கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் நீங்கள் நாங்கள் உற்பத்தில் செய்து விற்க்கபோகும் பொருள் பற்றிய உங்கள் கருத்தை சொன்னால் உங்களுக்கு நல்ல பரிசு ஓன்று கிடைக்கும் என்று சொல்லி ஆசை காட்டினார்கள். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கிய என் மனைவியையும் இன்னும் இரண்டு மூன்று பெண்மணிகளையும் சேர்த்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று அங்கேபோய் நீங்கள் ஒரே ஒரு பொய்யை சொன்ன்னல் இந்த பொருள் உங்களுக்கு கிடக்கும் என்று ஒரு அழகிய சமையல் பாத்திரத்தை காட்டி சொல்லவே, போனவர்கள் எல்லோரும் அந்த பொய்யை சொல்லி ஆளுக்கு ஒரு பாத்திரத்தை பெற்றுக்கொண்டு வந்துவிட்டனர்.
அந்த நிகழ்ச்சியை அறிந்தபோது நான் என் மனைவியை கடிந்து கொண்டேன். ஒரு பாத்திரத்துக்காக "உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தையை மீறி பொய்சொன்னது தவறு அது ஆண்டவருக்கு பிடிக்காத செயல் கடிந்துகொண்டேன்.
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் இன்னொரு பெண்மணி வீட்டில்
இருந்த என் மனைவியிடம் வந்து, நீங்கள் எங்களுடன் வந்து ஒரு விளம்பரத்துக்காக சும்மா ஓரிரு வார்த்தைகள்தான் சொல்ல வேண்டும் உங்களுக்கு ஒரு அழகிய பரிசுப்பொருள் காத்துகொண்டு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். எனது மனைவியும் என்ன சொல்லவேண்டும்? என்று கேட்டபோது உங்கள் வயதை மட்டும் ஐந்து வருடம் குறைத்து சொல்லவேண்டும். என்று சொல்லியிருக்கிறார். என் மனைவி அதற்க்கு உடன்பட மறுத்துவிட்டார் அனால் எங்கள் பில்டிங்கில் உள்ள அநேகர் அவர்களுடன் சேர்ந்து சென்று பொய் சொல்லி பரிசுப்பொருளை பெற்று வந்தார்கள்.
இதை எல்லாம் இருதயத்தில் வைத்து ஆராய்ந்தபோது, இந்த சாத்தான் பணத்தையும் பொருளையும் காட்டி இந்த ஜனங்களை எவ்வாரெல்லாம் வஞ்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் வஞ்சிக்கிறான் என்பதை அறிய முடிந்தது.
நாம் கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் உட்காந்து இருந்தாலும் கதவைதட்டி நம்மை அழைத்து கொண்டுபோய் பரிசு கொடுத்து பொய் சொல்ல வைத்து, ஒவ்வொருவரும் தனது கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்கிறான் என்றே எனக்கு தெரிகிறது.
ஜனங்களும் தேவனுக்கு எதிராக செயல்படும் முக்கியகாரணி இந்த உலகப் பொருட்கள் தான் என்பதை அறியாமல் அதில் சுலபமாக் வீழ்ந்து போய்விடுகின்றனர்!
இந்த காரியங்கள் மட்டுமல்ல! இன்னும் கடன் அட்டைகள் மற்றும் வீட்டு கடன்கள், தவணை முறை பொருட்கள், அதிக வட்டி விகிதங்கள் என்று பல்வேறு ஆசைகளை மனிதனுக்கு காட்டி, ஒரு மனுஷனை எப்படியாது தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்துகொள்ள சாத்தான் போராடிவருகிறான். அவன் தந்திரத்தை அறியவில்லை என்றால் அதில் வீழ்ந்து விடுவது உறுதி! எனவே விழிப்பாக இருத்தல் அவசியம்.
-- Edited by SUNDAR on Thursday 21st of April 2011 03:38:08 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)