நான் கேட்டறிந்த ஒரு நல்ல கருத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன்: (பலர் கேட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்)
ஒரு தேள் ஓன்று தண்ணீரில் விழுந்து மூழ்கி வாழ்வுக்காக போராடிக்கொண்டு இருந்ததாம். அப்பொழுது அந்தவழியாக வந்த ஒருவர் அதன்மேல் இரக்கப்பட்டு அதை காப்பற்றுவதர்க்காக கையை கொண்டு அந்த தேளை தூக்க, அந்த தேளோ அவரை தன் கொடுக்கால் கொட்டிவிட்டது. வலி தாங்காமல் தேளை விட்டுவிட்ட அவர் மீண்டும் அது நீரில் மூழ்கவே, மீண்டும் தனது கையால் அதை தூக்கினார் ஆனால் தேள் மீண்டும் ஒரு கொட்டு கொட்டிவிட்டது
அந்த வழியாக வந்த ஒருவர் தேள் பிடிப்பவரை பார்த்து "உமக்கு அறிவு இருக்கிறதா? தேள் கொட்டும் என்று உமக்கு தெரியுமே, பிறகு என் அதை காப்பாற்ற முயல்கிறீர்" என்று கேட்டாராம்.
அதற்க்கு தேளை தூக்கிவிட்டவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"தேளின் குணம் யார் அதை தொட்டாலும் கொட்டுவதுதான் ஆனால் எனது குணம்மோ யார் துன்பபட்டாலும் அவர்களை காப்பாற்றுவது!
தேள் தனதுகுணத்தை தொடர்ந்து காட்டட்டும் நானும் எனது குணத்தை தொடர்ந்து காட்டுகிறேன். தேள் தனது குணத்தை காட்டுகிறது என்பதற்காக நான் எனது குணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றாராம்.
இந்த நிகழ்வின் அடிப்படை கருத்து :
இந்த உலகில் சாத்தானும், சாத்தானால் பீடிக்கப்பட்டு இருப்பவர்களும் அவர்களது அடிப்படை குணமாகிய தீமையில் நிறைந்து , தீமையை செய்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் செய்யும் பல்வேறு செயல்கள் கொடுக்குபோல நம்மை கொட்டத்தான் செய்யும். அதற்காக நாம் நமது குணத்தையும் பணிகளையும் மாற்றாமல், நாம் செய்ய வேண்டியவைகளை செய்து கொண்டேதான் இருக்கவேண்டும்.
ஒரு இரக்க குணம் உள்ளவன் என்னதான் துன்பங்களை சந்தித்தாலும் அவன் இரக்கப்படுவதை நிறுத்த மாட்டான். அதுபோல் பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவன் ஒருவன் அதனால் என்னதான் சங்கடங்களை அனுபவித்தலும் பிறருக்கு உதவுவதை நிருத்த மாட்டன். நிறுத்தவும் கூடாது! சாத்தனின் எந்த கொட்டுக்கும் பயப்படாமல் நமது கடமைகளை நாம் சோர்ந்து போகாது செய்து கொண்டே இருப்போம்.
வெளி 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
நற்க்கிரியைகளுக்காக தேவன் அளிக்கும் பலன் நிச்சயம் அவர் வரும்போது கூட வரும்!
ஏற்கனவே கேள்விப்பட்ட கதையென்றாலும் அருமையான ஒரு செய்தியை இதன் மூலம் தந்திருக்கிறீர்கள்.
ஒரு இரக்க குணம் உள்ளவன் என்னதான் துன்பங்களை சந்தித்தாலும் அவன் இரக்கப்படுவதை நிறுத்த மாட்டான். அதுபோல் பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவன் ஒருவன் அதனால் என்னதான் சங்கடங்களை அனுபவித்தலும் பிறருக்கு உதவுவதை நிருத்த மாட்டன். நிறுத்தவும் கூடாது! சாத்தனின் எந்த கொட்டுக்கும் பயப்படாமல் நமது கடமைகளை நாம் சோர்ந்து போகாது செய்து கொண்டே இருப்போம்.