கடந்த நாட்களில் நான் சொந்த ஊருக்கு சென்றுவர கிருபைசெய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
திருநெல்வேலி செல்வதற்காக எனது குடும்பத்தினுருடன் நாகர்கோவில் விரைவு
வண்டியில் முன் பதிவு செய்திருந்தேன். சுமார் 6.50௦க்கு சென்னை எக்மோரில் இருந்து புறப்படும் அந்த வண்டியில் எனக்கு கிடைத்த இரண்டு இருக்கைகள் SUவாக இருந்தது. SL என்பது RAC யில் வருவதால் அந்த சீட்டுக்கு இரண்டு பேர்களை ரயில் நிர்வாகம் RAC யில் போடுவது வழக்கம்.
இந்நிலையில் எனது மகள் தனக்கு முன்பதிவாக் கிடைத்த இருக்கையில் சென்று அமர்ந்திருக்க, அங்கு வந்த RACகாரர் அவளை எழுதிருக்கும்படி சொல்லி அவர் அமர்ந்துகொண்டார். அந்த RAC சீட்டில் கணவன் மனைவியாக இருந்ததால் நானும் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
அடுத்து எனது மகனுக்கு இருந்த கன்பார்ம் சீட்டில் நாகர்கோவிலை சேர்ந்த மூன்று RAC இளைஞர்கள் வந்து அமர்ந்துகொண்டு அவனை எழுப்பிவிட்டு விட்டனர்.
ஆகமொத்தம் எனது மகன் மற்றும் மகள் இருவருக்கும் கண்பார்மான சீட் இருந்து அவர்கள் அமர இடமில்லாமல் அங்கும் இங்கும் தூர போகவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.
மனதில் சற்று ஆத்திரம் இருந்தாலும் மிகுந்த பொறுமையுடன் இருந்த நான் யாரையும் ஒன்றும் சொல்லவில்லை.
இந்நிலையில் என்னுடன் அமர்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெரியவர் இரண்டு குழந்தைகளுடன் தனது மகளை அழைத்து வந்திருந்தார். அதில் குழ்ந்தைகள் மற்றும் தாய்க்கு ஓரிடத்திலும் அந்த பெரியவருக்கு வேறு ஒரு இடத்திலும் சீட் இருந்தது. அந்த பெரியவர் அந்த மூன்று வாலிபர்களிடம் அவர்கள் அமர்ந்திருக்கும் சீட்டுக்கு ஒத்தசீட் உள்ள தனது சீட்டை எடுத்துகொண்டு, அவர்கள் இருக்கும் இந்த இடத்தை விட்டு தரும்படி அவர்களிடம் கேட்டார். அவர்கள் தர மறுத்து விட்டனர்.
TTR எங்களை இதேஇடத்தில் அமர்ந்திருக்கும்படி சொல்லியிருக்கிறார் ஒருவேளை எங்கள் RAC க்கு படுக்கை கிடைத்தால் அவர் எங்களை இங்குதான் தேடுவார் என்று
சொல்லி மறுத்துவிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் மூவருக்கும் RAC கண்பார்ம் ஆகி, படுக்கை கிடைத்துவிட்டது. மீண்டும் அந்த முதியவர். உங்களுக்கு
இப்பொழுது படுக்கை உறுதியாகி விட்டது இந்த படுக்கையை எனக்கு கொடுத்து சற்று முன்னால் இருக்கும் எனது படுக்கையை எடுத்துகொள்ளுங்கள் இங்கு சிறு குழந்தைகள் இருக்கிறது என்று அவர்களிடம் கேட்டார் நானும் அவருக்கு உதவியாக கேட்டேன். ஆகினும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
எனக்கு அந்த பெரியவரின் வேண்டுகோளை ஏற்க்க மறுத்த அவர்கள்மேல்
சற்று கோபம் வந்தாலும் பெரிதாக எதுவும் பேசாமல் பொறுமையாக அமர்ந்திருந்தேன். என் மனைவிக்கோ அந்த வாலிபர்கள் மீது கடுமையான கோபம் காரணம் அவர்கள் சத்தமாக பேசி சிரித்துகொண்டு வேறு இருந்தனர். போலீஸ் இருந்தால் பாருங்கள் இவர்களை குறித்து கம்ப்ளைன்ட் செய்வோம் என்று என்னிடம் மெல்ல சொல்லிகொண்டிருந்தாள்.
இந்நிலையில் எனது மகனின் சீட்டில் அமர்ந்திருந்த அம்மூவரில் ஒருவன் அந்த பெரியவரிடம் "உங்களுக்கு தேவையான சீட் வேண்டுமென்றால் முதலில் சரியான
நேரத்துக்கு முன்பதிவு செய்து வரவேண்டும். தேவையில்லாமல் எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்" என்பதுபோல் பேச, அதுவரை கேட்டுகொண்டிருந்த நான் "கன்பார்ம் ஆன எனது சீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் நீ நியாயம் பேசக்கூடாது" முதலில் எனது சீட்டை விட்டு எழுந்துபோய் வேறு இடத்தில் அமர்ந்துகொண்டு பின்னர் நியாயம் பேசு" என்று கோபமாக சொன்னேன்.
