துவிட்டு, வாரத்தில் ஒரு நாள் சபைக்கு சென்று "நல்லவரே, வல்லவரே, அன்புள்ளவரே, கருணையுள்ளவரே, எனக்காக மரித்தவரே என்று அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறோம்". இந்த வார்த்தைகளை கேட்டு உண்மையில் தேவன் எரிச்சல்தான் அடைவாரே தவிர நீங்கள் அவரை உயர்த்தி புகழ்ந்துவிட்டீர்கள் என்று எண்ணி உங்கள் மேல் அவருக்கு மதிப்பு உயர்ந்துவிடாது.
தேவன் ஒரு புகழ் விரும்பியல்ல! உங்கள் புகழ் வார்த்தைகள் மற்றும் புகழ்ச்சிகள் அவருக்கு தேவையில்லை. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் நல்லவர்தான்! உங்களையும் அவரைப்போல நல்லவராகவும் பரிசுத்தராகவும் இருக்கத்தான் அழைத்திருக்கிறாரேயன்றி அவரை உயர்த்தி புகழ்ந்துவிட்டு அவர்
வார்த்தைக்கு செவிகொடுக்கவில்லை எனில் உங்களால் தேவனுக்கு எவ்விதத்திலும் பயனில்லை.
வேத வனத்துக்கு கீழ்படியாமல் துன்மார்க்கமாய் வாழும் ஒருவருடைய எவ்வித பலியும் ஜெபமும் அவருக்கு அருவருப்பனதுதான்.