இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
Permalink  
 


ஆதியாகமம் 27 : 18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.

ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?




__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
RE: ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
Permalink  
 


 இந்தச் சம்பவம் உங்களுக்கு நன்கு தெரிந்து இருக்கலாம். 'நான் புசிக்கவும், நான் மரணமடைய முன்னே என் ஆத்துமா உன்னை ஆசிர்வதிக்கவும்" ஏதேனும் மிருகத்தை வேட்டையாடிக்  கொண்டுவரும்படி, வயதான காலத்தில் ஈசாக்கு தன மகன் எசாவிடம் சொன்னார். தன கணவர் சொன்னதைக் கேட்ட ரெபெக்காள் ருசியான உணவைத் தயாரித்தாள், பின்னர் யாக்கோபிடம், "உன் தகப்பன் தாம் மரணமடைய முன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிபபதட்க்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோக வேண்டும்'' என்று தெரிவித்தால். பிறகு, ஏசாவின் உடைகளை யாக்கோபு அணிந்துகொண்டார்; தன கழுத்திலும் கைகளிலும் வெள்ளாடுக்குட்டிகளின் தோலோடு, அந்த ருசியான உணவை எடுத்துக்கொண்டு தன தகப்பனிடம் சென்றார். ''நீ யார், என் மகனே'' என்று ஈசாக்கு கேட்டபோது, ''நான்  உமது மூத்த மகனாகிய ஏசா'' என்று அவர் பதில் அளித்தார். அவரை ஈசாக்கு நம்பினார், ஆசிர்வதித்தார். (ஆதியாகமம் 27 :1 -29)

ரெபெக்காலும் யாக்கோபும் ஏன் அந்த விதமாய் நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பைபல் தருவதில்லை; எனினும், திடீரென இத்தகைய சூழ்நிலை எழுந்ததாக அது குறிப்பிடுகிறது. ரெபெக்காலும் யாக்கோபும் செய்ததை கடவுளுடைய வார்த்தை அங்கீகரிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை; ஆக, பொய் சொல்வதற்கோ எமாற்றுவதட்ட்கோ இச்சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இருப்பினும், பைபல் அந்தச் சூழ்நிலையேக் குறித்து தகவல் தருகிறது.


முதலாவதாக, தன தகப்பனின் ஆசிர்வாதத்தைப் பெற யாக்கோபுக்கு உரிமை இருந்தது, அந்த உரிமை ஏசாவுக்கு இருக்கவில்லையென அந்தப் பதிவு தெளிவாய் காட்டுகிறது. முன்னர், இந்த இரட்டையரில் ஒருவரான ஏசா, ஒரு வேலை உணவுக்காக தன சேஷ்ட புதிரபாகதைத், அதாவது தலைமகன் உரிமையே மதிக்காமல் விற்றுப்போட்டிருந்தார்,அப்போது அதை யாக்கோபு முறைப்படி வாங்கி இருந்தார். ஏசா 'தன சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினார்'' (ஆதியாகமம் 25 : 29 -34 ) எனவே, நியாயமாய் தனக்குச் சேர வேண்டிய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே யாக்கோபு தன் தகப்பனை அணுகினார்.

இரண்டாவதாக, தான் யாக்கோபை ஆசிர்வதிதத்தை ஈசாக்கு அறிந்தபோது, அதை மாற்றுவதற்க்கு அவர் முயற்சி செய்யவில்லை. இந்த இரட்டயர்கள் பிரப்பதட்க்கு முன்பாக ரேபெக்காளிடம், "மூத்தவன் இளையவனைக் சேவிப்பான்" என கர்த்தர் சொல்லி இருந்ததை ஒருவேளை அவர் நினைவுபடுத்திப் பார்த்து இருக்கலாம். ஆரானுகுச் செல்ல யாக்கோபு புறப்பட்ட போது முன்பை விட இன்னும் அதிகமாய் அவரை ஈசாக்கு ஆசிர்வதித்தது கவனிக்க வேண்டிய குறிப்பு.- ஆதியாகமம் 28 : 1 -4

இறுதியாக, நடந்த எல்லாவற்றையும் தேவன் கவனித்து வருகிறார், அவற்றில் அக்கறை காட்டினார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்: ஈசாக்கு அளித்த அந்த ஆசிர்வாதம், ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறிதியோடு சம்மந்தப் பட்டிருந்தது.
ஆதியாகமம் 12 : 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

அந்த ஆசிவாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்ள கூடாதென தேவன் நினைத்து இருந்தால் ஏதாவதொரு விதத்தில் அவர் அதில் குறிக்கிட்டு இருப்பார். மாறாக, அதை யாகொபுகு பின்வருமாறு உறுதிப்படுத்தினார்: ''உன்சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசிர்வதிக்கப்படும்.- ஆதியாகமம் 28 : 10 -15    நன்றி




__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். http://www.tamilucc.com/



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
Permalink  
 


சகோதரர்  அவர்களே, மிக முக்கியமான ஒரு கருத்து குறித்த தங்கள் விளக்கங்களை இங்கு முன்வைத்துள்ளீர்கள் நன்றி.  
 
"யாகோபின்  ஏமாற்று வேலை தேவனின் திட்டத்துக்கு உட்பட்டதுதான்" என்பது போல் தாங்கள் எழுதியுள்ள இந்த கட்டுரை  சில உண்மையை நமக்கு உணர்த்தினாலும், எவ்விதத்திலும்  பிறரை ஏமாற்றி சம்பாதிக்கும் எந்த  ஒரு நன்மையும் பின்னாளில் நம்மிடம் நிச்சயம் சரிக்கட்டப்படும் என்பதை நாம் அறிய வேண்டும். இல்லையேல் தவறு செய்யும் எவனும் தான் தேவனின் திட்டத்துக்குள் தான் தவறு செய்தேன் என்று சொல்லி தப்பிக்க வாய்ப்பை உண்டாக்கிவிடும்.
 
உதாரணமாக. தாவீது தவறான முறையில் உரியாவின் மனைவியை எடுத்து தன் மனைவியாக்கி கொண்டான். அவள் வயிற்றில் பிறந்த சாலமோனின் வழியில் வந்தவர்தான் நமது ஆண்டவராகிய இயேசு. இங்கு "இயேசு பிறப்பதர்க்காகவே தாவீது இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து அடுத்தவன் மனைவியை எடுத்து கொண்டான்" என்று நாம் தீர்க்கமுடியாது. காரணம் தாவீது செய்தது மிகப்பெரிய பாவம்  என்று நாத்தான் மூலம் தேவன் திட்டமாக எச்சரித்தார்.  ஆகினும் தேவன் தன் மிகுந்த இரக்கங்களிநிமித்தம் தாவீதை மன்னித்து  சாத்தானின் சில  தீய செயல்களை தனக்கு சாதகமாக்கி  அதன் மூலமே தனது திட்டத்தை நிறைவேற்றுவதயே தாவீதின் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
 
மற்றபடி தாவீது இல்லை என்றால்கூட ஏதாவது ஒரு கல்லை ஆபிரகாமின்வழி மகனாக உருவாக்கி அவன் மூலம் இயேசுவை பிறக்கவைக்கவும் தேவனால் முடியுமே!
 
மத்தேயு 3:9  ; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  
எனவே  யாக்கோபை குறித்த் இந்த சம்பவத்தில் அனேக பாடங்கள் நமக்கு இருந்தாலும் ஒருசில விளக்கங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.
 
Rajan26 WROTE
/////ஆதியாகமம் 12 : 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்./////

தேவனின் ஆசீர்வாதம் மற்றும் வாக்குத்தத்தம் யாக்கோபுக்கு இருந்தது என்பது முற்றிலும் உண்மை! ஆகினும் தேவன் ஒருவரை அசீர்வத்த்தால் அந்த காரியம் நிச்சயம் அவனது வாழ்வில் சரியான நேர்மையான முறையிலேயே நிறைவேரு மேயன்றி மற்றவரை ஏமாற்றி அந்த ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டிய அவசியம் இருக்காது.  
 
தற்காலங்களில் "ஆண்டவர் எனக்கு கார் தருகிறேன் என்று சொன்னார், வீடு தருகிறேன் என்று சொன்னார்" போன்ற வார்த்தைகளை சொல்லிக்கொண்டு திகபட்ச கடனுக்கு பணம்வாங்கி இதுபோன்ற பொருட்களை வாங்கி கொள்கின்றனர். இதன் மூலம் வசன் அடிப்படையில் இவர்கள் கடன் கொடுத்த மனுஷர்களுக்கு அடிமையாகி போகின்றனர்    
 
நீதிமொழிகள் 22:7  கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
ரோமர் 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்
 
என்று வேதம் சொல்கிறேதே. 
 
இப்படி கடன வாங்கி பிறனுக்கு அடிமையாகி வீட்டை கட்டிக்கொண்டு "கர்த்தர் என்னை ஆசீர் வாதித்தார்" என்று சொல்வதில் எந்த பொருளும் இல்லை. 
 
எனவே கர்த்தர் ஒருவரை ஆசீர்வதிப்பாராகில் அங்கு வசனந்தின் அடிப்படயில்
எந்த மீறுதலோ அல்லது யாரையும்  எமாற்றுதலோ நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அப்படி வசனத்தைமீறி செய்யப்படும் ஒருசெயல் நிச்சயம் கர்த்தரின் ஆசீர்வாதத்திநிமித்தம் உருவானது அல்ல. 
 
நீதிமொழிகள் 10:22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
 
மற்றபடி  வேத வார்த்தைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் எந்த ஒரு ஆசீர்வாதமும் வேதனையை கொண்டுவரும் .   
 
ஆனால் இங்கு யாக்கோபின் விஷயத்தில் அவன் தான் தாயுடன் சேர்ந்து  ஏசாவை  ஏமாற்றி, தனது தமயனை  துக்கத்தில் ஆழ்த்தி அவனுடைய  ஆசீர்வாதத்தை எடுத்து கொண்டதால் அவனும் ஒருநாள் ஏமாற்றப்பட்டு நீண்டநாள்  துக்கத்துடன் இருக்க நேர்ந்தது.  ஆம்! அவனுக்கு மிகவும் பிரியமான மகனாகிய யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றுபோட்டு அவனை ஒரு மிருகம் கொன்று போட்டது என்று யாக்கோபை நம்ப வைத்து ஏமாற்றினார்
 
ஆதியாகமம் 37:33 யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி, 34. தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
சகோதரனை ஏமாற்றிய யாக்கோபு தன் மகன்களால் ஏமாற்றப்பட்டு நீண்டநாள் துக்கத்தோடு இருந்தான் அவனை ஏமாற்றுவதற்கு உதவி செய்த ரெபாக்காளும்கூட  யாக்கோபை  லாபானிடத்தில் அனுப்பிவிட்டு நீண்ட வருடங்கள் அவனை பிரிய நேர்ந்தது. 
 
அதனால் அன்பானவர்களே தேவனின் ஆசீர்வாத வார்த்தை நமக்கு இருக்குமாயின் அதுதானாகவே நம்வாழ்வில் நிறைவேறும்வரை பொறுத்திருந்து அதை சுதந்தரித்து கொள்வதுவே சிறந்தது. மற்றபடி தேவனின் வாக்குத்தத்தம் இருக்கிறது என்று எண்ணி ஆபிரஹாமைபோல அவசரப்பட்டு ஆகாரை  மனைவியாக்கி கொண்டாலோ
அல்லது "ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி அடுத்தவரை ஏமாற்றினால்" நாமும் நிச்சயம் ஏமாற்றப்படுவோம்
 
என்பதற்கு யாக்கோபின் வாழ்க்கை நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளது.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
RE: ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
Permalink  
 


23 அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். 

 

ஆதியாகமம்

பாடம் 25

இது இப்படி சொல்வதனால் அது கர்த்தரால் ஒப்பு கொள்ளப்பட்டதுதான்.

// 

"யாகோபின்  ஏமாற்று வேலை தேவனின் திட்டத்துக்கு உட்பட்டதுதான்" என்பது போல் தாங்கள் எழுதியுள்ள இந்த கட்டுரை//
என்பது போல என்ற பிரயோகம் தேவனை அவமதிப்பதாகும்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
எடுத்த எடுப்பில் "தேவனை அவமதிப்பது" போன்ற கடின வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அட்லீஸ்ட் அவமதிப்பதுபோல் தெரிகிறது என்றாவது கூறுங்கள்.  
 
உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள் அவரை யார் அவமதிக்கிறார்கள் என்பதை அவர் தீர்மாநித்து கொள்வார்.  
 
//அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.///
 
கர்த்தரே இந்த வார்த்தையை சொல்லியிருந்தால் அவர் வார்த்தை  கர்த்தர்  எப்படிவேண்டுமானாலும் நிறைவேற்ற அவரால் முடியும் இன்னொருவனை ஏமாற்றிதான் அதை தட்டி பறிக்க வேண்டம் என்ற அவசியம் நிச்சயம் இருக்காது.
 
அப்படியிருந்தால் அவர் 
 
மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
 
என்றெல்லாம் அவர் சொல்ல மாட்டார்.
 
விட்டுவிடு என்று சொல்லிவிட்டு தட்டிபறிக்க திட்டம் போட்டு கொடுக்க மாட்டார்.
 
தேவனைபற்றி சரியாக அறியாமல் தவறாக பொருள் கொள்ளாதீர்கள்.
 
அவர்  மகா பரிசுத்தர்  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard