ஆதியில் தேவனின் வார்த்தையை மீறி கனியை புசித்ததன் மூலம் ஆதாம் சாத்தானின் அடிமை ஆனான். எனவே யோபு 9:24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தின் அதிபதி சாத்தானாக இருக்கிறான். எனவே அநேகர் சாத்தானின் அடிமைகளாகவே இருக்கிறார்கள்
இங்கு பாவம் என்பது சாத்தானின் ரூபத்தே குறிக்கிறது சாத்தானே பாவத்தின் ரூபம். அத்தோடு பாவம் செய்பவன் தேவனால் உண்டாகாமல் பிசாசினால் உண்டாயிருக்கிறான் என்று வசனம் சொல்கிறது
I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்
அடுத்து இந்த உலகத்தில் தேவனின்பிள்ளைகள் மற்றும் சாத்தானின் பிள்ளைகள் என்று இரண்டு பிரிவினர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியும்!
I யோவான் 3:10இதினாலேதேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்;
மேலேயுள்ள வசனங்கள் அடிப்படயில் பிசாசினால் உண்டாகி பிசாசின் பிள்ளைகளாக இருப்பவர்கள் எல்லோருமே மரித்தவுடன் தங்களுக்குள் தங்கி யிருக்கும் பிசாசின் ஆவியால் பிசாசின் இடமாகிய பாதாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டு வாதிக்கபடுகின்ற்றனர்.
யோபு 21:13அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்
ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவனின் பிள்ளைகளாக அதிகாரம் பெற்று நற்க்கிரியைகளை செய்பவர்கள் மரிக்கும்போதோ அவர்களுக்குள் தங்கியிருக்கும் ஆவியானவரால் தேவன் நியமித்து வைத்துள்ள இளைப்பாறுதல் ஸ்தலத்துக்கு செல்கின்றனர்.
லூக்கா 23:43இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
இறுதி நியாய தீர்ப்புவரை இவர்கள் அந்தந்த இடத்தின் தங்கியிருக்கவேண்டிய நிலை இருக்கிறது. இவர்களால் மேலே ஏறிவர முடியாது.
யோபு 7:9மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
இவ்வாறு சாத்தனின் பிடியில் அடைப்பட்டு இந்த பாதாளத்தின் தங்கியிருக்கும்
ஆத்துமாக்கள் அனுபவிக்கும் வேதனைகள் என்பது மிக கொடூரமானது. இதைப் பற்றிய விளக்கங்களை கீழ்கண்ட திரியில் இருக்கிறது.
இவ்வாறு பாதாளத்தின் அதிபதியாகிய சாத்தானின் இடத்தில் வேதனைப்படும் ஆத்துமாக்கள் இறுதி நியாயத் தீர்ப்பின்போதுதான் தேவனுக்கு முன்னால் ஒப்புவிக்கப்படும்.
வெளி 20:13சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன
ஆனால் இந்த சம்பவங்கள் நடக்கும் முன்னரே, பிசாசின் நிலைகளாகிய மிருகம் / கள்ள தீர்க்கதரிசி/ பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் என்ற மூன்றும் நியாயம் தீர்க்கபட்டு அக்கினி கடலிலே தள்ளபட்டுவர்கள் அவர்கள் நித்திய நித்தியமாக வாதிக்கபடுவார்கள் என்று வேதம் சொல்கிறது.
வெளி 19:20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளி 20:10மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
இந்த சம்பவங்கள் நடக்கும் போது, பாதாளத்தில் இருந்து அக்கினி கடலுக்கு தள்ளப்படும் சாத்தானின் திரித்துவ நிலையோடு எந்த ஒரு மனுஷ ஆத்துமா இசைந்திருந்தாலும் அந்த அத்துமாவும் அவர்களோடு சேர்ந்து நித்திய அக்கினி வாதைக்கு போய்விடும். இவர்களுக்கு என்றும் மீட்பே இல்லாத ஒரு பயங்கர நிலை ஏற்ப்படும். அப்படி ஒரு நிலையையே "கெட்டுபோதல்" என்று வேதம் சொல்கிறது. அப்படி ஒருவரும் கெட்டுபோய்விட கூடாது என்பதே தேவனின் சித்தம் அதற்காகவே இயேசு பூமிக்கு வந்து கொடூர வேதனையை ஏற்று மரித்தார்.
யோவான் 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
தற்போது ஏராளமான ஆத்துமாக்கள் சாத்தானின் பிடியிலும் அவனது இடமாகிய பாதாளத்திலும் இருப்பதால், இப்படி சாத்தனோடு இசைந்து இருக்கும் எந்த ஆத்துமாவும் அந்த நித்திய வாதைக்கு போய்விட கூடாது என்பதையே "எல்லோரும் சாத்தானின் பிடியில் இருந்து மீட்கப்பட வேண்டும்" என்றும், இயேசு எல்லோருடைய பாவத்துக்கும் மரித்திருப்பதால் எல்லோரையும் நித்தியவாதையில் இருந்து மீட்கும் ஒரு திட்டம் தேவனிடத்தில் உண்டு என்னும் கருத்திலேயே நான் இங்கு எழுதி வருகிறேன்.
மற்றபடி, கீழ்படிதல் இல்லாமல் இஸ்டத்துக்கு திரிந்து பாவம் செய்தாலும் எல்லோருக் கும் நித்திய ஜீவன் உண்டு என்ற கருத்தில் நான் இங்கு எழுதவில்லை!
அதாவது ஒருவரும் சாத்தானின் ஆவியோடு இணைந்து அக்கினி கடலுக்கு போகவில்லை என்றால் சாத்தான் நியாயம் தீர்க்கபட்டு சாத்தானின் ஆவி அவனை விட்டு பிரிந்ததும், அவன் தானாகவே மனம்திரும்பிவிடுவான் உடனே எல்லோருமே மீட்கபட்டு, தேவனின் கரத்தின் கீழுள்ள இறுதி நியாயதீர்ப்புக்கு வந்துவிடுவார்கள். பின்னர் வசனம் சொல்வதுபோல் அவனவன் கிரியைக்கு தகுந்த நியாயதீர்ப்பு தேவனால் வழங்கப்படும்.
வெளி 20:12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
சுருக்கமாக, சாத்தானின் கரத்தில் இருந்து எல்லோரும் மீட்கபட்டு தேவனின் கரத்தின் கீழ் நியாயதீர்ப்புக்கு வரவேண்டும். அதற்காகவே தேவன் பொறுமையோடு காத்துகொண்டு இருக்கிறார். அதுதான் நிறைவேறும் என்று வேதமும் சொல்கிறது! தேவன் மகா நீதிபரர் மிகுந்த இரக்கமுள்ளவர்! எனவே அவர் வழங்கும் நியாய தீர்ப்புகள் மிக சரியாகவே அமையும். அதைபற்றி நாம் கருத்து சொல்ல அவசியம் இல்லை!
(ஒரே ஒரு மனுஷம் இயேசுவை என்றுகொண்டு மனம்திரும்பும் நிலையில் நூறு புறஜாதி குழந்தைகள் இந்த உலகில் புதிதாக பிறந்திருக்கும். இப்படிபட்ட ஒரு நிலையிருக்கும் இந்த உலகில்எல்லோருக்கும் சுவிஷேசம் கேட்டு மனம் திரும்புவார்கள் என்று தேவன் காத்துகொண்டு இருக்கவில்லை. அதே நேரம் சுவிஷேசம் கேட்டு மனம் திரும்புகிரவர்கள். பாக்கியவான்கள் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. காரணம் அவர்கள் பாதாள வேதனைக்கு ஒப்புகொடுக்கபடுவது இல்லை)
முழு விளக்கமறிய இந்த கருத்தோடு தொடர்புடைய கீழ்கண்ட திரியையும் வாசிக்கவும்: