கடந்த வாரம் வேலைமுடிந்து வீடுதிரும்ப ஆயத்தமானபோது எனக்கு சிறிது ஒய்வு கிடைத்தது பொதுவாக ஒய்வு நேரத்தில் ஆவிக்குரிய காரியங்களை எதையாவது எழுதும் நான் அன்று எதிலுமே ஈடுபாடு இல்லாததால், வலை தளங்களில் ENTERTAINMENTஆக சில உலக காரியங்களை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் மனதில் ஆண்டவரால் உண்டான உறுத்துதல் ஏற்படவே நானும் சலிப்புடன் "எப்பவுமே வேதத்தை பற்றியே எழுதி என்ன ஆண்டவரே கண்டேன், அநேகர் என்னுடய வார்த்தைகளை ஏற்ப்பது இல்லை, இந் நிலையில் இங்கு எழுதுவது வீணோ என்று கருதுகிறேன். எனவேதான் இவ்வாறு இந்த உலக காரியங்களை பார்த்துகொண்டு இருக்கிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னேன்.
உடனே ஆண்டவர் மிக அதிகமாக என்னை கடிந்துகொண்டார். இன்று இந்த உலகம் இருக்கும் நிலை என்னதெரியமா? என்னுடய பரிதபிப்பு உனக்குபுரியுமா? எத்தனை கோடி ஜனங்கள் நரகபாதாளத்தின் வாசலைநோக்கி நடந்துகொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? உலகில் நடக்கும் காரியங்களின் தாற்பரியம் உனக்கு தெரியுமா?ஒவ்வொருவருக்காகவும் நான் தவிக்கும் தவிப்பு தெரியுமா? இதன் முடிவு தெரியுமா? அதன் விபரீதம் தெரியுமா இதெல்லாம் தெரிந்தால் நீ இவ்வாறு அமர்ந்து இந்த தேவையற்ற காரியங்களை பார்த்து கொண்டு இருப்பாயா? நான் உனக்கு தெரிவித்த எல்லாவற்றையும் மறந்து போனாயா? தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்தின் மதிப்பு உனக்கு தெரியுமா? எத்தனை ஆத்துமாக்கள் தற்ச்சமயம் சொல்லொண்ணா வேதனையில் உழன்றுகொண்டு இருக்கிறது என்பது உனக்கு தெரியுமா? உன் இருதயம் அடைபட்டு போனதா? என்று அடுக்கடுக்காக அனேக கேள்விகளை எழுப்ப, எனக்கு ஆண்டவர் தெரிவித்த, நான் மறந்துவிட்டிருந்த அனேக பழைய காரியங்கள் மற்றும்பல விபரீதங்கள் எல்லாம் மீண்டும் ஒருமுறை நினைவில் வந்தது.
நான் என்ன செய்யவேண்டும் ஆண்டவரே? என்னால் முடிந்ததை எல்லாம் நான் செய்துவிட்டேன். முழுவதும் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து நடக்க முயல்வதால் பலருக்கு என்னால் பல்வேறு பிரச்சனைகளும் மனகசப்புகளும் சண்டைகளும் உருவாகிறது. என் வீட்டிலேயே எனக்கு மதிப்பு இல்லை. உம வார்த்தைகளினிமித்தம் நான் ஒரு ஓட்டாண்டியாகவே கருதபடுகிறேன். இதக்குமேல் நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?என்று எண்ணிக்கொண்டு மிகுந்த பாரத்துடன் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டவாறு வீட்டுக்கு புறப்பட எழுந்தபோது, திடீர் என்று தேவ ஆவியானவரால் முழுவதும் நிரப்பபட்டு என்னை அறியாமல் கேவிகேவி அழ ஆரம்பித்துவிட்டேன். சுமார் 5 நிமிடங்கள் சத்தம் போட்டு கதறி அழுதேன் ஐயோ! ஐயோ! என்று யாருக்காகவோ புலம்பினேன். பின்னர் வழியெல்லாம் அழுதுகொண்டே வீடுவரை போய் சேர்ந்தேன். அன்று முழுவதும் அனேக நேரம் அந்த பாரம் இருந்துகொண்டே இருந்தது.
எரேமியா 13:17நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்
ஆண்டவர் எனக்கு உணர்த்தியபடி தேவன் ஒவ்வொரு அத்துமாவுக்காகவும் அதிக மதிகமாக பரிதபிக்கிறார் என்பதையும், ஒரு மனுஷன்கூட கெட்டு சாத்தனோடுகூட அக்கினி கடலுக்கு போவது தேவனின் விருப்பம் அல்லவே அல்ல!" அவர் எல்லோரையும் மீட்டுவிடவே விருப்பமாயிருக்கிறார் என்பதை மாத்திரம் என்னால் தெளிவாக அறிய முடிந்தது.
யோனா 4:11வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்
தேவன் எனக்கு கட்டளையிட்டது "பரிசுத்தத்தில் நீ இருக்கும் இன்னும் நிலை போதாது இன்னும் அதிகமாக நீ பரிசுத்தம் ஆகவேண்டும், வீட்டிலும் வேலை ஸ்தலத்திலும் மற்றும் நீ போகும் எல்லா இடங்களிலும் என்னுடய வார்த்தைக்கு பயந்து உன்னுடய உத்தமத்தை காத்துக்கொள்" என்பதே!
உபாகமம் 18:13உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக் கடவாய்.
நிச்சயம் முடிவு உண்டு! அது எல்லோருக்கும் சமாதானமாகவே இருக்கும் என்பதே!
எரேமியா 29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
முடிவு சீக்கிரம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்தது!
அந்த முடிவு, ஒட்டுமொத்த மனுஷ கூட்டத்துக்கும் சமாதனமான ஒரு முடிவாக அமையவேண்டுமென்று, தேவனை அறிந்த நாமெல்லோரும் ஓன்று சேர்ந்து மன்றாடுவோமாக!
-- Edited by SUNDAR on Friday 19th of August 2011 02:57:53 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)