I ராஜா 13ல் எரேபெயாம் ராஜாவினிடத்தில் முக்கியமான கர்த்தரின் வார்த்தையை கொண்டு சென்ற தேவ மனிதனுக்கு ராஜாவின்மூலம் வந்த மூன்று சோதனைகளை பற்றி பார்த்தோம். கீழ்படிதலில் வரும் மூன்று முக்கிய சோதனைகள்! என்றதிரியில் பார்த்தோம்.
அடுத்து நாம் பார்க்கபோவது
சக ஊழியர்கள் தீர்க்கதரிசிகளால் வரும் சோதனை!
உண்மையான தேவ மனிதர்களுக்கு வரும் சோதனைகளில் எல்லாம் மிகப்பெரிய சோதனை சக தீர்க்கதரிசிகளாலும், விசுவாசிகளாலும், தம்மைப்போல் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்ளாலும் வரும் சோதனையே. இந்த சோதனையானது தேவனுடைய திட்டம்போலவும் அவரது வழிநடத்துதல்போலவும் வருவதால் அதன் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் அநேகர் இதில் விழுந்து போய்விடுகின்றனர்.
கிறிஸ்த்துவின் சுவிசேஷம் வேகமாக பரவுவதற்கு தடையாக இருந்து, அனேக கிறிஸ்த்தவர்களை கொடூரமாக கொலை செய்தவர்கள் சக கிறிஸ்த்தவர்களே. வேத புத்தகமானது கிறிஸ்த்தவர்கள எனப்படுகிரவர்களாலேயே அனேக நூன்றாண்டுகள் உலகத்துக்கு வெளியில் வரமுடியாமல் முடங்கி கிடந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்த்தவர்கள் இவ்விஷயங்களில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.
ஸ்திரியின் வித்தால் தனது தலை நசுக்கப்படும் என்று அறிந்த சாத்தான் எப்படி ஏவாளின் முதல்இரண்டு மகன்களில் ஒருவனான காயீனுக்குள்ளேயே புகுந்து இன்னொருவனான ஆபேலை கொலை செய்தானோ அதேபோலவே, கிறிஸ்த்தவர்கள் என்ற போர்வையில் இருப்பவர்களுக்குள்ளேயே புகுந்து இன்னொரு கிறிஸ்த்தவனை திசைதிருப்புவதோ அல்லது சரியான வழியில் போய்கொண்டிருக்கும் ஒரு கிரிஸ்த்தவனை இன்னொரு கிறிஸ்த்தவன் மூலமே தன்னுடைய பிடிக்குள் கொண்டுவருவது என்பது சாத்தானின் ஒரு மிகப் பெரிய தந்திரமும். எனவே நாம் மிக நுணுக்கமாக வேதத்தை ஆராயாமல் மாயமாலக்காரன் சொல்லையும் கேட்டு மாயமாலக்காரன் பின்னால் போனால் நிச்சயம் விழுந்துவிடுவோம்!
அதுபோல் இங்கும் கர்த்தரின் வார்த்தையை ராஜாவிடம் சரியாக சொல்லிவிட்ட I ராஜா 13ல் வரும்"தேவனுடய மனுஷன்" தனக்கு மேலான அதிகாரமுள்ள ராஜாவின் சோதனைகளை எல்லாம் சுலபமாக ஜெயித்து தேவன் சொன்ன வாக்குபடியே போன வழியில் திரும்பாமலும் அவ்விடத்தில் அப்பமும் தண்ணீரும் குடியாமலும் வேறு வழியில் திரும்பி போய்விட்டான்.
I ராஜா 13 9. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, 10. அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான்.
இப்பொழுது அதேதேசத்தில் குடியிருந்த அந்த கிழவனான ஒரு தீர்க்கத் தீர்க்கதரிசி அந்த தேவ மனிதனை தொடர்ந்து போய் தன்னோடு கூட வீட்டுக்கு வந்து அப்பம் புசிக்கும்படி வேண்டுகிறார்
14. தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான். 15. அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
அதற்க்கு அந்த தேவமனிதனோ கர்த்தரின் கட்டளையை சுட்டி "நான் வரமாட்டேன்" என்று மறுக்கிறார்!
16. அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.17. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்
அந்த தேவ மனிதன் பிடிவாதமாக கர்த்தரின் வார்த்தையில் நிலைநிற்ப்பதை கண்டு பொறுக்காத அந்த கிழதீர்க்கதரிசி, எப்படியாவது அந்த தேவ மனிதனை விழதள்ள வேண்டும் என்று எண்ணி ஒரு பொய் சொல்கிறான்:
18. உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
கிழவனுக்கு வயிற்றெரிச்சல் "நான் வயது முதிர்ந்த அனுபவம் உள்ளவன் இவன் ஒரு சாதாரண ஆள் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறானே இவனை கவிழ்க்காமல் இப்படியே விடுவதா?" என்றஎண்ணத்தில் அவனிடம் பொய்சொல்லி திசை திருப்புகிறான்.
பல சோதனைகளை கடந்து வந்த அந்த தேவ மனிதனும் இந்த கிழவனின் பசப்பல் வார்த்தையை கேட்டு "ஒருவேளை கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளையை தள்ளி மனதை மாற்றிக்கொண்டார்போல இருக்கிறதே! எனவேதான் நமக்கு சுகமாக சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து செல்ல இன்னொருவர் மூலம் செய்தியனுப்பி உள்ளார்" என்று தவறாக தீர்மானித்து, திரும்பி அந்த கிழவனோடு அவன் வீட்டுக்கு அங்கு அப்பம் புசித்தான்: .
19. அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.
இன்று கிறிஸ்த்தவத்தில் அனேக போதகர்கள் இவ்வாறு தேவனின் வார்த்தைகளை சற்று புரட்டி பொய்சொல்லி செழிப்பான வாழ்க்கையை நோக்கி கைகாட்டி தான் கெட்டது போதாது என்று அநேகரை அதுபோன்றதொடு தவறான வழியில் திசை திருப்பிவிடுகின்றனர்
இங்கு அனேகரது கண்ணை திறக்கும் இன்னும் அதிமுக்கிமான காரியங்களும் சாத்தனின் தந்திரங்களும் இருக்கிறது, கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து ஆராயலாம்....
-- Edited by SUNDAR on Friday 11th of March 2011 10:03:15 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒருவருக்கு தெளிவான கர்த்தரின் வார்த்தையும், தேவ வழி நடத்துதலும் இருக்கும் போது அவர்போன்ற சக விசுவாசிகள் மற்றும் பாஸ்டர்ககளால் வரும் இரண்டு விதமான முக்கிய சோதனைகளை என்னவென்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் தியானிக்கலாம்.
I ராஜா 13ல் வரும்அந்த கிழவனான தீர்க்கதரிசி
14. தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான். 15. அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
இங்கு தேவனுடைய மனுஷனுக்கோ போகும் இடத்தில் அப்பம் புசிக்க கூடாது என்ற கட்டளை தேவனால் உண்டாயிருக்கிறது. ஆனால் தன்னையும் தீர்க்கதரிசி என்று சொல்லிகொள்ளும் அந்த கிழவன், தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்கும் அந்த தேவமனிதனிடம் "என் வீட்ட்க்கு வந்து அப்பம் புசியும்" என்று கர்த்தரின் கட்டளைக்கு விரோதமான ஒரு அழைப்பை விடுகிறான்.
இன்றும் ஆவிக்குரிய உலகில் தங்களை "பாஸ்டர்கள்" என்றும் "தீர்க்கதரிசிகள்" என்றும் சொல்லிகொள்பவர்கள் உண்மையான தேவனுடய காரியங்களை தள்ளி, அதற்க்கு நேரெதிரான அனேக காரியங்களை போதித்து விசுவாசிகளை தேவனின் வழியில் வாழ விடாமல் திசைதிருப்புகின்றனர். அற்ப்புதத்தையும், அதிசயத்தையும், ஆசீர்வாத வாழ்வையும் காட்டி தேவனின் சரியான பாதையை யாரும் கண்டுவிடாத படிக்கு ஆவிக்குரிய கண்களை குருடாக்கிவிடுகின்றனர்.
வீட்டுக்கு வந்து போதிக்கும் ஒரு பாஸ்டர் "நாம் வேதத்தை படித்தால் மட்டும் போதாது, அதன்படி வாழ வேண்டும் என்று திரும்ப திரும்ப அழுத்தமாக சொல்கிறார். நானும் என்உள்ளத்தில் அப்படியே அவரை உயர்த்தி "இவரல்லவா உண்மையான தேவமனிதன், வேத வார்த்தையை கைகொண்டு நடக்கவேண்டும் என்று எவ்வளவு அழுத்தமாக போதிக்கிறார்" என்று எண்ணிகொண்டு கூட்டம் முடிந்ததும். "பாஸ்டர் உங்கள் பிரசங்கம் மிகவும் அருமை. நீங்கள் வேத வார்த்தைகளை உங்கள் வாழ்வில் கைகொண்டு நடக்கிறீர்கள் என்று கருதுகிறேன்" என்று சொன்னால். ஆம் நாம் நிச்சயமாக கைகொண்டு நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நான் அவரிடம் "பாஸ்டர் நீங்கள் பொய் சொல்லாமல் இருக்கிறீர்களா?" என்று கேட்டால் "அது எப்படி பிரதர்? நாம் சபிக்கப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம், எனவே பொய் சொல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்றார். சரி அதை விடுங்கள் "உங்களை யாரும் திட்டினால் அவரை திருப்பி திட்டுவீர்களா அலல்து ஆசீர்வதிப்பீர்களா?" "உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும் என்று இருக்கிறீர்களா அல்லது பைக் கார் என்று பறக்கிரீர்களா?", இப்படி வேதம் போதிக்கும் எந்தஒன்றை கேட்டலும் அவரிடம் "இல்லை" என்றெ பதில் வருகிறது. பிறகு நீங்கள் எதை வைத்து வேதத்தை கைகொள்ள வேண்டும் என்று போதிக்கிறீர்கள்? என்றால் அவரால் எந்த சரியான பதிலும் சொல்லமுடியவில்லை.
மத்தேயு 23:3ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் காரியத்து உதவாத போதகர்கள். இவர்களை நம்பி எந்த பயனும் இல்லை. இவர்கள் பின்னால் நாம் போனால் குருடனுக்கு வழிகாட்டும் குருடனாகி போகவேண்டியது தான். இயேசு ஒருவரே நமக்கு போதகர் அவரது வாழக்கை ஒன்றே நமக்கு போதனை
எனவே அன்பானவர்கள் நீங்கள் தலைவர் என்றும் ஆவிக்குரியவர் என்றும் எண்ணி அதிகம் நேசிக்கும் ஒருவரோ அல்லது உங்களைபோன்ற ஒரு விசுவாசியோ அல்லது பாஸ்டரோ, அல்லது ரெவரென்ட்களோ கூட உங்களுக்குள்ள தேவனின் வார்த்தைகளை விட்டு உங்களை தடம்மாற பண்ண முற்படலாம். எச்சரிக்கையாக இருபது அவசியம்.
உங்களுக்குள்ள வார்த்தைகளையும் வழி நடத்துதல்களையும் நீங்களாகவே தேவனிடமிர்ந்து பெற முயற்ச்சிக்க வேண்டும். எந்த ஒரு பிறனையும் சார்ந்து நிற்ககூடாது. தேவன் பட்சபாதம் பார்க்கிறவர் அல்ல! "இது பழய ஏற்பாட்டு காலமல்ல" ஒருசிலருக்கு மட்டும் அபிஷேகம் கொடுப்பதற்கு. யார் தேடினாலும் அவருக்கு ஆலோசனை சொல்ல அவரவருக்குள் இருக்கும் ஆவியானவர் ஆவலாயிருக்கிறார். நீங்கள் சிரமபட்டு தேட மாட்ச்சப்பட்டு "அவர் பெரிய தீர்க்கதரிசி" "இவர் பெரிய பாஸ்டர்" "இவர் பெரிய தேவ மனிதன்" "இவர் பெரிய வரம்பெற்றவர்" என்று தீர்மானித்து அடுத்தவர் ஆலோசனையின்படி நடக்க முற்ப்பட்டால் அவர் உங்களை மிக சுலபமாக ஆண்டவரின் வழியில் இருந்து பிரித்து விடுவார்.
வேதம்கூறும் இந்த சமபவத்தில் தேவனிடமிருந்து நேரடியான வார்த்தையை பெற்ற தேவ மனிதனையே அந்த சக கிழதீர்க்கதரிசி தேவவார்த்தைக்கு எதிராக செயல்படும் படி போதிப்பதை அறிய முடிகிறது.
இன்று நானும்கூட அனேக காரியங்களில் அதேநிலையைத்தான் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். தங்களை ஆவிக்குரியவர்கள் என்றும் ஆடவரின் செல்லபிள்ளைகள் என்றும் கிறிஸ்த்தவத்தின் காவலாளிகள் என்றும் என்னிகொண்டிருக்கும் சிலர் எனக்கு ஆலோசனை சொல்லி கர்த்தரின்
வழியைவிட்டு விலக்குவதற்கு காத்து கொண்டு இருக்கின்றனர். நான் அவர்களிடம் ஆலோசனை கேட்கபோகாத காரணத்தால் எரிச்சலும் கோபமும் அடைகின்றனர்.
தேவனிடமிர்ந்து நேரடியான வார்த்தைகளை பெற்ற நான், இவர்கள் சொல்வதை கேட்டால் என்னை அழைத்து என்னிடம் தனது சித்தத்தை வெளிப்படுத்திய தேவனுக்கு என்ன பதில் சொல்வது? அவர் தெரியபடுத்திய எல்லாமே வேத வார்த்தைக்கு இசைவாக இருக்கும்போது, இவர்கள் ஒவ்வொரு வசனத்தையும புரட்டி ஒரு பொருளை கூறிக்கொண்டு வார்த்தையின் வல்லமையை குறைப்பதோடு என்னையும் அதே வழியில் தள்ளிவிடுவதற்கு தவிக்கின்றனர்.
நான் எழுதும் வார்த்தைகளில் உள்ள உண்மைகள் அனைத்தும் சாத்தானுக்கு நிச்சயம் தெரியும். ஆகினும் அன்று அந்த கிழ தீக்கதரிசி எப்படி அந்த தேவ மனிதனை திசைதிருப்ப முயன்றானோ அதேபோல் இன்றும் அதே சக விசுவாசிகள் மூலம் என்னை திசைதிருப்ப முயல்கிறான்.
இச்சம்பவங்கள் எல்லாம் வேதத்தில் ஏன் எழுதப்பட்டுய்ள்ளது? ஆண்டவரின் அடிச்சுவட்டில் நடக்கும் நாமும் அதுபோல் வஞ்சக வலையில் வீழ்துவிடகூடாது என்பதை நமக்கு எச்சரிக்க தானே!
எனவே அன்பானவர்கள் நீங்கள் தேவனின் நேரடிப்பார்வையில் நடக்க பழகி கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு கனத்தையும் மரியாதையையும் செலுத்துங்கள் யாரையும் அவமதிக்க வேண்டாம். அனால் உங்களுடைய வழியோ நாசியில் சுவாசமுள்ள ஒரு மனுஷனை சார்ந்து இருக்காமல் தேவனிடம் தொடர்புள்ள நேரடி வழி நடத்துதலாகவே இருக்க வேண்டும்! இல்லையேல் நாம் சக மனிதர்களால் சுலபமாக வஞ்சிக்கப்படுவோம்! இன்று அநேக அருமையான தேவனுடய பிள்ளைகள் அதுபோல் வஞ்சிக்கபட்டு கிடப்பதை அறியமுடிகிறது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த கிழ தீர்க்கதரிசியின் காரியத்தில் நான் அறிந்துகொண்ட இன்னொரு உண்மை என்னவெனில். உண்மையான ஒரு தீர்க்கதரிசிகூட ஏதோ சில காரியங்களிநிமித்தாமோ அல்லது சாத்தானின் தூண்டுதலி நிமித்தாமோ பொய் சொல்லி தன்னை போல ஒரு தீர்க்கதரிசியையோ ஒரு நல்ல மனுஷனையோ வஞ்சிக்க முடியும் என்பதே.
I இராஜாக்கள் 13:18அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
இந்த கிழ தீர்க்கதரிசியானவர் அந்த தேவ மனுஷனிடம் முதலில் "நானும் உம்மை போல ஒரு தீர்க்கதரிசிதான்" என்று சொல்லி தன்னையும் அந்த தேவ மனுஷனுக்கு ஒப்பான நிலைக்கு கொண்டு வர முயல்கிறார். அதன் மூலமே இவர் சொல்லும் பொய்யை அவர் ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இங்கு அந்த கிழ தீர்க்கதரிசி கர்த்தருடைய உண்மை தீர்க்கதரிசிதான் என்பதில் எந்த எதிர் கருத்தும் கூற முடியாது. காரணம் வேதம் அவரை ஒரு தீர்க்கதரிசி என்றே நமக்கு அறிமுகம் செய்கிறது.
I இராஜா 13:11கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்;
அத்தோடு கர்த்தர் அவர் மூலம் பேசியதையும் அந்த வார்த்தைகள் அப்படியே நிறைவேறியதும் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
I இராஜா 13 20. அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டுவந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,
21. அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,
22. அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
24. அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது;
எனவே இவரை கள்ள தீர்க்கதரிசி என்று கூறிவிட முடியாது ஆனால் ஒரு நல்ல தீர்க்கதரிசிகூட சூழ்நிலையிநிமித்தம பொய்சொல்லி ஒரு நல்ல தேவ மனுஷனை வழி கெடுக்கமுடியும் என்பதை நாம் இங்கு அறியலாம்.
எனவே எந்த மனுஷனின் சொல்லையும் அப்படியே நம்பி ஆண்டவரிடம் சரியாக விசாரித்து அறியாமல், தேவன் நமக்கு நியமித்த/தெரிவித்த பாதையில் இருந்து விலகுவது நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியை கொண்டு வரலாம்.
இங்கு கர்த்தரின் வார்த்தைகளை சுமந்து வந்த தேவமனுஷன் அந்த கிழதீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் உண்மையா? என்பதை தேவனிடம் விசாரிக்க தவறிவிட்டது அவரது முடிவுக்கு ஒரு முக்கிய காரணம்.
எனவே அன்பானவர்களே இன்றைய உலகில் தங்களை தாங்களே தீர்க்கதரிசிகள் என்றும் அப்போஸ்த்தலர்கள் என்றும் ரெவரெண்டுகள் என்றும் பறைசாற்றும் போதகர்களை பின்றுவதில் அதிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ரோமர் 3:4 , தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
தேவனின் உண்மையான வார்த்தையை சுமதுவரும் அல்லது தேவனின் வழியில் உண்மையாக நடக்கும் ஒரு தேவ மனுஷனை யாரைக்கொண்டு வேண்டுமானாலும் முக்கியமாக இன்னொரு தேவ மனுஷனை கொண்டும்கூட எப்படியாகிலும் கவிழ்ப்பதற்கு சாத்தான் முயற்ச்சிக்கலாம். அதற்க்கு பல வேத ஆதாரங்கள் உண்டு.
எனவே சாத்தானின் இதுபோன்ற முயற்ச்சியை முறியடிக்க பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் தேவனோடு தொடர்புநிலையில் இருப்பது மிக மிக அவசியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)