தேவ நாம மகிமைக்காய் என் குடும்பத்தில் நடந்ததை அநேகருடைய விசுவாசம் பலப்பட உதவியாக இருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசித்து எழுதுகிறேன்.
என்னுடைய அக்கா மகள் வயது 20 கோவையில் diploma in Nursing படித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த 3 மாதங்கள் முன்பு திடீரென்று கடுமையான வாயிற்று வலி என hostel - லில் இருந்து வந்துவிட்டால், doctor - ரிடம் செக் பண்ணி பார்த்தபோது மகளின் இரண்டு கிட்னியில் ஒன்று வேலைசெய்வது இல்லை என்றும் இரண்டாவதும் 30 % தான் வேலை செய்கிறது என கண்டு உடனே surgery செய்ய வேண்டும் என date குறித்து விட்டனர். மகளின் blood creatine level மிக மிக அதிகமாக உள்ளதால் வயிற்று வலி உள்ளது என்று சொல்லி விட்டனர். scan report டில் கிட்னிக்கு செல்லும் நரம்பில் block இருப்பதாக கண்டு அதை அகற்ற surgery செய்தனர்.
இந்த நிலையில் நானும் என சபை மக்களும் உபவாசித்து தொடர்ந்து ஜெபித்து கொண்டிருந்தோம். (சவுதியில்). அடுத்த நாள் surgery நடந்தது, ஆனால் அந்த block மறைந்தது என டாக்டர் ரிப்போர்ட் கொடுத்து விட்டனர். பின்பு வீட்டில் ரெஸ்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுவதும், பின்பு பிசாசு பிடித்து இருப்பதை போல சேட்டைகள் பண்ணுவதை என் அண்ணன் நேரில் கண்டு என்னிடம் கூறினார். எங்களின் ஜெபம் தொடர்ந்து கொண்டு இருந்தது. நாளுக்நாள் மகளின் நிலை மிக மிக மோசமாகி நடக்க முடியாதபடி ஆகிப்போனாள். இந்த நிலையில் வேறொரு டாக்டர் அட்வைஸ் படி மகளுக்கு blood sugar டெஸ்ட் பண்ணி பார்ட்டில் fasting blood sugar 835 ஆக இருந்தது. blood sugar பற்றி அறிந்தவர்களுக்கு இதனுடைய seriousness என்ன என்று அறிந்து கொள்வார்கள்.
பின்பு என அண்ணன் பயந்துபோய் உடனே GH-இல் அட்மிட் செய்துவிட்டார். அப்போது மகளின் அப்பாவிடம் 'என் மகள் மிகவும் ஆபத்தான நிலையில் அட்மிட் செய்கிறோம் என எழுதி வாங்கின பின்பு அட்மிட் செய்து treatment அந்த நிமிடமே ஆரம்பித்து விட்டனர். என் அண்ணன் என்னிடம் பேசும்போது இனி பிழைப்பாள் என்ற நம்பிக்கை இல்லை என கூறினார். ஆனால் நான் என மனதில் இந்த வியாதிகளை அண்ணன் சொன்னபடி ஏற்று கொள்ளாமல், இந்த வியாதிகள் மகளின் வாழ்க்கைக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்துவிட்டன என நினைக்கலாம், ஆனால் நான் நம்பும் ஆண்டவர் அந்த முடிவில் இருந்து ஒரு புதிய துவக்கத்தை மகளுக்கு கொடுக்க முடியும் என இரவும் பகலும் இடைவிடாது ஜெபித்து கொண்டிருந்தேன். சுருங்கிப்போன கிட்னி, கணையம் இரண்டிற்கும் treatment கொடுத்து ஒரு மாதத்தில், டாக்டர் எதிர்பார்பிற்கும்மேல் சுகம் பெற்று வீடு வந்து சேர்ந்தாள். தினமும் இன்சுலின் போடவேண்டும் என்ற நிலை கடந்தது. கிட்னி மற்றும் கணையம் சரியாக வேலை செய்வதோடு blood இல் creatine மற்றும் சுகர் நார்மலாக எல்லா நிலைகளிலும் இருக்கிறது என blood ரிப்போர்ட் சொல்லுகிறது. தற்போது தன்னுடைய final year படிப்பை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள்.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால், நம்பிக்கை இழந்துபோன சூழ்நிலையில் புதிய நம்பிக்கை கொடுக்க இயேசுவால் மாத்திரமே முடியும் என நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசு மகளுக்கு அற்புத சுகத்தை கொடுத்தார் என நான் விசுவாசிக்கிறேன். தேவன் கொடுத்த சுகத்திற்கும் மகளுக்கு கொடுத்த புதிய வாழ்விற்கும் என்றென்றும் நன்றி உள்ளவனாக ஜீவிப்பேன். இயேசுவின் நாமம் உயர்த்தபடுவதாக.
யாத் 15 : 26. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
சுருங்கிப்போன கிட்னி, கணையம் இரண்டிற்கும் treatment கொடுத்து ஒரு மாதத்தில், டாக்டர் எதிர்பார்பிற்கும்மேல் சுகம் பெற்று வீடு வந்து சேர்ந்தாள். தினமும் இன்சுலின் போடவேண்டும் என்ற நிலை கடந்தது. கிட்னி மற்றும் கணையம் சரியாக வேலை செய்வதோடு blood இல் creatine மற்றும் சுகர் நார்மலாக எல்லா நிலைகளிலும் இருக்கிறது என blood ரிப்போர்ட் சொல்லுகிறது.
மிக அருமையான சாட்சி ஒன்றை சகோ. முத்து அவர்கள் பதிவிட்டுள்ளர்கள். இதுபோன்ற அனேக உயிருள்ள சாட்சிகளை தன்னகத்தே கொண்டதுவே ஜீவனுள்ள மார்க்கமாகிய கிறிஸ்த்தவம்.
நம்முடய ஆண்டவர் அற்ப்புதங்களில் ஆண்டவர்.
விண்ணபத்தை கேட்கிறவரும் நமது கண்ணீரையும் மன பாரங்களையும் அறிகிரவராக இருக்கிறார்.
சங்கீதம் 22:24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
உண்மைதான் சகோதரரே, நம் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர்.
எனக்கு நன்கு நினைவில் உள்ளது, மறக்கவும் முடியாதது, கடந்துபோன நாட்களில் இரவும் பகலும் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை எனலாம். மகளுடைய உடலின் ஒவ்வொரு பாகங்களையும் ஒப்புக்கொடுத்து நன்றி சொல்லி துதித்தேன். நாம் நம்முடைய சூழ்நிலைகளை மறந்து தேவனை துதிக்கும்போது, நம்முடைய சூழ்நிலைகளில் மாற்றத்தையும், அற்புதத்தையும் கட்டளையிடுகிறார்.
2 நாளா: 20 : 22. அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அல்லேலுயா! அவரின் வல்லமை மாறாதது, குறையாதது இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
சகோதரர் ஸ்டீபன் அவர்கள் பதிவிட்டுள்ள இந்த சாட்சி உண்மையில் ஆண்டவரின் ஒரு மிகப்பெரிய அற்ப்புதமே. கேன்சர் நோய் கட்டுக்குள் வருவது என்பது சாதாரண காரியமே அல்ல!
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் இயற்கையின் வல்லமைகள் சாத்தானின் அதிகாரங்கள் எல்லாவற்றின் மேலும் அதிகாரம் உள்ளவராக இருந்தார். நேற்றும் இன்றும் என்றும் மாறாத அவரின் வல்லமை, இன்றும் விசுவாசித்து வேண்டுதல் செய்யும் அனைவருக்குள்ளும் செயல்பட்டு வருகிறது என்பதை இவ்வித சாட்சிகள் மூலம் அறியமுடியும்! .
யோவான் 11:40இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என் வாழ்வில் நடந்த சம்பவத்தை நான் இங்கு சாட்சியாக எழுதுவதில் மிகவும் சந்தோஷ படுகின்றேன் மற்றும்
அநேகருக்கு இந்த சாட்சி ஒரு பெலனாய் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இங்கு எழுதிகின்றேன்
சில வாரங்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் மருத்துவ மனைக்கு சென்று கொண்டு இருந்தோம் என் மனைவிக்கு டாக்டர் ரத்தம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று எங்களிடம் சொல்லி எங்கள்
இருவரையும் வர சொல்லிருந்தார்கள் நாங்கள் வந்தோம்
அப்பொழுது என்மனைவிக்கு கையில் ரத்தம் டெஸ்ட் எடுக்கும் பொழுது ஊசியில் ரத்தமே ஏறவே
இல்லை 4 5 தடை கையில் குத்தி குத்து பார்த்து என்னம்மா உனக்கு ரத்தம் மிகவும் குறைவாக
உள்ளது இப்படி இருந்தால் குழந்தைக்கு தான் பல பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லி கடைசியாக
எப்படியோ என் மனைவியின் கையில் ரத்தம் எடுத்து விட்டு நீங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்;
எனக்கோ மருத்துவமனைகளில் அனைவரையும் பார்க்கும் பொழுது வேதனையாய் இருந்தது அங்கு இருந்து
வெளியே வந்த உடன் அந்த வேதனையய் மறந்து விட்டேன்
என் மனைவியோ டாக்டர் சொன்ன வார்த்தையை கேட்டு மிகவும் பயந்து இருந்தால் அதாவது உன்
உடம்பில் ரத்த ஓட்டம் தேவையான நிலையில் இல்லை இப்படி இருந்தால் உன் குழந்தைக்கு தான்
ஆபத்து என்று டாக்டர் சொன்ன வார்த்தை நிமித்தம் அவள் பயந்து போய் இருந்தால்
நான் என் மனைவிக்கு கவலைப்பாடாதே நமக்கு தேவன் இருக்கின்றார் அவரால் செய்ய
முடியாத காரியம் ஒன்றும் இல்லை நீ நன்றாக ஜெபம் செய் என்று கூறி வேலைக்கு
கிளம்பிவிட்டேன்
என் மனைவியிடம் சமாதானம் கூறிவிட்டேனே தவிர என் மனம் மிகவும் வருத்தம் கொண்டது எனக்கு என்ன
நேர்ந்தாலும் நான் தேவன் மேல் உள்ள நம்பிக்கையோடு சகித்து விடுவேன் என் மனைவி என்னை போல அல்லவே
அவள் இருதயத்தில் எவ்வளவு வருத்தம் கொள்வாள் என்று எண்ணி மிகவும் வருத்திற்கு உள்ளானேன்
தேவனே நான் உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கின்றேன் தயவு செய்து நீர் நன்மையானதை எனக்கு செய்யுங்கள்
மற்றவர்கள் கஷ்டங்களை பார்த்தாலே என்னால் சகிக்க முடியவில்லை மற்றவர்களோடு நான் கூடவே இருப்பதில்லை
என்பதால் அவர்கள் வேதனையை நான் மறந்துவிடுகின்றேன்
ஆனால் என் மனைவியோ என்னோடு கூட இருப்பவள் இதை என்னால் பார்த்து
கொண்டு இருக்க முடியாது என்னிடத்தில் என்ன தவறு இருந்தாலும் எனக்கு தெரியபடுத்துங்கள்
நான் விட்டு விடுகின்றேன் எனக்கு உதைவி செய்யுங்கள் தேவனே என் மனைவியையும் அவள்
சுமக்கும் குழந்தையும் நீர் பாது காத்து கொள்ளுங்கள் என்று சொல்லி அவரிடம் வேதனையோடு புலம்பி
கொண்டே இருந்தேன் என் வருத்தத்தை அறிந்த தேவன் என்னோடு அவருடைய வார்த்தையின் மூலம் பேசினார் ஆம்
நண்பர்களே அவர் என்னோடு பேசி எனக்கு வாக்கு பண்ணினார் அவர் என்னோடு பேசிய வார்த்தை என்னவென்றால்
ஏசாயா : 66
9 .பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான்பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
தேவன் இந்த வார்த்தைகளை என்னோடு பேசிய பிறகு தான் எனக்கு மிகுந்த சந்தோஷமாய் இருந்தது இது எவ்வளவு ஆச்சரியமான
காரியம் என்பதை அனுபவித்த எனக்கு மட்டும் தெரியும் நாம் சோர்ந்து போகும் நேரத்தில் தேவன் தம் வார்த்தையின் மூலம் நம்மை
ஏசாயா : 66 9 .பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான்பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
தேவன் இந்த வார்த்தைகளை என்னோடு பேசிய பிறகு தான் எனக்கு மிகுந்த சந்தோஷமாய் இருந்தது
ஆண்டவர் வசனங்கள் மூலமாக நம்மோடு பேசி தள்ளாடுகிற நம்மை பலப்படுத்திகிறார் என்பதை அறிவிக்கும் நல்ல சாட்சி சகோதரர் சுதாகர் அவர்களே.
தாங்கள் குறிப்பிட்டுள்ள ஏசாயா 66:9-ம் வசனத்தை, தலைப்பிரசவத்திற்கு வந்திருந்த எனது மகளிடம் நானும் சொல்லி கர்த்தர் மீது நம்பிக்கையாயிருக்கும்படி கூறினேன். தேவகிருபையால் எனது மகளுக்கு சுகப்பிரசவமானது. அதேவிதமாக தேவன் தாமே தங்கள் மனைவிக்கும் சுகப்பிரசவத்தை அருள ஜெபிக்கிறேன்.
தங்கள் மனைவியை நன்றாகச் சாப்பிடச் சொல்லுங்கள். தேவன் நமக்கு உணவைத்தான் மருந்தாகத் தந்துள்ளார்.
சங்கீதம் 104:14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 15 மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
தங்கள் மனைவி மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும், மருந்தின் மீதும் மருத்துவர் மீதும் நம்பிக்கை வையாமல் தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படி கூறுங்கள். அத்தோடு அவர்கள் விரும்புகிற எல்லா உணவையும் திருப்தியாகச் சாப்பிடச்சொல்லுங்கள்.
உங்கள் விசுவாசத்தின்படியே தேவன் சுகப்பிரசவத்தை அருளுவார்.
தங்கள் மனைவி மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும், மருந்தின் மீதும் மருத்துவர் மீதும் நம்பிக்கை வையாமல் தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படி கூறுங்கள். அத்தோடு அவர்கள் விரும்புகிற எல்லா உணவையும் திருப்தியாகச் சாப்பிடச்சொல்லுங்கள்.
உங்கள் விசுவாசத்தின்படியே தேவன் சுகப்பிரசவத்தை அருளுவார்
உங்கள் ஆலோசனைக்கும் தேவ நம்பிக்கையை கொடுக்கும் உங்கள் வார்த்தைக்கும் மற்றும் எனக்காக பிரயாசம் எடுத்து எழுதியதற்கும் என் இருதயத்தில் இருந்து நன்றிகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன் என் தேவனாகிய கர்த்தர் அவருடைய சித்தத்தின் படி உங்களை ஆசிர்வதிப்பாராக.!
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 4th of January 2012 11:01:35 AM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
தேவன்பெரிலுள்ள விசுவாசத்தை வர்த்திக்கபண்ணும்படிக்கு என்னுடய சாட்சி ஒன்றையும் இங்கு பதிவிடுகிறேன்.
என்னுடைய இரண்டாம்மகன் ஜெனித்திருந்தபோது தேவன்பேரிலிருந்த உறுதியான் விசுவாசம் அடிப்படையில் சுமார் 7 மாதங்கள் அளவுக்கு நான் மருத்துவமனை அழைத்து செல்லவில்லை. இறுதியில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அதிகம் பயம்காட்டி விட்டதால் என் மனைவி பிடிவாதமாக டாக்டரை பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டாள்.
பின்னர் சுமார் எட்டு மாதம் ஆனபோது ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் மருத்துவர்கள் நாங்கள் ரொம்ப லேட்டாக வந்திருப்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின்னர் "எது நடந்தாலும் நாங்கள் பொறுப்பு" என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு, அது இது என்று ஏதேதோ பரிசோதனை செய்துவிட்டு "உனக்கு நெகட்டிவ் குரூப் இரததம் இருக்கிறது எனவே இதற்க்கு முன் இருக்கும், பிள்ளைக்கு ஏதாவது ஊனம் இருக்கவேண்டுமே என்று சொன்னார்கள்". அப்படி எதுவும் இல்லையே நன்றாகத்தான் இருக்கிறது என்று நாங்கள் சொன்ன பிறகு, அது எப்படி முடியும்? சரி, இன்னொரு முக்கிய இரத்த பரிசோதனை செய்யவேண்டும் என்று சொல்லி மீண்டும் பரிசோதித்துவிட்டு "indirect compination result negative"ஆக இருக்கிறது எனவே பிள்ளைக்கு நிச்சயம் குறை இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி கொஞ்சம் காசையும் பிடுங்கிக் கொண்டு பயம்காட்டி விட்டார்கள். என் மனைவி மிகவும் பயந்துவிட்டாள்.
ஆனால் எனக்கு சாத்தானை பற்றியும் டாக்டரை பற்றியும் நன்றாகவே தெரியும் எனவே கர்த்தர் கையில் காரியத்தை ஒப்புகொடுத்துவிட்டு கவலைப்படாமல் இருந்தேன் கர்த்தரும் நல்ல பிள்ளைகளையே எங்களுக்கு கொடுத்தார். அவருக்கே எந்நாளும் மகிமை உண்டாவதாக!
ஏதாவது ஒரு பெரிய பூச்சை பிடித்து காட்டி நம்மை பயம்காட்டி சோர்ந்து போக வைப்பது சாத்தானின் வேலை! ஆனால் பயங்கர பராக்கிரமசாலியாக கர்த்தர் நம்மோடு இருப்பதை அறிந்த நாம் அதற்க்கெல்லாம்பயப்படவேண்டிய அவசியம் இல்லை!
-- Edited by SUNDAR on Thursday 12th of January 2012 08:44:09 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)