எதற்காக இந்தகனியை தேவன் படைக்க வேண்டும் அவரே படைத்து
விட்டு ஏன் அதை புசிக்க வேண்டாம் என்று கட்டளை
இடவேண்டும்.
தேவன் படைத்து அதை குறித்து சொன்னதினால் தானே
ஆதாம் அதை புசித்து பாவதிற்குள்ளானான்-?
தேவன் அதை படைகாதிருந்தாரானால் இந்த நிலைமை
உண்டாகியிருகாதே...
இதற்கு யார் காரணம்....?
சகோ. எட்வின் அவர்களே என்ன இது திருமணமானவுடன் உங்களுக்கு வந்த முதல் சந்தேகம் இதுதானா? இது சம்பந்தமாக சரியாக பதில் சொல்லமுடியாத பல கேள்விகள் எனக்கும் இருக்கிறது, உண்மை கிறிஸ்த்தவரான உங்களிடம் அதை உங்களிடம் கேட்டு தெளிவுபெறலாம் என்று நான் எண்ணிக்கொண்டு இருந்தால், நீங்களே இவ்வாறு இங்குவந்து கேள்விகேட்டால் எப்படி
இக்கருத்தோடு சம்பந்தமுள்ளஒரு சம்பாஷனை அதாவது ஒரு
இந்து நண்பருக்கு ஆண்டவராகி இயேசுவையும் அவரது
தியாக பலியையும் அதனால் கிடைக்கும் ஆத்ம இரட்சிப்பையும் எடுத்து சொல்லும்போது நடந்ததை இங்கு பதிவிடுகிறேன்:
நான் இந்து நண்பரிடம்:
நண்பரே நீங்கள் ஆண்டவராகிய இயேசுவை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்பொழுது உங்கள் பாவங்கள் நீக்கப்பட்டு நீங்கள் பரலோகத்தில் பிரவேசிக்கும் தகுதியை பெறுவீர்கள். இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் தன்னுடய ஜீவனையே கொடுத்திருக்கிறார்.
நண்பர் குறுக்கிட்டு: அவர் ஏன் நம்முடய பாவங்களுக்காக ஜீவனை கொடுக்கவேண்டும்?
நான் : மனுஷர்கள் பிறக்கும்போதே பாவத்தில் பிறக்கிறார்கள். அதாவது ஆதாமும் ஏவாளும் புசிக்க கூடாது
என்று தேவனால் விலக்கபட்ட கனியை புசித்ததால் பாவம் செய்தார்கள் அதன் பின்னரே அவர்கள் கண்கள் திறக்கபட்டு
ஆண்/பெண் என்ற வேறுபாடு தெரிந்து பின்னர் சந்ததியை உருவாக்கினர். இவ்வாறு மீறுதலால் உண்டான சந்ததி எல்லோருக்குள்ளும் அந்த ஜென்ம பாவம் கருவிலேயே உருவாகிவிடுகிறது. அந்த பாவத்தை போக்கவே இயேசு சிலுவையில் பலியானார்.
நண்பர் : என்ன நண்பரே இந்த கதையில் எதாவது லாஜிக்
இருக்கிறதா? ஆதாம் ஏவாளை படைத்த இறைவன் அவர்கள்
இருந்த இடத்தில் புசிக்க கூடாத கனியையும் படைத்து வைததது ஏனோ?
நான் : மனுஷன் தன்னுடைய சொல்படி கேட்டு நடக்கிறானா என்பதை அறிந்து கொண்டு ஒருவேளை அவன் கீழ்படிந்து நடந்தால் அவனுக்கு நித்திய மகிழ்ச்சியான வாழ்வை அளிக்கவே அவ்வாறு செய்தார். மனுஷனோ கீழ்படியாமல் அனைத்தையும் இழந்துபோனான்.
நண்பர் : இந்த கருத்தில் பல கேள்விகள் எனக்கு உண்டு
நண்பரே.
1. நன்மை தீமை என்னவென்றே தெரியாத ஒரு குழந்தை நிலையில் இருந்த ஆதாம் ஏவாளிடம் ஒரு கனியை சுட்டி காட்டி அதை புசிக்காதே என்று சொல்வதில் எவ்விதத்திலும்
நியாயம் இருப்பதுபோல் தெரியவில்லை.
2. எந்த மனுஷனாவது ஒரு பிள்ளையை பெற்று அந்த பிள்ளை நன்மை தீமையை அறியாதிருக்கும்போது அதை ஒரு தீயவனை வைத்து சோத்தித்து, அது தோற்றுபோனவுடன் "நீ பாவம் செய்துவிட்டாய் எனவே உனக்கு மரணம் நிச்சயம்" என்று கூறுவானா? எந்த ஒரு சாதாரண மனுஷன்கூட இதை செய்ய விரும்பாதபோது கடவுள் அப்படி செய்வாரா?
3. கடவுள் ஆதாமை பார்த்து கனியை புசிக்கவேண்டாம் என்றுதான் சொன்னாரேயன்றி அந்த கனியின் மூலம் அவனை சோதித்த்தார் என்ற வார்த்தை பைபிளில் இருக்கிறதா? நீங்களாக "கடவுள் ஆதாமை சோதித்தார்" என்று எப்படி சொல்கிறீர்கள்?
4. அப்படியே ஒருவேளை ஆதாம் கனியை புசித்து பாவம் செய்திருந்தாலும் அப்பொழுதே அவனை அங்கேயே கொன்று
கதையை முடித்து, வேறு ஒரு ஜோடியை படைத்திருந்தால்
இன்று இத்தனை அநியாயம் அக்கிரமம் பெருகியிருக்குமா? இனத்தை கோடி ஜனங்கள் மற்றும் உயிரினங்கள் பிறந்து பிறந்து துள்ள துடிக்க சாகும் நிலை உருவாகியிருக்குமா அப்படியெனில் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்
கடவுள்தானா?
5. எனது வீட்டில் இருக்கும் துன்பத்தினிமித்தமும் பிரச்சனை களிநிமித்தமும் அதை சமாளிக்க முடியாமல் நான் செத்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். அவ்வளவு பிரச்சனைகளை அனுபவித்து துன்பப்படும் என்னை என்னுடய அனுமதியில்லாமல் என்னை கேட்காமல் இந்த பூமியில் படைத்ததே தவறு இவ்வாறிருக்கையில் நான் பாவம் செய்தால் எனக்கு தண்டனை கொடுப்பது எல்லாம்
ஒரு நியாயமான செயலா? அப்படி ஒரு நியாயமற்ற காரியத்தை கடவுள் செய்வாரா?
6. தான் படைத்த மனுஷன் தான் விலக்கிய கனியை சாப்பிடுவானா மாட்டானா என்பது அனைத்தும் அறிந்த கடவுளுக்கு முன்னமே தெரியாதா என்ன?
7. சாத்தானின் ஏமாற்று வார்த்தையில் மயங்கி ஏவாள் கனியை புசிக்க துணியும்போது கடவுள் வந்து தடுக்கவும்
இல்லை குறைந்த பட்சம் ஒரு எச்சரிப்புகூட செய்யவில்லையே ஏன்? (நாம் நம்முடய பிள்ளை ஓன்று
தெரியாமல் சாவை உண்டாக்கும் விஷத்தை குடிக்கபோனால் தடுப்போமா இல்லையா?)
8. கடைசியாக மனுஷன் தானாக போய் அந்த விலக்கபட்ட கனியை புசிக்கவில்லையே. பிசாசு என்னும் ஒருவனின்
தூண்டுதலில் பேரில்தானே அந்த கனியை போய் புசித்தான்.
அந்த பிசாசை இறைவன் ஏன் அந்த இடத்துக்குள் வர அனுமதித்தார்? அந்த பிசாசு யார்?
நான் : பிசாசு என்பவன் இறைவனுடன் பிரதான தூதன்
நிலையில் மகிமையாக இருந்தவன். அவன் தேவனுக்கு ஒப்பாகவேண்டும் என்றும் தேவனுடைய சிகாசனத்துக்கு மேலாக தான் சிங்காசனத்தை உயர்த்தவேண்டும் என்று மனதில் எண்ணியதாலும் தேவனால் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு பூமியில் விழுந்தவன். அவன்தான் அந்த தோட்டத்தில் இருந்து ஆதாம் ஏவாளை கனியை புசிக்கும்படி தூண்டினான்.
நண்பர்: அப்படியெனில் கடவுள், ஆகாதவனாகி தள்ளபட்ட போன தன்னுடய தூதனை வைத்தே ஆதாம் ஏவாளை சோதித்தாரா? அல்லது ஆதாமை சோதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தூதனை சாத்தானாக்கி தள்ளினாரா?
நான் : தள்ளபட்டுபோன தூதனை இறைவன் தன்னுடய காரியத்தை நிறைவேற்ற பயன்படுத்திகொண்டார்
என்று கருதுகிறேன்.
நண்பர்: ஒருவேளை அப்படி தள்ளப்படாமல் போனால் அல்லது ஒரு சாத்தான் உருவாகாமல் இருந்திருந்தால் தான் படைத்த மனுஷனை சோதிப்பதற்கு கடவுளே ஒரு சாத்தானை படைத்திருப்பாரா?
நான் : இருக்கலாம்
நண்பர்: என்ன பிதற்றல் இது? உங்களுக்கு சரியாக விபரம்தெரியவில்லை, நீங்கள் தப்பு தப்பாக பதில் சொல்கிறீர்கள். நல்ல விபரம் தெரிந்த கிறிஸ்த்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவர்களுடன் நான் பேசவேண்டும்.
விபரம் தெரிந்த வேதபாடம் படித்துள்ள கிறிஸ்த்தவ சகோதரர்கள் கொஞ்சம் விளக்கமாக பதில் தந்தால்
இதுபோன்ற கேள்வி கேட்கும் இந்து நண்பர்களுக்கு உண்மையை எடுத்துசொல்ல வசதியாக இருக்கும்
இந்த திரியில் பலருக்கு சந்தேகத்தை உண்டாக்கும் பல கேள்விகள் கேட்கபட்டுள்ளன. இந்த கேள்விகள் கிறிஸ்த்துமேல் விசுவாசமாயிருக்கும் யாரையும் இடரபண்ணும் நோக்கத்தில் கேட்கபட்டவைஅல்ல என்றே கர்த்தருக்குள் நான் நிச்சயிக்கிறேன். கிறிஸ்த்துவை விசுவாசிப்பதே தேவனை கிட்டிசேரும் ஒரே வழி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை
இங்கு நான் திட்டமாக தெரிவித்துகொள்வது என்னவெனில்
"ஆண்டவராகிய இயேசு நம்முடய பாவங்களுக்காக மரித்தார்" என்ற அடிப்படை கருத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
I பேதுரு 2:24நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்
I யோவான் 2:2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
என்று வசனம் சொல்லும் இந்த உண்மைகள் எல்லாம் கிறிஸ்த்தவத்தின் அடிப்படை உண்மைகள். அதை யாரும் மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது.
ஆனால் அவர் ஏன் மரித்தார் அல்லது ஏன் அவர் மரிக்கவேண்டிய நிர்பந்தம் உண்டானது, அல்லது ஏசாயாவில் சொல்வதுபோல் கர்த்தராகிய தேவன் இயேசுவை மரணத்துக்கு ஒப்புகொடுத்து மனுஷர்களை மீட்கவேண்டிய நிலை ஏன் உண்டானது என்ற உண்மையை சரியாக அறிந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கேள்விகள் இங்கே கேட்கபட்டுள்ளன என்றே நான் கருதுகிறேன்.
சகோதரர்கள் தாங்கள் அறிந்துள்ள அல்லது தாங்கள் விசுவாசிக்கும் கருத்துக்கள ஜெபத்துடன் பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Stephen wrote:ஆதாம் பாவம் செய்ததற்கு யார் காரணம்....?
ஆதாம் பாவம் செய்ததற்கு ஆதாமே காரணம்.தேவனின்மேல் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ஒரவேளை தேவன் ஆதாமிடத்தில் அந்த கனியை குறித்து ஏதும் சொல்லாமலிருந்து ஆதாம் அதை புசித்து இருந்தால் அதற்கு ஒரவேளை தேவன் பொறுப்பாகமுடியும்.
சகோ. ஸ்டீபன் அவர்களே "தேவன் நீதிபரர் என்றும் அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஏதாவது ஒரு சரியான காரணம் இருக்கும்" என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. தாங்கள் குறிப்பிட்டதுபோல ஆதாம் பற்றிய இந்த காரியத்தில் "தவறு செய்தது முழுக்க முழுக்க ஆதாம்தான்" என்பது ஒரு சரியான கருத்தே. ஆகினும் நான் இங்கு ஒரு உதாரணத்தை இங்கு கூறுகிறேன்.
ஒருநாள் எங்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லோரும் வெளியில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டு விட்டது. எனது 9 வயது சிறியமகன் பள்ளியில் இருந்து வந்தவன் வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டைதிறந்து, கேஸ் லைட்டர் இருக்கும் இடம் தெரியாததால் தீப்பெட்டியை எடுத்து கேஸ்ஸ்டவ்வை பற்றவைத்து பாலை சுடவைத்து காப்பி போட்டு குடித்திருக்கிறான்.
வீட்டுக்கு வந்த நாங்கள் இந்த காரியத்தை அறிந்து மிகவும் கலங்கிவிட்டோம். கேஸ் ஸ்டவ் பக்கமே வரக்கூடாது என்று அவனை பலமுறை நாங்கள் எச்சரித்திருக்கிறோம் ஆகினும் அந்த எச்சரிப்பிலுள்ள விபரீதத்தை அவனுக்கிருந்த அறிவால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது அவனுக்கு மரணத்தை பற்றி சரியாக தெரியாது! கேஸினால் நடக்கும் விபத்துக்கள் தெரியாது. இந்த சம்பவத்தில் ஒருவேளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தால், 9 வயது பையன்தான் இந்த தவறை செய்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதால் ஏற்ப்பட்ட விளைவுகளின் மொத்த பொறுப்பையும் முழுக்க முழுக்க அவன் மேல் சுமத்திவிட முடியாது. அந்த பையனுக்கு இதுபோன்ற சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்த பெரியவர்களையும் நாலுபேர்கள் நிச்சயம் தூஷிப்பார்கள் அல்லவா? பாதிப்பு நமது குடும்பத்துக்கு என்றால் இத்தோடு முடிந்துவிடும். ஆனால் இதுபோன்ற செய்கையால் பாதிப்பு வேறுபல குடும்பத்துக்கும் ஏற்ப்பட்டால் நமது நிலைமை மிகவும் விபரீதம் ஆகிவிடுமே.
சாதாரண மனிதர்களாகிய நாம் இவ்வித அஜாக்கிரதை மூலம் தவறு செய்ய நேரிடலாம், அதனிமித்தம் நாலுபேர் நம்மை தூஷிக்கலாம். ஆனால் தேவன் அப்படி பட்டவர் அல்லவே. தான் செய்யும் செய்கை எல்லாவற்றிலும் நீதியுள்ளவரும் எதையும தவறி செய்பவர் அல்ல! தான் செய்யும் காரியங்கள் எல்லாவற்றின் பின்
விளைவுகளையும அறிந்தவர் அல்லவா?
இந்நிலையில், ஆதாமை நன்மை தீமை அறியாத ஒரு குழந்தை நிலையில் படைத்து, அதே இடத்தில் நன்மை தீமை அறியத்தக்க கனியையும் படைத்து அங்கேயே அந்த விலக்கபட்ட கனியை புசிப்பதற்கு என்கரேஜ் செய்யும் ஒரு சேல்ஸ்மேன் போன்ற சாத்தானையும் அந்த இடத்தில் அனுமதித்து ஒரு நியாயமான செயல்போல் தங்களுக்கு தெரிகிறதா? தற்காலத்தில் அதிகம் படித்த அறிவாளி பெண்களே அழகாக பேசும் விற்பனை பிரதிநிதிகளின் வார்த்தைகளில் மயங்கி பணத்தை பறிகொடுக்கும் போது, நன்மை தீமை அறியாத அந்த ஏவாள் தந்திரக்காரனாகிய சாத்தானின் பேச்சில் மயங்கியதிலும், தன்னுடைய எலும்பாலேயே உருவாக்கப்பட்ட ஏவாளின் இச்சையடன் கூடிய பேச்சில், ஆதாம் மயங்கி அந்த கனியை தானும் உண்டதிலும் வியப்பொன்றும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ஆதியாகமம் 2:25ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
வார்த்தையை வாசிக்கும்போதே அவர்களின் ஒன்றுமறியாதநிலை தெரிகிற தல்லவா சற்றேறக்குறைய மிருங்கங்களின் நிலைக்கொத்த நிலையே ஆதாம் ஏவாளின் நிலை என்பதைய அறிய முடிகிறது.
அதிலும் முக்கியமாக உலகில் நடக்கும் எந்தஒரு காரியமும் தேவனுக்கு மறைவாக நடக்க வாய்ப்பில்லை!
எரேமியா 16:17என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை
என்று ஆண்டவர் சொல்லும் நிலையில், சர்ப்பம் ஏவாளை எமாற்றும்போதும் ஏவாள் அவன் வார்த்தையில் மயங்கி கனியை புசிக்கும் போதும் அந்த கனியை ஆதாமிடம் கொண்டுவது புசிக்க கொடுக்கும்போதும் நடந்த அனைத்து சம்பவங்களும் தேவனுக்கு முன்னால் நிச்சயம் வீடியோ கான்பர்ன்ஸ் போல ஓடியிருக்கும். ஆனால் அந்த செயலின் பின்னாலிருக்கும் விபரீதமாகிய மரணம் மற்றும் துன்பங்கள் வேதனைகள் கவலைகள் கண்ணீர்கள் அத்தோடு குழந்தைகள் பெரியவர்களுமாக பூர்வ உலகமே கூண்டோடு நீரினால் அழிந்துபோதல், மரணத்துக்க பின்னர் நரகம், போன்ற அத்தனை விபரீதங்களையும் அறிந்த ஒரே சர்வ வல்ல்வவராகிய தேவன், அதை தடுக்கவோ அல்லது சம்பவம் நடக்கும் ஸ்பாடுக்கு சென்று இன்னொரு எச்சரிக்கை கொடுக்கவோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருவரும் கனியை புசித்த பிறகு ஒன்றுமே தெரியாதவர் போல வந்து "ஆதாமே நீஎங்கே இருக்கிறாய்" என்று கேட்கிறார்.
"தேவன் மனுஷர்களை சோதித்து அறிகிறார்" என்பது உண்மையாக இருந்தாலும் இங்கு தேவன் ஆதாமை சோதித்ததாக எந்த ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால கர்த்தரால் தெரிந்து கொள்ளபட்ட முதல் மனிதனாகிய ஆபிரகாமை கர்த்தர் சோதித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆபிரஹாமை சோதித்த கர்த்தர் அவன் செயல்களை முற்றிலும் கண்காணித்ததோடு, அவன் பிள்ளையை பலியிடப்போகும் சரியான நேரத்தில் குறுக்கிட்டு அவனை தடுத்து பாதுகாத்தார். ஆனால் ஆதாம் ஏவாளின் விஷயத்திலோ அவர் அனைத்து அறிந்திருந்தும் அவன் கனியை புசிக்கபோகும் நேரத்தில் ஒரு எச்சரிப்பும் கொடுத்து தடுக்கவரவில்லை.
நடந்த இந்த காரியங்களை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இந்த காரியங்கள் அனைத்தும் சாத்தானின் தலையை நசுக்க தேவனால் திட்ட மிட்டு செய்யப்பட்ட ஒருசெயல் என்பதை நாம் சுலபமாக புரியமுடியும். ஆனால் அதே நேரத்தில் மீறுதல் என்பது எந்த ரூபத்தில் இருந்தாலும் அதற்க்கு தண்டனை உண்டு என்பதையும் அறியமுடியும்!
இந்த காரியத்தில் ஆதாமின் மீறுதல் சம்பந்தபட்டிருந்தாலும், அதுவும் தேவ திட்டத்தின் நிறைவேறுதல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் ஆண்டவராகிய இயேசுவை பற்றி வேதம் குறிப்பிடும் வேறொரு வசனத்தையும் நாம் ஆராயும் போது"அவர் உலக தோற்றமுதல் அடிக்கபட்ட ஆட்டுக்குட்டி என்றும், உலக தோன்றத்துக்கு முன்னரே கிறிஸ்த்துவுக்குள் (அதாவது கிறிஸ்துவின் பலிக்குள் தான்) தேவன் நம்மை தெரிந்துகொண்டார்" என்றும் வசனம் சொல்கிறது. எனவே இயேசுவின் பலி என்பது உலக தோன்றமுதலே தீர்மானிக்கபட்டது.
சுருங்க சொல்லின்:
சாத்தானின் தலையை நசுக்கவும் அத்தோடு கூடிய அசுத்த ஆவிகள் கூட்டம் என்னும் இடறல் உண்டாக்கும் அனைத்தையும், பாதாளம் என்னும் ஒரு படு குழியில் தள்ளி நித்தியமாக நியாயதீர்த்து அடைப்பதற்கு தேவன் வைத்த தூண்டிலில் இரையாக மாட்டபட்ட சிறிய மீனே ஆதாம் என்னும் மனுஷனும்
அவனை தொடர்ந்த சந்ததியும்.
ஆகினும் நியாயமில்லாமல் இந்த மாம்சமான மனுஷர்களை படைத்து அவர்களை சோதனைக்குள்ளும் வேதனைக்குள்ளும் தேவன் தள்ளவில்லை. ஒவ்வொரு
மனுஷனும் கட்டாயமாக மாம்சமாக வேண்டும் பின்னர் மரிக்க வேண்டும் பின்னர் நியாயதீர்ப்படைய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் இருந்ததால் அதையே தேவன் தனக்கு சாதகமாக தன் திட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்தி கொண்டார்.(அந்த நிர்பந்தம் எவ்வாறு உண்டானது என்பது குறித்த விளக்கத்தை கர்த்தருக்கு சித்தமானால் வேறொரு திரியில் தருகிறேன்)
இதில் தேவன் எங்கும் எதிலும் சிறிதேனும் அநீதியை யாருக்கும் இழைக்க வில்லை! அவர் தன் செயலில் எல்லாம் உண்மையும் செம்மையுமானவர்! அவர் செய்யும் ஒவ்வொரு செயலின் அடிப்படைநோக்கமும் எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதேயன்றி வேறல்ல!
-- Edited by SUNDAR on Friday 9th of September 2011 11:39:02 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னக்கு தெரிந்த கருத்துகளை நான் சொல்லிருகிரியன் தவறு இருந்தால் மனிதிவிடுகள்
ஸ்டீபன் அவர்களே நீங்கள் சொல்ல்வது சரியாக இருந்தாலும் கர்த்தர் தன் வாயின் வார்த்தைகளினால் எல்லதியம் இரண்டாக தன் படைத்தார் சூரியன்,சந்திரன் இரவு,பகல் வனம்,பூமி அது போலத்தான் நன்மை தீமை என்று படைத்தார்.
1 ஒரு மனிதனுக்கு சந்தோஷம் மட்டும் இருக்காது துக்கமும் இருக்கும்.
2 அது போலத்தான் நன்மை தீமை அறியத்தக்க கனியை படைத்தார் அனால் தேவன் தமது சாயலாக ஆதாமை படைத்தார் தேவன் ஆதமிடம் இந்த கனியை புசிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார் அனால் ஆதம் தேவனுடிய வார்த்தைக்கு கில்படியவில்லை ஏவல் உடைய வர்த்திக்கு கில்ப்டிந்தன்
இதனால் பாவம் உண்டாயிற்று ஆதி முதல் முடிவு வரை பாவம் இறந்து கொண்டுதான் இருக்கிறது
//////////////////////////////////////////நடந்த இந்த காரியங்களை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இந்த காரியங்கள் அனைத்தும் சாத்தானின் தலையை நசுக்க தேவனால் திட்ட மிட்டு செய்யப்பட்ட ஒருசெயல் என்பதை நாம் சுலபமாக புரியமுடியும். ஆனால் அதே நேரத்தில் மீறுதல் என்பது எந்த ரூபத்தில் இருந்தாலும் அதற்க்கு தண்டனை உண்டு என்பதையும் அறியமுடியும்!
இந்த காரியத்தில் ஆதாமின் மீறுதல் சம்பந்தபட்டிருந்தாலும், அதுவும் தேவ திட்டத்தின் நிறைவேறுதல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் ஆண்டவராகிய இயேசுவை பற்றி வேதம் குறிப்பிடும் வேறொரு வசனத்தையும் நாம் ஆராயும் போது"அவர் உலக தோற்றமுதல் அடிக்கபட்ட ஆட்டுக்குட்டி என்றும், உலக தோன்றத்துக்கு முன்னரே கிறிஸ்த்துவுக்குள் (அதாவது கிறிஸ்துவின் பலிக்குள்தான்) தேவன் நம்மை தெரிந்துகொண்டார்" என்றும் வசனம் சொல்கிறது. எனவே இயேசுவின் பலி என்பது உலக தோன்றமுதலே தீர்மானிக்கபட்டது.
சுருங்க சொல்லின்:
சாத்தானின் தலையை நசுக்கவும் அத்தோடு கூடிய அசுத்த ஆவிகள் கூட்டம் என்னும் இடறல் உண்டாக்கும் அனைத்தையும், பாதாளம் என்னும் ஒரு படு குழியில் தள்ளி நித்தியமாக நியாயதீர்த்து அடைப்பதற்கு தேவன் வைத்த தூண்டிலில் இரையாக மாட்டபட்ட சிறிய மீனே ஆதாம் என்னும் மனுஷனும்
அவனை தொடர்ந்த சந்ததியும். ///////////////////////////////////////////////////
இயேசுவின் பலி உலகம் தோன்ற முதல் நியமிக்கப்பட்டது என்று எப்படி கூற முடியும்.. விளக்கவும்
மேலும் சாத்தனாகிய லூசிபர் இந்த உலகத்தை படைக்க முன்னமே விழுந்து போனானா?
ஆதாம் விழுந்து போனது தேவனுடைய திட்டமாய் எப்படி அமைய முடியும்?
தீமையை தேவன் நன்மைக்காக மாற்றி போட்டார் என்று குறிப்பிட முடியும். ஆனால் ஆதாமை பாவம் செய்ய வைத்தது தேவன் என்று எவ்வாறு கூற முடியும்..
தெளிவாக விளக்கவும்
-- Edited by Debora on Thursday 31st of May 2018 01:15:43 PM
///இயேசுவின் பலி உலகம் தோன்ற முதல் நியமிக்கப்பட்டது என்று எப்படி கூற முடியும்.. விளக்கவும் ///
I பேதுரு 1:19. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 20. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
வெளி 13:8உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
New International Version All inhabitants of the earth will worship the beast--all whose names have not been written in the Lamb's book of life, the Lamb who was slain from the creation of the world.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//மேலும் சாத்தனாகிய லூசிபர் இந்த உலகத்தை படைக்க முன்னமே விழுந்து போனானா?///
ஆதாம் ஏவாள் படைக்கப்படும் முன்னரே வீழ்ந்து போனான்.
மற்றபடி இந்த உலகம் என்பது நம் சாதாரண கண்களுக்கு தெரிவதுபோல் ஒரே ஒரு உலகம் அல்ல. அது மொத்தம் மூன்று பகுதிகளின் தொகுப்பாக இருக்கிறது அதில் ஒரு பகுதி லெமூரியா கண்டமாக இருந்து அநேக பகுதி கடலுக்குள் மூழ்கி போனது. அந்த பகுதி இருக்கும்போதுதான் அவன் வீழ்ந்தான்.
.
ஆதாம் ஏவாள் படைக்கபட்டபோது தேவன் கனியை புசிக்காதே என்று சொல்வதால் தீமை என்பது அதற்க்கு முன்னரே அங்கு இருக்கிறது என்றுதானே பொருள். அதற்க்கு முன் வீழ்ந்தவன்தான் ஆதாம் ஏவாளையம் விழவைத்து உலகத்தின் அதிபதியானான்.
///ஆதாம் விழுந்து போனது தேவனுடைய திட்டமாய் எப்படி அமைய முடியும்?///
ஆதாம் வீழ்ந்து போகாமல் இருந்தாலும் அதிலும் ஒரு திடடம் தேவனுக்கு இருந்தத்த்து.
ஆதாம் வீழ்ந்து போனாலும் அதிலும் ஒரு திடடம் தேவனுக்கு இருந்தது.
///தீமையை தேவன் நன்மைக்காக மாற்றி போட்டார் என்று குறிப்பிட முடியும். ஆனால் ஆதாமை பாவம் செய்ய வைத்தது தேவன் என்று எவ்வாறு கூற முடியும்.///
இயேசுவை ஒருவன் காட்டிக்கொடுக்க வேண்டும் என்பது தேவனால் எப்படி தீர்மானிக்கப்படடதோ அதேபோல் சில நன்மைகள் நடப்பதற்காக சிலர் பலியாக வேண்டியது தேவ நியமனமாக இருக்கிறது.
யாரையும் தேவன் பாவம் செய்ய வைப்பது இல்லை. மனுஷன் செய்யும் பாவத்துக்கு அவனே பொறுப்பு. ஆனால் தேவ திடடம் என்பது முழுமையானது ஒருவன் தவறிவிட்ட்ன என்பதற்காக அவனை அப்படியே விட்டுவிடாமல் அதற்கும் ஒரு திடடம் தேவனிடம் இருக்கும். ஒரு வேளை தேவன் எதிர்பார்ப்பதை ஒருவர் செய்யாமல் தவறிவிடடாலும் அதற்கும் ஒரு திடடம் தேவன் வசம் இருக்கும்.
எங்கள் வீட்டில் ஒரு கிணறு தோண்டினோம் அதில் தண்ணீர் இல்லாமல் போகவே அதை அப்படியே செப்டிக் டேங்க் ஆக மாற்றிவிட்டொம்.
எங்கள் நோக்கம் செப்டிக் டேங்க் கட்டுவது அல்ல. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது நடக்காத பொது அதை வேறு ஒரு திடடத்துக்கு பயன்படுத்திவிட்டொம்.
அதேபோல்தான் தேவனின் செயல்பாடுகளும்.
ஆதாம் தவறிவிட்ட்தான் எனவே அவனை வைத்து அவன் சந்தையின் மூலமே சந்துருவை அழிக்க வழியை உண்டாக்கினார். அவன் தவறாமல் இருந்திருந்தால் அவனை அப்படியே ஏதெனில் வைத்துவிட்டு வேறு ஒரு வழியில் சந்துருவை அழிக்க திடடம் உருவாக்கியிருப்பார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியானால் சந்துருவை அழிக்க தேவன் வைத்த திட்டமே ஆதாம் ? அதாவது தேவ திட்டம் நிறைவேற தேவனே அவர்களை குறிக்க வில்லை ஆனால் அவர்களின் மீறுதலை பயன்படுத்தி தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்.
யூதாஸ் தன் இச்சையின் நிமித்தம் இயேசுவை காட்டிக்கொடுத்தான் ஆனால் அவன்தான் காட்டிக்கொடுக்க வேண்டும் என்பது தேவ திட்டம் அல்ல ஆனால் அவனின் பாவத்தின் நிமித்தம் தேவ திட்டம் அவன் மூலமாய் நிறைவேறியது ..
அப்படியானால் சந்துருவை அழிக்க தேவன் வைத்த திட்டமே ஆதாம் ? அதாவது தேவ திட்டம் நிறைவேற தேவனே அவர்களை குறிக்க வில்லை ஆனால் அவர்களின் மீறுதலை பயன்படுத்தி தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்.
யூதாஸ் தன் இச்சையின் நிமித்தம் இயேசுவை காட்டிக்கொடுத்தான் ஆனால் அவன்தான் காட்டிக்கொடுக்க வேண்டும் என்பது தேவ திட்டம் அல்ல ஆனால் அவனின் பாவத்தின் நிமித்தம் தேவ திட்டம் அவன் மூலமாய் நிறைவேறியது ..
இது சரியான புரிதலா?
சரிதான் சகோதரி!
மனுஷன் நித்திய நித்தியமாக எல்லாம் அனுபவித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் ஆதாம் ஏவாளை தேவன் படைத்தார்.
ஒருவேளை அவன் கனியை புசிக்காமல் இருந்திருந்தால் சந்துருவின் சோதனையில் ஜெயித்திருந்தால் அவனுக்கு சகலத்தையும் கொடுத்து நித்திய சந்தோஷமாக வைத்திருப்பார்.
ஆனால் அவன் பாவம் செய்து வீழ்ந்த போது, அவனை சந்துருவை அழிக்கும் தன திடடத்தை நிறைவேற்ற பயன்படுத்தி கொண்டார்.
எரேமியா 18:4குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உலகம் தோற்ற முதலே ஆண்டவராகிய இயேசுவின் மரணம் முன் குறிக்கபட்டிருக்குமாயின் மனுஷன் பாவம் செய்வான் என்பதை தேவன் அறிந்திருக்கிறார்.. அப்படியானால் மனுஷன் பாவம் செய்தாலும், அதட்காக பாவ நிவாரண பலியாக இயேசு மரித்தாலும் மட்டுமா சத்துருவை அழிக்க முடியும்?
///////////////////சுருங்க சொல்லின்: சாத்தானின் தலையை நசுக்கவும் அத்தோடு கூடிய அசுத்த ஆவிகள் கூட்டம் என்னும் இடறல் உண்டாக்கும் அனைத்தையும், பாதாளம் என்னும் ஒரு படு குழியில் தள்ளி நித்தியமாக நியாயதீர்த்து அடைப்பதற்கு தேவன் வைத்த தூண்டிலில் இரையாக மாட்டபட்ட சிறிய மீனே ஆதாம் என்னும் மனுஷனும் அவனை தொடர்ந்த சந்ததியும். ///////////////////////////////////////////////////