இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் எழுதும் கட்டுரைகள் புரிவதில்லையா?
எனது எழுத்துக்களை தங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? [3 vote(s)]

எதுவுமே புரியவில்லை!
0.0%
புரிவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது!
0.0%
ஓரளவுக்கு புரிகிறது இன்னும் விளக்கம் தேவை
0.0%
மிகவும் நன்றாக புரிகிறது
100.0%


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நான் எழுதும் கட்டுரைகள் புரிவதில்லையா?
Permalink  
 


அருமையான தள சகோதர்களே நண்பர்களே.
 
நான் எழுதும் கட்டுரையை சாதாரணமானவர்கள்  புரிந்துகொள்வதர்க்கு கடினமாக இருக்கிறது என்றும் "எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுத வேண்டும்" என்றும்  ஒரு அருமை சகோதரர் என்னை தனி மடலில் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின்  இந்த அறிவுறுத்துதல் குறித்து என்னால் எந்த கருத்தும் கூற முடிய வில்லை. நான் எங்கு தவறு செய்கிறேன் என்று எனக்கே புரியவில்லை!
 
நமது முதுகை நாம் பார்க்க முடியாது! அதுபோல் நாம் செய்யும் தவறுகள் நமக்கு பல நேரங்களில் தெரியாமல் போய்விடுகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு நேரம் செலவழித்து எழுதியும்  படிப்பவருக்கு  புரியாமல் எழுதுவதில் எந்த பயனும் இல்லை. எனவே அவரது கூற்றை  மிக முக்கியமான ஒன்றாக கருத்தில் கொண்டு  எனது தவறை ஆராய்ந்து என்னை உடனடியாக திருத்தி கொள்வது  நல்லது என்று கருதுகிறேன்.
  
நான் என்னை ஆராய்ந்து திருத்திகோள்ளவும், என்னுடைய கருத்துக்கள் பிறருக்கு புரியும்படி சரியான  விளக்கம் கொடுக்கவும் எதுவாக  நமது தள சகோதரர்கள் எனது எழுத்துக்களில் எதாவது  புரியாக பகுதி இருந்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் 
 
மேலும் நான் எழுதும் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அதை படிக்கும் தங்களுக்கு கருத்து சரியாக புரிகிறதா இல்லையா என்பதை ஏதாவது ஒரு தெரிவை சொடுக்கி   சற்று தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
 
மேலும் நான்  எங்கு தவறுசெய்கிறேன் என்பதுபற்றி ஓரிரு வரிகளில் தெரியபடுத்தினால் என்னை திருத்திகொள்ள அது  எதுவாக இருக்கும்!
 
சகோதரனாக எண்ணி எனக்கு  புத்திசொல்லுங்கள்.

அன்புடன்
சுந்தர்  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே நீங்கள் எழுதும்  காரியங்கள் எல்லாம் நன்குபுரிகின்றது தேவனை பற்றியும் வேதத்தை பற்றியும் இருந்த அனேக சந்தேகங்கள் உங்கள் பதிவால் எனக்கு நீங்கி விட்டது கடவுளுக்கு நன்றிகள் பல

நீங்கள் சரி செய்து கொள்ள  தேவை இல்லை உங்கள் வார்த்தைககளை கேட்டு நாங்கள்தான் சரி செய்து கொள்ள வேண்டும்

 
இன்னும் ஒன்றை சொல்கின்றேன் உங்கள் வார்த்தைகளுக்கு குறை கூறி கொண்டு இருக்கும்
ஒரு சகோதரர் அவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் எல்லாம் அதிகமாக புரியும் (எல்லாரையும் விட ) ஆனாலும் உங்களை எதிலே குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று எண்ணத்தோடு இருப்பதால் அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது அவரால் ஏற்று கொள்ள முடிய வில்லை என்று தான் கூற வேண்டும்
 
சகோ : அன்பு அவர்களும் மற்றும் சுந்தர் அவர்களும் வாதிட்டாலும் அவர்கள் வாதிட வாதிட பல காரியங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது அதாவது தோண்ட தோண்ட தான் தண்ணீர் வரும் என்பது போல
 
ஆனால் ஒருவர் அப்படி இல்லாமல்  தன் கருத்துகளையும் சொல்லாமல் எப்பொழுதும்  குறை மட்டும் கூறி கொண்டு இருக்கிறார்
அவருக்கு புரிய வைக்கவும் முடியாது அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார் 
 
எனக்கு தெரிந்து அவர் இப்பொழுது எந்த நிலைமையில் இருக்கின்றார் என்றால்
 
ஒரு ஹவுஸ் கீப்பிங் பாத்தரும் உள்ளேயே வேலை செய்து கொண்டு  இருப்பதால் அவனிடம் சென்று பாத்தரும் நாற்றம் அடிக்கின்றது என்றால்அப்படியா என்று தான் கேட்பான் 

ஏனென்றால் அவனுக்கு அந்த நாற்றம் தெரியாது அது அவன் மேல் உள்ள தவறு அல்ல அவன் எப்பொழுது  பாத்தரும் உள்ளேயே இருப்பதால் அதில் அவன் பழகி போய்விட்டான் என்பது தான் உண்மை............................................
 
ஞானிகளுக்கு புரியும் என்று எண்ணுகின்றேன்.


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 22nd of January 2011 01:40:43 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தள நிர்வாகியையும் என்னையும் தவிர சுமார் 70௦ பதிவு செய்யப்பட்ட சகோதர சகோதரிகள் உள்ள இந்த தளத்தில் அட்லீஸ்ட் மூன்றுபேராவது  முன்வந்து, நான் எழுதும் கருத்துக்கள்   " மிகவும் நன்றாக புரிகிறது" என்று  கருத்தை தெரிவித்தமைக்கு அவர்களுக்கு   கர்த்தருக்குள்  எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.
 
ஆண்டவர் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஆசீர்வதித்து, தங்களின் வாசஸ்தலங்களிலும் வேலை ஸ்தலங்களிலும் மிகுந்த சமாதானத்தை கட்டளையிடுவாராக!
 
மற்ற  சகோதர சகோதரிகளுக்கு நான் எழுதுவது சரியாக புரியவில்லையா அல்லது நான் எழுதுவதே பிடிக்கவில்லையா? அல்லது  எதுவும் கருத்து சொல்ல மனதில்லையா தெரியவில்லை!
 
அவர்களையும் ஆண்டவர் அதிகமதிகமாய் ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள்!
 
தங்கள் கருத்தை தெரிவித்த குறைந்தபட்ச சகோதரர்கள் மூவருமே "நன்றாக புரிகிறது" என்று  குறிப்பிட்டுவிட்டபடியால்  நான் எனது எழுத்துக்களில் இன்னும் புரியும் விதமாக மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.
 
திறந்த மனதோடும்,  நிறைந்த விசுவாசத்தோடு படித்தால் எனது எழுத்துக்கள் நிச்சயம் புரியும் என்றே நான் கருதுகிறேன். ஆண்டவர்தாமே படிப்பவர்களுக்கு   எழுதப்படும் கருத்துக்களை புரியும் அளவுக்கு ஞானத்தை தருவாராக!
 
மேலும் எனதுஎழுத்துக்கள் சம்பந்தமான எதாவது ஆலோசனை தரவிரும்பினால் நிச்சயம் வரவேற்கிறேன்!  நன்றி!  
 
அன்புடன்
சுந்தர்  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard