இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பிரமாணங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்த்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பிரமாணங்கள்!
Permalink  
 


"பிரமாணம்" என்றவுடன் "விசுவாசப்பிரமணம்" என்ற பெயரில் மனப்பாடம் செய்த சில வார்த்தைகளை  முணுமுணுவென்று ஒப்பித்துகொண்டு இருப்பதைபற்றி இங்கு  எழுதப்போகிறேன் என்று கருதவேண்டாம்.    
 
ஆவிக்குரிய நிலையில் நமது  அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செய்கை களையும் இரண்டு விதமான பிரமாணகளின் அடிப்படையில் பிரித்து செயல்பட வேண்டியது  மிக மிக அவசியமான ஒரு காரியம் ஆகும். எந்த ஒரு உறுதியான பிரமாணமும்  உருப்படியான பிரதிஷ்ட்டையும் இல்லாத  கிறிஸ்த்தவ வாழ்வு அர்த்தமற்றதும் எளிதில் விழுந்துபோக கூடியதுமாகவே  அமையும்!
 
இன்று அநேக ஆவிக்குரியவர்கள் அன்றாடம் வரும் சோதனைகளில்  அடிக்கடி விழுந்துபோக முக்கிய காரணம், தங்கள் வாழ்வில் எந்த ஒரு அடிப்படை  பிரமாணமோ அல்லது பிர்ச்திஷ்ட்டையோ இல்லாமல் ஏதோகதியில் செயல்படுவதுதான். நாம் எடுக்கும் முடிவுகளில் உறுதி இல்லை என்றால் சாத்தான்  நம்மை சுலபமாக விழத்தள்ளிவிடுவான். எனவே கிறிஸ்த்த வாழ்வில் நாம் உறுதியாக கைகொண்டு நடக்க வேண்டிய இரண்டு முக்கிய பிரமாணங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
 
1. ஒருநிலை பிரமாணம்
2. சமநிலை பிரமாணம் 

எல்லாவித கோட்பாடுகளுக்கும் ஒரு 'பார்முலா" இருப்பதுபோல், கிறிஸ்த்தவ வாழ்வுக்கும் மேலுள்ள இந்த "பார்முலா" மிகவும் பயன்படும். உலகில் நாம் எதிர் கொள்ளும் எல்லா செய்கைகளும் இந்த இரண்டு பிரமாணங்களில் அடங்கிவிடும். என்றாலும், எந்த ஒரு காரியத்தையும் நாம் சரியாக ஆராய்ந்து அது ஒருநிலை பிரமாணத்தை சார்ந்ததா அல்லது சமநிலை பிரமாணத்தை சார்ந்ததா என்ற ஒரு தெளிவை அடைந்து செயல்படுவது அவசியம்.
 
1. ஒருநிலை பிரமாணம்  
 
ஒருநிலை பிரமாணம் என்பது "நாம் செய்யும் எந்த ஒரு காரியத்துக்கு  பதிலி  (substitute )என்று எதுவும்  இல்லையோ அதற்க்கு ஒரேநிலை பிரமாணங்கள் என்று பெயர். இவ்வகை  காரியங்களை ஓன்று நாம் செய்தே ஆக வேண்டும் அல்லது செய்யாமல் தவிர்த்தே  ஆகவேண்டும்!  இல்லையேல் நாம் நிச்சயம் தண்டிக்கப்பட நேரிடும். போனால் போகுது இந்த ஒருமுறை மாத்திரம் இதை செய்துகொள்ளலாம் என்று முடிவுஎடுக்க முடியாத காரியங்கள், இவ்வகை  பிரமாணத்தில் அடங்கும்.
 
உலகப்பிரகாரமான ஒரு உதாரணமாக சொல்வோமாகில்  "போனால் போகுது இந்த ஒரு நேரம் மட்டும் வேகமாக ஓடும் ரயிலில் இருந்து குதித்து பார்க்கலாம்" என்றோ, "போனால் போகுது ஒரு அரை மணி  நேரம் மட்டும் மூச்சு இழுக்காமல் அடக்கிவிடலாம்" என்றோ யாரும் செய்து பார்க்கமாட்டார்கள். இவ்வாறு "கண்டிப்பக செய்யக்கூடாத" அல்லது "கண்டிப்பாக செய்யவேண்டிய", செய்தால் அல்லது செய்யாமல் இருந்தால் நமக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்ப்படுத்த கூடிய முக்கியமான காரியங்கள் பல இந்த உலகில் இருக்கின்றன. 
 
அதேபோல் கிறிஸ்த்தவ வாழ்விலும் "செய்யவே கூடாது" அல்லது "செய்தே ஆகவேண்டும்"  என்ற ஒரே நேர் நிலையில் இருக்கும் காரியங்கள் எல்லாமே இந்த ஒரேநிலை பிரமாணத்தில் அடங்கும்.  இவ்வகை காரியங்களை நாம் "கண்டிப்பாக செய்தே ஆகவேணும்" அல்லது "செய்யாமல் தவிர்த்தே ஆகவேண்டும்" என்ற கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம். அது கடினமாக இருந்தாலும் முடிந்தஅளவு அவைகளை நிறைவேற்றுவதர்க்கான முயற்ச்சியை நாம் மேற்கொண்டே ஆகவேண்டும்.  
     
ஒருவர் "ஆற்றில்ஒருகால் சேற்றில் ஒரு கால்வைக்கமுடியாது" என்பார்கள். ஏதாவது ஒரு இடத்தில் நாம் உறுதியாக கால் வைக்க வேண்டியது நமக்கு அவசியமான ஓன்று, அல்லது ஜீவன் போய்விடும் இந்த கருத்துக்கு மாற்று கருத்து கிடயாது.
 
இவ்வாறு மாற்று கருத்து இல்லாத "செய்தே ஆகவேண்டும்" அல்லது செய்யாமல் தவிர்த்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கும் சில காரியங்களை நாம் வேதவசனத்தின் அடிப்படையில் ஆராயலாம்.
 
 1. தேவனுக்கும் உலக பொருட்களுக்கும் ஒரே நேரத்தில் உழியம்  செய்யமுடியாது  
 
எவரும் சாத்தனுடன் சமாதானமாக இருந்துகொண்டு தேவனுக்கு தோழனாக இருக்க முடியாது.  அதற்க்கு ஒப்பாக தேவனுக்கும் உலக பொருட்களுக்கும் ஒருவரால் ஊழியம் செய்யவே முடியாது
 
மத்தேயு 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
 
ஆண்டவராகிய இயேசுவின் இந்த வார்த்தைகளின்  அடிப்படையில் தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறவர்கள் உலகப்பொருள் மீதுள்ள பற்றிலிருந்து கண்டிப்பாக விடுபட்டே ஆகவேண்டும். இந்த காரியத்துக்கு தேவனிடம் மாற்று கருத்தோ அல்லது சமரசமே இல்லை. இதுவே ஒருநிலை பிரமாணம்.
 
கொஞ்ச காலம் பணத்துக்கு ஊழியம் செய்துவிட்டு கொஞ்சம் பணம் சம்பாதித்த பின்னர் தேவனுக்கு உழியம் செய்யலாம் என்ற நிலையோ அல்லது  இருக்கும் பணத்தை பத்திரபடுத்தி வைத்துவிட்டு தேவனுக்கு உழியம் செய்யலாம் என்ற நிலையோ அல்லது பாதி  பணத்துக்கும் மீதி தேவனுக்கும் ஊழியம் செய்யலாம் என்ற நிலையோ இங்கு அறவே பயனற்றது. இருக்கும்நிலையில் இருக்கிற  பிரகாரம் இப்பொழுதே தேவனை தேர்ந்தெடுத்து உலகப்போருளை பின்னுக்கு தள்ள வேண்டும். 
 
I யோவான் 2:15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
 
என்று சொல்லும் இந்த வசனத்துக்கு மாற்று இல்லை. அநேகர் தாங்கள் தவறான நிலையில் இருந்துகொண்டே நான் பற்றற்ற ஒரு நிலையில் இருக்கிறேன் என்று தங்களை தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். சிலர்  எல்லா விதத்திலும் உலக்த்துடன் ஒத்து வாழ்ந்துவிட்டு தேவனுக்காக வாழ்கிறேன் என்று பொய் சொல்கிறார்கள்.
 
உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்.  ஒருவன் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஓசியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் தந்தால் அதை  வாங்க விரும்புவீர்களா அலல்து வேண்டாம் என்று வெறுப்பீர்களா? உங்கள் மன நிலை என்ன? பணம் மட்டுமல்ல பரிசு பொருட்கள் அரசாங்க  ஆணைகள் மூலம் கூட உங்களுக்கு சோதனைகள் வரலாம்.   
 
ஆண்டவருக்காக ஊழியம் செய்யும் ஒரு குடும்பம்,  அரசாங்கம்  சலுகை விலையில் தங்களுக்கு  தரும் கேஸை வாங்கி  விற்பனை செய்கிறார்கள். இரண்டு கேஸ் சிலிண்டர் இருந்தால் கிரிஷ்ணாயில்  கிடையாது என்று ரூல் இருக்க, இவர்கள் இரண்டு கேஸ் சிலிண்டரும் வாங்கி கிரிஷ்ணாயிலும் வாங்கிகொண்டு எங்களிடம் வந்து இதெல்லாம் ஒரு தவறா? என்று ஏதோ  ஒண்ணுமறியாத அப்பாவிபோல்   கேட்கிறார்கள்.
 
உன் இருதயம் உன்னோடு பேசவில்லையா? பிறகு கேள்விகேட்க முகாந்திரம் என்ன இருக்கிறது? ஒரேநிலை பிரமாணம்படி தவறு தவறு தான். இங்கு சமாதானமே செய்வதற்கில்லை!   
 
சாத்தான் உங்களை பணம் மற்றும் பொருள் விஷயத்தில் எங்காவது நிச்சயம் பிடித்து வைத்திருப்பான்! சோதித்தறிந்து விடுபடுங்கள் "ச்சீ" இது போன்ற  அற்பவருமானம் வேண்டாம் என்று விட்டுத்தள்ளுங்கள் அல்லது  அதிக வேதனையோடு அதை ஆஸ்பத்திரிக்கு கொடுக்க நேரிடலாம்.   
 
உலகப்பொருள் மேலுள்ள ஆசையை "விக்கிரக ஆராதனைக்கு" ஒப்பாக்கி அதனால் பலர் விசுவாசத்தைவிட்டு விலகிபோகிறார்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆனால் அந்த எச்சரிப்பை யாரும் கண்டுகொள்ளாமல்,  தற்காலங்களில் அனேக ஊளியர்கள்கூட பணத்தின்மேல் உலகப்போருட்களின்மேல் பற்றுவைத்து  ஓடுவதை காணமுடிகிறது        
 
ஒரேநிலை பிரமாணத்தில் மிக முக்கியமானதும்  முதன்மையானதும்  "பணம் மற்றும் உலக்ப் பொருள்  மேலுள்ள பற்றே" இவைகளை மனத்தால் வெறுத்து நமது தேவனுக்கு முதலிடம் நாம் கொடுத்தே ஆகவேண்டும். இதுபோன்ற ஒருநிலை பிரமாணத்தில் எந்த  சமரசமும்  செய்வதற்கு தேவன் விரும்புவதே இல்லை.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும் ...... 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கிறிஸ்த்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பிரமாணங்கள்!
Permalink  
 


பாவம்  செய்யலாமா?  கூடாதே! 
 
யோவான் 8:11  நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

ரோமர் 6:15
  நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.

ஒரேநிலை பிரமாணத்தில் அடுத்த  முக்கியமான கட்டளை "பாவம் செய்யக் கூடாது"என்பது. இந்த கட்டளைக்கும் மாற்றுகட்டளை கிடையாது. கொஞ்சம் பாவம் செய்யலாம் கொஞ்சம் செய்யகூடாது என்றோ, அவசர தேவையான பொது பாவம் செய்துகொள்ளலாம் என்றோ வியாபாரி என்றால் பாவம் செய்துகொள்ளலாம் என்றோ எந்த விதிவிலக்கும்  கிடையாது. 
 
பாவத்தை யாரும் எந்த சூழ்நிலையிலும் செய்யகூடாது எனது ஒரே நிலை பிரமாணம்.
 
ஒரே ஒரு விபச்சார பாவத்தை இங்கு எடுத்து கொள்ளலாம்!
 
இப்பாவத்தைபற்றி வேதம் அனேக இடங்களில் மிக கடுமையாக எச்சரிக்கிறது.
 
உபாகமம் 5:18 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக

நீதிமொழிகள் 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்

எபிரெயர் 13:4
  வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்

எபேசியர் 5:5
விபசாரக்காரனாவது, ...... தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை   
 
இந்த "ஒரேநிலை பிரமாணத்துக்கு" மாற்றாக அல்லது பதிலாக எந்த பிரமாணமும் கிடையாது. எனவே விபச்சார பாவத்தை நாம் நிச்சயம் விட்டொழிக்க வேண்டும். அதுபோல் "பாவம்" என்று வேதம் பட்டியலிட்டுள்ள எல்லா காரியங்களும்  நாம் தவிர்த்தே ஆகவேண்டும்  அதற்க்கு மாற்று வழி இல்லை. இல்லையேல் தேவனின் ராஜ்யத்தை இழக்க நேரிடும் என்று வேதம் நமக்கு எச்சரிக்கிறது         
 
I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
 
கலாத்தியர் 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வெளி 21:27
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை
 
இவ்வசனங்கள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதன் காரணம். அநேகர் பாவத்தை குறித்து தவறான கோட்பாட்டுடன்  பலர்  போதித்து வருகின்றனர். அதாவது, ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்கு மரித்திருப்ப்பதால் நாம் செய்யும் எந்த பாவத்தையும் தேவன் கண்டுகொள்ள மாட்டார் என்று துணிந்து பாவங்களை செய்கின்றனர். அதற்க்கு ஒத்தாற்போல் போதிக்கவும் செய்கின்றனர். "பொறாமைப் படுவதும்" "பொய்சொல்வதும்"கூட தேவனுடய ராஜ்யத்துக்கு போகவிடாமல் ஒருவரை  தகுதியிழக்க செய்யும் பாவங்கள் என்பதை வேதம் நமக்கு போதிக்கிறது. அனால் அநேகர் இதை கண்டுகொள்வதும் இல்லை அதற்க்கு ஒத்த போதனைகள் போதிக்கப்படுவதும் இல்லை.    
 
நான் இங்கு புதிய ஏற்பாடு மார்க்கத்தில் பவுலின் வார்த்தைகளையே எழுதியிருக்கிறேன். அவரே சில பாவங்களை பட்டியலிட்டு அப்பாவங்களை செய்தவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று தெளிவாக  எழுதியிருக்கிறார். அவர்களுக்கு போக்கு சொல்ல இடமில்லை.
 
எனவே அன்பானவர்களே, வசனங்களை புரட்டி அதை இலகுவாக்கி மாற்றி போதிக்கும் போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். 'பாவம் செய்யக்கூடாது" என்பது ஒரேநிலை பிரமாணம். அதற்க்கு மாற்று வழி இல்லை. பாவம் செய்தால் தண்டனை நிச்சயம்   அது எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியதும் மாறாததுமான பிரமாணம் ஆகும்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
கிறிஸ்த்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பிரமாணங்கள்!
Permalink  
 


தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. சமநிலை பிரமாணம் என்றால் என்ன?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கிறிஸ்த்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பிரமாணங்கள்!
Permalink  
 


Debora wrote:

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. சமநிலை பிரமாணம் என்றால் என்ன?


 

VERY VERY SORRY SISTER

 
இந்த  கட்டுரையை நான் எழுதியது மார்ச் 2011 இன்று 8 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட்து.
 
இதை நான்தான் எழுதினேனா  என்று யோசிக்கும் அளவுக்கு எனக்கு மறதி ஆகியிருக்கிறது.
 
அன்று யாரும் இதன் தொடர்ச்சியை பெரிதாக எதிர்பார்க்காத காரணத்தால் அப்படியே விட்டுவிடடேன்.
 
இன்று அதே கருத்தை RECALL பண்ணுவது என்பது கடினமான காரியமாக இருக்கிறது.
 
ஆகினும் ஆண்டவரிடம் அமர்ந்து விசாரித்து அதே சிந்தை மீண்டும் வந்தால் எழுத முயர்த்திக்கிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
கிறிஸ்த்தவ வாழ்வின் இரண்டு முக்கிய பிரமாணங்கள்!
Permalink  
 


ok

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard