"திரித்துவம்" என்றால் என்னவென்பதை அறிந்துகொள்ள நாம் பல இடங்களில் பதியபட்டுள்ள கருத்துக்களை வாசித்து உண்மையை அறிய முயர்ச்சித்தும் எங்கும் அந்த கொள்கை குறித்து ஒரு சரியான முழுமையான கருத்து கிடைக்கவில்லை! ஆகினும் அனேக விசுவாசிகளின் எழுத்துக்களில் இருந்து நாம் அறிந்தவரை திரித்துவம் என்பது "ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவம்" என்ற கருத்தும் "மூன்று சமமான ஆள்தத்துவம் உள்ள ஒரே தேவன்" என்பன போன்ற கருத்துக்கள் நிலவுகிறதை அறியமுடிகிறது.
தேவனுக்கு வெறும் மூன்று ஆள்த்துவம் மட்டும்தான் உண்டா?
என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுபார்த்துகொண்டால், நாம் சர்வ வல்ல தேவனின் மகத்துவத்தை எவ்வளவு அதிகமாக மட்டு படுத்துகிறோம் என்பது புரியவரும்.
யோபு 36:26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது
என்று பக்தன் யோபு சொல்கிறான். நமது அறிவுக்கு எட்டாத அனைத்து அண்ட சராசரங்களை படைத்த தேவனின் மகத்துவத்தை யாரும் அறிந்துகொள்ள முடியாது.
தனது நாசியின் சுவாசக்காற்றினால் ஒரே ஒரு ஊது ஊதி, மண்ணினால் படைக்கப்பட்ட மனுஷன், இன்று பலகோடி ஆள்தத்துவம் உள்ளவனாக உலகம் எங்கிலும் பரந்துகிடக்கிறான். இந்தனை கோடி ஆள்த்துவங்களையும் படைத்த்து கண்காணித்துவரும் தேவனுக்கு வெறும் மூன்று ஆள்த்துவங்கள் மட்டும்தானாம்!
எங்கே போய் சொல்வது இவர்கள் கணிப்பை என்பது புரியவில்லை!
தேவனுக்கு மூன்று ஆள்த்துவங்கள்தான் உண்டு என்று எங்கும் வசனம் சொல்லவில்லை. மாறாக தேவனின் மூன்று ஆள்த்துவங்களை மாத்திரம் மனுஷர்களாகிய நாம் கண்டிருக்கிறோம். அவ்வளவே!
அவர் எத்தனை ஆழத்த்துவமாக மாறமுடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது!
மாறாக பாவத்தில் வீழ்ந்து, சாத்தானின் பிடியில் இருந்த மனுக்குலத்தை மீட்கும் திட்டத்தில் "ஒரேதேவன்" தன்னை "மூன்று நிலைகளில்" வெளிப்படுத்தினார் என்று சொல்வதே சரியான கருத்து!.
அதாவது தேவனால் படைக்கப்பட்ட மனிதனை தந்திரமாக வீழ்த்தி தனது பிடியில் வைத்திருக்கும் சாத்தான் தன்னை மூன்றாக பிரித்து செயல்பட்டிருப்பதை வெளிப்படுத்தின விசேஷத்தில் பார்க்கமுடிகிறது.
வெளி 19:20அப்பொழுதுமிருகம் பிடிக்கப்பட்டது........................
....... கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளி 20:10மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்
சாத்தானின் இந்த மூன்று நிலைகள் "மிருகம், கள்ள தீர்க்கதரிசி, பிசாசு" இம்மூன்றும் இரண்டு தவணைகளில் அக்கினி கடலில் தள்ளப்படுகின்றன
அதேபோல் தேவனும் சாத்தானின் ஒவ்வொரு நிலைக்கும் எதிராக தன்னை மூன்று நிலைகளை வெளிப்படுத்தி சாத்தானை முற்றிலும் ஜெயம்கொள்கிறார்.
13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
இங்கு இரண்டு நாமங்களை பார்க்கிறோம்! "தேவனின் வார்த்தை" எனப்படும் இயேசு "கர்த்தாதி கர்த்தா" எனப்படும் ஆவியானவரின் வஸ்த்திரத்தை அணிந்து கொண்டு மிருகத்தையும், கள்ள தீர்க்கதரிசியையும் பிடித்து அக்கினி கடலிலே தள்ளுகின்றனர். இங்கு இயேசுவும் கர்த்தரும் ஏறக்குறைய ஒரே நிலையில் ஒரே பணியை செய்வதால் இருவரும் ஒருவராக செயல்படுகின்றனர்.
அடுத்து சாத்தானை பிடிப்பதற்கு தேவனே நேரடியாக செயல்படுகிறார்!
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
"பிசாசு" என்னும் சாத்தானின் முதல் அல்லது ஆதிநிலை "தேவன்" என்னும் கடவுளின் முதல் அல்லது ஆதி நிலையாலேயே அழிக்கப்படுகிறது.
மற்றபடி, தேவன் தன்னை மூன்று நிலைகளில் வெளிப்படுத்தியதால் அவர் "மூன்று ஆள்தத்துவம் உள்ளவர்" என்ற கருத்தோ அல்லது "மூன்று தேவன் ஒரே சிந்தை" போன்ற கருத்துக்கள் எல்லாமே தேவனை அறியாதவர்கள் போதிக்கும் அர்த்தமற்ற வார்த்தைகளும் அதையே பெரிதாக காரணம் காட்டி பிரிவினையை உண்டாக்க சாத்தான் செய்யும் சதி என்றெ நான் கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Saturday 5th of March 2011 04:06:24 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)