இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்........?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்........?
Permalink  
 


2 சாமுவல் 6 அதிகாரம் 6 ,7 ல்

உள்ள வசனத்தின்படி உடன்படிக்கை பெட்டியை தொட்டதினால் கர்த்தர் ஊசாவின் மேல் கோபம் கொண்டு அடித்ததினால் அவன் செத்தான். என்று வேதத்தில் பார்க்கிறோம்.

இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில்

தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கீழே விழ போகின்றது என்ற எண்ணத்தில் தான் ஊசா பதறிபோய் அந்த பெட்டியை பிடித்தான் அந்த பகுதியை வாசிக்கும் பொழுது நமக்கே புரியும்.

அப்படி இருக்க நீதியும் நியாயமும் உடைய கர்த்தர் இருதயங்களை ஆராயிந்து அறிகின்ற நம் தேவன் அவன் உடன்படிக்கை பெட்டியை பிடித்ததற்கும் காரணத்தையும் அறிந்து இருப்பார் அல்லவா.......!

எனக்கு தெரிந்து ஏதோ ஒரு மறைவான காரணம் இருக்கு வேண்டும் என்று நினைக்கிறேன்.

தல சகோதர்களுக்கு தெரிந்து இருந்தால் இதை குறித்து ஒரு விளக்கத்தை தரும் படியாக கேட்டு கொள்கிறேன்.



__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Stephen wrote:

2 சாமுவல் 6 அதிகாரம் 6 ,7 ல்

உள்ள வசனத்தின்படி உடன்படிக்கை பெட்டியை தொட்டதினால் கர்த்தர் ஊசாவின் மேல் கோபம் கொண்டு அடித்ததினால் அவன் செத்தான். என்று வேதத்தில் பார்க்கிறோம்.

இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில்

தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கீழே விழ போகின்றது என்ற எண்ணத்தில் தான் ஊசா பதறிபோய் அந்த பெட்டியை பிடித்தான் அந்த பகுதியை வாசிக்கும் பொழுது நமக்கே புரியும்.

அப்படி இருக்க நீதியும் நியாயமும் உடைய கர்த்தர் இருதயங்களை ஆராயிந்து அறிகின்ற நம் தேவன் அவன் உடன்படிக்கை பெட்டியை பிடித்ததற்கும் காரணத்தையும் அறிந்து இருப்பார் அல்லவா.......!

எனக்கு தெரிந்து ஏதோ ஒரு மறைவான காரணம் இருக்கு வேண்டும் என்று நினைக்கிறேன்.

தல சகோதர்களுக்கு தெரிந்து இருந்தால் இதை குறித்து ஒரு விளக்கத்தை தரும் படியாக கேட்டு கொள்கிறேன்.


 

கர்த்தரின்  பெட்டியை ஆசாரியர்கள்  சுமந்து கொண்டு 
போகவேண்டும் என்பதுதான் தேவனின் கட்டளை. 
 
யோசுவா 3:14  ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்
 
ஆனால் இங்கு இவர்கள் மாட்டுவண்டியில் வைத்து கொண்டு சென்றது ஒரு  தவறானசெயல். மேலும் மிகவும் பரிசுத்தமான கர்த்தரின் பெட்டியை எல்லோரும் தொடமுடியாது.  அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியர்கள் மாத்திரமே அந்த பெட்டியை  தொட முடியும் என்றிருக்கையில், ஊசா துணிந்து கர்த்தரின் பெட்டியை தொட்டதால் கர்த்தர் அடித்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவன் தொட்டான் என்பது இங்கு கண்டுகொள்ளப்பட வில்லை.  நியமணத்தை மீரியதுவே  தவறாகிப்போனது.   
 
சுமந்து வரவேண்டிய பெட்டியை மாட்டுவண்டியில் கொண்டு வந்ததால்தானே மாடு மிரண்டதால் பெட்டியை பிடிக்க வேண்டியதாகி போனது. எனவே எல்லா தவறுக்கும் தண்டனை வண்டியை நடத்திய ஊசாமேல் வந்தது  என்பது எனது கருத்து.  
 
மேலும் இதற்க்கு விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடலாம்.  


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Stephen wrote:

2 சாமுவல் 6 அதிகாரம் 6 ,7 ல்

உள்ள வசனத்தின்படி உடன்படிக்கை பெட்டியை தொட்டதினால் கர்த்தர் ஊசாவின் மேல் கோபம் கொண்டு அடித்ததினால் அவன் செத்தான். என்று வேதத்தில் பார்க்கிறோம்.

இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில்

தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கீழே விழ போகின்றது என்ற எண்ணத்தில் தான் ஊசா பதறிபோய் அந்த பெட்டியை பிடித்தான் 


தாங்கள் கேட்டுள்ள கேள்வியொரு  முக்கியமான கேள்வியாகும். தேவனுடய  காரியங்களில்  தாந்தோன்றிதனமாக செயல்படும் அநேகருக்கு எச்சரிப்பை கொடுக்கும் செய்தியும் இந்த ஊசாவின் காரியத்தில் அடங்கியுள்ளது.

ஒரு சிறு சம்பவம் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்:

ஒரு முதலாளி தான் சொல்லும் வேலைகளை செய்வதற்கு ஒரு வேலையாளை   வேலைக்கு அமர்த்தினார். அவரிடம்  ஒரு குறிப்பிட்ட அளவு  பணத்தை  கொடுத்து  ஒரு குறிப்பிட்ட கடையில்போய் ஒரு குறிப்பிட்டபொருளை வாங்கிவரும்படி கட்டளை யிட்டார். ஆனால் அந்தவேலையாளோ முதலாளில் சொல்லாத வேறொரு கடைக்கு  போய் அதேபொருளை குறைந்த விலைக்கு வாங்கிவந்து மீதம் காசையும் கையில் கொடுத்து முதலாளி  தன்னை பாராட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தார் 
 
ஆனால் முதலாளியோ அவனை வேலையைவிட்டு தூக்கிவிட்டார். அதற்க்கு அவர் சொன்ன காரணம்  "நான் என்ன சொன்னேனோ அதை செய்வதற்குதான் உன்னை வேலைக்கு அமர்த்தினே நேயன்றி, உன்னுடைய இஸ்டப்படி செயல்படுவதற்கு அல்ல. இந்த்தனை வருடம் இந்த தொழிலில் இருக்கும் எனக்கு, எந்த தரமான பொருள் எந்த இடத்தில் தரமான விலைக்கு கிடக்கும் என்பது எனக்கு தெரியாதா என்ன? அதனால் சொல்வதை  செய்யாத நீ வேலைக்கு லாயக்கற்றவன்" என்றார்.  
 
இதுபோலவே இன்றைய கிறிஸ்த்தவத்தில் தேவன் என்ன சொல்கிறார் என்பதை சரியாக கவனிக்காமல், தேவனுக்காக குறைந்த விலையில் ஆத்துமாக்களை வாங்கிகொடுக்க அநேகர் முன்வந்துள்ளனர்! அதனால் சரியான மனம்திரும்புதல் இல்லாத, அதிசயத்தையும் அற்ப்புதத்தயுமே எதிர் நோக்கி இருக்கும் கூட்டங்கள் இன்று கிறிஸ்த்தவத்தில் அதிகமாகியுள்ளது.
 
தேவனின் காரியங்களை எப்படியாகிலும் நமது இச்சையின்  அடிப்படையில் செய்வதற்கு அது ஒரு காய்கறி வியாபாரம் அல்ல.ஒவ்வொரு காரியமும் சரியான் கிரம முறைப்படி செய்யப்படுவதையே தேவன் விரும்புகிறார். அதற்க்கு சரியான காரணங்கள் தேவனிடத்தில் உண்டு. தேவ கட்டளைகளை மீறி  தேவனுக்கு ஆதாயம் செய்வோருக்கு "நீங்கள் எவ்விடத்தாரோ அறியேன்" என்ற பதிலே கொடுக்கப்படும்.
 
இதுபோன்றதொரு சம்பவம்தான் அன்று ஊசாவின்கரியத்தில்லும் நடந்தது. இரண்டு காரியங்களினிமித்தம் ஊசா  அன்று கர்த்தரால்  அடிக்கப்பட்டான்.
 
1. கர்த்தருடய பெட்டியை மாட்டு வண்டியில் ஏற்றியதர்க்காக:
 
கர்த்தருடய உடன்படிக்கை பெட்டியானது ஆசாரியர்களால் சுமந்து கொண்டுவர வேண்டும் என்பதே இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த  கட்டளையாக இருந்தது.  ஆனால் இஸ்ரவேலர் அனைவரும் சேர்ந்து கர்த்தருடைய பெட்டியை புது ரதம் என்னும்  மாட்டுவண்டியில் வைத்து கொண்டு சென்றனர்.
 
II சாமுவேல் 6:3 தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
 
எனவே  கர்த்தரின்பெட்டியை கொண்டுபோகும் இக்காரியம் தொடக்கத்தில் இருந்தே தேவனின் பார்வைக்கு சரியானதாக இருக்கவில்லை. காரணம் இந்த காரியத்தை அவர்கள் பெலிஸ்தியர் என்னும் புறஜாதியாரின் செய்கையில் இருந்து கற்றுக் கொண்டு செய்தனர். அது தேவனின் பார்வையில் தவறாகி போனது.
 
2. கர்த்தருடய பெட்டியை பரிசுத்தமாக்கப்படாத  ஊசா கைநீட்டி
தொட்டதற்காக!  
 
கர்த்தரின் இந்த உடன்படிக்கை பெட்டியானது மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்க கூடியதும் பரிசுத்தமாக்கப்பட்ட ஆச்சாரியர்கள் தவிர வேறு ஒருவரும் தொடக் கூடாத்துமாக் இருந்தது
 
II நாளாகமம் 5:7 ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
 
பரிசுத்தமுள்ள கர்த்தரின் பெட்டியை காப்பவர்கள்கூட பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு அந்த பெட்டியை காப்பதற்கு பரிசுத்தபடுத்தபட்டவன் அவனுடய குமாரனாகிய ஏலேயேசாரே!  
 
I சாமுவேல் 7:1 அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
 
ஆனால் இங்கு ரதத்தை நடத்தியவர்கள் அவனின் மற்ற இரண்டு குமாரார்கள்
 
I நாளாகமம் 13:7  தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
 
இங்கு நாம் இவ்வாறு எண்ணலாம் "ஊசா கர்த்தரின் பெட்டி விழுந்து விடகூடாது என்ற நல்ல எண்ணத்திலேதானே  அந்த பெட்டியை கையை நீட்டி பிடித்தான், இதில்
கர்த்தர் அடித்து கொள்ளும் அளவுக்கு என்ன தவறான காரியம் இருக்கிறது என்பது போல் தோன்றலாம். ஆனால் சகோதரர்களே, தேவனுடைய வார்த்தைகளையும் நியமணங்களையும்  கைகொள்ளும்போது அவைகளை எக்காரணத்தை கொண்டும் சிறிதேனும்  மீறுவது கூடாது என்பதற்கே  இந்த காரியம் மற்றும் மோசேயின் காரியங்கள் கூட நமக்கு எச்சரிப்பாக உள்ளது. 
 
தேவனுக்கு நல்லது செய்ய அல்லது தேவனை காப்பாற்ற யாரும் இங்கு தேவையில்லை.  அவருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்படியும் ஆட்களே இங்கு தேவனுக்கு தேவை.
 
பொய் பொய்யான வார்த்தைகளை சொல்லி ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் ஆட்கள் யாரும் தேவனுக்கு தேவையில்லை. உள்ளதை உள்ளது என்று சொல்லி தேவனுக்குள் வழிநடத்தும் ஒரே ஒரு ஆத்துமாவே விலை எரப்பெற்றதும் தேவனுக்குள் நிலைத்து நிற்கும் ஒன்றுமாக இருக்கும்.
 
இச் சம்பவத்தை பொறுத்தவரை கர்த்தர் ஊசாவை அடித்தார் எனவே ஏதோ தவறு அங்கு நடந்திருக்கிறது என்ற கருத்தின் அடிப்படையிலேயே நோக்குகிறோம். இங்கு பெட்டியை ரதத்தில் ஏற்றி கர்த்தரின் பெட்டியை கொண்டுவந்தது ராஜாவில்இருந்து எல்லோருமாக சேர்ந்து செய்த தவறாக இருந்தது.
 
கர்த்தர் ஊசாவை அடித்ததன் முக்கிய காரணம் என்னவென்பதை  வசனம் இவ்வாறு சொல்கிறது!    
 
II சாமுவேல் 6:.6  மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். 7  அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்
 
பெட்டியை கைநீட்டி பிடித்த செயலையே தேவன் கண்டித்துள்ளார். எனவே
அவன் தேவனுக்கேற்ற பரிசுத்தமற்றவனாக இருந்திருக்கலாம் என்றே அனுமானிக்க முடிகிறது.  பெட்டியை தொடுவதர்க்கேற்ற பரிசுத்தம் இல்லாதவனாக இருந்தும் துணிந்து கையை நீட்டிபெட்டியை  தொட்டதால் தேவன் அவனை அடித்திருக்கலாம்.   
 
இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடம்:
 
தேவனின் வார்த்தைகள்என்பது மாறாதது மாற்றமுடியாதது! அவர் வார்த்தைகளை
அவர் ஒருவர் மட்டுமே  மாற்ற முடியும். எந்த மனுஷனுக்கும் அதை மாற்றவோ
அல்லது அதை அல்டர்பண்ணவோ அதிகாரம் இல்லை. அவ்வாறு அதை மாற்றினால் அது எங்காவது ஒரு இடத்தில், நாம் நல்லது என்று செய்ய நினைத்தாலும் அது நம்மை மரணத்துக்கு நேராக  நடத்திவிடும் என்பதே! 
 
அடுத்து, 
 
தேவனிடம் கிட்டி சேர்வதற்கு பரிசுத்தம் மிக மிக அவசியமாகிறது. தேவனுடய காரியங்களில் பரிசுத்தமில்லாமல் துணிகரமாக தான்தோன்றிதனமாக நடப்பவர் களுக்கு முடிவு ஊசாவின்  முடிவுபோல மோசமாகவே இருக்கும் என்பதே!  


-- Edited by SUNDAR on Monday 22nd of August 2011 09:45:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 


Sundar Wrote:

"தேவனுக்கு நல்லது செய்ய அல்லது தேவனை காப்பாற்ற யாரும் இங்கு தேவையில்லை. அவருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்படியும் ஆட்களே இங்கு தேவனுக்கு தேவை."



முற்றிலும் உண்மை இதையே எல்லா ஊழியர்களும் பின்பற்றினால் ஆண்டவரின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் , இல்லையேல் ஊசாவிற்க்கு நடந்ததே நமக்கும்

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard