முன்னால்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாழியாக தீர்க்கபட்டு கருணை மனு தள்ளுபடி செய்யபட்டு தூக்கு தண்டனை உருதியாக்கபட்டு செப்டம்பர் 9 ல் தூக்கு நிறைவேற்றப்பட இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூவரின் நிலையை குறித்து அதிக பாரம் அடைந்த நான் அவர்களுக்காக ஆண்டவரிடம் மற்றாடினேன்.
ஆண்டவரே எங்களுக்கு யார் குற்றவாளி யார் நல்லவர் என்பது தெரியாது! ஆகினும் எங்கள் நாட்களில் எம்போன்ற மனுஷர்கள் மூவர் அதிலும் எங்கள்இனத்ததை சேர்ந்தவர்கள் தூக்கிலிடப்படுவதை எங்களால் ஏற்க்க முடியவில்லை. அவர்கள் மீது சாட்டபட்ட குற்றம் முழுமையாக நிரூபிக்க்பட்டாத நிலையில் தேவனே நீர் ஒருவரே யார் உண்மை குற்றவாளி என்பதை அறிவீர். அப்படியே அவர்கள் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க உமக்கு அதிகாரம் உண்டு. உலகில் பாவம் குற்றம் செய்யாத நல்லவன் ஒருவனும் இல்லையே! எனவே ஆண்டவரே உம்முடை எல்லா அற்ப்புத செயல்களின்படி நீதிமானை தண்டனக்குட்படுத்தாதேயும் அவர்கள் மரணத்துக்கு பாத்திரவானாக இராமல் இருந்தால் அவர்களை விடுவியும் என்று பாரத்தோடு ஜெபித்தேன்.
இன்றைய செய்தியில் அவர்களின் தூக்குக்கு இடைக்கால தடை விதிக்கப்ட்திருப்பத்தை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு என் ஆண்டவருக்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன்.
என்று வேத வசனம் சொல்வதால், நம்மால் செய்யமுடிந்த காரியம் ஆண்டவரிடம் இரக்கம் வேண்டி மற்றாடுவது மட்டுமே! அவர் நம்முடய விண்ணப்பத்துக்கு எப்பொழுதும் செவிசாப்பார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனவே ஆண்டவர் தாமே இன்னும் இந்த காரியத்தில் இடைபட்டு, அவர்கள் அனுபவித்த இந்த 20௦ ஆண்டு சிறைத்தண்டனையே முடிவான தண்டனையாக தீர்க்கப்படு அவர்கள் விடுவிக்கப்பட நாம் ஆண்டவரிடத்தில் நம்முடய விண்ணப்பங்கள் ஏறெடுப்போம். கர்த்தர் தம்முடைய பார்வைக்கு நலமாதனை செய்யட்டும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)