இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதம் கூறும் தேவனுடைய குணலட்சணங்கள் என்ன?


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
வேதம் கூறும் தேவனுடைய குணலட்சணங்கள் என்ன?
Permalink  
 


 1.அநாதி தேவன் - everlasting (Eternal God )– நிரந்தரமான –என்றுமுள்ள - (ஆதியும் அந்தமும் இல்லாதவர்.) சங் 41:13 ; இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். (சங் 106:48;) உபா 33:27 ; அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் ; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். சங் 90:2 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். சங் 93:2; நீர் அநாதியாய் இருக்கிறீர். ரோம…..16:25; அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியாக்கப்பட்டதும் …

2.மாறாதவர் - unchangeable.. மல் 3:6; நான் கர்த்தர் ; நான் மாறாதவர் . சங் 102:27 ; நீரோ மாறதவராய் இருக்கிறீர் ; உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை. யாக் 1:17 ; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. யாத் 3:14 ; இருக்கிறவராக இருக்கிறேன்……(அவதாரம் எடுப்பவர் அல்ல)

3. சாகாமை –Immortality- deathlessness. 1தீமோ.6:16; ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும் , மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர் . யோவா 5:26; பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுள்ளவராய் இருக்கிறார்.

 4. தேவன் ஆவியாயிருக்கிறார். யோவா 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார். லூக் 4:24; ஆவிக்கு எலும்பு, இரத்தம் இருக்காது. ஆதி 1:26 தேவன்,நமது சாயலாகவும் , நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாகுவோமாக. யோவா 5:37; (தேவனுக்கு ரூபம் உண்டு. ) அவர் ரூபத்தை மனிதர் யாரும் கண்டதில்லை.

5. அதரிசனமானவர் - - Invisible – காணக்கூடாதவர். 1தீமோ.6:16; யோவா 1:18; தேவனை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஓரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவா 5:37; நீங்கள் ஒருகாலும் அவர் சத்தத்தைக் கேட்டதில்லை. அவர் ரூபத்தைக் கண்டதில்லை.( 1யோவா. 4:12) யாத் 33:20 ; ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடு இருக்க கூடாது என்றார். கொலோ.1:15;அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபம் ….

6. பரலோகத்தில் இருக்கிறவர். – heaven. 2நாளா 6:21; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதை கேட்பீராக(6:30;6:39) மத். 6:9; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே….(மத் 5:16; 5:45;5:48)

1. (தூணிலும் துரும்பிலும் இருப்பவர் அல்ல.)

2. எங்கும் நிறைந்தவர் அல்ல.

3. அவருடைய ஆவி சர்வ லோகத்திலும் கிரியை செய்யக்கூடியது.

4. அவருடைய ஆவிக்கு மறைவானது ஒன்றுமில்லை. சங் 139:5-10; எரே 23:23-24;

7. ஒப்புமை இல்லாதவர் - compareபண்ணமுடியாதவர் . ஏசா. 40:18; தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? யாத் 15:11; தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? எரே 10:6; கர்த்தாவே உமக்கு ஒப்பானவன் இல்லை. (ஆகவே தான் இயேசு “என் பிதா என்னிலும் பெரியவர்” யோவா.14:28)

8. அன்புள்ளவர் - Love 1யோவா 4:8; அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 3:1; )

9. சர்வ வல்லமையுள்ளவர் -All mighty God.. ஆதி 17:1; கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி ; நான் சர்வ வல்லமையுள்ள தேவன் என்றார் .(யாக்கோபுக்கு – ஆதி.35:11;) யாத் 6:3; சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் ஆபிரகாமுக்கும் , ஈசாக்குக்கும், யாக்கோப்புக்கும் தரிசனமானார். சங் 91:1; சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்.

10. பரிசுத்தர் - Holy . ஏசா 6:3; தூதர்கள் அவரை சூழ்ந்து நின்று பரிசுத்தர், பரிசுத்தர்,பரிசுத்தர் என்று துதி செலுத்துகின்றனர். 1பேது 1:15-16; உங்களை அழைத்தவர் பரிசுத்தர் ….. நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். (லேவி 11:45; )

11. சர்வ ஞானமுள்ளவர் - Wisdom எரே 10:12; பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து வானத்தை தமது அறிவினால் விரித்தார். யோபு 12:13; அவரிடத்தில் ஞானமும் அறிவும் எவ்வளவு அதிகமாய் இருக்கும்? ரோம 11:33; ஆ! தேவனுடைய ஐஸ்வரியம்,ஞானம்,அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது. 1தீமோ 1:17; தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனாயிருக்கிறார்.

12. நீதியுள்ளவர் - Righteous சங் 11:7 ; கர்த்தர் நீதியுள்ளவர் - 2நாளா 12:6 ; எஸ்றா 9:15; யோவா.17:25; நீதியுள்ள பிதாவே….

13. சிருஷ்டிகர். – Creator சங் 33:6; வானங்களும் , அதன் சர்வசேனையும் கர்த்தருடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டது. சங் 102:25; நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர் …. எபி 3:4; எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும். எல்லாவற்றையும் உண்டாக்கினவன் தேவன் … சங் 104:4 ; தமது தூதர்களை காற்றுகளாகவும் ,அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார். (எபி.1:7) ஆதி 2:7 ; மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி , ஜூவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜூவாத்துமா ஆனான். மாற் 10:6; ஆணும், பெண்ணும் உண்டாக்கினார். ஆதி 2:19; வெளியின் சகல வித மிருகங்களையும் ஆகாயத்தின் சகல வித பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கினார். ஆதி 1:20-21; நீந்தும் ஜீவ சந்துகள் அப் 4:24; நீர் வானத்தையும், பூமியையும் , சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். (பேதுரு)

see:www.biblegreatmystery.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard