2. ஓரே பேறான குமாரன் - Only Son யோவா1:14-18; யோவா 3:16; தேவன் தம்முடைய ஓரே பேறானகுமாரனை விசுவாசிக்கிறவன். எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு.
மகன் - சங் 2:7; சங் 45:7 ; எபி 1:5-9; 3. முதற்பேறானவர். – First Son . சங் 89:27; நான் அவனை எனக்கு முதற்பேறானவனும் , பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
4. செல்லப்பிள்ளை. சாலொமோன் ராஜா பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு முதல்சிருஷ்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறுகிறார். நீதி 8:22-30; நீதி 8:22; கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். “ யேகோவா தமது படைப்புகளில் என்னையே முதலாவதாக படைத்தார். ” என்று திருத்திய மொழி பெயர்ப்புகளில் காணலாம். “ஆதி முதற்கொண்டும்”.
நீதி 8:23; அநாதியாய் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஜெநிபிக்கப்பட்டேன். பிறப்பிக்கப்பட்டேன்.(ஆதி 1:20)
5. ஞானம் : மத் 11:19; ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 1கொரி. 1:31; அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
6. வார்த்தை - யோவா. 1:14; வெளி.19:13; இரத்தத்தில் தொய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. இயேசுவுக்கு வார்த்தை என்ற பெயரும் உண்டு. அரசனுடைய பிரதிநிதியாக பேசுகிற ஒருவனை கிரேக்க பாஷையில் Logos – லோகாஸ் அதாவது வார்த்தை என்று அழைத்தனர். தேவனாகிய யேகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தாருடன் பேசினப்படியால் இயேசுவுக்கு வார்த்தை என்ற பெயர் பொருத்தமாயிருக்கிறது. யோவா.12:49; நான் சுயமாய் ஒன்றும் பேசவில்லை. நான் பேசவேண்டியது இன்ன தென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்கு கட்டளையிட்டார். உபா 18:18-19; உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக எழும்ப பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்கு கற்பிப்பதெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (நிறைவேறுதல் அப். 3:22-23) (எபி 1:1) இக்காரணங்களை முன்னிட்டு யோவா.1:1-3; வசனங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பதன் விளக்கம். “அநாதி தேவன்" = தொடக்கமும் முடிவும் இல்லாதவர் தேவன். ஆதியிலே (தொடக்கத்திலே) வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவா.1:1; தேவர்கள் (or)
தேவன் என்பவர்கள் யார்? எபிரேயமொழியில்எல்லோயிம்என்னும்பதம்தேவன்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Elohim = தேவன் -வல்லவர். Ans ::இவ்வார்த்தப்படி வல்லவர்கள் அனைவரும் தேவர்களே ஆவர். Example : யாத் 4:16;7:1; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். (மோசே- தேவன்).உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன். சங் . 82:1-6; நீங்கள் தேவர்கள் என்றும் , நீங்கள் எல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். தேவ சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார். தேவர்கள் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.(யோவா.10:34-36---இயேசு)
2கொரி. 4:4 ; இப்பிரபஞ்சத்தின் தேவன் ஆனவன் அவர்களுடைய மனதை குருடாக்கினான். பொல்லாத செயலில் வல்லவன் - (சாத்தான் - தேவன்) . யாத் 22:28; நியாயாதிபதியை தூஷியாமலும் …. (நியாயாதிபதி, தூதர்கள் , மோசே தேவனுடைய பிள்ளைகள் சாத்தான் தேவர்கள் என்று சொல்லப்பட்டுயிருக்கிறது). கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால் … In the beginning was the Logos , andthe Logos was with THE GOD and a god was the Word . என்றுள்ளது.
பிதாவாகிய தேவனை THE GOD - மகாதேவன் குமாரனாகிய இயேசுவை a God - ஒரு தேவனாயிருந்தார். உபா 10:17 ; உங்கள் தேவனாகிய யேகோவா; 1. தேவாதி தேவனும் 2. கர்த்தாதி கர்த்தரும் 3. மகத்துவம் ,வல்லமையும் பயங்கிரமுமான தேவனுமாயிருக்கிறார் சங் 82:1; 4. தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். சங் 95:3; 5. மகாதேவனும். 6. எல்லா தேவர்களுக்கும் மகா ராஜனுமாயிருக்கிறார். சங் 96:4 ; 7. பெரியவர் 8. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சங் 96:7; யேகோவாவுக்கே அதை செலுத்துங்கள். சங் 136:2; தேவாதி தேவனைத் துதியுங்கள். சங் 138:1; தேவர்களுக்கு முன்பாக உம்மை கீர்த்தனம் பண்ணுவேன். 1கொரி. 8:5-6; 1. அநேக தேவர்கள் உண்டு. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள்உண்டு. 2. ஓரே தேவன் நமக்குண்டு இப்படி அநேக தேவர்களும், அநேககர்த்தாக்களும்உண்டாயிருந்தாலும் பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். 3.இயேசு கர்த்தர். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு.
8. வல்லமையுள்ள தேவன் ஏசா 9:6; நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். …அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர், வல்லமையுள்ள தேவன் , நித்திய பிதா , சமாதானப் பிரபு எனப்படும். ஆனால் பிதா – சர்வ வல்லமையுள்ள தேவன். Example : (ஆதி 17:1; 28:3; 35:11; யாத் 6:2-3;)
9. அனுப்பப்பட்டவர். யோவா 6:38; அனுப்பினவருடைய சித்தத்தின் படி…(4:34) யோவா 8:42; அவரே என்னை அனுப்பினார். யோவா 5:30; என்னை அனுப்பின பிதாவுக்கு.. யோவா 7:28; என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். யோவா 13:16; அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. யோவா 14:28; ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.1யோவா 4:14;
12. பிதாவினால் ஜீவனை பெற்றுக்கொண்டவர். யோவா.5:26; ஏனெனில் , பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்கிறது போல, குமாரனும் தம்மில் தாமே ஜீவன்உடையவராய் இருக்கும் படி அருள் செய்து இருக்கிறார். யோவா.6:57; ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும் இஎன்னை புசிக்கிறவனும் என்னிலே பிழைப்பான். 2கொரி.13:4; ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்.
13. பிதாவினால் மரணத்திலிருந்து உயிரோடே எழுப்பப்பட்டவர். அப் 2:24; தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து ,அவரை எழுப்பினார். (2:25-31;) அப் 2:32; இந்த இயேசுவை தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். ரோம 10:9; “தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ” (அப் 3:13-15; அவரை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார்.அப் 3.26; அப் 2:24; தேவன் அவருடைய மரண உபாதைகளின் கட்டைஅவிழ்த்து … அப் 13:30; தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். 2கொரி.4:14; இயேசுவை எழுப்பினவர். 1கொரி.6:14; தேவன் கர்த்தரை எழுப்பினாரே. ) அப் 5:30-31; நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை , நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி …. தமது வலது கரத்திலே உயர்த்தினார்.
14. தேவ குமாரன் : ( 1யோவா.5:10) யேகோவா தேவன் சாட்சி அளித்தல் (யோவா 8:17-18)மத் 3:17; ( மாற் 1:11;) 1.அன்றியும்வானத்திலிருந்துஒருசத்தம் உண்டாகி : “ இவர் என் நேச குமாரன். இவரில், நான் பிரியமாயிருக்கிறேன்.” என்று உரைத்தது. மத் 17:5; 2. “இவர் என் நேச குமாரன்.இவரில், பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவி கொடுங்கள்” என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
பேதுரு சாட்சி அளித்தல் மத் 16:16; “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” மத் 16:17; பரலோகத்திலிருக்கிற என்பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (யோவா 6:69) ரோம 1:5; பரிசுத்த ஆவியின்படி பலமாய் ரூபிக்கப்பட்ட தேவக்குமாரன் அசுத்த ஆவிகள் அறிக்கையிடல் மத் 8:28-29; பிசாசு பிடித்திருக்கிற இரண்டு பேர் பிரேதக் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள். .. அவர்கள் அவரை நோக்கி மாற் 3:11; லூக் 4:41; “ இயேசுவே , தேவனுடைய குமாரனே , எங்களுக்கும் உனக்கும் என்ன? காலம் வரும் முன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்”
15. அபிஷேகம் பண்ணப்பட்டவர்.john.20:31; லூக் 4:18; (இயேசு ------ இரட்சகர் . மத் 1:21; கிறிஸ்து --- அபிஷேகம் பண்ணப்பட்டவர்) (எபிரேயம் ---- மேசியா ; கிரிக்----கிறிஸ்து; ஆங்கிலம் - Anaitted; தமிழ் – அபிஷேகம் பண்ணப்பட்டவர். ) சங் 2:6-9; நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணிவைத்தேன். .“நீர் என்னுடைய குமாரன் இன்று நான் உன்னை ஜெநிப்பித்தேன்.” சங் 45:7; நீர் (இயேசு) நீதியை விரும்பி , அக்கிரமத்தை வெறுக்கிறீர் . ஆதலால் (இயேசுவே) தேவனே , உம்முடைய தேவன் (யேகோவா)உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார். அப் 10:38; இயேசுவைத் தேவன் …. அபிஷேகம் பண்ணினார். Ans: John 3:14;
16. தேவன் இயேசுவைக் கொண்டு சிருஷ்டித்தார். கொலோ 1:16; அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. … அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. யோவா 1:3; சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. எபே 3:11; இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையு ம் சிருஷ்டித்த எபி1:2; இவரைக் கொண்டு உலகங்களை உண்டாக்கினார். நீதி 8:22; யோவா 1:10; உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று.
இயேசுகிறிஸ்து யார் எனும் கேள்விக்கான உங்கள் பதிலை எந்தத் தடங்கலுமின்றி தொடர்ந்து பதியுங்கள்.
வேறொரு திரியில் சகோ.சுந்தர் பின்வருமாறு கூறியதற்குப் பதில்தரும் வண்ணமாக இப்பதிவை இங்கு பதிக்கிறேன். இப்பதிவு பற்றிய உங்கள் விமர்சனத்தையும் வரவேற்கிறேன்.
//இயேசுவை தேவனின் குமாரன் என்றும் அவரும் தேவன்தான் என்றும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அத்தோடு முடித்துகொள்ளாமல் அதற்க்கு மேல் ஆராய்ந்து, சரியான எந்த வசன ஆதாரமும் இல்லாமல் அவரை "மிகாவேல்" தூதனோடு ஒப்பிட்டு பார்க்க முயல்வது தங்களின் கருத்தாகிய "அவர் தேவனின் குமாரன்" எனவே அவருக்குள் தேவத்துவம் இருந்தது என்ற கருத்தை முற்றிலும் திசை திருப்புகிறது என்பதை கருத்தில் கொள்க.
என்னை பொறுத்தவரை ஆண்டவராகிய இயேசுவை கர்த்தர் ஒரே ஒரு இடத்தில்தான் தூதன் என்று சொல்லியிருக்கிறார்
மல்கியா 3:1இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.//
அன்பான சகோ.சுந்தர் அவர்களே!
பின்வரும் வசனங்களில் தூதன் எனச் சொல்லப்படுபவர் யார் என்பதைக் கூறும்படி வேண்டுகிறேன். யார் எனச் சொல்லமுடியாவிட்டாலும், அவர் இயேசுவா இல்லையா என்பதையாவது கூறும்படி வேண்டுகிறேன்.
ஆதியாகமம் 16:7-12 கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார். பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
(ஆகாரின் சந்ததியைப் பெருகப் பண்ணினவர் சாதாரண தேவதூதனா அல்லது வேறு யாருமா?)
ஆதியாகமம் 22:11,12 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
(ஆபிரகாம் ஈசாக்கை ஒப்புக்கொடுத்தது சாதாரண தேவதூதனிடமா அல்லது வேறு யாரிடமுமா?)
ஆதியாகமம் 31:11-13 அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
(யாக்கோபு பொருத்தனை செய்தது சாதாரண தேவதூதனிடமா அல்லது வேறு யாரிடமுமா?)
யாத்திராகமம் 3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
(அக்கினி ஜூவாலை நடுவில் மோசேக்கு தரிசனமானது சாதாரண தேவதூதன் தானா அல்லது வேறு யாருமா?)
யாத்திராகமம் 14:19 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
(இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னும் பின்னும் சென்றவர் சாதாரண தேவதூதன் தானா அல்லது வேறு யாருமா? பின்வரும் வசனத்தில் கூறப்பட்டுள்ளவரையும் மனதில் வைத்து பதில் சொல்லுங்கள்)
யாத்திராகமம் 23:20-23 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
(தமது நாமம் அந்த தூதனின் உள்ளத்தில் இருப்பதாக தேவன் சொல்கிறாரே, அவருக்குச் செவிகொடுக்கும்படியும் அவரைக் கோபப்படுத்தாதிருக்கவும் தேவன் சொல்கிறாரே, அவர் ஜனங்களின் துரோகங்களைப் பொறுப்பதில்லை என்றும் தேவன் சொல்கிறாரே, அப்பேற்பட்ட பயங்கரமான தூதன் சாதாரண தேவதூதன் தானா அல்லது வேறு யாருமா?)
யாத்திராகமம் 32:34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.
யாத்திராகமம் 33:2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
-- Edited by anbu57 on Friday 25th of March 2011 07:54:28 AM