கடந்த நாட்களில் என்னுடய இந்து நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இந்து பாரம்பரியப்படி வாரத்தில் வெள்ளி செவ்வாய் இரண்டுநாட்களிலும் அவர்கள் அசைவ உணவை சாப்பிடுவது இல்லை. இந்த செயலை அவர்கள் நீண்டநாட்களாக கடைபிடித்து வருகின்றனராம்!
இந்நிலையில் சமீபத்தில் ஒரு வெள்ளிகிழமை மதியம் வேலையி நிமித்தமாக புற நகர் இடம் ஒன்றுக்கு சென்றிருந்தபோது அங்கு சிறிது தாமதம் ஏற்படவே, மிகுந்த பசியிநிமித்தம் உணவு கடையை தேடி அலைந்திருக்கிறார். எங்குமே மதிய உணவு கிடைக்கவில்லையாம். சர்க்கரை நோயாளியாகிய அவனுக்கு சரியான வேளைக்கு சாப்பிடவில்லை என்றால் உடம்புக்கு ஆகாது. இந்நிலையில் ஒரே ஒரு கடையில் ஒரேஒரு சாப்பாடு மட்டும் இருந்ததாம். அந்த சாப்பாட்டுக்கு இன்னொருவரும் போட்டியாக வரவே எப்படியோ சொல்லி சமாளித்து அந்த ஒரு சாப்பாட்டை வாங்கியிருக்கிறான். ஆனால் அவர்கள் கொடுத்ததோ மீன்குழம்பு சாப்பாடு. மிகவும்
இக்கட்டான சூழ்நிலை சாப்பிடாவிட்டாலும் உடம்பு தாங்காது சாப்பிட்டால் இத்தனைவருடம் பக்தியிநிமித்தம் கடைபிடித்த ஒழுங்கு முடிந்துவிடும். ஆகினும, வேறுவழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு, என்னிடம் வந்து "நான் இந்த ஒழுங்கை மீறியது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று புலம்பினான்.
இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில்:
ஒரு மனிதன் தன் சுய பெலத்திநாளோ அல்லது பரம்பரியத்தி நிமித்தாமோ அல்லது ஏதாவது ஒரு தீர்மானத்தி நிமித்தமோ என்னதான் ஒரு காரியத்தில் உறுதியாக இருந்தாலும், தேவனை சார்ந்திராத பட்சத்தில் அவனது மாம்சத்தின் இயற்க்கை குணங்களைகொண்டே அவனை ஒரேநாளில விளதள்ளி விடமுடியும்!
நானும் எத்தனையோ இக்கட்டானான சூழ்நிலைகளில் தேவனை சார்ந்துகொண்டு அவரது உதவிக்காக மன்றாடியதால் மட்டுமே பிழைத்து என்னுடய பரிசுத்தத்தை காத்திருக்கிறேன். "என் சுய பெலத்தில் ஒன்றும் ஆகாது" என்பதை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். எனவே அதைக்குறித்து மேன்மைபரட்ட ஒன்றுமே இல்லை! என்னை நிலை நிறுத்தும் தேவனுக்கு என்றும் மகிமை உண்டாவதாக!
I பேதுரு 5:10கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
அதாவது, ஒரு மனுஷன் என்னதான் அறிவுள்ளவனாகவும் பெலனுள்ளவனாகவும் பிடிவாதமுள்ளவனாக இருந்தாலும் அவன் தன் சொந்த பெலத்தினால் எந்த ஒரு காரியத்திலும் பரிசுத்தமாய் நிலைநிற்க முடியாது. அவ்வாறு ஒருவன் கருத்தரின் கிருபையை சார்ந்து கொள்ளாமல் சுயபெலத்தை சார்ந்துகொள்வானாகில் அவன் வீழ்ந்துபோவது உறுதி! ஏனெனில் சாத்தான் ஆவியாய் இருக்கிறான். அவன் மாம்சமாயிருக்கும் மனுஷர்களாகிய நம்மைவிட விட அதிக பெலசாலி. அவனை
மனுஷபெலத்தால் எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்பதை நான் அனுபவ பூர்வமாக அறிந்தவன்! ஆகையால் உலகத்தில் இருக்கும் அவனை விட பெரியவராகிய தேவன் உங்களுக்குள் இருந்தால் மட்டுமே அவனை மேற் கொள்ள முடியும்!
எனவே அன்பானவர்களே:
I கொரிந்தியர் 10:12 தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
அதாவது, நிற்கிறவன் தன் சொந்தபெலத்தினாலும் அல்லது தன்னுடய வல்லமையினாலும் நிற்கிறேன் என்று எண்ணி விழுந்து போகாதபடிக்கு தேவனை சார்ந்துகோள்ளகடவன்!
இன்னொரு புறம்
காரியம் இவ்வாறு இருப்பதற்காக, "எல்லாமே தேவன்தான்" என்று எண்ணிக் கொண்டு நமது பரிசுத்தத்தையும் உத்தமத்தையும் காக்க எந்த முயர்ச்சியுமே எடுக்காமல் வாழ துணியகூடாது. "மனுஷனால் ஒன்றும்கூடாது" என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும்! ஆகினும் அவனது மனதின் வாஞ்சை என்ன வென்பதை தேவன் ஆராய்ந்தறிந்து அதன்டிப்படையிலேயே மனுஷனுக்கு உதவி செய்கிறார்!
எனவே தேவனின் வார்த்தைகளை குறித்து உதாசீனமாக இருக்காமல் எந்நிலையிலும் நம்முடய உண்மையையும் உத்தமத்தையும் காத்துக்கொள்ள முயல்வோமாக! தேவனுக்கேற்றவர்களாக நாம் நடக்க விரும்பும் காரியங்களில் நாம் எத்தனைமுறை விழுந்தாலும் நம்மை தூக்கிவிட்டு நம்மை நிலைநிறுத்த தேவன்தாமே வல்லவராக இருக்கிறார்"
கீழ்படிய விரும்புகிறவர்களை கொண்டே தேவன் பெரிய காரியங்களை சாதிக்க முடியும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)