உடனே அவனுடன்இருந்த இன்னொருவன் (எனதுமகன் வளர்த்திகூட இல்லாதவன்) என்னை பார்த்து "என்னய்யா லூசு மாதிரி பேசுறே" என்று சொல்ல, அதை கேட்ட என் மனைவி "யாரை பார்த்துடா லூசு என்று சொல்லுற? வயசுக்காவது மரியாதையை கொடுக்க தெரியாதா? உன்னை செருப்பாலே அடிப்பேன்" என்று கத்த. அங்கு சாத்தான் கிரியை செய்வதை உணர்ந்து மௌனமான நான், என் மனைவியிடம் "மிகவும் புத்திசாலியான அவருக்கு என்னை பார்த்தால் லூசு போல தெரிகிறதுபோல, நல்லது விட்டுவிடுவோம்" என்று முடித்து விட்டேன்.
நடந்த இந்த சம்பவம் சிறிது நேரத்தில் முடிந்துவிட்டாலும், இந்த சம்பவத்தில் இருந்து நான் சில முக்கிய ஆவிக்குரிய காரியங்களை அறிய முடிந்தது. அவற்றை ஒவ்வொன்றாக வரும் பதிவில் பார்க்கலாம் .
-- Edited by SUNDAR on Saturday 28th of May 2011 04:35:26 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
1. இறுதி எல்கைவரை சோதிக்கப்படும் ஆவிக்குரிய கனிகள்!
ஆவிக்குரிய கனிகள் எவை என்பது நமக்கு நன்றாக தெரியும் ஆனால் அவைகள் தாங்கள் வாழ்வில் எந்த அளவுக்கு கிரியை செய்கிறது என்பதை நிதாதித்து அறிவதற்கு அநேகர் தவறி விடுகின்றனர்.
இந்த கனிகள், ஒரு மனிதனிடம் எந்த அளவு கிரியை செய்கிறது என்பது இறுதி எல்கைவரை சோதனை செய்யப்படுகிறது என்பதை நாம் அறிய வேண்டும்
"எனக்கு அன்பு உண்டு, இச்சை அடக்கம் உண்டு சாந்த குணம் உண்டு என்றோ யாருமே உறுதியாக சொல்லிவிட முடியாது! காரணம் அந்த ஆவியின் கனியை இழந்துபோகும் அளவுக்கு இந்த உலகில் சம்பவங்கள் நம்மை புடமிடுகின்றன.
நாம் செவிடனாக குருடனாக இருந்தால் ஒன்றையும் கேட்காமல் இருந்துவிடலாம். ஆனால் நமக்கோ நம்மை சுற்றி நடக்கும் சங்கடங்கள் அநியாயங்கள் அக்கிரமங்களை நன்றாகவே அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறிருக்கு "மிகவும் நியாயக்கேடான சூழ்நிலைகளிலும் நம்மால் பொறுமையுடன் இருக்க முடியும் என்பதை நாம் நிரூபித்தே ஆகவேண்டும்" அதுவரை இந்தபிசாசு நம்மை விடுவதும் இல்லை.
எனக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகளை நான் கண்டுகொள்ளாமல் மௌனமான போதும், பிறருடைய துன்பத்தை கருத்தில்கொண்டு நான் பொறுமை இழக்க நேர்ந்தது. இது தேவனின் பார்வைக்கு தவறாகிவிட்டதோ என்று நான் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டேன். நீண்டநேரம் விசாரித்தேன். என் மனதில் ஆவியானவர் எந்த துக்கத்தையும் கொண்டுவரவில்லை என்றாலும் நான் பொறுமை இழந்துவிட்டேனோ என்ற ஒரு எண்ணமே எனக்கு மேலோங்கியது. எனவே இன்னும்கூட நாம் பொறுமையை கடைபிடிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன் பின்னர் நல்ல சமாதானம் கிடைத்தது.
இந்த உலகத்தில் நாம் எந்தனையோ சமயங்களில் அன்பில்லாதவர்களாக, நீடிய பொறுமை இல்லாதவர்களாக, இச்சை அடக்கம் இல்லாதவர்களாக, நடந்து விடுகிறோம் அதைபற்றி சற்றும் அக்கறைகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். ஆனால் அது ஒரு சரியான நிலை அல்ல!ஆவியின் கனிகளை மீறி நாம் செய்த ஒவ்வொரு செயல்களையும் தேவனின் பாதத்தில் வைத்து அலசி ஆராய்ந்து அதில் உள்ள குறை நிறைகளை அறிந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு நம்மை நாமே நிதாதிந்து சீர்செய்து கொள்வது அவசியம் என்பதே நான் படித்த முதல் பாடம்.
ஆண்டவராகிய இயேசு சிலுவையில் தொங்கும் இறுதி நிலையில் கூட அவரை பார்த்து பரிகசித்து
மத்தேயு 27:40தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்
இந்த இறுதி எல்கையில் கூட அவர் பொறுமை காத்து வெற்றி சிறந்தார்!
எனவே அன்பானவர்களே!
இந்த உலகில் நமக்கு முன்னால் நடக்கும் ஒவ்வொரு காரியமும் நமது ஆவிக்குரிய நிலையை சோதிப்பதற்காகவே அனுமதிக்கப்படுகிறது என்பதை முதலில் அறியவேண்டும்! அடுத்து, ஆவிக்குரிய சோதனைகளை ஜெயிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல! இன்று அநேகர் பலமுறை ஆவிக்குரிய சோதனையில் தோற்றுவிட்டு அதைப்பற்றி சற்றும் சட்டை செய்யாமல் இருதயம் அடைபட்ட நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் என்பதை அறிய முடிகிறது. எனவே ஆவிக்குரியவர்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள் ஆவிக்குரிய கனிகளை உங்கள் வாழ்வில் அப்பியாசபட்டு செயல்படுத்தும்படி வேண்டுகிறேன்! இல்லையேல் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் எந்த பயனும் இல்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நம் பக்கத்தில் சரியான நியாயம் இருக்கும் பட்சத்தில் நம்மை விட மிகவும் வயதில் குறைந்த ஒரு சிறியவன நம்மை பார்த்து "என்னய்யா லூசுமாதிரி பேசுறே" என்று சொல்வதை கேட்பது நமக்கு கடும் கோபமூட்டும் ஒரு செயலே. இந்த வார்த்தையை கேட்ட எனது மனைவி கடும்கோபம் அடைந்தபோது, எனக்கோ அந்த வார்த்தைகள் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை.
என்னுடைய பொதுவான குணத்தின்படி நான் பிறருக்கு அதிகமாக மரியாதை கொடுக்க கூடியவன் ஆனால் அதே நேரத்தில் என்னை யாரும் சிறிது மரியாதை குறைவாக பேசிவிட்டாலும் என்னால் தாங்க முடியாது. அதாவது என்னிலுள்ள சுயம் கொல்லப்படாமல் வாழ்ந்திருந்தேன். ஆனால் இங்கோ ஒருவன் என்னை "லூசு மாதிரி" என்று சொல்லியும் எனக்கு எந்த சூடு சொரணையும் வரவில்லை
இதற்க்கான காரணம் என்னவென்று ஆராய்ந்த போது.
என்னை இப்படியொரு பக்குவமான நிலைக்கு கொண்டுவர உதவி செய்தவர்கள் வலை தளங்களில் எழுதும் நமது கிறிஸ்த்தவ சகோதரர்களே என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வெளியில் யாரிடமும் கேட்டிராத மிக கேவலமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி எழுதி தங்களை கிறிஸ்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துகொண்டிருக்கும் சில ஆரோக்கிய உபதேசகாரர்களிடம் மிக மோசமான வார்த்தைகளினால் அடிக்கடி அபிசேகம் வாங்கிவிட்டதால் இந்த "லூசு மாதிரி" என்ற வார்த்தை எனக்கு ஒரு பெரிய வார்த்தையாகவே தெரியவில்லை.
என்னை தாங்கள் வார்த்தை என்னும் சாட்டையால் விளாசி, இவ்வளவு பக்குவ படுத்திய சகோதரர்களுக்கு இங்கு நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு சாத்தானின் சில கிரியைகள் அல்லது சாத்தான் நமக்கு கொண்டுவரும் பாடுகள் கூட நம்மை பக்குவபடுத்தும் ஒரு காரணியாகவே இங்கு அமைகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே அன்பானவர்கள், ஒருவர் நம்மை திட்டும்போதோ அல்லது தரக்குறைவான வார்த்தைகளால் பேசும்போது நாம் அதிமதிகமாக மன உளைச்சலுக்குள்ளாக நேரிடலாம். ஆனால் அதுபோன்ற பாடுகளை நாம் அனுபவிக்கவில்லை என்றால் ஒருபோதும் பக்குவப்பட முடியாது என்பதையும் அறியவேண்டும்
எபிரெயர் 12:11எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
என்ற வசனம் இங்கு மிக பொருத்தமான வசனமாக அமைகிறதை அறிய முடியும்.
உங்களை சபிப்பவர்களும் துன்பபடுத்துகிரவர்களும் ஏதோஒருவிதத்தில் உங்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்பதை நீங்கள் சரியாக உணர்ந்துகொண்டால் மட்டுமே
நீங்கள் அவர்களை மனபூர்வமாக ஆசீர்வதிக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் முடியும்: