அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களின் வார்த்தைகளுக்கும் தேவன் எனக்கு வசன ஆதாரத்தோடு தெரியபடுத்திய காரியங்களுக்கும் இடையில் "தேவனை குறித்த விஷயத்தில் மட்டும்" சில முக்கிய வேறுபாடுகள் இருப்பதால், இதில் நான் விசாரித்தவரை ஒவ்வொரு பாஸ்டரும் ஒவ்வொரு கருத்தை கொண்டிருப்பதால் என்னால் சரியான உண்மையை அறியமுடியவில்லை.எனவே உண்மை அறிந்த சகோதரர்கள் இந்த விவாதத்தில் பங்கு பெற்று எனக்கு விளக்கம் அளிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
"தேவன் சர்வ வல்லவர்" என்பதிலோ அல்லது "அவர் யாருடைய நிர்பந்தத்க்கும் அப்பாற்ப்பட்டவர்" என்பதிலோ, அவருக்கு எந்த ஒரு காரியத்திலும் யாரும் ஆலோசனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதிலோ, 'அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது" என்பதிலோ எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் சாத்தான் உருவானதற்கும் அவன் இந்த உலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு தீமையானது இந்த உலகத்துக்குள் புகுந்து இத்தனை துன்பங்களும் துடிக்க துடிக்க மரணங்களும், கூன் குருடு செவிடுகளும் வேதனைகளும் நடைபெறுவதற்கு தேவனின் சுதந்திரமான திட்டமே காரணம் என்ற கருத்தை என்னால் ஏற்க்க முடியவில்லை.
அதாவது, தேவன் நிற்பந்தகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது உண்மையானாலும் அவர் நீதி நியாயங்களுக்கு கட்டுபட்டவர். தேவன் "சர்வ வல்லவர்" ஆனால் உத்தமும் உண்மையுமானவர். தேவனால் எல்லாம் கூடும் ஆனால் அவர் நியாயமில்லாமல் எதுவும் செய்யமாட்டார். அவர் செய்கைகளில் எலாம் நீதியும்நியாயமும் உள்ளவர் அவரது சிங்காசனத்தின் ஆதாரமே நீதியும் நியாயமும்தான் என்று வேதம் சொல்கிறது. எனவே நீதி நியாயத்தை சரியாக நிலைநாட்டும் செயல்களில் தேவன் சில இடங்களில் நிர்பந்திக்கபடுகிறார். அதுபோன்ற ஒரு செயல்தான் யோபு உத்தமன என்று தேவன் அறிந்திருந்தும் சாத்தானின் நிர்பந்தத்தின் அடிப்படையில் அவர் அவனை சோதிப்பதற்கு அனுமதித்தது சத்துரு தூசிக்க நேரிடும் என்று தாவீதுக்கு தண்டனை கொடுத்தது போன்றவை என்றெ நான் கருதுகிறேன்.
இப்பொழுது எனது கேள்வி என்னவெனில்,
இந்த பேரண்டத்தையும் அதில் உள்ள எண்ணில்லா அதிசயங்களும் ஆண்ட சராசரங்களையும் படைத்த ஆனாதி தேவன்(தேவ குமாரன்) துன்மார்க்க ஊளையாம் இந்த உலகில் வந்து, ஒரு சாதாரண மனிதனாக பிறந்து, எருசலேம் வீதிகள் எவனோ பலபோர் சேவகர் சவுக்கால் அடித்து துரிதப்படுத்த பாவ சிலுவையை தோளின்மேல் சுமந்துகொண்டு, பரிதாபாமா கல்வாரியை நோக்கி பயணிக்கிறார். அந்தோ கோர சிலுவையில் அற்பமான மனிதர்களால் ஆணியடிக்கப்படுகிறார். தலை சாய்க்க இடமில்லை என்று சொன்ன அவருக்கு சிலுவை மரமே இறுதியில் தலை சாய்க்க கிடைத்த இடமாக அமைந்தது.
இந்தகாரியத்தை நான் எழுதும்போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த ச்ம்பவத்தை நினைத்து பார்க்கும்போதெல்லாம் என் மனது எண்ணில்லா வேதனை அடைகிறது. இவ்வளவு கொடூரமான ஒரு மரணத்தை அதுவும் "பிதாவே இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்ககூடுமானால் நீங்கட்டும்" என்று மன்றாடி ஜெபித்தும், பிதாவாகிய தேவன் அவர்மேல் அந்த ஆக்கினையை சுமத்த அல்லது கட்டாய பலியாக்க காரணம் என்ன?
"மனிதர்கள்மேல் கொண்ட அன்பினிமித்தம், பாவத்தில் வீழ்ந்த மனிதனை மீட்கும் தேவனின் திட்டம் அது" எனபது நாம் எல்லோரும் அறிந்தஉண்மை. ஆனால் இந்த திட்டம் தேவனின் சுதந்திரமான முடிவால் உருவானதா அல்லது இயேசு இவ்வாறு பலியாக் மரித்தேஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் இந்த சிலுவை மரணம் நடந்ததா?
அன்பை வெளிக்காட்ட ஆயிரம் வழிகள் இருக்கிறது. இப்படி ஒரு கொடூர மரணத்துக்கு ஒப்புகொடுத்து கோழையைப்போல் சிலுவையில் தொங்கித்தான் அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா?
உதாரணமாக நமது பிள்ளைகளிடம் நான் அன்பை காட்டுவத்ராகு பல வழிகள் உண்டு. ஆனால் நாம் இரத்தம் கொடுத்ததால்தான் நமது பிள்ளைகள் பிழைக்கும் என்றொரு நிர்பந்தம் உருவாகும்போது, நான் மரித்தாலும் பரவாயில்லை நான் அடிபட்டாலும் பரவாயில்லை எனது பிள்ளைகள் பிழைக்கவேண்டும் என்றநோக்கில் நம்மையே இழக்க தயாராவோம்.
இதே நிலைதான் இயேசுவின் மரணத்திலும் நிகழ்ந்தது என்பது எனது கணிப்பு.
அதாவது இயேசு இந்த பாவ பூமியில் வந்து நமக்காக மரிக்காவிடில் இங்குள்ள மொத்த மனுஷ கூட்டமும் நரகம் என்ற கொடிய இடத்துக்கு செல்லும் நிலை ஏற்ப்பட்டது. அதிலிருந்து ஜனங்களை மீட்கவே அன்புள்ள தேவன் தனது மகனை மாம்சமாக்கி அனுப்பினாரேயன்றி, இது தேவனின் சுதந்திரமான திட்டம் அல்ல என்பது என்னுடைய கருத்து.
அதாவது தேவன் பூர்வத்தில் ஆடுமாடுகள் பலியை கட்டளையிட்டதும் சரி, கடைசி காலத்தில் தனது சொந்த குமாரனை ஒரே பலியாக சிலுவை மரணத்துக்கு ஒப்பு கொடுத்ததும் சரி, தனது நீதியினிமித்தம் உண்டான சில நிர்பந்தங்களில் அடிப்படையிலேயே அனுமதிதாரேயன்றி, இவையெல்லாம் அவருடைய சுதந்திரமான திட்டத்தினால் உண்டானது அல்ல என்பதே தேவன் எனக்கு தெரியபடுத்திய உண்மை
இதில் மாற்று கருத்து இருக்கும் சகோதரர்கள் தங்கள் கருத்தை பதிவிடவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
////இயேசு இந்த பாத்திரம் நிங்கக்கூடுமானால்...என்று ஜெபித்தது அவருடைய மாம்சத்தில் அதே இயேசு இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்.
ஒருவனும் அதை (அவருடைய ஜீவனை) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. (யோவான் 10:18)///
சகோதரரே, இந்தஇரண்டு வசனங்களுக்கும்இடையே அதிகதூர வேறுபாடுகள் இருக்கிறது.
உதாரணமாக என்னிடம் 100௦ ரூபாய் இருக்கிறது அதை அடுத்தவருக்காக கொடுக்கவும் அதிகாரம் உண்டு அதை பத்திரப்படுத்தி வைத்துகொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை அந்தபணத்தை கொடுத்த என் அப்பாவிட மிருந்து நான் பெற்றுக்கொண்டேன்" என்று நான் சொல்ல முடியும். அது போலவே இயேசுவுக்கும் அவரது ஜீவனை கொடுக்கவும் திரும்ப எடுத்து கொள்ளவும் அதிகாரம் உண்டு என்று சொல்கிறார்.
ஆனால் ஆண்டவர் என்னிடம் ஒருமுறை "உன் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் தூக்கி கீழே போட்டுவிடு" என்று திட்டமாக சொல்லும் போது "ஆண்டவரே பணத்தை மட்டும் கீழே போட சொல்லாதீர்கள் வேறு எதை வேண்டுமாலும் போடசொல்லுங்கள்" என்று வருத்தத்தோடு மறுதலித்தேன் அதற்க்கு என்னபொருள்? எனக்கு பணத்தை தூரப்போட அதிகாரம் இருந்தும் அதை செய்வதற்கு மனமில்லை என்றுதானே பொருள்.
அதே காரியம்தானே இயேசுவின் மரணத்தில் நடந்துள்ளது. இயேசுவுக்கு ஜீவனை கொடுக்கவும் எடுக்கவும் எல்லா அதிகாரமும் இருந்தது. ஆனால் மாம்சமாக இருந்தஅவர் இறுதி நேரத்தில் வரப்போகும் பாடுகளை அறிந்து "திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்" இந்த பாத்திரம் நீங்க கூடுமானால் நீங்கட்டுமென்று பிதாவிடம் ஜெபிக்கிறார். அதை ஏன் வேறுவிதமாக மாற்றுகிறீர்கள்?
இயேசுவானவர் தான் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய மாம்சபிரகரமான சித்தத்தை ஒதுக்கி பிதாவின்சித்தத்தை செய்ததுபோல இங்கும் தன்னுடைய வியாகுலத்தை தள்ளி, பிதாவின் சொல்லுக்கு கீழ்படிந்தார்" என்பதுதான் உண்மை! அதனால் எல்லா சிருஷ்ட்டிக்கும் மீட்பு உண்டானது என்பதும் உண்மை. ஆகினும் அவர் பிதாவின் சித்தத்தின் பேரிலேயே அவருக்கு கீழ்படிந்து தன்னை சிலுவை மரணத்துக்கு ஒப்புகொடுத்தார் என்பதே சரியான உண்மை! பிதாவும்" இயேசு மனுஷர்களின் பாவங்களுக்காக அவர் பலியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே அவரை அந்த கொடூர மரணத்துக்கு ஒப்புகொடுத்தார்" இல்லையேல் மிகுந்த இரக்கம்உள்ள தேவன் தன் குமாரன் "இந்தபாத்திரம் என்னைவிட்டு நீங்க கூடுமானால் நீங்கட்டும் என்று" வேண்டியும் அவரை பலியாக கொடுத்திருக்க மாட்டார்.
ஏனெனில் இயேசு அன்று அவ்வாறு பலியாகவில்லைஎனில் இந்த உலகில் உள்ள சிருஷ்ட்டிகளுக்கு இரட்சிப்புக்கு வழியே இல்லை என்பதை அறிந்தே பிதாவும், அவருக்கு கீழ்படிந்த இயேசுவும் அந்த சிலுவை மரணத்தை ஒரே மனதுடன் அந்த கொடூர சிலுவை பலியை நிறைவேற்றினார்கள்" என்பதே என்பதே எனது கருத்து.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Page 1 of 1 sorted by
இறைவன் -> விவாதங்கள் -> தேவன் இயேசுவை "சிலுவை மரணத்துக்கு" ஒப்புகொடுக்க காரணம் என்ன?