"அன்னையின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை" என்று சொல்வார்கள்! "அன்னையை போல் ஒரு தெய்வம்இல்லை" என்று கவிஞனும் பாடியிருக்கிறார்.
நமது ஆண்டவரும்
ஏசாயா 49:15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?
என்று ஒரு கேள்வியை எழுப்பிய அவர், பின்னாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்று அறிந்ததாலோ என்னவோ
அவர்கள் மறந்தாலும், நான்உன்னைமறப்பதில்லை.என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு மிக உயர்ந்த அன்பாக போன்றப்படும் தாயின் அன்பே தள்ளாடிப் போனதை கீழ்கண்ட சொகமானை செய்தியை படித்து அறிந்துகொள்ளுங்கள்!
இதோ இன்று நான் படித்த மிகவும் சோகமான ஒரு செய்தி!
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி அருகே உடல் ஊனமுற்ற மகனை உயிருடன் புதைத்த ஈழத் தமிழ் அகதிப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமில் வசிப்பவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு யோகீஸ்வரி என்ற மனைவியும், மணிகண்டன், விக்னேஸ்வரன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
மணிகண்டன் போலியோ நோயால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாமல் அவதிபட்டு வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த யோகீஸ்வரியின் தம்பி மகேஸ்வரன், மணிகண்டனை வீட்டில் காணாது குறித்து அவரிடம் கேட்டார். அப்போது யோகீஸ்வரி முன்னுக்கு பின் பேசினார்.
பின்னர் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் உயிருடன் புதைத்ததாகத் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மாசார்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து யோகீ்ஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறுகையில், நான் ஏற்கனவே வறுமையால் வாடி வருகிறேன். இதனால் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மணிகண்டனை என்னால் கவனிக்க முடியவில்லை. அவனை கவனிக்க வேண்டி இருந்ததால் நான் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தி்ல் கடந்த 8-ம் தேதி அதிகாலை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் குழி தோண்டி அவனை உயிருடன் புதைத்தேன் என்று தெரிவித்துள்ளார்
ஒரு தாய் தான் பெற்ற மகனையே உயிரோடு குழிதோண்டி புதைக்கும் நிலைமைக்கு சென்றிருக்கிறாள் என்றால் அவளின் நிலை என்ன? .
இந்த செய்தியை ஒரு செய்தியாக கருதாமல் அந்த காட்சியை உங்கள் கண்முன் கொண்டுவந்து "உன்னை நேசிப்பதுபோல் பிறரைநேசி" என்று ஆண்டவர் சொல்லி யிருப்பதால் அந்த நிலையில் நாம் இருந்தால் எப்படியிருக்கும் என்று சற்று கற்ப்பனை பண்ணி பாருங்கள்.
பையனின் வயது என்னவென்பது குறிப்பிடப்படவில்லை. அது நிச்சயம் கைக்குழந்தையாக இருந்திருக்க வாய்ப்பில்லை! ஏனெனில் போலியோ என்பது நடக்கும் பருவத்தில்தான் அதன் பாதிப்பை அறிய முடியும் ஒருவேளை. பேச தெரிந்த பிள்ளையாக இருந்திருந்தால் "அம்மா என்னை புதைக்காதீர்கள், ன்மேல் மண்ணை அள்ளி போட்டு மூடாதீர்கள் அம்மா" என்று கதறி அழுதிருக்கும் ஆனால் இந்த தாயோ வெறிப்பிடித்த நிலையில் மண்ணை அள்ளி அள்ளி போடுகிறாள் ஐயோ! நினைத்து பார்க்கவே மிகுந்த துக்கத்தை கொண்டுவரும் நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த உலகில் சாத்தானின் கொடுமைகள் கட்டுக்கு அடங்காத நிலைக்கு போய் விட்டதை அறிய முடிகிறது. சமீபத்தில் சேனல்4 ல சிங்கள ராணுவத்தினரால் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சில சகோதரிகளின் காரியங்களை படித்தபோது அங்கு மனிதர்களே அல்ல பிசாசுகள்தான் மனிதனாக வாழ்கின்றன என்பதை அறியமுடியும்! ஆவியாய் இருக்கும் பிசாசுகளால் இங்கு எந்த தொல்லையும் வரப்போவது இல்லை. ஆனால் மாமிசமாக அலையும் மனித பிசாசுகளை பார்த்துதான் நாம் பயப்படவேண்டிய நிலை உள்ளது. எங்கும் சுயநலமும், பணபேய்களும் தலைவிருத்து ஆடிக்கொண்டு இருக்கிறது!
தேவனால் உருவாக்கப்பட்ட அவரது பிள்ளைகளை ஆதியில்இருந்து இன்றுவரை இவ்வாறு கொடூரமாக கொன்றுசிதைத்து கொல்வதில் சாத்தானுக்கோ கொள்ளை பிரியம். காரணம் உன்னத நிலையில் நிலைக்கு ஏற நினைத்த தன்னை கீழே தள்ளிவிட்ட தேவனை பழிக்கு பழி வாங்குகிறானாம்! அவன்தான் தேவனின் குமாரனையே சித்ரவதை செய்து கொன்றவன் ஆயிற்றே! பின்னர் நம்போன்ற சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்!
தேவனோ எல்லோரும் மீட்கப்படவேண்டும் என்றுநீடிய பொறுமையோடு காத்திருக்கிறார். ஒருநாள் நிச்சயம் முடிவு உண்டு என்று நாம் எதிர்பார்த்திருப்போம்!
அன்னையின் அன்பே அனேக துன்பங்கள் வந்தால் காணாமல் போய்விடும் என்பது நடைமுறை உண்மை. இந்நிலையில் ஆண்டவரை தேடுங்கள் என்று போதித்தால் "அன்புதான் பெரிது" என்று பெரியதாக பேசிக்கொண்டு சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தவிதமான அயோக்கியத்தனையும் செய்ய தயாராக இருக்கும் சாத்தான்கள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை கருத்தில் கொள்க. தேவனின் வார்த்தையை கைகொள்வதேயன்றி தேவ அன்பில் ஒருவரும் நிலைத்திருக்கு முடியாது என்பதை நான் திட்டவட்டமாக சொல்ல விளைகிறேன். அதை இயேசுவும் அறிந்ததால்தான்:
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்
யோவான் 14:23இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
அவர் வார்த்தையை கைகொள்வது மட்டுமே நம்மை தேவ அன்பில் பூரணப்படுத்தும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)