எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு ஊழியக்கார சகோதரியும் அவர்கள் கணவனும் வசித்து வருகிறார்கள். அந்த சகோதரி அதிகம் ஜெபிக்க கூடியவர்கள்! அவர்களிடம் ஆண்டவர் அடிக்கடி பேசுவாராம்.
இந்நிலையில், அவர்கள் புதியதாக ஒரு வாடகை வீட்டுக்கு குடிவந்தபோது ஆண்டவர் அவர்களிடம் "நீ இந்த வீட்டை விட்டு காலிபண்ணி போகும்போது சொந்த வீட்டுக்குத்தான் போவாய்" என்று சொன்னாராம்.
இன்னும் சொந்தவீட்டுக்கு அவர்கள் போகாத நிலையில், அவர்கள் இருக்கும் வீட்டு ஓனருக்கும் அவர்களுக்கும் கடுமையான சண்டை ஏற்ப்பட்டுவிட்டது. வீட்டு ஓணரும் ஒரு வயதான CSI கிறிஸ்த்தவ பெண்மணியே. இருவருக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டதால், கடந்த ஒரு வருடமாக இந்த சகோதரியை வீட்டை காலிபண்ண சொல்லி சண்டையிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஊழியக்கார சகோதரியோ, "ஆண்டவர் என்னிடம் இந்த வீட்டைவிட்டு போகும்போது நிச்சயம் சொந்த வீட்டுக்குத்தான் போவாய் என்று சொல்லி யிருக்கிறார் எனவே எனக்கு சொந்த வீடு கிடைக்கும்வரை இந்த இடந்த்தைவிட்டு நகரமாட்டேன். உன்னால் என்னை ஒன்றுமே செய்யமுடியாது " என்று சொல்லி பிடிவாதமாக அங்கு தங்கியிருக்கிறது.
இந்த காரியங்களை எனது மனைவியிடம் சொல்லி வருத்தபட்ட வீட்டு ஓணராகிய கிறிஸ்த்தவ பெண்மணி, அந்த ஊழியக்கார பெண்மணியை வீட்டைவிட்டு காலிபண்ண உபவாசம் இருந்து ஜெபித்து வருகிறதாம்.
இங்கு யாரிடம் தவறு இருக்கிறது? உண்மையில் இறைவன் "சொந்த வீடு தருவேன்" என்று வாக்கு பண்ணியிருப்பாரா அந்த ஊழியக்கார பெண்மணி செய்வது இறைவன் பார்வையில் சரியான ஒரு செயலா?
-- Edited by இறைநேசம் on Friday 1st of July 2011 03:17:04 PM
அனேக கிறிஸ்த்தவர்களுக்கு அப்பாவின் குரலுக்கும் அடுத்த வீட்டுக்காரன் குரலுக்குமுள்ள வேறுபாடை கண்டுபிடிக்கும் ஞானம் இல்லாத காரணத்தால் இதுபோன்ற மோசமான நடத்தைக்குள் கடந்து செல்கின்றனர்.
பலருக்கு தேவையில்லாத வம்பு பேச்சு அடுத்தவரைபற்றிய புறம்கூறுதல், அடுத்த வீட்டில் என்னநடக்கிறது என்பதை ஆராய்ந்து ஓட்டுகேட்டல் போன்ற தேவையற்ற காரியங்களுக்கு பெரிதாக திறந்திருக்கும் செவியானது, தேவன் பேசும் வார்த்தைகளை கேட்பதற்கு மட்டும் மூடிக்கொள்கிறது. என்ன செய்ய?
முக்கியமாக தேவனின் வார்த்தைக்கும் சாத்தானின் வார்த்தைக்கும் வேறுபாடை கண்டுகொள்ள அறிந்திருத்தல் அவசியம். நாம் மனதில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை குறித்தான ஆசை இருக்கும் பட்சத்தில் சாத்தான் அதை நிறைவேற்றி தருவதாக ஒரு ஆசை வார்த்தையை போட்டு அதன் மூலமா நம்மை பிடிப்பதற்கு முயற்ச்சிக்கிறான்.
அதற்காக தேவன் நம்மமுடைய ஆசைகளை நிறைவேற்றாதவர் என்றும் சொல்லி விட முடியாது. தன்னுடைய பிள்ளைகள் எல்லா சுகமும் பெற்று வாழ வேண்டும் என்பதில் தேவன் மிகுந்த அக்கரையுடையவரே. ஆகினும் அதை சுதந்த்ரித்து கொள்ள பொறுமை மாற்று கீழ்படிதல் அவசியம்.
அந்த சகோதரிக்கு கர்த்தர் வீடு தருவேன் என்று வாக்கு கொடுத்திருப்பாரா? என்று
ஆராய்ந்த போது வேதத்தில் உள்ள வசன அடிப்படையிலும் தேவன் அவ்வாறு வாக்கு கொடுத்திருக்க வாய்ப்பிருப்பதாகவே நமக்கு காண்பிக்கிறது!
I நாளாகமம் 17:10இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
என்பது தேவன் தாவீதுக்கு கொடுத்த வாக்குறுதி அதை நாம் சுதந்தரித்துகோள்ள முடியும்!
என்ற வசனத்தின் அடிப்பதிலும் தேவன் வீடு தருவேன் என்று வாக்கு கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கர்த்தர் வாக்கு கொடுத்திருக்கும் பட்சத்தில் அந்த சகோதரிக்கு இத்தனை நெருக்கங்களையும் சண்டைகளையும் மனமடிவுகளையும் ஏற்ப்படுத்த காரணம் என்ன?
அதற்க்கு பல காரணம் இருக்கலாம்!
முக்கியமாக அவர்களுக்கு கர்த்தர் கொடுத்துள்ள வாக்குறுதியை சீர்குலைக்கும்
வழியில் சத்துரு இரங்கியிருக்கலாம்
சொந்த வீடு தரவிருக்கும் ஆண்டவர் அவர்களின் கீழ்படியும் தன்மை அல்லது விட்டுகொடுக்கும் தன்மை அல்லது எல்லோருடனும் சமாதானமாக இருக்கும் தன்மை இவைகளை வளர்ப்பதற்கு இகாரியங்க்ளை இருக்கலாம்.
ஆனால் அந்த சகோதரி அத்தன்மைகளில் வெற்றி பெற்றதுபோல் தெரியவில்லை அவ்வளவே! ஆகினும் இக்காரியங்களுக்காக ஆண்டவர் அந்த சகோதரியை வெருத்துவிடுவதோ அல்லது வேண்டாம் என்று விலக்கிவிடுவதோ இல்லை என்றே கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Friday 8th of July 2011 10:59:54 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)