ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'. - (யோவான் 15:4-5).
ஒரு மனுஷன் தன் திராட்சை தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டான். அவன் வந்து அதில் கனியை தேடின போது ஒன்றும் காணவில்லை. மூன்று வருடமாய் கனிகொடாமல், நிலத்தையும் கெடுத்து கொண்டிருக்கும் அம்மரத்தை வெட்டி எறியும்படி தோட்டக்காரனிடம் கட்டளையிடுகிறான். தோட்டக்காரனோ அம்மரத்திற்காக பரிந்து பேசுகிறான். இந்த வருஷம் இருக்கட்டும். அதை சுற்றி கொத்தி, எரு போடுகிறேன். கனி கொடுத்தால் பார்ப்போம் இல்லாவிட்டால் வெட்டி விடலாம்' என்றான். (லூக்கா 13:6-9). இது இயேசுகிறிஸ்து சொன்ன ஒரு உவமையாகும். இந்த வசனத்தை வைத்து அநேகர் அநேகவிதமாக பிரசங்கித்து இருக்கலாம். நாம் அதை வேறு விதமாக பார்க்க போகிறோம்.
முதலில் அத்திமரத்தின் குணநலன்களை பார்ப்போம்:
1. இனிய பழங்களை கொடுக்கும் - (லூக்கா 13:7) 2. புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் - (2 இராஜாக்கள் 20:7) 3. நல்ல நிழல் கொடுக்கும் - (மீகா 4:4)
பொதுவாக திராட்சை தோட்டத்தில் அத்தி மரத்தை நட அவசியமே இல்லை. ஏனென்றால் அதற்கு வெயில் தான் வேண்டுமேயன்றி நிழல் தேவையில்லை. பின் ஏன் ஒரு அத்திமரத்தை அங்கு நாட்டினார்? ஒருவேளை தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அதன் நிழலில் ஓய்வெடுப்பதற்காக நட்டியிருக்கலாம். பணியாளர்களும் அங்கு உணவருந்திவிட்டு களைப்பை போக்கியிருக்கலாம். இருப்பினும் எஜமான் மூன்று வருடமாக அதன் கனியற்ற தன்மையை கவனித்து வருகிறார். அது அவருக்கு மனவருத்தத்தை தந்தது. அவ்வத்திமரம் ஐம்பது சதவிகிதம் வேலையை மிக சரியாக செய்தது. அதாவது நிழலை கொடுத்து, தான் இருந்த இடத்தில் தன் பணியை செய்து கொண்டிருந்தது, இளைப்பாற வந்த அனைவருக்கும் அது ஆதரவளித்தது. ஆனால் அது தனது மீதி 50 சதவிகித வேலையான கனி கொடுப்பதை செய்யவில்லை. எஜமான் அதின் கனியை எதிர்ப்பார்த்தது சாப்பிட மட்டுமல்ல, எசேக்கியா போன்ற புற்று நோயாளிகளுக்கு மருந்தாக போட தேடியிருக்கலாம். எஜமானின் விருப்பம் அது, மற்றவர்கள்pன் காயத்தையும் கட்டவும் பயன்பட வேண்டும் என்பதே. ஆனால் அவ்வத்திமரமோ எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை, கனியை கொடுக்கவில்லை.
இன்றைக்கு நம்மில் அநேகரும் கூட நாமுண்டு, நம் வேலையுண்டு என்றும், நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்வதில்லை என்ற சுய திருப்தியோடு ஐம்பது சதவிகிதம் வேலையை மாத்திரமே நிறைவேற்றினவர்களாக காணப்படுகிறோம். ஆனால் அந்நிலை தொடருமானால் எஜமானாகிய கர்த்தர் நம்மை வெட்டிப்போடு என்பார். அப்படியென்றால் மீதி 50 சதவிகிதம் நாம் என்ன செய்ய வேண்டும்? கனி கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் கனி பிறரது ஆத்துமாவையும் சரீரத்தையும் உயிர்ப்பிக்க வேண்டும். நமது உதடுகளின் கனி மன பாரத்தோடிருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்தாக அமைய வேண்டும். நம்மை சுற்றியுள்ள ஜனங்களுக்கு நாம் கர்த்தரை பற்றி சொல்ல வேண்டும். தேவன் நமது 50 சதவிகித செயலில் திருப்தி அடைகிறவரல்ல. அவர் எதிர்ப்பார்ப்பது நூறு சதவிகிதத்தையே!
கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்காவிட்டால், கனி நம்மிடம் இருக்காது. அந்த அத்திமரத்தை போல கனியற்ற வாழ்க்கையைதான் நாம் வாழ்வோம். எஜமான் விரும்பும் கனி நம்மில் காணப்படாவிட்டால் எத்தனை பரிதாபம்? அது வெட்டி போடப்படுமே! அப்படி இல்லாதபடி கனியுள்ள ஜீவியத்தை செய்ய தேவன்தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
இந்த மரம் இந்த வருடம் இருக்கட்டும் இந்த மரம் இந்த வருடம் இருக்கட்டும் கனி கொடுத்தால் சரி கொடாவிட்டால் தறி