இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த உலகில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடக்கவில்லை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இந்த உலகில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடக்கவில்லை!
Permalink  
 


நான் காலையில் வேகவேகமாக வந்து ஏதாவது பதிவை கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக எனது நண்பர் ஒருவர்  காலையில் நான்வந்த சிறிது நேரத்தில் என்னுடன் வந்து அமர்ந்துகொண்டு, ஏதாவது சில காரியங்களை பேச ஆரம்பித்துவிடுகிறார். ஒரு கிறிஸ்த்தவராக  இருந்து கொண்டு  ஏனோதானோ என்று வாழும் அவர், எதாவாது தேவையற்ற கேள்விகளை எழுப்பி என்னை குழப்பி ஒன்றும் எழுத முடியாதபடி செய்துவிடுகிறார்.  எனது பக்கத்து அலுவலகதத்தில் சமீபத்தில் வந்து வேலைக்கு சேர்ந்திருக்கும் அவர் எனக்கு சில வருடங்களாக தெரியும் என்பதால் என்னால் அவரை கடிந்துகொள்ளவும் முடியவில்லை.  
 
இது சம்பதமாக ஆண்டவரிடம் முறையிடலாம் என்று நினைத்தபோது ஆண்டவர் என்னிடம் "நான் யாரையும் காரணமின்றி உன்னிடத்தில் குருக்கிடும்படி கொண்டு வரமாட்டேன். அவர் கேட்டாலும் கேட்கவிட்டலும் உன்னுடைய கருத்துக்களை அவரிடம் எடுத்து சொல்லு. அவர் வரவை நீ வெறுக்கவேண்டாம். அவரை சரியான வழியில் திருப்ப கிடைத்த  ஒரு சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திகொள்"  என்று கட்டளையிட்டார்.     
 
உடனே அவருக்காக ஒரு ஜெபத்தை எறேடுத்துவிட்டு அவருடைய எந்த கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலை சொல்லவேண்டும்  என்று முடிவெடுத்து கொண்டேன்.  
 
அன்பானவர்களே! இந்த உலகில் வாழும் நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை எத்தனையோ நிகழ்வுகளை சந்திக்கிறோம். எத்தனையோ மனிதர்களை காணுகிறோம், சிலரிடம் பேசுகிறோம் சிலரிடம் சண்டையிடுகிறோம் சிலரை வெருக்கிறோம் சிலரை நேசிக்கிறோம் ஆனால் இந்த உலகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு காரியமும் நமது அணுகு முறையின் அடிப்படையில் தேவனால் சீர்துக்கி பார்க்கப்படுகிறது என்பதை நாம் நிச்சயம் அறியவேண்டும்.
 
எந்த சம்பவமும்  எந்த ஒரு காரியமும் தேவையற்றதாக  இந்த உலகில் நடக்கவேயில்லை. நமக்கு நடக்கும் ஒவ்வொரு காரியமும் அல்லது நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் விலையேறபெற்றவர்கள். ஓன்று நாம் அவர்களிடமிர்ந்து சில காரியங்களை கற்றுகொள்ளலாம் அல்லது அவர்கள் நம்மிடமிருந்து சில காரியங்களை கற்றுகொள்ளலாம். அதற்காகவே அந்த நபரை நம்மை  சந்திக்கும்படி தேவன் அனுமதித்தார் என்பதை நாம் அறியவேண்டும். எனவே எவரையும் நாம் தாழ்த்தி எடைபோட்டுவிட கூடாது.
 
இஸ்ரவேல் தேசத்தில் இருந்து சிறைபிடித்து கொண்டுவரப்பட்டு வேலைக்காரியாக வேலைபார்த்த ஒரு சிறு பெண்ணின் மூலமே நாகமான் என்ற சீரிய படைத் தலைவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மகிமையை அறிந்துகொள்ள
முடிந்தது.  
 
எனவே நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அதன்மூலம் நாம் உணரும் பாடம் என்ன என்பதை அறியும் நோக்கிலேயே செயல்படுவது நல்லது. வீண் வெறுப்பும் காரணமன்ற கோபமும், எரிச்சலும், பொறாமையும் பயனற்றவைகள். எல்லோரையும் அன்புடனே நோக்குவோம், அமைதியான அருமையான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர்  தொடர்பு கொள்ளுவோம். ஒவ்வொருவரிடமும் இருந்து நாம் படித்துக்கொள்ளவேண்டிய   நல்ல காரியம் என்ன  இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து நல்லதை எடுத்துகொண்டு தீயதை ஒதுக்குவோம். முடிந்த அளவு பிறரைப்பற்றிய புறங்கூறுதலை தவிர்த்து  ஒருவரை பற்றி இன்னொருவரிடம் பேசும்போது அவரைபற்றிய நல்ல காரியங்களை மட்டுமே பேசுவோம். 
 
சில அலுவலகங்களில் ஹெல்ப் லைன் நம்பரை நாம் டயல் செய்யும்போது "வாடிக்கையாளரின் சேவையை கருதி  இந்த அழைப்பு ரெகார்ட் செய்யப்படுகிறது" என்ற அறிவிப்பை கேட்க முடியும்.  இவ்வாறு அழைப்புகள்  பதிவு  செய்யப்படும் இடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகுந்த தாழ்மையுடன்   பதில்களை சொல்வதோடு, என்ன கேள்விகேட்டலும் எரிச்சல் அடையாமல் அன்புடன் பேசுவதை நாம் அறிந்திருப்போம்.     
 
இவ்வாறு முகம்தெரியாத  யாரோ ஒருவரால் நம்முடைய வார்த்தைகள் கண்காணிக்கபடுகிறது என்பதை நாம் அறியும்போது  இந்த உலக சம்ந்தமான வேலை போய்விடக்கூடாது என்ற பயத்தில் ஒரு மாய்மால தாழ்மையை வரவித்து கொள்கிறோம்.
 
இங்கோ நித்தியத்தை அடையும் தகுதியை பெற்றுள்ள நம்முடைய ஒவ்வொரு அசைவும் தேவனாலும் சாத்தானாலும் இடைவிடாமல் கண்காணிக்கப்படும் நிலையில் நாம் எவ்வளவு  அதிகமதிகமாக் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என்பதை உணரவேண்டும். நாம்  செய்யும் தவறான காரியங்கள் மற்றும் நாம் மற்றவர்களிடம் தவறாக நடதுகொள்ளும் விதம் போன்றவை நம்மை நித்தியத்துக்கு செல்லும்  தகுதியிழக்க செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து பயத்துடனும் நடுக்கத்துடனும் தேவனுக்கேற்ற கிரியைகளையும் அவர் விரும்பும் காரியங்களை செய்வோமாகில்  நமக்கு நடக்கும் எல்லாமே நன்மையாகவே நடக்கும் என்பதில் எந்த  ஐயமும் இல்லை!
 


-- Edited by SUNDAR on Tuesday 3rd of May 2011 03:12:06 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: இந்த உலகில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடக்கவில்லை!
Permalink  
 


சிந்தனையைத் தூண்டும் அருமையான கருத்து நண்பரே...

பகிர்ந்துகொண்ட செய்திக்கு நன்றி.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

நான் எழுதிய இதுபோன்ற  பல கட்டுரைகளை படிக்கும்போது இன்று அது எனக்கே பாடம் சொல்வதுபோல் இருக்கிறது.
 
இன்று என்னுடைய வேலையில் கொஞ்சம் டென்சன் இருந்ததால்  என்னுடைய அலுவலகத்துக்கு வந்த ஒரு சாதாரண  மனுஷரை  சற்றும் மதிக்காமல் கொஞ்சம் காட்டமாக பேசிவிட்டேன். அதே இடத்தில் ஒரு பணக்காரர் வந்து "இங்கிலீசில்  தஸ் புஸ் என்று பேசியிருந்தால்" நான் என்ன டென்சனில் இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு அவரிடம் சாதுவாகத்தான்  பேசியிருப்பேன்  
 
டென்சன் கூட ஆள்பார்த்துதான் வேலை செய்கிறது!
 
இங்கு ஆண்டவராகிய இயேசு சொன்ன இந்த வார்த்தையை நினைக்கும் போது எனக்கு  அதிக  மன கலக்கமாகவே இருக்கிறது!
 
மத்தேயு 25:45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
 
மிக சிறியவர்களுக்கு நன்மை செய்தால் அதை தேவனுக்கே செய்தது போலாகும். அதேபோல் மிக சிறியவர்களை நாம் சற்று கடினமாக நடப்பித்தால் அது தேவனையே அவ்வாறு நடத்தியது போலாகுமோ  என்று எண்ணி கலங்கி அவரிடம் மன்னிப்பு கோருகிறேன்!
 
தேவனே என்னை மன்னித்து என் புத்திஈனத்துக்கு தகுந்தால்போல்  என்னை நடத்தாதிரும் தகப்பனே!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard