போட்டி பொறாமை என்பது நாம் வாழும் இந்த பூமியில் அதிகமாக எல்லோருடதிலும் எல்லா மனிதர்களிடதிலேயும் உண்டு
இது இல்லாத இடமே கிடையாது என்று சொல்லலாம்
மனிதர்களுடைய எல்லா செயல்களிலும் இந்த இரண்டு காரியனகள் நிச்சயம் இருக்கும் உதாரணமாக நம்முடன் இருக்கும் மனிதர் ஏதாவது ஒரு விஷயத்தில் உயர்ந்து இருந்தால் சரி உடனே நமக்கு இந்த பொறாமை போட்டி என்கின்ற எண்ணம் வந்துவிடும் அது யாராய்இருந்தாலும் சரி. எந்த காரியமாய் இருந்தாலும் சரி
பதவி
படிப்பு
வேலை
ஊழியங்கள்
சபைகள் எல்ல காரியத்திலும் இது உண்டு
ஆனால் என் ஆராட்சியின் படி பார்த்தால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும் இந்த போட்டி பொறாமை என்பது வரவே இல்லை
அது எந்த காரியம் என்பதை தளத்தின் சகோதர்கள் யோசித்து சொல்லவும்.....
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 4th of June 2012 01:44:54 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோதர் ஜான அவர்கள் விளக்கத்தின்படி மரணத்துக்கு பின்னர் பாதாளத்தில் பொறாமை ஒழிந்துபோகும் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனம் இருக்கிறது. ்
பிரசங்கி 9:6அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று;
.
ஆனால் சகோதரர் எட்வின் அவர்களின் கேள்விப்படி "இந்த பூமியில் வாழும் மனுஷர்களிடம் எல்லா காரியத்திலும் பொறாமை இருக்கிறது ஆனால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும் போட்டி பொறாமை வருவதில்லை, அது எந்த காரியம் என்று கேட்டுள்ளார்"
சுருக்கமாக கேட்டால் "இந்த பூமியில் வாழ்பவர்கள் எந்த காரியத்தில் போட்டி பொறாமை கொள்வதில்லை?" என்று எடுத்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்
கர்த்தராகிய இயேசு தம் சிறுபிராயத்தில் சில உணவுவகைகளை மாத்திரம் உட்கொண்டாராம். இவைகள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன!!
என்ன உணவு உட்கொண்டார் என அறிந்தவர்கள் வசனத்தை குறிப்பிடவும்..
அவருடைய சீஷர்கள் சாப்பிட்டார்கள் என்றுதான் உள்ளது கதிர் அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள் (மத் 12:1) மீன் அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.(மத் 14:19)
ஆனால் இது உயிர்தெழுந்த பிறகு மீன், தேன் லூக்கா 24:42 அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்
ஆனால் இது சிறுபிரயாத்தில் இல்லை அப்பம் மத்தேயு 26:17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள் (மத் 26:17 )
அத்திப்பழம் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(மத் 21:21
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (யோவான்4:34.)
இவ்வளவு தான் என் புத்திக்கு எட்டியது தெரிந்த சகோதரகள் சொல்லவும்
-- Edited by I am Follower of Jesus on Thursday 2nd of August 2012 11:39:08 AM