மத்தேயு 18:7இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ
கடந்த நாளில் ஓரு குறிப்பிட காரியத்துக்காக பாரத்துடன் ஜெபித்துகொண்டிருந்தபோது ஆணடவர்
இடைபட்டு "பிறருக்கு இடறலை உண்டாக்கும் கருத்துக்கள் இந்த தளத்தில் பதியப்பட்டு அது அநேகர் பார்வைக்கு வைக்கப்படுவதைவிட, அந்த தளத்தை மூடிப்போடுவது நலம்" என்று சொல்லி கடிந்துகொண்டார்.
நித்தியத்துக்கு ஜனங்களை நடத்தும் நற்ப்போதனைகளையும் இயேசு முன்வைத்து சென்ற மாதிரி வாழ்க்கையை பின்பற்றி நடந்து அதிகமதிகமாக மறுரூபம் ஆகுதலை குறித்த கருத்துக்கள் மட்டுமே இந்த தளத்தில் அதிகம் பதிவிடப்பட வாஞ்சிக்கிறேன். அடுத்தவரை பழித்து குறைகூறி எழுதப்படும் கருத்துக்கள் மற்றும் வீண் விவாதங்கள், அரட்டைகள், பிற மதத்தவரை புண படுத்தும்படி எழுதப்படும் வார்த்தைகளும் மார்க்க பேதங்கள் பற்றிய காரியங்களும் இங்கு பதிவிட வேண்டிய அவசியம் இல்லை.
வேத புத்தகம் முழுவதும் "என் வார்த்தையை கைகொள்ளுங்கள்" "என் வழிகளில் நடவுங்கள்" "வார்த்தைகளை கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்" "என்மேல் என்பாயிருந்தால் என் வார்த்தை கைக்கொள்" "ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகொள்" என்று தேவனால் திரும்ப திரும்ப போதிக்கப்படுவதும் அவர் எதிர்பாப்பதும் அவர் வார்த்தைகளின் படி நமது வாழ்வுநிலை அமையவேண்டும் என்பதே.
அதன் அடிப்படையில் நாம் நடத்தும் இந்த தளத்தில் ஆண்டவர் தெரியப்படுத்திய மிகமுக்கியமான காரியங்களை மட்டுமே பதிவிட்டு வந்திருக்கிறோம்
ஆண்டவரின் இந்த கடிந்துகொள்தலை கருத்தில்கொண்டு, நம்மோடிருக்கும் தள நிர்வாகியிடமும் இந்த காரியம் குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. இனி இந்த தளத்தில் பிறருக்கு இடரலை ஏற்ப்படுத்தும் அல்லது மனுஷர்களை நிர்விசாரமாக வாழ தூண்டும் எந்த கருத்துக்கள் பதிவிடப் பட்டாலும் அது உடனடியாக நீக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். அதுபோல் தளத்தில் இருக்கும் பதிவுகளை ஆராய்ந்து அறிந்து தேவையற்ற அல்லது இடரலை ஏற்ப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் தேவையற்ற கருத்துக்கள் எதுவும் இருந்தால் அதுவும் நீக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாம் கிறித்துவை தொழுதுகோள்வதால் மட்டும் கிறித்தவர் ஆகிவிட முடியாது. கிறிஸ்து + அவர் என்ற சொல்லை பிரித்து "தானே ஒரு கிறிஸ்த்துவாக, கிறிஸ்த்துவை பின்பற்றி அவர் வைத்து சென்ற முன்மாதிரியான வாழ்க்கைப்படி வாழ விழைவதாலே கிறிஸ்த்தவனாக இருக்க விரும்புகிறோம்
I பேதுரு 2:21இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
அந்த மாதிரியை பின்பற்றி நடப்பதற்கும் தேவனின் வார்த்தையை கைக்கொண்டு நடக்குதல் சம்பந்தமான செய்திகளுக்குமே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)