வேத புத்தகத்தில் உள்ள வார்த்தைகளில் என்னும் இல்லாத அளவுக்கு மிகமிக விசேஷித்த விதமாக எழுதப்பட்ட வார்த்தை என்று எடுத்துகொண்டால் அது தானியேல் புத்தகத்தில் வரும் கீழ்கண்ட வார்த்தை ஆகும்!
ஆம்! இந்த வர்த்தயானது எந்த தீர்க்க தரிசியாலும் சொல்லப்படவும் இல்லை, எந்த தேவ மனிதனாலும் எழுதி வைக்கபடவும் இல்லை! மாறாக ஆச்சர்யப்ப்படும் விதமாக மனித கையுருப்பு தோன்றி சாந்து பூசப்பட்ட சுவரில் எழுதிய வார்த்தைகள்.
தானியேல் 5
1. பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான்.
2. பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
3. அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டு ந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
4. அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும்
5. அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.
25. எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. 26. இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், 27. தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,
மனிதகையுருப்பு தோன்றி சுவரில் எழுதியது பெல்ஷாத்சார் என்ற ராஜாவுக்குதான் என்றாலும் இதிலிருந்து நாம் படிக்கவேண்டிய பல பாடங்கள் இருக்கிறது!
இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தேவநீதி என்னும் தாராசில் நிறுக்கப்படுகிறது என்பதை நாம் அறியேண்டும்!
ஆம்! இந்த பூமியில் மாம்சமாக பிறந்துள்ள ஒவ்வொருவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தேவன் பார்வையில் தராசினால் வைத்து நிறுக்கப்படுகிறது. நமது பார்வைக்கு சாதாரணமானதாக தோன்றும் சில காரியங்கள் இருக்கலாம். மற்றவர் பார்வைக்கு மறைவானதுபோல் இருக்கும் சிலகாரியங்களாக இருக்கலாம், யாரும் நம்மை கவனிக்கவில்லை என்று எண்ணி மறைவிடங்களில் எதவாது தவறான காரியங்களை செய்ய துணியலாம் ஆனால் தேவனின் திறந்த கண்கள் நம்மை ஒவ்வொரு கனமும் நோக்குவதோடு அந்த செய்கைகளையும் தேவ நீதி என்னும் தராசில் எடைபோடுகிறது என்பதை அறியவேண்டும்.
தாவீது மிக கச்சிதமாக செயல்பட்டு உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தனது மனைவியாக்கிகொண்டு உரியாவை போர்முனையில் மடிவித்தான். தேவனை அறிந்த இந்த தாவீதுகூட ஆண்டவர் காணமாட்டார் என்று அசட்டைபண்ணி இந்த காரியத்தை செய்திருக்கலாம். ஆனால் ஆண்டவரோ அவனது செய்கையை தராசிலே நிறுத்து நாத்தான் தீர்க்கதரிசி மூலம் தண்டிக்க தவறவில்லை!
II சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
II சாமுவேல் 12:10இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
அதுபோல் ஆகாப் தன் மனைவியின் துணையுடன் நாதாபின் திராட்சை தோட்டத்தை அபகரித்த காரியம் I இராஜாக்கள் 21: ல உள்ளது. யாரும் அறியவில்லை என்று ஆகாப் தான் மனைவியோடு சேர்ந்து செய்த இந்த நீதியற்ற செயல் தேவ நீதி என்னும் தராசில் நிறுக்கப்பட்டு குறை காணபட்ட்டபடியால் கர்த்தர் எலியாவை
அனுப்பினார்
I இராஜாக்கள் 21:19. : நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
இவ்வாறு பெரிய காரியம் மட்டுமல்ல சிறிய காரியங்களும் கூட தேவனின் நீதி என்னும் தராசிலே அவ்வப்பொழுது நிறுக்கப்பட்டு அதற்க்கு தகுந்த பிரதிபலன் உடனடியாக தேவனால் வழங்கப்படுகிறது என்பதை நாம் அறியவேண்டும்.
அடுத்து மாம்சத்தால் செய்து முடிக்கும் செயல்கள் மட்டுமல்லாது மனிதனின் மனதில் தோன்றும் ஒவ்வொரு சிந்தனைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே தேவனால் கண்காணிக்கபடுகின்றனர் என்பதை நாம் அறியவேண்டும். நான் மனதில்தானே நினைக்கிறேன் இதை யாரும் அறியவாய்ப்பில்லை என்று எண்ணுவோமாகில் நம்மை போல முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது!
I நாளாகமம் 28:9 கர்த்தர் எல்லாஇருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்
லூசிபர் தேவனுடைய சிங்காசனத்துக்கு மேலே தனது சிங்காசனத்தை உயர்த்த எந்த முயற்ச்சியும் எடுத்ததாக வேதம் சொல்லவில்லை. மாறாக:
ஏசாயா 14:13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
அவன் இருதயத்தில்தான் இவ்வாறு சொன்னான் அடுத்த கணமே அந்த நினைப்பு
அல்லது சிந்தனை தேவனுக்கு தெரிந்து அது தேவநீதியாகிய தராசிலே நிருக்கபட்டு
குறை காணப்பட்டு
15. அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
பாதாளத்தில் தள்ளுண்டு போனான்.
சங்கீதம் 66:18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
நமது இருதயத்தின் அக்கிரம சிந்தைகூட தேவன் நமக்கு செவிகொடுக்க முடியாதபடி செய்துவிடும்.
எனவே அன்பானவர்களே நமது ஒவ்வொரு சிந்தனைகளும் தேவனால் கண்காணிக்கபடுகின்றன என்பதை நாம் அறியவேண்டும். நமது மனதில் முழுவதும் கரையையும் அழுக்கையும் வைத்துகொண்டு பிற மனிதன் பார்வைக்கு நாம் நல்லவர்போல் நம்மை காட்டிக் கொள்ள முடியும்! ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை!
தேவன் உன்னை எந்த உயரத்தில் வைத்திருந்தாலும் தேவ நீதி என்னும் தராசில் நீ நிருக்கப்டும்போது உன் செயகையாலோ அல்லது சிந்தனையாலோ குறைய காணப்பட்டால், அக்கணமே நீ உன்னுடைய நிலையில் இருந்து தள்ளுண்டு போவது உறுதி! பிறகு அலது புலம்பினாலும் பழையநிலைக்கு உன்னால் திரும்ப முடியாது!
-- Edited by SUNDAR on Wednesday 27th of April 2011 04:07:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒரு அழகான கண்ணாடி பாத்திரத்தில் கீறல் விழுந்துவிட்டால் அதை என்னதான் பூசினாலும் சரிசெய்தாலும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவது என்பது ஏறக்குறைய முடியாத காரியம்.
அதுபோல் தேவன் மிக அழகாக நேர்த்தியாக படைக்கப்பட்டு இந்த உலகத்துக்குள் வரும் மனுஷன் ஒவ்வொரு நாளும் தேவனின நீதியின் தராசிலே நிருக்கபட்டு ஆராயப்படுகிறோம். மீண்டும் மீண்டும் நம்மேல் குறைவு காணப்படும் பட்ச்த்தில் தேவன் நம்மை ஒரேஒருமுறை ஒதுக்கி தள்ளிவிட்டால் பின்னர் நாம் நமது பழைய நிலையை அடையவே முடியாது என்பதை இங்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.
லூசிபரான சாத்தான் எவ்வளவு காலம் தேவனோடு மகிமையில் இருந்தானோ நமக்கு தெரியாது. ஆனால் அவன் மனதில் தோன்றிய ஒரே ஒரு மோசமான சிந்தனை அவனை தேவனை விட்டு நித்தியமாக பிரித்துவிட்டது. அவன் நியாயம் தீர்க்கப்பட்டவன். அவன் மீண்டும் தேவனிடம் சேரநினைத்தாலும் அவனது பழைய மேன்மையை ஒருநாளும் அடையவே முடியாது.
அதேபோல் ஆதாம் ஏவாளை எடுத்துகொள்ளுங்கள்! தேவனோடு நேரடியான உறவில் இருந்த அவர்கள் ஒரே ஒரு மீறுதலினிமித்தம் தங்களின் அனைத்து தகுதியையும் இழந்து சாபத்துடன் ஏதேன தோட்டத்தை விட்டு வெளியேறினர். இன்னும் அவர்கள் என்னதான் தேவனுடன் ஒப்புரவானாலும் அந்த பழைய நன்மை தீமை அறியாத குழந்தை போன்ற மேன்மையான நிலைக்கு திரும்பவே முடியாது போனது.
இங்கு நான் சொல்ல வரும் கருத்து எத்தனைபேருக்கு புரிகிறது என்பது தெரிய வில்லை. எனவே எனது கருத்தை விளக்க வேதத்தில் எஸ்தர் புத்தகத்தில் உள்ள ஒரு சம்பவத்தை இங்கு முன்வைக்கிறேன்.
மகா ரூபவதியாயிருந்தபோதிலும் ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவின் கட்டளைக்கு கீழ்படியாத ஒரே காரணத்தால் அவள் ராஜாவின முகத்தையே பார்க்க முடியாதபடி தள்ளுண்டுபோனாள்.
19. வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், தீர்மானமாகி அவள் தன் மேன்மையை நித்தியமாக இழந்துபோனாள்.
இந்நிலையில் வேறு ஒரு ராஜாத்தியை நியமிக்கும் பொருட்டு ராஜாவாகி ஆகாஸ்வேருக்கு கன்னிகைகளை தேடும் காலத்தில் ரூபவதிகளாயிருக்கிற கன்னிகைகள் எல்லோருமே சேர்க்கப்படுகின்றனர்.
எஸ்தர் 2 :2அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.3. அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்
இவ்வாறு முதல் முதலில் கன்னிகளாக அழைத்து வரப்படும் பெண்கள்
12. ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,
13. இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
அதிகமதிகமாக ஜோடிக்கபட்டு அவள் கேட்பது எல்லாமே மறுப்பில்லாமல் கொடுக்கபட்டு இறுதியில் அவளுடய முறை வருகிறபோது ராஜாவிடம் பிரவேசிக்க வேண்டும்.
14. சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது
அதாவது, முதலில் யோகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படும்போது கன்னியாகவும் பரிசுத்தமாகவும் இருக்கும் அந்த பெண், இரண்டாம் மாடத்தில் சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற பெண்களிடத்தில் வரும் முன்னர், ஓன்று அவள் "ராஜாத்தி"யாகிய மிகப்பெரிய மேன்மையை பெற்றிருக்க வேண்டும் அல்லது தனது முந்தய கன்னியான நிலையை இழந்திருக்க வேண்டும்.
இவ்வாறு ராஜாவிடத்தில் பிரவேசித்து இந்த இரண்டாம் மாடத்தில் இருக்கும் பெண்கள், ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது.
இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் இவ்வாறு ராஜாவிடம் பிரவேசித்து, "ராஜாத்தி" என்ற தகுதியின்றி வெளியில் வரும் பெண்களுக்கும்கூட பின்னாளில் தேவையான எல்லா வசதிகளும் அந்த இரண்டாம் மாடத்திலே கொடுக்கப்படலாம் ஆகினும் முதலில் இருந்த மேன்மையான நிலை இப்பொழுது அவர்களுக்கு இல்லை.
அதேபோல் இந்த உலகத்தில் பிறந்து எத்தனையோ காலம் வாழ்ந்த பிறகு தேவனால் பிடிக்கபட்டு, அனைத்து பாவங்களும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு ஒரு கன்னியான நிலையில் தேவனின் காவலின் கீழ் வரும் ஒவ்வொருவருவரையும் தேவன் மிகுந்த அக்கறையோடு பாதுகாத்து வழி நடத்துகிறார்.
அவரவருக்குரிய காலம் வரும்போது அவர்களின் செய்கைகள் தேவ நீதி என்னும் விசேஷித்த தராசிலே வைத்து நிறுக்கப்படும் அப்பொழுது அவர்கள் நடக்கையில் குறையக் காணப்பட்டால் அவர்கள் தேவனால் வேறு ஒரு இடத்தில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கும் தனி வாசஸ்தலம் மற்றும் தேவையானவை கிடைக்கும் என்றாலும் இவர்கள் தங்கள் பழைய மேன்மையை இழந்தது இழந்ததுதான்.
இதில் அனேக முக்கிய ஆவிக்குரிய பாடங்கள் இருக்கிறது இதெல்லாம் அனேகமான கிறிஸ்த்தவ கூட்டங்களுக்கு தேரிவதில்லை. அவர்களுக்கு இந்த காரியம் பற்றி புரியவும் புரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் இவ்வாறு தேவ நீதியின் மேன்மைகளை அசட்டை செய்யமாட்டார்கள். அநேகர் ஏற்கெனவே தங்களின் மேன்மையை இழந்து வேறொரு வாசஸ்தலத்தை நோக்கி பயணிப்பவர்கள். இவர்கள் திரும்ப நினைத்தாலும் தாங்கள் பழைய மேன்மையை அடையமுடியாது.
இந்த காரியங்களை பற்றிய மேலும் சில உண்மைகளை அறிய நாம் "அற்ப கூழுக்கு ஆசைபட்டு சேஷ்டபுத்திர பாக்கியத்தை விற்றுபோட்ட ஏசாவின் நிலையை எடுத்துகொள்ளலாம்". சேஷ்ட்ட புத்திர பாக்கியத்தின் மேன்மை அவனுக்கு பெரிதாக தெரியவில்லை எனவே அதை அசட்டை பண்ணினான்.
எபிரெயர் 12:17. பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
அதுபோல், இன்றும் தங்களை இந்த உலகில் தேவன் மாம்சமாக்கி அனுப்பியதர்க்கான முக்கிய காரணத்தயும் அதன் அவசியத்தையும், தேவனின் வார்த்தைகளின்படி வாழ்வதில் உள்ள மேன்மையையும் தேவ நீதியின் விசேஷத்தையும் அறியாமல் அவற்றை அசட்டை பண்ணுகிறவர்கள், ஒருநாளில் உண்மையை அறியும்போது நிச்சயம் துக்கப்பட நேரிடும்.
எனவே அன்பானவர்கள்! இந்த உலகவாழ்வில் உங்களின் செயல்கள் தேவநீதி என்னும் விசேஷித்த தராசிலே நிறுக்கப்படும் நாள் வரும்போது, தேவனுக்கு முன்னால் நமது நீதியில் குறையக் காணப்படாமல், இருக்க இன்றே பிரயாசம் எடுப்போம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சத்துருவானவன் முதன் முதலில் தேவ பிள்ளைகளின் சிந்தனையில்தான் தன களையை விதைக்கிறான். அதை அறிந்த உடனேயே " சீ " என்று சொல்லி அந்த தீய சிந்தனைக்கு ஒரு முடிவை கொண்டு வரவேண்டும்.
இல்லை என்றால் அது இச்சையாகி "இச்சை" பாவமாகி பாவமானது மரணமாகி நம்மை தேவனைவிட்டு பிரித்துவிடும்.
பிரசங்கி 3:17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார்
-- Edited by SUNDAR on Thursday 18th of May 2017 03:20:45 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)