நான் கிராமத்தில் வசித்தபோது அடர்ந்த காட்டுக்குள் வேலைசெய்ய செல்வதுண்டு. அவ்வாறு வேலை செய்துகொண்டிருக்கும்போது தண்ணீர் தாகம் ஏற்ப்பட்டால் அடர்த்தியான முட்புதர்களுக் குள்ளே சென்று நீர் இருக்கும் இடங்களை தேடுவோம். முட்கள் பல இடங்களில் உடலை பதம்பார்க்க, வழி எதவும் இல்லாத பகுதிகளுக்குள் புகுந்து சென்று யாராவது ஒருவர் முதலில் ஒரு நீர்நிலையை கண்டுபிடிப்பார். பின்னர் கையில் இருக்கும் அரிவாளால் முட்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி அங்கு போய்வர ஓரளவு வழியை ஏற்ப்படுத்துவோம். சிலநாட்கள் கழித்து பார்த்தால் அநேகர் அந்தவழியே நீர் அருந்த செல்வதோடு சிறு தடைகளை ஏற்ப்படுத்தும் எல்லா முட்கிளைகளும் வெட்டப்பட்டு சுலபமாக செல்ல பாதை ஏற்ப்படும். இன்னும் சில நாட்களில் எல்லோரும் சேர்ந்து அந்தே நீர்நிலையே அசிங்கபடுத்திவிடுவார்கள் பின்னர் வேறு நீர்நிலையை தேடி அலையவேண்டி வரும்.
குறுகிய பாதையாக இருக்கும் வரை மட்டுமே அங்கு பரிசுத்தம் இருக்கும் பாதை விசாலமாகி விட்டால் அங்கு திரள்கூட்டம் சுலபமாக வந்துவிடும் அத்தோடு அசிங்கமும் சேர்ந்தேவந்துவிடும்.
ஜீவனுக்கு போகும் பாதை மிகவும் கூறுகிறது! அதன் உள்ளே போகவேண்டும் என்றால் அனேக சிரமங்கள் உண்டு. மேலே எழுந்தால் இடிக்கும், சற்று விலகினால் தடுக்கிவிடும், லேசாக பாதை மாறினால் முட்கள் குத்தும்! ஆண்டவர் தரும் வெளிச்சத்தில் வழி விலகாமல் சரியாக நடந்தால் மட்டுமே அந்த குறுகிய பாதையில் பயணிக்க முடியும்.
ஆதியில் அனேக பரிசுத்தவான்கள் அவ்வாறு பயணித்து உண்மையான தேவ அன்பை
ருசித்துள்ளனர் ஆனால் அவர்கள் பயணித்த தேவன் காண்பித்த குருகிய பாதையானது இன்று அனேக பாஸ்டர்கள் மற்றும் பணம் சேர்க்கும் ஞானவான்களால் விசாலமாக்கப்பட்டுவிட்டது.
அதாவது தேவனின் எந்தெந்த வார்த்தைகள் எல்லாம் சுலபமாக பணிப்பதற்கு இடைஞ்சலாகவும் தாங்கள் சுகபோக வாழ்க்கைக்கு தடுக்கலாகவும் இருக்கிறதோ அந்த வசனங்கள் எல்லாம் வெட்டி ஓரம் கட்டப்பட்டுவிட்டன. குறுகிய வழி விசாலமாக்கப்பட்டு அனேக நாட்கள் ஆகிவிட்டது. அந்த வழியின் இறுதியில் பரிசுத்தம் இல்லை! ஜீவன் இல்லை! அசிங்கமும் கேடும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் அனேக கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக ஒருவர்பின் ஒருவராக ஓடுகின்றனர்.
மத்தேயு 7:14ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்
இந்த வசனம் "ஜீவனுக்கு போகும் வழியை கண்டுபிடிப்பதே சிலர்" என்பதை தெளிவாக கூறுகிறது. ஆனால் டிவியில் ஒரு ஊழியரின் செய்யம் பிரசங்கத்தை கேட்க லட்ச கணக்கான மக்கள் திரண்டு வந்து அமர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது. இவர் எந்த வழியை போதிக்கிறார் இவர்கள் எந்த வழியை கண்டுகொண்டார்கள் என்பது ஒரு கேள்விக்குறியே.
இந்த உலகத்தில் வசிக்கும் எல்லா ஜாதி மக்களுக்கும் துன்பவும் துயரமும் நோயும் நொடியும் வரத்தான் செய்கிறது அதுபோல் கிறிஸ்த்தவர்களுக்கும் எல்லாமே வருகிறது அதெல்லாம் ஒருவரை ஜீவனுக்கு கொண்டுசெல்வதர்க்கு வரும் துன்பமல்ல. அது நமது சுய இச்சயிநிமித்தம் வரும் துன்பங்கள் ஆகும். ஆனால் வேத வசனத்திநிமித்தம் வரும் துன்பம் மட்டுமே ஒருவர் குறுகிய பாதையில் நடக்கிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
என்ற இயேசுவின் வார்த்தை மிகவும் கடுமையானதும் சிரமங்கள் நிறைந்ததும் ஆகும். அந்த குறுகிய பாதையில் உள்ள சிரமங்களை அனுபவிக்க விரும்பாத அந்த பணக்கார வாலிபன்
குறுகிய பாதையை வேண்டாம் என்று விட்டு விலகிபோனான். இன்றும் அநேகர் அதுபோல் தேவனின் வார்த்தைகளை கைகொள்வதிநிமித்தம் வரும் உபத்திரவங்களை சகிக்க விரும்பாதவர்களாக அவ்வசனங்களை எல்லாம் தள்ளி குறுகிய பாதையை விசாலமாக்கிவிட்டு கடந்துபோகின்றனர் ஆனால் இயேசு மிக தெளிவாக சொல்கிறார்.
லூக்கா 11:28தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
தேவனின் வார்த்தைகளை கேட்டு அதன்படி வாழ்வதே வேதம் காட்டும் குறுகிய பாதை ஆகும். உலகத்தோடு ஒத்த வேஷம் போடமுடியாத அந்த வசனங்களினிமித்தம் அனேக துன்பங்கள் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆகினும் ஆவியானவரின் பலத்துடன் தொடர்ந்து பயணிப்பவனே அதிக பாக்கியவானும் ஜெயம்கொள்பவனும் ஆக முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வதைதவிர வேறு எந்த வழியும் விசாலமான வழியே. வேதத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் சொல்லபட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையின்படியும் வாழ பிரயாசம் எடுப்பது அவசியம்.
ஆனால் இன்று கிறிஸ்த்தவர்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள் அப்படி நடக்கிறார்களா? குறுகிய பாதையில் பயணிக்க சிரத்தை எடுக்கிறார்களா? என்று பார்த்தால் யாரோ ஒருசிலர் அவ்வாறு இருக்கலாம்.
ஆனால் தாங்கள் கிறிஸ்த்துவின் சொல்படி நடக்காமல் "அவரிடம் அது தவறு, இவரிடம் இதுதவறு, என்று சொல்லி தங்களை தாங்களே கிரிஸ்த்துவத்துக்கும் வேதத்துக்கும் பாதுகாவலராக எண்ணிக்கொண்டு அடுத்தவரை ஆயிரம் குறைகூறும் கூட்டமே பரவலாக எங்கும் காணப்படுகிறது.
யாக்கோபு 2:2பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, இருவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று வசனம் சொல்கிறது ஆனால் உண்மையில் அப்படி நடக்கிறதா? 1 லட்சம் காணிக்கை கொடுத்தால் 10 நிமிடம் சாட்சி சொல்லலாம். ஓசியில் சாட்சி சொல்ல வந்தால் சொல்ல விடாமல் மைக்கை பிடுங்குகிறார்கள்.
தாழ்மையை பற்றி அனேக வசனங்கள் சொல்வதோடு அந்த தாழ்மை எப்படியிருக்க வேண்டும் இயேசு முன்மாதிரியாக செய்துகாட்டினார் ஆனால் இன்றோ! சினிமா நட்ச்சத்திரங்களுக்கு சமமாக தங்களை உயர்த்தும் பலரை நாம் பார்க்க முடியும்.
ஒரு சாதாரண கேர்செல் லீடருக்கு "தான் ஒரு லீடர் இவர் என்ன எனக்கு புத்தி சொல்வது" என்ற பெருமை வந்துவிடுகிறது.
பிறகு பெரிய பாஸ்டர் அவர் திறமையை காண்பிப்பார் அல்லவா?
எபேசியர் 5:22மனைவிகளே, கர்த்தருக்குக்கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
எபேசியர் 5:24ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும்கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
என்று வசனம் சொல்கிறது ஆனால் இங்கு அப்படி நடக்கிறதா? அநேகர் புருஷர்களோடு எதற்க்கெடுத்தாலும் சண்டை போடும் நிலையில் இருக்கிறார்கள். சிலர் தங்களுக்கு சாதகமான காரியங்களில் கீழ்படிகிரார்கள் கொஞ்சம் சிரமம் வந்தாலும் "நீயா நானா பார்க்கலாம்" என்று எதிர்த்து நிற்கிறார்கள்.
உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள்/யாரையும் சபிக்காதீர்கள்/யாரிடமும் கசப்பு வைக்காதீர்கள் போன்ற வேதம் சொல்லும் இன்னும் அனேக காரியங்கள் இன்று மிக சாதாரணமாக உதாசீனபடுத்த படுவதை நாம் காணலாம்.
வேத வார்த்தைக்கு சிரத்தை எடுத்து கீழ்படியாமல் இவர்கள் எதை தேடி ஓடி, என்னத்தை சாதிக்க போகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.அப்படி அவர்கள் ஓடி ஓடி சுவிசேஷம் சொல்லி ஒரு புது விசுவாசியை உருவாக்கினாலும் அவர்களும் இவர்களைப்போலவே கீழ்படிய மனமில்லாதவர்களாக இருக்க போகிறார்கள், பிறகு யார் குறுகிய வழியில் பயணிப்பது?
அதனால்தான் ஆண்டவர் சொல்கிறார்
லூக்கா 13:24அநேகர் உட்பிரவேசிக்கவகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
உட்பிரவேசிக்க விரும்புகிறவர்களுக்கு கூட அது கூடாமல் போகும்போது, ஏனோ தானோ என்று இருப்பவர்கள் எம்மாத்திரம் ?
அன்றைய வேதபாரகர் பரிசேயரின் நிலையே இன்றும் தொடர்கிறது?
மத்தேயு 23:13 மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
இன்று "தாங்கள் தேறினவர்கள்" என்று தங்களை தாங்களே மேலாக எண்ணி கொள்பவர்கள் இதைதான் செய்கிறார்கள். குறுகிய வழியை அவர்கள் அறிந்திருந்தும் தாங்களும் அந்த குறுகிய வாசலில் பயணிப்பது இல்லை, அதில் பயணிக்க விரும்புவோரையும் ஏதாவது இடைஞ்சல் ஏற்ப்படுத்தி மனமடிவாக்கி பயணிக்க விடுவது இல்லை. இந்த வேலையைதான் அவர்கள் சரியாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் யார் அந்த குறுகிய வாசலை கண்டடைத்து அதில் பிரவேசிப்பது?
மத்தேயு 7:21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)