நான் மும்பை பட்டணத்தில் வாழ்ந்த ஆண்டவரைஅறியாத காலங்களில், ஒரு மன கஷ்டமோ அல்லது மன சமாதனமின்மையோ இருக்குமாயின், உடனே தாலாட்டு பாட்டுகள் போலிருக்கும் இளையராஜாவின் அருமையான மேலோடி பாடல்கள் சிலவற்றை பெரிய ஸ்பீக்கர்களை செட்டில் பாடவிட்டு அமைதியாக இருந்து கேட்பேன். அந்நேரம் எனக்கு மிகுந்த சமாதானம் உண்டானதுபோல் இருக்கும். இந்த உலகையே மறந்து நான் பாடல்கள் கேட்ட நாட்களும் உண்டு. பாடல்கள் மேல் எனக்கு அலாதி பிரியம் உண்டு!
அதுபோலவே இந்த உலகில் தற்காலிகமான சமாதானத்தை பெறுவதற்கு அனேக வழிமுறைகள் இருக்கிறது! ஒரு சினிமா பார்ப்பதோ அல்லது ஒரு நல்ல டிவி நிகழ்ச்சியை பார்ப்பதோ அல்லது ஒரு அருமையான இயற்க்கை அழகை ரசிப்பதோ அல்லது ஒரு பிக்னிக் போவதோ அல்லது மது அருந்துவதோ கூட மனுஷனுக்கு மன களிப்பை ஏற்ப்படுத்தி, தற்காலிய உலக சமாதானத்தை தந்துவிட முடியும்.
ஆனால் இந்த சமாதானங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மறைந்துபோக கூடியது. அதாவது ரணமாகஇருந்து வலிக்கும் ஒரு புண்ணுக்கு வலி மாத்திரையை சாப்பிட்டு வலியை தற்காலிகமாக மறப்பது போன்ற ஒரு நிலையே!
அடுத்து இன்னொரு விதமான உலகசமாதானத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.
அதாவது ஒரு தாய் தான் குழந்தையை மிகுந்த சமாதானத்தோடு காத்துக்கொள்ள முடியும் ஒரு முதலாளி அவரிடம் வேலை பார்க்கும் வேலைக்காரருக்கு வேண்டியவைகளை செய்து சமாதானத்துடன் வைத்திருக்க முடியும் ஒரு ராஜா தன்னுடைய ராஜ்யத்தில் வாழும் ஜனங்களை சமாதானத்துடன் பார்த்துக்கொள்ள முடியும்!
நியாயாதிபதிகள் 4:17யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
II சாமுவேல் 17:3இப்படிச்செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். I இராஜாக்கள் 4:24 நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது
ஆனால் இந்தவிதமான சமாதானங்களும் நிலையற்றதும் எந்நேரத்திலும் மனுஷனை கவித்துவிட கூடியதுமாக இருக்கும். அதாவது இன்னொரு ராஜா வந்து சமாதானத்தோடு இருக்கும் நாட்டை ஒரே நாளில் கெடுத்துவிட முடியும். ஒரு நோய் வந்தால் தாயின் மூலம் அனுபவிக்கும் சமாதானம் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகலாம்!
இவ்வாறு பல்வேறு வழிகளில் கிடைக்கும் தற்காலிக சமாதானம் என்பதுகூட மனுஷனுக்கு கிடைக்கும் ஒருவகை சமாதானம் தான். என்றாலும் சமாதான கர்த்தராகிய நம் ஆண்டவராகிய இயேசுவால் நமக்கு உண்டக்கபட்ட சமாதானம் என்பது எந்த விதமான சமாதானத்துக்கும் ஈடில்லாததும் நித்தியத்துக்கும் நம்மை தொடரக்கூடியதாகவும் இருக்கும்.
அது ஒரு சாதாரண சமாதானமே அல்ல! தெய்வீக சமாதானம். ஒரு மனுஷனிடம் என்னத்தை கேட்டாலும் அவன் நமக்கு கொடுத்துவிடலாம்
ஆனால் உன்னிடம் இருக்கும் சமாதானத்தி என்னிடம் கொடு என்று கேட்டால்
நிச்சயம் கொடுக்கமாட்டான். ஆனால் ஆண்டவரோ அப்படியல்ல அவருடைய சமாதானத்தையே நமக்கு கொடுத்து நீங்கள் கலங்காமல் இருங்கள் என்று சொன்னவர்!
யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இங்கு ஆண்டவர் "உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை"என்று தெளிவாக சொல்லியிருப்பதால் உலக சமாதானமும் ஆண்டவர் கொடுக்கும் நித்திய சமாதானமும் வேறு வேறு எனபதை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம். இவ்வித சமாதானம் எப்படியிருக்கும் என்றால்
இங்கு பவுலும் சீலாவும் இருந்த உலக நிலை நமக்கு தெரியும்!
23. அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
ஆனால் இந்த நேரத்திலும் தேவனை பாடி துதிக்கும் ஒரு சமாதானத்தை தேவனால் மட்டுமே உண்டாக்க முடியும்! அதேவே தெய்வீக சமாதானம்.
எனவே அன்பானவர்களே! ஒரு தகப்பன் தன் பிள்ளையை சமாதனதொடு பார்த்து கொள்கிறான் என்றோ அல்லது ஒரு ராஜா தனது நாட்டை சமாதானத்தோடு அரசாளுகிறார் என்று சொல்லும்போதோ அதன் மூலம் கிடைக்கும் உலக சமாதான மெல்லாம் ஆண்டவராகிய இயேசு தன் சிலுவைபலியின் மூலம் சம்பாதித்து கொடுத்துள்ள நித்திய சமாதானததொடு ஒப்பிட்டுகூட பார்க்க முடியாத ஓன்று. எனவே இரண்டையும் நாம் குழப்பிவிடகூடாது! இரண்டுக்கும் பெயர் "சமாதனம்" தான் ஆனால் இரண்டு சமாதானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இயேசு தரும் சாமாதனத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை! அது மனுஷனுக்கு நித்தய காலமும் அவனுக்குள்ளேயே ஊரும் ஜீவ ஊற்று
போன்றது
யோவான் 4:14நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
-- Edited by SUNDAR on Tuesday 27th of September 2011 03:07:43 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"தேவ சமாதானம்" ஒரு மனுஷனை ஆட்கொள்ளுமானால் அவனுக்கு இந்த உலகமும் அதில் உள்ள கிரியைகளும் ஒன்றுமில்லாமல் போய் விடும். ஏதொன்றை குறித்த கவலையோ பாரமோ இல்லாமல் போய் விடும். எதை பார்த்தாலும் சந்தோசமாக இருக்கும், யார் திட்டினாலும் சுகமாக இருக்கும், எவர் முறைத்தாலும் நமக்கு சிரிப்புதன்
வருமேயற்றி கோபம் வரவே வராது. ஏன் இந்த மனுஷர்கள் இப்படி நடக்கிறார்கள் எதை தேடி இவ்வாறு ஓடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும். நாம் பூமியில் நடக்காமல் சுமார் ஓரடி உயர்த்தி பறந்து போகும்போது உண்டாகும் உணர்வை நாம் பெறமுடியும்.
ஆனால் நாம் அனுபவிக்கும் அந்த தேவ சமாதானமானது ஏனோ நீண்ட நேரம் நமக்குள் தங்கியிருப்பதில்லை. என்ன காரணத்தின் அடிப்படை யிலேயோ தேவன் அதை நமக்கு உணர்த்திவிட்டு கடந்து சென்றுவிடுகிறார். நித்தியத்தில் அதுபோன்றதொரு சமாதானம் நமக்கு கிடைக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.
யாராவது நீண்ட நாட்கள் அவ்வித சமாதானத்தை அனுபவிக்கிறார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் அந்த தேவ சமாதானத்துக்கு ஈடு இணை என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை!
இதை பற்றிதான் இயேசு:
லூக்கா 17:21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
என்று சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகம் உண்டு!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)