என்னுடைய அனுபவத்திலில் இருந்தும் நான் செய்த தவறுகளின் இருந்தும் சிலவற்றை எழுதிகின்றேன்
எந்த பெண்ணிடம் நாம் பேசினாலும் நமக்கு எண்ணம் தவறாய் தோன்றுமாயின் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது
ஒரு சிலர் அப்படி இருந்தும் அவர்கள் பக்கத்தில் பேசி கொண்டே இருப்பார்கள் பிறகு ஆண்டவரே எனக்கு இந்த இச்சையை எடுத்து போடும்என்னால் முடிய வில்லை என்பார்கள் வேதம் சொல்கின்றது
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
பாவத்தை விட்டு விலகியோடுங்கள்
பாவத்திற்கு நாம் எதிர்த்து நிற்க கூடாது எப்படி எதிர்த்து நிற்க கூடாது என்றால்
(1 ) எந்த பெண்ணை பார்த்தாலும் எனக்கு ஒண்ணுமே ஆகாது எல்லாம் நம்ம கிட்ட தான் இருக்கு
(2 ) நண்பன் கூட ஒயின்(wine ) சாப்புக்கு போகலாம் நாம் அடிச்சதானே தப்பு
(3 ) பெண்களை கேலி கிண்டல் செய்பவர்களிடம் நட்பு வைத்து எந்த நேரமும் அவர்களோடு பேசுவது
இன்னும் நிறைய காரியங்கள் எழுதி கொண்டே போகலாம் அது நமக்கே தெரியும் பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது நாம்
ஆண்கள் பக்கம் திரும்பி நிற்கலாம் நண்பர்களே நீங்கள் உங்களையே கவனித்து பாருங்கள் நாம் நிற்பது பெண்களை பார்த்த படிதான்
இப்படி பட்ட இச்சைகள் நமக்கே தெரியாமல் ஏற்படும் இதை விட வேண்டும் என்றால்
ஒவ்வொரு காரியங்களை நாம் யோசித்து யோசித்து செய்தோமானால்
தேவனுக்கு இது பிடிக்காது தேவன் இதை வெறுக்கின்றார்
அவர் நம்மை பார்க்கின்றார்
என்று எந்த நேரமும் நாம் அவரையே நினைத்து கொண்டு இருப்போம்மானால் நாம் செய்கின்ற தவறுகள் நமக்கு தெரிய படுத்துவார் அப்பொழுது நாம் ஜாக்கிரதியாய் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும் இவற்றை கை கொள்ளாமல்
தெரிந்த எல்லா பெண்களிடம் பேசி கொண்டே இருந்து ஆண்டவரே என்னால் முடியல முடியல என்று நாம் சொல்ல கூடாது
நேரம் இல்லாததால் வசனங்களை பதிக்க முடியவில்லை பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
தள சகோதர்கள் பதிவை தருபடி கேட்டுகொள்கின்றேன் எனக்கும் மற்றவர்களுக்கும் பிரோஜினமாய் இருக்கும் என்று நான் நபுகின்றேன்
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 9th of December 2010 07:36:27 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
வாலிபன் தன வழிகளை எவ்வாறு சுத்தப்படுத்தே வேண்டும் என்பதை குறித்து வேதவசனம் மிக தெளிவாக சொல்கிறது:
சங்கீதம் 119:9வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
இவ்வாறு வேத புத்தகத்தை முழுமையாக வாசித்து, தேவனின் வசனங்களை தியானித்து ஆராய்ந்து அந்த வசனங்களின் அடிப்படையின் தன்னை காத்து கொள்கிறவனே பாக்கியவான். அந்த வசனங்கள் நமக்கு நிச்சயம் பாரமனவை அல்ல! அவைகள் நம்மை ஒரு சன்யாச வாழக்கைக்கும் நடத்தவில்லை. எந்த ஒரு நன்மையையும் இன்பத்தையும் தேவன் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அனுபவிக்க தேவனின் வார்த்தைகள் நமக்கு அனுமதி அளிக்கிறது. அந்த வட்டத்துக்கு வெளியே போகும்போதுதான் பாதிப்பு ஏற்ப்படுகிறது
ஒரு வாலிபன் இயேசுவிடம் வந்து ஜீவனில் பிரவேசிக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது, இயேசு சொன்ன வார்த்தை
ஒரு வாலிபன் ஆண்டவராகிய இயே சுவின் ரட்சிப்பை பெற்று பாவங்களில் இருந்து விடுதலையானபின் தேவனின் வார்த்தைகள்படி தன்னை பாதுகாத்து கொள்ளும்போது அவ்வார்த்தைகள் அவனை நிச்சயம் பாதுகாக்கும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)