////////கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமான இதுபோன்ற விஷமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்; மீண்டும் உமது பழைய தூசிகளையெல்லாம் தட்டியெடுத்து அலம்பல் பண்ணத் துவங்கினால் நானும் இங்கேயிருக்கும் உம்முடைய விடையளிக்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி களத்தில் இறங்கவேண்டியிருக்கும்;முதலில் உமது விசுவாசத்தை சரியாக நிர்ணயித்துக்கொண்டு பிறகு இதுபோன்ற கொள்கை அறிவிப்புகளைச் செய்யவும். யௌவன ஜனம் தளத்தின் நண்பர்களுக்கு ஒரு தகவல்; இறைவன் எனும் தளத்தின் நிர்வாகியான சுந்தர் பல்வேறு முரண்பட்ட காரியங்களை எழுதி வெளிப்பாடு குவித்திருக்கிறார்;வெளிப்படுவதெல்லாம் வாசனையானதல்ல... அதிலே பல நாற்றங்களும் உண்டு; அதுபோலவே சுந்தர் எனும் இந்த நபர் எழுதி வைத்திருப்பதையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு வாதிட்டுக் கொண்டிருந்தால் பிறகு இவரும் பெரிய ஆளாகிவிடுவார் என்றே அமைதி காத்தோம்; ஆனாலும் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை இங்கே அவ்வப்போது எதிர்த்து வந்திருப்பதுடன் அவற்றை இங்கே மொத்தமாக தொகுத்து வைத்துள்ளோம்; தேவைப்பட்டால் அவற்றை மீண்டும் எடுத்து ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்; இதற்கிடையே திரித்துவ உபதேசத்தைக் குறித்து ஒன்றும் அறிந்திராத இவர் போகிற போக்கில் அடித்துள்ல காமெண்ட்டினால் அதிர்ச்சி ஏற்படுகிறது;இதன் இரகசியம் வேறொன்றுமில்லை; பழைய நண்பர்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பிக்கவும் புதிய நண்பர்களை வசீகரிக்கவுமே இந்த புதிய வேஷம்; மற்றவையெல்லாம் அரைத்த மாவுதான்; இந்த ஆள் முன்னாலும் செல்லமாட்டார்,வழியும் விடமாட்டார்; இயேசுநாதர் மிகாவேல் தூதனின் அவதாரம் என்றால் அதையும் எதிர்ப்பார்; இயேசுநாதர் ஆதிதேவனுக்கு சமமானவர் என்றால் அதையும் எதிர்க்கிறார்; இதுபோன்ற ஆட்களை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க அனுப்பினால் இவருக்கு தேர்தல் கமிஷனே கமிஷன் கொடுக்கும்..!/////////
நண்பரே இந்த கேள்விகளுக்கு நாம் கட்டாயம் பதில் அளித்தே தீர வேண்டும்
நாம் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்வதாக எனக்கு நியாபகம்
சில்சாமின்
உழியம் கர்தருக்காகவ அல்லது மனிதர்களை விமரிசிப்பதோ தெரியவில்லை ஆண்டவர் ஒருவருக்கே வெளிச்சம்
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
கண்ணா அவர்களே, சில்சாம் போன்ற கீழ்தனமான கள்ளப் போதகர் விடயத்தில் நாம் எப்பவுமே கவனமாக பெயல்படுவது மிக அவசியம். இவர்கள் போன்றவர்கள் வேதத்தை ஆதாரமாக கொண்டும் சத்தியத்தை தெரியாத அப்பாவி மக்களை வஞ்சித்து அவர்களின் பணத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகள். இவர்கள் போன்ற சுயனவாதிகளை கண்டாலே எனக்கு எரிச்சலா வரும். இவர்களை எல்லாம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வருகிற போல கல்லாலே எரிந்து கொள்ளவேண்டும் இந்த சில்சாம் என்ற கள்ளப் போதகனை.
__________________
கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
ஜான்சன் கென்னடி , அன்பு , இளங்கோ , சுந்தர் ,ஆபிரகாம் , ஆதாம், தினோ , கருணா , குரு , சகாயம் , நிசி மற்றும் பலர் கிறிஸ்தவத்தின் அன்பை நமது சகோதரர் சில்சாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்
மேலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் காட்டு என்பது அவர்புரிந்து கொண்ட வேதம் போல ..................
நல்ல சாட்சி இவரெல்லாம் கிறிஸ்தவராம்,
அவர்களுக்கு இவர் கொடுத்த பட்டம், வேத புரட்டர்கள் , அந்திகிறிஸ்து , பாவிகள் , இன்னும் பல
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
சகோதரர்களே சகோ. சில்சாம் பற்றி மட்டுமல்ல யாரைபற்றியும் தவறான வார்த்தைகளை இங்கு பதிவிட வேண்டாம் என்று சகோதரர்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன். அவரளவுக்கு எழுதவோ எதிர்த்து நின்று விவாதிக்கவோ எனக்கு மனதிடனும் இல்லை நேரமும் இல்லை எனவே அவரை பற்றிய காரியங்களில் இருந்து விலகிகொள்ளவே விரும்புகிறேன்
நாய் குறைக்கிறது என்று நாமும் அதைப்போல குறைத்து நாயாவதைவிட குறைந்த பட்சம் அமைதிகாத்து மனுஷனாகவாவது இருக்க பழகவேண்டும் என்பது இயேசுவின் வார்த்தைக்குள் என்னுடைய கருத்து.
பரிவாரங்கள் புடைசூழ பல்லக்கில் போய்கொண்டிருந்த ஒரு ராஜா வேலியில் ஒரு ஓணான் ஓடுவதை கண்டு பல்லக்கில் இருந்து இறங்கி ஓடிவந்து ஒரு கல்லை எடுத்து அந்த ஓணானை கல்லால் அடித்து விரட்டிவிட்டு, திரும்போ போய் பல்லக்கில் ஏறிகொண்டாராம்.
அதுபோல் ஒரு மனிதன் என்னதான் ஆவிக்குரிய நிலையில் வளர்ந்தாலும் அவனது அற்ப மாம்ச குணமானது அவ்வளவு சீக்கிரம் அவனைவிட்டு நீங்காது என்பதை அடிக்கடி அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்றொரு பழமொழி சொல்வார்கள் அதுபோல் ஒருவருக்குள் குடிகொண்டிருக்கும் "ஜன்ம மாம்ச குணத்தை" அழித்து "ஆவிக்குரிய குணத்துக்குள்" வளருகிறது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. அது பல நேரங்களில் உள்ளே ஒளிந்துகொண்டிருந்தாலும் சில நேரங்களில் வெளியில் தலையை தூக்கி கேட்டினை நடப்பித்து நம்மை சீரழித்துவிடும்.
மாம்சத்தின்படி பிழைப்பவன் சாவான் என்று வேதம் சொல்கிறது
எனவே நமது ஆவிக்குரிய சோதிப்பதர்க்கென்றே அனுமதிக்கபட்டிருக்கும் அவருக்கு நாம் மாசத்தின் அடிப்படையில் மறு உத்தரவு கொடுக்காமல் ஆவியினால் மாம்ச கிரியைகளை அழித்து ஆண்டவருக்குரிய காரியங்களில் அதிகமதிகம் மறுரூபம் ஆகவேண்டிய அவசியத்தை உணர்ந்து முடிந்த அளவு பொறுமை காப்பதே சிறந்தது! .
நம்மை அடிப்பவருக்கு திரும்ப கன்னத்தை காட்ட முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் மௌனமாக இருந்துவிடுவது நல்லது.
-- Edited by SUNDAR on Monday 4th of April 2011 01:08:25 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பின் சுந்தர் அவர்களே, நீங்கள் கீழே எழுதியபதிவுகளில் உள்ள உட்கருத்து மிகவும் சரியே!!! நான் கூட ஏதோ வாய்க்கு வந்தபடி சில கருத்துக்களை எழுதிவிட்டேன். அதற்கு தங்களிடம் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் பல நூற்றுக்கணக்கான விசுவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அடுத்தவர்களின் குப்பைகளை இங்கு கொட்டுவதினால் யாருக்கு என்ன பயன்? ஏன்னை இந்த தளத்தில் உள்ள பதிவுகளை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவது, இந்த தள அங்கத்தவர்களால் கொடுக்கும் விலைமதிப்பில்லா அருமையான பதிவுகளும், மற்றும் சுந்தர் இறைநேசன் போன்றவர்களின் அடக்கம், பொறுமை, கண்ணியம் போன்றவைகளே. நன்றி
__________________
கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.