இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாட்சி சொல்வதினால் வீழ்ச்சி வருமா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சாட்சி சொல்வதினால் வீழ்ச்சி வருமா?
Permalink  
 


அனேக ஊழியங்களில் இருந்து வெளிவரும் இதழ்களில் விசுவாசிகள் "நான் இந்த காரியம் நடந்தால் சாட்சி எழுதுவதாக ஜெபித்திருந்தேன் அந்தகாரியம் நடந்தது" என்ற விதத்தில் பல சாட்சிகளை எழுதியிருப்பதை பார்க்க முடியும். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் நான்  பலமுறை கேட்ட வார்த்தைகள் "சாட்சி சொல்வதினால் துன்பங்கள் உண்டாகிறது" என்பதே.

அவ்வாறு நான் கேள்விப்பட்டது:

"எனக்கு சாட்சி சொல்லவே பயமாக இருக்கிறது. நான் பல முறை துணிந்து சாட்சி சொல்லியும் சொல்லிய  சில நாட்களிலேயே எல்லாமே தலைகீழாக நடக்க ஆரம்பித்து விடுகிறது. உதரணமாக  பள்ளியில் படிக்கும் எனதுமகள் முதல் ராங்க வாங்கியிருக்கிறாள் என்று பெருமையாக சாட்சி சொன்னேன். அதன் பிறகு அவளால் ஒரு நேரம்கூட முதல் இடத்தை பிடிக்க முடியாமல் போயிட்டது. என் பிள்ளைகள் எனக்கு நன்றாக கீழ்படிவார்கள் என்று சாட்சி சொன்னேன். இப்பொழுது எனது மகன் எதர்க்கெடுத்தாலும் என்னை எதிர்த்து பேசுகிறான். 

"எங்கள் வீட்டில் சண்டை பிரச்சனைகள் வரவே செய்யாது என்று அன்றுதான் சொல்லிவிட்டு வந்திருப்பேன், அன்று இரவே மிகப்பெரிய சண்டை வீட்டில் உருவாகி நான் யாரிடம் சாட்சியாக சொன்னேனோ அவர்கள் முன்னமே அவமானப்பட நேர்ந்தது.

எனக்கு இருந்த வாயிற்று வலி குணமாகிவிட்டது என்று சாட்சி சொல்லிவிட்டு வந்த அன்று இரவே எனக்கு அந்த பயங்கர வாயிற்று வலி எனக்கு  வந்துவிட்டது.

இறுதியாக
மாதத்தில் ஒருநாள் தங்கள் வீட்டில் ஜெப கூட்டம் வைத்து வரும் எல்லோருக்கும் இறுதியில் சாப்பாடு போட்டு அனுப்பும் ஒரு தம்பதியினர். வியாழக்கிழமை நடந்த கூட்டத்தின் போது "எங்கள் வீட்டை தேவன் அதிகமாக பாதுகாத்து வருகிறார். கடந்த பத்து வருடமாக நாங்கள் ஆஸ்பத்திரிக்கே செல்லவில்லை" என்று சாட்சி சொன்னார்.

ஆனால் அந்த வாரம் சனிக்கிழமையே ஒரு வாகன விபத்தில் மாட்டி மிகப்பெரிய ஆப்பரேசன் செய்யபட்டு கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் இருக்கிறார்.

இறைவன் செய்த நன்மைகளை எடுத்து சொல்வது என்பது  மற்றவர்களை விசுவாசத்துக்குள்  நடத்துவதற்கு உதவும் ஒரு நல்ல செயல்.  அதே நேரத்தில், ஆண்டவர் நாமம் மகிமைப்படும் இந்த செயல் சாத்தனுக்கு சற்றும்  பிடிக்காத ஒன்றுதான் என்பதை நம்மால் அனுமானிக்க முடிகிறது.

ஆகினும் இந்த காரியம் பற்றிய சரியான உண்மை என்ன? சாட்சி சொன்னால் துன்பம் வருமா? அதை மேற்கொள்ள வழி என்ன?no.gif



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இறைநேசம் wrote:

 இறைவன் செய்த நன்மைகளை எடுத்து சொல்வது என்பது  மற்றவர்களை விசுவாசத்துக்குள்  நடத்துவதற்கு உதவும் ஒரு நல்ல செயல்.  அதே நேரத்தில், ஆண்டவர் நாமம் மகிமைப்படும் இந்த செயல் சாத்தனுக்கு சற்றும்  பிடிக்காத ஒன்றுதான் என்பதை நம்மால் அனுமானிக்க முடிகிறது.


இந்த  உலகத்தில்  எவருமே  சந்தோஷமாக  இருப்பதை  பார்த்தால் சாத்தானுக்கு பிடிக்கவே பிடிக்காது! அதிலும் தேவனுடைய  வழிபடி  வாழும் பிள்ளைகள்மேல் அவனுடய கண்கள் எப்பொழுதும் இருப்பதோடு அவர்களை எங்கு குறை கண்டு பிடித்து தேவனிடம் குற்றம் சுமத்தலாம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பான். (யோபுவை நினைத்துகொள்ளுங்கள்).

 
வெளி 12:10  ; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்
 
அதே சாத்தானின் ஆவியால் பீடிக்கப்பட்ட அனேக மனுஷர்கள் கூட இன்று அடுத்தவர் சந்தோசப்படுவதை பார்த்து பொறுக்க முடியாமல் அவர்களை எதாவது பிரச்சனையில் இழுத்து விடுவதையும் பில்லி சூனியம் போன்ற காரியங்களில் இறங்கிவிடுவத்தையும்  நாம் பலமுறை வாழ்க்கையில் பார்த்திருக்கலாம்.  
 
அடுத்தவர் சந்தோசப்படுவதை பார்த்து நாம் சந்தோசப்படுவது மிக உயர்ந்த தெய்வ
நிலை அட்லீஸ்ட் அடுத்தவர் சந்தோசப்படுவதை பார்த்து  வயிரெறியாமலாவது இருப்பது மனுஷ நிலை! ஆனால் அடுத்தவர் சந்தோசப்படுவதை பார்த்து வயிறேரிந்து அவர்களை எப்படி திட்டம்போட்டு  எங்கு கவிழ்க்கலாம் என்று எண்ணுவது சாத்தானின் நிலை.  அதுபோன்றதொரு குணம் உங்களிடம் இருக்குமானால் உடனே ஆண்டவரிடம் அறிக்கை செய்து அதிலிருந்து  விடுபட மன்றாடுங்கள்
 
மனுஷன்  சந்தோஷமாக இருப்பது சாத்தானுக்கு  கடுப்பான ஒரு காரியம்.  இந்நிலையில் ஒருவர் தேவனுக்கு  மகிமை உண்டாகும் சாட்சியை சொல்ல அதனிமித்தம் மகிழ்ச்சியடையும்போது  அதனிமித்தம் கோபம்கொள்ளும் சாத்தான்  அவர்களை ஏதாவது ஒருவிதத்தில் தந்திரம் செய்து  கவிழ்த்துவிட வகை தேடுகிறான். அவனது தந்திரத்தில் அநேகர் விழுந்து போவதனாலேயே சாட்சி சொல்லி சில நாட்களிலேயே பல காரியங்கள் தலைகீழாக நடக்க ஆரம்பித்து விடுகின்றன.
 
எனவே தேவனுக்கு மகிமையை கொண்டுவரும் சாட்சிகளை சொல்வது நிச்சயம் மகிமையானது. ஆனால் அந்த சாட்சியைசொல்வது தேவனுக்கு பிரியமா என்பதை முதலில் ஜெபித்து முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் இயேசு சிலரிடம் தான் செய்த அற்ப்புதத்தை பிரசித்தி படுத்தும்படி சொன்னார் சிலரையோ யாருக்கும் சொல்லவேண்டாம் என்று சொன்னார். 
 
இந்நிலையில் சொல்லும்படி முடிவெடுக்கப்பட்ட சாட்சியிலும் என்னை பொறுத்த வரை வெறும் பணம், உலகப்பொருள் மற்றும் இந்த உலக காரியங்கள் குறித்த
சாட்சியை சொல்வது தேவையற்றது என்றே கருதுகிறேன். ஆனால் உலக இன்பங்களையே நாடும் மக்கள்  அவ்வித சாட்சிகளே அதிகம்  சொல்ல விளைகின்றனர். அவ்வித காரியங்களை சாத்தானால் ஒரு நொடியில் திருப்புவிட முடியும். 
 
ஆனால் பரிசுத்த வாழ்க்கை குறித்த, நித்தியத்துக்கு மகிமையை தரும் சாட்சிகளையும் தேவனின் மகிமை குறித்த காரியங்களையும் நாம் சாட்சியாக  பகிர்ந்துகொள்ளும்போது அதனால் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை!   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

Nesan wrote:

"எனக்கு சாட்சி சொல்லவே பயமாக இருக்கிறது. நான் பல முறை துணிந்து சாட்சி சொல்லியும் சொல்லிய  சில நாட்களிலேயே எல்லாமே தலைகீழாக நடக்க ஆரம்பித்து விடுகிறது. உதரணமாக  பள்ளியில் படிக்கும் எனதுமகள் முதல் ராங்க வாங்கியிருக்கிறாள் என்று பெருமையாக சாட்சி சொன்னேன். அதன் பிறகு அவளால் ஒரு நேரம்கூட முதல் இடத்தை பிடிக்க முடியாமல் போயிட்டது. என் பிள்ளைகள் எனக்கு நன்றாக கீழ்படிவார்கள் என்று சாட்சி சொன்னேன். இப்பொழுது எனது மகன் எதர்க்கெடுத்தாலும் என்னை எதிர்த்து பேசுகிறான். 

"


 பெருமை" இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .  " பாருங்கள் கர்த்தர் எனக்கு நன்மை செய்துள்ளார் ஏனென்றால் நான் நீதிமான்" - என்று மனதிற்குள் நினைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாட்சி சொல்லும்  அந்த ஒரு நிமிடம் சாத்தான் பெருமையை கொண்டு வந்திருக்கலாம்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்களே!!


படைக்கப்பட்டவைகள் எல்லாம் தேவனுக்கு சாட்சி என வேதம் சொல்லுகிறது..
ஆக போக்கு சொல்ல இடம் இல்லை எவர்க்கும் !!

ரோமர் 1:20 காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்லஇடமில்லை

சபையில் விசுவாசிகள் பகிரும் சாட்சி என்பது யாருக்கு அல்லது எதற்கான சாட்சி என்பதை சிந்திக்க வேண்டும்...

சபையின் பிள்ளைகள் முன்பாக கர்த்தருக்கு சாட்சி எதற்கு.. சத்ரு முன்பாக / சத்ருவின் பிள்ளைகள் முன்பாக தானே இன்று சாட்சி தேவை!!!
இன்ன இன்ன நன்மைகள் எல்லாம் என் சபையை சார்ந்தோருக்கு நிகழ்கிறது என பத்திரிகையில் பிரசித்தம் பண்ணினாலும் அப்பம் தின்ன தேவனை தேடின அன்றைய கூட்டத்தை போன்ற ஒரு கூட்டமே கூடி வரும். நன்மைகளை பெற்ற பின் வாங்கும்.. 

யோவான் 6:26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

தேவன் தமக்கு சாட்சியாக நிலைத்திருக்கிறவைகளை,மாறாதவைகளை சாட்சியாக ஏற்படுத்தினார். இத்தகைய சாட்சிகளை,கற்பனைகளோடு  கைகொள்ள தான் வேதம் அறிவுறுத்துகிறது என்பது திண்ணம்.

உபாகமம் 6:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

வேதம் நிலையானது. அநேகருடைய வாழ்வை நற்சாட்சியாய் முன்னிறுத்துகிறது.. அதை பின்பற்றி ஒழுகுவோம். அதுவே நல்லது!!

நாம் நேர்ந்துகொண்டதை கர்த்தர் நமக்காக நினைத்தருளுவார் என்றால் நம் பொருத்தனையை அனைவர் முன்பாக செலுத்தலாம்.அவர் நாமம் மகிமை அடையும்.

சங்கீதம் 116:14 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

லாப நஷ்டங்களில் இருந்து காணிக்கைகளை இடதுகை அறியாமல் செலுத்துவோம். அதுவும் அவருக்கு புகழுண்டாக்கும்..

வேண்டின நன்மை நடக்கும் பொது சங்கீதம் பாடலாம். அதுவும் நல்லது.வேதத்தில் அதை பற்றிவுள்ளது..

ஆனால் உலகநன்மையை பெற்றேன்,விசேஷ அனுபதைபெற்றேன்,அபிஷேகத்தை பெற்றேன் என சபையில் சாட்சிகூறி தேவ நாமத்தை மகிமை படுத்திய காரியங்கள் வேதத்தின் நானறிந்து இல்லை. எத்தனை சபைகளில் விசுவாசிகள் தாமாக முன் வந்து சாட்சி சொல்கிறார்கள்!!!
சொற்பமே..

வேதம் சொல்லும் நான் விருப்பும் சாட்சிகள் மேற்கூறியபடி சாட்சி சொல்லியவர்கள் அல்ல. அவர்கள் என் தேவனின் பலிபீடத்தின் கீழ் உள்ளவர்கள்!!

கிறிஸ்துவின் நிமித்தம் ஜீவனையும் கொடுத்த உத்தமர்கள்!!!

வெளி 6 :9. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.

ரத்த சாட்சிகள்!!! (இப்படி அல்லவா  நம் அன்பு தேவனை  நாமும்  மகிமைப்படுத்த வேண்டும் !!!)


கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!

----------------------------------------------------------------
வெளி 12:11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள்சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

 



-- Edited by JOHN12 on Wednesday 11th of July 2012 04:29:04 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

என்னை பொறுத்தவரை வேத புத்தகம் முழுவதுமே உலகம் அனைத்திற்கும்,தேவனை அறிந்தவர்களின்அறிவித்த பகிரங்க சாட்சிதான்!
.
இயேசு தான் பிதாவுக்கடுத்த காரியங்களை போதித்ததும் சாட்சிதான்:  
யோவான் 3:32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
யோவானின் வெளிப்படுத்தின விசேஷமும் ஒரு சாட்சி புத்தகம்தான்:
வெளி 1:2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
.
அப்போஸ்த்தலர் பவுலின் கிறிஸ்த்துதரிசனம் மற்றும் அவரது
வாழ்க்கையே அவருடைய சாட்சிதான்!  
.
எரேமியா, எசேக்கியேல், ஏசாயா மற்றும் எல்லா தீர்க்க தரிசிகளுமே தாங்கள கண்டதையும் கேட்டதையுமே சாட்சியாக எழுதினார்கள்.
.
தேவ மனுஷர்களும் தீர்க்கதரிசிகளும் அன்று எழுதிவைத்த 
சாட்சிகளே இன்று நமக்கு தேவனை பற்றிய   மேலான உண்மைகளை தெரிவிக்கின்றன.
.
இயேசு தான் அற்ப்புதம் செய்த சில மனுஷர்களிடம் அதை பகிரங்க படுத்தவேண்டாம் என்று கூறினார் சிலரிடம் எல்லோரிடமும் போய் நடந்ததை சொல்லும்படியும் கண்ட்ட்ளையிட்டார் எனவே சில உலக சம்பதமான காரியங்களை தவிர்த்து, தேவனிடத்தில் இருந்து அறிந்த காரியங்களை எழுதாமலோ பிறருக்கு சாட்சியாக அறிவிக்காமலோ மூடிவைத்தால்தான் ஒருவேளை நாம் இரத்தபழிக்குள்ளாக நேரிடலாம்.
.
அப்போஸ்தலர் 20:26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, 27. எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
.
மற்றபடி  தேவனைப்பற்றி நாம் அறிந்ததையும் கண்டதையும் கேட்டதையும் தேவனை பற்றிய எந்த காரியத்தையும் சாட்சியாக எங்கும் பகிரங்கபடுத்துவதில் எந்ததவறும் இல்லை
என்றே நான் நிச்சயித்துள்ளேன்.
.
அப்போஸ்தலர் 4:20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
.
பவுல் இயேசுவைப்பற்றி தான் கண்ட தரிசனத்தை மூன்று இடத்தில் சாட்சியாக அறிவித்துள்ளார்! அது இன்றளவும் நம்மை அதிகமாய் ஊக்குவிக்கும் ஒரு வல்லமையுள்ள சாட்சியாகவே இருக்கிறது!
அதுபோல் ஒரு மந்திரவாதி மனம் திரும்பிய சாட்சியும், ஒரு திருடன் திருந்திய சாட்சியும் ஒரு அயோக்கியன் ஆண்டவரை அறிந்துகொண்ட சாட்சியும் தான் அனேக மக்களை ஆண்டவர் பக்கம் ஈர்க்கும் அதீத சக்தியுள்ளதாக இருக்கிறது! அப்படிபட்ட சில உண்மை சாட்சிகளை சொல்லும்போது சத்துருவுக்கு கோபம் வரத்தான் செய்யும்! ஆனால் அதைக்கூட நன்மையாக மாற்றியமைக்க முடிந்த சர்வவல்ல தேவன் நம்பட்ச்சத்தில் இருக்கும்போது அதற்க்கு  நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை!

 



-- Edited by SUNDAR on Wednesday 11th of July 2012 09:33:46 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

JOHN12 wrote:



 

யோவான் 6:26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 




இந்த வசனத்துக்கு அர்த்தம் எனக்கு ரொம்ப நாளாக புரியவில்லை தேங்யூ ஜீஸஸ்,  தெளிவா புரியவைத்துவிட்டீர்கள் உங்கள் மூலமாக ஆவியானவர் எனக்கு அதை சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன் நன்றி பிரதர்





__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard