இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும் வழியில் மெலிந்த தேகம் உடம்பெல்லாம் அழுக்கு பரட்டை தலையோடு என்ன வயதென்றே மதிக்க முடியாத ஒரு புத்தி சுவாதீனம் இல்லாத பெண்மணி ரோட்டின் ஓரத்தில் அமர்ந்து ரொம்ப சீரியசாக மண்ணை தோண்டி தோண்டி பார்த்துகொண்டு இருந்தது.
அதன் தோற்றத்தை பார்க்கவே மிகவும் பரிதாபமாகவும் நெஞ்சை உருக்குவதாகவும் இருந்ததால் அதற்க்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் சென்று ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து அதன் கையில் கொடுத்தேன். ஆனால் அந்த பெண்மணியோ அதை வாங்க மறுத்துவிட்டது. அதை அழுக்கடைந்த கையில் பணத்தை வைத்து அழுத்தி ஏதாவது வாங்கி சாப்பிடுங்கள் என்று கட்டாயபடுத்தி சொல்லியும் அது பணத்தை ஏற்க்கவில்லை. வெறும் பேப்பராக இருக்கும் அந்த 100 ரூபாயின் மதிப்பு அதற்க்கு தெரியவில்லை போலும்.
ஆனால் எனக்கு அதை அப்படியே விட்டுபோக மனதில்லை. பக்கத்தில் ஏதாவது இட்லி கடை இருக்கும் என்று பார்தால் எதுவும் தென்படவில்லை. எனவே ஆண்டவரிடம் "ஆண்டவரே! ஏன் இதுபோன்றவர்களை நீர் இந்த உலகில் அனுமதித்திருக்கிரீர்? இவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் எப்பொழுது விடுதலை தரப்போகிறீர்? எனக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று ஆசை இருக்கிறது ஆனால என்னால் முடியவில்லை நான் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்களை எல்லாம் நார்மல் நிலைக்கு திருப்பும் சக்தியும் எனக்குஇல்லை. எனக்கு வேலைக்கு வேறு நேரமாகிவிட்டது. நீரே பார்த்துகொள்ளும் என்று ஆண்டவரிடம் சாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
அனால் ஆண்டவரோ அந்த பெண்ணினிமித்தம் இன்னும் அதிகமாக பரிதவிப்பதை என்னால் உணர முடிந்து கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. என்னால் நிம்மதியாக கடந்துபோக முடியவில்லை. சிறிது தூரம் வந்ததும் ஒரு இட்லிகடை தென்படவே இருபது ரூபாய்க்கு 5 இட்லியும் இரண்டு பக்கெட் தண்ணீரும் வாங்கி கொண்டு திருபவும் அந்த பெண்ணிடம் போய் கொடுத்தபோது மிகுந்த ஆவலோடு அந்த இட்லியையும் தண்ணீரையும் வாங்கிகொண்டு உடனே சாப்பிட ஆரம்பித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.
இதுபோல் புத்தி சரியில்லாமல் அலைந்த இன்னொரு மனிதனுக்கு நான்பணத்தை
கொடுத்தபோது அவர் வாங்கவில்லை உடனே பக்கத்தில் ஒரு கடையில் இட்லி வாங்கி கொடுத்தபோதும்கூட அதை வாங்க மறுத்துவிட்டதோடு என்னை பார்க்க கூட விரும்பாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு விட்டார். அந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையை தந்ததால், அழுகையோடு ஆண்டவரிடம் அதைக்குறித்து முறையிட்டு நீரே பார்த்துகொள்ளும் என்று ஒரே ஜெபம் செய்து விட்டு சென்றுவிட்டேன்.
ஆனால இந்த பெண்மணியோ நான் கொடுத்த உணவை ஆவலோடு வாங்கியது எனக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஆகினும் இந்த காலை நேரத்துக்கு நான் உணவு கொடுத்துவிட்டேன் ஆனால் மதியம் மற்றும் இரவு நேரத்துக்கும் அடுத்துவரும் நாட்களுக்கும் யார் இதற்க்கு உணவு கொடுப்பது? என்ற எண்ணம் என்னை வாட்டியது. ஆண்டவரே நீரே பார்த்துகொள்ளும் என்று கண்ணீரோடு மன்றாடி கடந்து வந்தேன்.
நீங்களும் இவ்வாறு செய்யுங்கள் என்று போதிப்பதற்கு நான் இங்கு எந்த வசன ஆதாரமும் தரப்போவது இல்லை. காரணம் நான் செய்த இந்த காரியம் எந்த வசனத்தின் அடிப்படையிலும் செய்யவில்லை. எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யவில்லை. ஆகினும் நான் இந்த காரியத்தை இங்கு எழுத காரணம் "கஷ்டபட்டு எழுந்துபோக முடியாமல், உண்ண உணவில்லாமல், குடிக்க தண்ணீரில்லாமல், கைகொடுக்க யாரும் இல்லாமல் ரோட்டோரம் கிடக்கும் ஒருவரை பார்க்கும்போது, சற்று தூரவிலகிப்போகும் அனேக உலக மனிதர்கள் நீங்களும் போகாதீர்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அட்லீஸ்ட் அவர்களுக்காக ஒருஜெபமாவது பண்ணுங்கள். எழுந்துபோக முடியாமல் இருக்கும் ஒரு முதிர் வயதானவருக்கு குடிக்க ஒருவாய் தண்ணீர் கொண்டு கொடுத்தாலும் அது தேவனின் பார்வையில் மிகப்பெரிய செயல் என்பதை தேவனே தெரிவித்துள்ளார்.
பலனை எதிர்பார்க்காமல் சோர்ந்துபோகாமல் நன்மையை செய்யும்படி உங்களை ஊக்குவிக்கவே இந்த காரியத்தை இங்கு பதிவிடுகிறேன்!
-- Edited by SUNDAR on Tuesday 13th of September 2011 03:08:41 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
" பலனை எதிர்பார்க்காமல் சோர்ந்துபோகாமல் நன்மையை செய்யும்படி உங்களை ஊக்குவிக்கவே இந்த காரியத்தை இங்கு பதிவிடுகிறேன்! "
அன்பு சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
இந்த உலகத்தாரின் பார்வையில் அப்பெண்மணி ஒரு புத்தி சுவாதீனம் இல்லாதவள் தான். ஆனால் இயேசுவை தெய்வமாக கொண்டிருக்கும் நமக்கு அப்பெண்மணி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிற சாதாரண மனுஷியைப் போலதான் பார்க்கத்தோன்றும்.
உலகத்தார் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். நம்மால் அப்படி விடமுடியாது. நம்மால் முடிந்த அளவு எதாவது உதவி செய்துவிட்டுதான் செல்ல முடியும். சுருக்கமாக சொன்னால் இயேசுவுக்கு உரியவர்கள் அவர் விரும்புகிறபடி தான் செய்வார்கள் நடப்பார்கள்.
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன? என்று லுக்காவிலே கேட்கிறார்.
அவர்விரும்புகிறபடி செய்யாவிட்டால், நாம் அவரை ஆண்டவர் என்று அழைப்பதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். தங்களின் இரக்ககுணம் ஆண்டவரிடமிருந்து கிடைக்கப் பெற்றது. ஆண்டவரின் கண் பார்வை கொண்டு அனைவரையும் நாம் காணும்போது, ஆண்டவர் எப்படி இந்த உலகின் மக்களை பார்கிறாரோ, அவரின் அதே பார்வை மற்றும் அவரின் ஏக்கம், மனதுருக்கம் இவைகளை நாமும் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம். ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
மேலும் ஆண்டவர் நம்மோடு இருப்பதினால் தான் இப்படிப்பட்ட காரியங்களை செய்யமுடிகிறது. இல்லை என்றால் இந்த உலக மக்களைப் போல நாமும் கடந்து போயிருப்போம்.
இயேசுவை தெய்வமாக கொண்டுள்ளவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவர்களாக இருக்க வேண்டும். இனி வரும் நாட்களில் ஆண்டவர்தாம் வேறு யாரைக்கொண்டாவது அப்பெண்மணியை போஷிக்க வேண்டும் என் ஜெபிப்போம்.
மனிதர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை ஆனால் மற்றவர்கள் செய்யும்பொழுது பொழுது அதை
ஒரு இளக்காரமாக பார்க்கின்றார்கள்
ஒருநாள் நான் TEA குடிக்க வேண்டும் என்று சென்று இருந்தேன்
அப்பொழுது சகோதரர் சுந்தர் சொன்னது போலவே ஒருவர்
TEA கடை முன்பு TEA பஞ்சிவேண்டும் என்று அவர்களை கேட்டார்
ஆனால் அவர்கள் அவருக்கு கொடுக்கவில்லை அப்பொழுது நான் அந்த கடையில் காசு கொடுத்து அவருக்கு TEA பஞ்சியும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்
அங்கு இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள் நான் என்னமோ பந்தாக்காக இதை செய்கின்றேன் என்று அவர்கள் நினைக்கின்றார்கள் என்று எண்ணி அங்கிருந்து வந்துவிட்டேன்
மற்றவர்களுக்கு உதவுவதை இந்த காலத்தில்ஆச்சரியமாகவோ பந்தாவகவோ பார்க்கின்றார்கள் இதுவே அவர்கள் சொந்தம்,அவர்கள் பிள்ளை என்றால் உயிரையே விட்டுவிடுவார்கள்
சாலையில் தினமும் மனிதர்களிடம் கையேந்தி நிற்கும்
இல்லாதவர்களுக்கு ஒரு ஐந்து பத்து ரூபாய் கொடுத்து திரும்பி பார்த்தல்
இன்னொருவர்
என்னைக்கோ பார்க்கும் அனைவருக்கும் கொடுக்க ஆசைதான் ஆனால் என்னிடம் பணம் இல்லையே
என்னால் முடிந்தது நான் உணவு சாப்பிடும் முன்பு என் தேவனிடம்...
தேவனே எனக்கு இங்கு நல்ல ஆகாரத்தை தந்துள்ளிர் ஆனால் எத்தனையோ நபர்கள் ஆகாராம் இல்லாமல் தவிக்கின்றார்கள்
அவர்களுக்கு ஆகாரத்தை கொடுக்கும் படி உங்களை வேண்டிகொள்கிறேன் தேவனே அவர்களுக்கு உதவும் கரங்களை எழுப்பும் என் தேவ ஆவியானவரே என்று சொல்லி ஜெபித்துவிட்டு பின்பு நான் சாப்பிடுவேன்
இது தான் சகோதர்களே என்னால் அவர்களுக்கு செய்ய முடிந்தது
இல்லாதவர்களுக்கு உதவி செய்கின்றீர்களோ இல்லையோ அவர்களை பார்த்து இவனுக்கு வேறு வேலை இல்லை கை கால்கள் நல்லாதானே இருக்கு என்று சொல்லாதீர்கள்
தேவன் உண்டாக்கிய மனிதர்களை பார்த்து கேவலமாகவோ அல்லது அலட்சியமாகவோ எண்ணாதீர்கள்
பிறரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான் என்று வசனம் சொல்கின்றது
உங்களால் முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள்
உங்களால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றால் தேவனிடத்தில் அவர்களுக்காகா ஜெபியுங்கள்........
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 13th of September 2011 04:50:27 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
மனிதர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை ஆனால் மற்றவர்கள் செய்யும்பொழுது பொழுது
அதை ஒரு இளக்காரமாக பார்க்கின்றார்கள்
அங்கு இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள் நான் என்னமோ பந்தாக்காக இதை செய்கின்றேன் என்று அவர்கள் நினைக்கின்றார்கள் என்று எண்ணி அங்கிருந்து வந்துவிட்டேன்
சகோதரர் சொல்லும் இந்த கருத்து மிகவும் உண்மையான ஓன்று.
அனேக இரக்ககுணம் உள்ள நல்ல மனுஷர்களை இன்றும் நாம் உலகில் பார்க்க முடியும். கிறிஸ்த்தவத்தைவிட துன்பத்தில் வாடும் மனுஷர்களுக்கு உதவி செய்யவிரும்பும் நல்லமனமுள்ள மற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நம்மை பற்றி அடுத்த மனுஷன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் அநேகரை மௌனம் காக்க செய்துவிடுகிறது.
உதாரணமாக ஒரு மோசமான கந்தையும் அழுக்கும் நிறைந்த நிலையில் இருக்கும் பிச்சைகாரனிடம் ஒருவர் போய்சிக்கொண்டு இருந்தால் அநேகர் முகத்தை சுழித்துவிட்டு செல்வர். சிலர் இவன் தனை பெரியவனாக காட்டிக்கொள்ள இந்த காரியத்தை செய்கிறான் என்றுகூட பேச வாய்ப்புண்டு.
ஆண்டவராகிய இயேசுவை பாவியாகிய ஒரு ஸ்திரி தொடும்போது, அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். (லூக்கா 7:39) (இவ்வார்த்தைகளை இயேசு கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை)
நம் ஆண்டவரே "ஆயக்காரருக்கும் பாவிக்கும் சிநேகிதன் தானே" பிறகும் நாம் ஏன் அவ்வாறு செய்ய தயங்க வேண்டும்?
மனுஷ மனமானது இயல்பாகவே கொஞ்சம் டீசண்டாகவும் ஐஸ்வர்யவானாகவும் இருக்கும் ஒருவரை சார்ந்து செல்லும் ஒரு நிலையிலேயே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நல்ல பட்டு சேலையும் அதிக நகையும் அணிந்து வருபவர்களுக்கு இந்த உலகத்தில் அதிகம் வரவேற்ப்பு கிடைப்பது அதி நிச்சயம், ஆனால் நாம் உலகத்தார்போல வாழ அழைக்கபட்டவர்கள் அல்லவே . ஆனால் கிறிஸ்த்தவர்கள் எனப்படுகிறவர்களுக்குள்ளும் அதே நோய் இருக்கிறதே.
எந்த அடுத்த மனுஷனோ அல்லது நமது பக்கத்து வீட்டு காரனோ அல்லது பெரிய செல்வந்தனோ யாராய் இருந்தாலும் நாளை நம்மை குறித்த நித்திய நியாயதீர்ப்பின் போது ஆண்டவரிடம் வந்து எந்த ரெக்கமேன்டேசனும் பண்ணமுடியாது என்பதை நாம் அனேக நேரங்களில் மறந்து இந்த உலக மாயையில் வீழ்ந்து விடுகிறோம்.
இந்த உலகை பொறுத்தவரை ஒவ்வொரு மனுஷனும் அடுத்தவனுக்கு சோதனையாகவும் அவனை சோதிப்பதற்காகவும்தான் இருக்கிறான் என்று நான் கருதுகிறேன். எனவே எந்த எந்த மனுஷனும் என்ன நினைப்பான் என்று கவலைப்படாமல் நம்முடய இருதயம் சொல்வதை செய்ய முனைவதே மேல். அடுத்தவனை என்ன நினைப்பான் என்று பார்த்தல் அவனும் விழுந்து நாமும் விழவேண்டிய சூழ்நிலை வந்துவிடலாம்.
இன்று காலையில் நான் அலுவலகத்துக்கு வந்துகொண்டிருக்கும்போது, ரோடடோரத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி 'கையை வாய்க்கு நேர் சாப்பிடுவது போல் காண்பித்து' என்னிடம் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி பாவம் போல கேட்டது. நானும் அது அமர்ந்திருந்த நிலையை பார்த்து மிகுந்த பசியில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு "சாப்பாடு வேண்டுமா?" என்று கேட்டேன். அதுவும் ஆவலோடு "ஆம்" என்று கூனி குறுகி கேட்டதால், என்னுடய மதிய சாப்பாட்டுகாக கொண்டு வந்த பார்சலை எடுத்து அந்த மூதாட்டியிடம் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு கடந்து வந்துவிடேன்.
பொதுவாக யாருக்கு எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புவது என்னுடைய வழக்கம். அதன் அடிப்படையில் ஒரு சுற்று சுற்றி வந்து அந்த மூதாட்டி அந்த உணவை சாப்பிடு கிறதா என்று பார்த்தபோது அதுவோ தான் வாங்கிய அந்த பார்சலை மறைத்து வைத்துகொண்டு இன்னொருவரிடம் கையேந்திக்கொண்டு இருந்தது.
இதற்க்குமுன்னர் உள்ள பதிவில், மனநலம் இல்லாத ஒருவருக்கு கொடுத்த அந்த உணவை அது ஆவலோடு உண்ணும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக் இருந்தது! அனால் இங்கு சுய நினைவோடு இருந்த இந்த மூதாட்டி செய்ததோ எனக்கு வேதனையாக இருந்து.
அதை பார்க்கையில், சுயநினைவோடு இருந்துகொண்டு அதுவா? இதுவா அது கிடைக்காதா? இது நமக்கு சொந்தமாகாதா? சம்பள உயர்வு கிடைக்காதா போனஸ் கிடைக்காதா? என்று உலக பொருட்கள்களை பயித்தியமான ஒரு நிலையில் தேடுவதைவிட, கிடைத்ததை உண்டு விட்டு எந்த ஆசையும் இல்லாமல் பயித்தியமாக அலைவது எவ்வளவோ மேல் என்றே நான் கருதுகிறேன்!
இந்த சம்பவத்தை சந்தித்த நான் அதை இங்கு எழுதியது "இந்த உலகில் அனேக எமாற்றுபெர்வளிகள் இருக்கிறார்கள் எனவே "பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டியது " என்பது மிக மிக அவசியம் என்று எல்லோருக்கும் எடுத்து சொல்ல அல்ல! அது ஒரு சரியான நிலையோ அந்த பழமொழி நமது பைபிளில் உள்ள பழமொழியோ அல்ல! எனவே அதை சொல்லிவிட்டு நாம் தப்பிக்க முடியாது!
நான் இங்கு சொல்ல வருவது என்னவெனில், நாம் ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்:
லூக்கா 6:30உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. என்று
எனவே என்னிடம் யார் கேட்டாலும் நாம் கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. ஒருவேளை அந்த மூதாட்டிக்கு நாம் எதுவும் கொடுக்காமல் விலகி வந்தால், அது ஆண்டவரின் வார்த்தையை அசட்டை செய்தது போலாகும். எனவேதான் அந்த உணவை கொடுத்தேன் ஆனால் அது சரியாக பயன்படாமல் போனதற்கு நாம் எவ்விதத்திலும் காரணம் அல்ல!
ஆகினும் இதுபோன்ற நிலைகளில் நாம் ஒரு ஜெபத்தை எறேடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்!
"பரிசுத்தம் உள்ள எங்கள் தகப்பனே! உம்முடய வார்த்தைகள்படி வாழவிளையும் எங்களுக்கு, எவன் எங்களை ஏமாற்றுகிறான் எவன் உண்மையான ஒரு துன்பத்தில் உதவி கேட்கிறான் என்பதை அறியும்அளவுக்கு போதிய ஞானம்இல்லை! ஆகினும் உம்முடைய வார்த்தைகள்படி "என்னிடம் கேட்பவனுக்கு முகம் கோணாமல் எனனிடம் இருப்பதை கொடுக்க விரும்புகிறேன். தேவயற்றவனையும் எமாற்று பவனையும பேராசை பிடித்தவனையும் என்னுடய கண்ணின் முன்னால் காண முடியாதபடி அல்லது என்னிடம் வந்து உதவி எதுவும் கேட்கமுடியாதபடி நீரே பார்த்து கொள்ளும். எவருக்கு உண்மை தேவையுள்ளதோ அவர்களை மாத்திரம் என் முன்னால் கொண்டு வரும்படி வேண்டுகிறேன் " என்பதுவே அந்த ஜெபம்!
இவ்வாறு ஜெபித்து விட்டு, நமக்கு கட்டளையிடபட்டவைகளை நாம் செய்வோம்! தேவன் தம்முடைய பார்வைக்கு நலமாதை செய்யட்டும்!
-- Edited by SUNDAR on Saturday 8th of October 2011 05:03:11 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் இந்த திரியில் சில இடங்களில் ஏழைகளுக்கு இரங்கி உதவிசெய்ததை குறித்து எழுதியிருக்கிறேன் அதில் எல்லோருக்கும் சில பாடங்கள் இருந்ததாலேயே எழுத நேர்ந்தது. மற்றபடி என்னை பற்றி பெருமை பாராட்ட இங்கு எதுவும் நான் எழுத வில்லை. அப்படி என்னைப்பற்றி நான் மேன்மை பாராட்ட எதுவும் இல்லை!
நான் செய்யும் எந்த ஒரு நன்மையுமே எந்த ஒரு எதிர்பாப்போடும் நான் செய்தது அல்ல. தேவன் செய்ய சொல்லியிருக்கிறார் என்றோ அல்லது நித்திய ஜீவன் நமக்கு கிடக்கும் என்றோ அல்லது நன்மை செய்தால் எனக்கு மேன்மை உண்டு என்றோ எண்ணி நான் இதுபோன்ற காரியங்களை செய்யவில்லை.
நான் ஒரு தேவனின் அடிமை அல்லது அவரது ஊழியக்காரன். அவரே என்மூலம் இதுபோன்ற காரியங்களை செய்கிறார் அந்த காரியத்தை செய்வதற்கு தகுந்த சந்தர்ப்பமும் தேவ சித்தமும் இல்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
சமயமும் அந்தர்ப்பமும் கூடிவந்து நான் உதவி செய்த சில சம்பவங்களை நான் இங்கு எழுதியிருக்கிறேன் இந்த காரியங்களுக்கான CREDIT அதாவது பலனை நான் தேவனிடம் எதிர்பார்த்தால் சமயமும் சந்தர்ப்பமும் வாய்காமல் அல்லது வாய்த்தும்கூட என்னால் உதவிசெய்ய முடியாத எத்தனையோ நிலைகளில் நான் கடந்து வந்திருக்கிறேன் அவைகளுக்கு எல்லாம் என்னிடம் நிச்சயம் கணக்கு கேட்கப்படும். எனவே நான் செய்யும் காரியங்கள் எல்லாம் வாய்க்கபண்ணும் தேவனாலே ஆகும். அப்பிரயோஜனமான ஊழியக்காரனான நான் செய்த எந்த நன்மைக்கும் எந்த பலனையும் எதிர்பாக்கவில்லை அதே நேரத்தில் சந்தர்ப்பத்தி நிமித்தம் செய்யமுடியாமல் போன காரியங்களுக்கு என்னால் நடந்ததும் அல்ல.
ஒரு காரிலோ அல்லது ஒரு வண்டியிலோ போய்கொண்டு இருக்கும்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கும் ஒரு மனுஷனையோ அல்லது ஒரு பிச்சைகாரனையோ பாத்தால் உடனே வண்டியை விட்டுவிட்டு ஓடிப்போய் உதவிசெய்பவர்கள் எத்தனை பேர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் வண்டியில் போவதை காரணம் காட்டி தேவனிடம் EXCUSE வாங்கமுடியாது. நன்மை செய்யுங்கள் என்று சொன்ன அவர் உங்களை வண்டி ஒட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்லவில்லை.
எனவே அன்பானவர்களே! செய்யும் எந்த ஒரு நன்மையான காரியத்துக்கும் உண்டான மகியை தேவனுக்கு செலுத்தி, தேவனாலேயே எல்லாம் நடக்கிறது நான் வெறும் கருவிதான் நான் இங்கு ஒன்றுமில்லை என்று தீர்மானித்து எல்லாவற்றை யும் தேவனின் கரத்தில் ஒப்புகொடுத்தோம் என்றால் அவர் நிச்சயம் நம்மை மென்மையாக நடத்துவார்.
மற்றபடி "நான்தான் இந்த காரியத்தை செய்தேன்" "நான் இத்தனை ஏழைக்கு இறங்கினேன்" நான் பிறருக்கு இத்தனை உதவியை செய்திருக்கிறேன் இவற்றுக் கெல்லாம் எனக்கு ஏதாவது பலன் அல்லது கூலி கிடைக்கும் அது எனக்கு நிச்சயம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பாப்போம் என்றால் நிச்சயம் அதற்க்கான கூலி கிடைக்கலாம் ஆனால் நாம் செய்ய தவறிய காரியங்களுக்கு எல்லாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் எந்த சாகுபோக்கும் சொல்லி தப்பிக்க முடியாது.
மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பினிமித்தம் செய்யப்படும் கிரியையே தேவனுக்கு பிடித்தமானது. கூலியை எதிர்பார்த்து செய்யப்படும் எந்தஒரு கிரியையும் தேவனுடய இருதயத்த்துக்கு ஏற்றதல்ல!