//சுருக்கமாக சொன்னால், ஆதாமின் பாவத்தால் மனுஷன் என்பவன் செத்த நிலையில் இருக்கிறான். அதையே பவுல் "ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறது போல" என்று எழுதுகிறார். அந்த மரித்த நிலையில் இருக்கும் மனுஷனுக்குள்
இயேசு தரும் ஜீவனை பிரவேசிக்கும்போது அவன் உயிர்பிக்கபடுகிறான். அவ்வாறு ஆவியில் அவன் உயிர்பிக்கபட்டால் மாத்திரமே அவன் உயிரடைவான், இல்லை யேல் மரித்த நிலையில் இருக்கும் அவன் ஒருநாள் விழுந்து அழிந்து போவான். //
தகுந்த வசன ஆதாரங்களோடு தாங்கள் கூறுகிற கருத்தை மறுப்பதற்கில்லை. ஆகிலும், பின்வரும் வசனம் தங்கள் கருத்திற்கு எதிராக இருப்பதாகத் தோன்றுகிறது.
வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ள அனைவரும் பரிசுத்தவான்களாக இருப்பார்கள் என இவ்வசனம் கூறுகிறது. பரிசுத்தவான்களாகிய இவர்கள் இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொண்டிருக்க வேண்டும். இயேசுவின் கற்பனைகளில் ஏதேனும் ஒன்றை கைக்கொள்ளவிட்டால்கூட, அவர்கள் பரிசுத்தவான்களாக இருக்க முடியாது.
இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொண்டு பரிசுத்தவான்களாக விளங்கின இவர்களுக்கு எப்படி முதலாம் மரணம் நேரிட முடியும்?
பாவத்தின் சம்பளம்தானே மரணம்? பாவமே இல்லாமல் பரிசுத்தவான்களாக விளங்கின இவர்களுக்கு எப்படி முதலாம் மரணம் நேரிட முடியும்?
ஆனால் வேத வசனத்தின்படி, இந்த கருத்து உண்மையே என்றும், யாரும் இதுவரை அந்த நிலையை அடையவில்லை என்பதால் இந்த கருத்து பொய்யாகி விடாது என்றும், வேத வசனத்தின்படி இந்த கருத்தை ஒரு விசுவாசி விசுவாசிப்பதில் தவறில்லை என்றும்வாட்ச்மேன் நீ என்னும் தேவ ஊழியர் "The Spiritual Man"என்னும் தனது புத்தகத்தில் "Overcoming Death"என்னும் தலைப்பில் வேத வசன ஆதாரங்களோடு விளக்கியுள்ளார். இந்த வேத வசனங்களை விசுவாசித்து தங்கள் வாழ்னாளை அதிகப்படுத்தி கொண்டவர்களும் உண்டு.
சகோதரர் சந்தோஷ் அவர்களே சுந்தர் பலமுறை சொல்லி இந்த கருத்தை யாரும் ஏற்கவில்லை ஆனால் நீங்கள் யாரோ ஒரு வெளி நாட்டுகாரரர் சொல்லி இந்த கருத்தை ஏற்று கொள்கின்றீர்கள் ஆனால் சகோ ; சுந்தர் சொல்லி ஏற்றுகொள்ள மறுத்தீர்கள்
ஆனால் இவ்வாறு மரணத்தை வெல்லப் போகிறவர் ஒருவரே என்றும், அவரை கொண்டுதான் தேவன் சாத்தானை அழிக்க போகிறார் என்றும் இறைவனை பற்றி சொல்லும் தள உறுப்பினர் சொல்லுவது (ரீல்) ரொம்ப ஓவர். இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குள்ளும் கிருஸ்து உருவாகி, அதன் மூலம் சாத்தான் அழிக்கப்படுவதுதான் தேவனுடைய பூரண விருப்பம்)
இன்னும் ஒரு 6 மாதமோ அல்லது 1 வருடமோ காத்து இருங்கள் இந்த தலைப்பை
பற்றி வேறொரு வெளி நாட்டு காரர் எழுதுவார் அப்பொழுது நீங்கள் நம்புவீர்கள்
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதினாலேயே இப்படி எழுதிகின்றேன் தவறு இருந்தால் என்னை மன்னித்திவிடுங்கள் சகோதரனே
நீங்கள் நன்கு யோசிக்க கூடியவர் மற்றும் நன்கு ஆராய கூடியவர் ஆனால் ஏனோ இந்த விஷயத்தில் நீங்கள் நம்ப மறுப்பது புரியவில்லை
இருந்தாலும் நாம் ஒருவர் சொல்லவதை உடனே நம்ப கூடாது நாமும் வேதத்தை ஆராய்ந்து அதன் பின் அந்த விஷயத்தை குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும்
அதற்க்கு முன்பு நாம் ரீல் ரொம்ப ஓவர் என்று சொல்வது மிக தவறு உங்களுக்கு இதை பற்றி முழுமையாய் தெரிந்தால் நீங்கள் ரீல் ரொம்ப ஓவர் என்று சொல்லலாம் அதில் தவறு இல்லை ஏனென்றால் உங்களுக்கு அதின் முழு விவரமே தெரிந்து விட்டது அல்லவா ஆனால் நமக்கு தெரியாத பட்சத்தில் நாம் எப்படி ஒரு முடிவை எடுக்க முடியும்
நீங்கள் நிறைய காரியங்கள் எழுதி இருந்தீர்கள் தேவன் தோன்றியது ஞான சக்தி மற்றும் பல்வேறு காரியங்களை
இந்த தளத்திலும் உங்கள் தளத்திலும் எழுதி வைத்தீர்கள் ஆனால் என்னால் ஒரு கேள்வியும் கேட்க முடியவில்லை ஏனென்றால் அதை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது எனக்கு தெரியாத பட்சத்தில் நான் எப்படி நீங்கள் சொல்வது ரீல் அல்லது தவறு என்று சொல்லமுடியும் யோசித்து பாருங்கள் நண்பரே
தவறாகவோ உங்கள் மனம் புண் படுபடி
எழுதி இருந்தாலோ என்னை மன்னித்து விடுங்கள்.......
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 24th of October 2011 04:08:51 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நீங்கள் கேட்டதில் ஒன்றும் தவறில்லை. அதனால் நான் புண்படவும் இல்லை. ஆகவே மன்னிப்பு என்ற வார்த்தையும் இங்கு தேவையில்லாதது.
----------------------------------
தேவன் ஒரு தரிசனத்தையோ, வெளிப்பாட்டையோ சொல்லும் போது, அதை நம் ஒருவருக்கு மட்டும்தான் வெளிப்படுத்தியிருப்பார் என எண்ணுவது தவறாகும். அது மனித குலத்திற்க்கு தேவையானதாக இருந்தால் அனேக தேவ ஊழியர்களுக்கு அவர் வெளிப்படுத்தியிருப்பார். அவ்வாறு தேவையில்லாத பட்சத்தில் அது நமக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டதாகும். அதை பிறருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.
தேவனுடைய ஊழியத்தை சரியாக செய்து தங்கள் ஓட்டத்தை வெற்றிகரமாக, சாட்சியோடு முடித்தவர்கள் யாராவது நமக்கு வெளிப்படுத்தப்பட்ட அதே காரியத்தை அல்லது அதே கருத்தை சொல்லியிருபபார்கள் எனில் அதையும் சேர்த்து குறிப்பிட்டு வெளியிடுவது. நமது கருத்துக்கு வலு சேர்க்கும் விஷயமாகும். மேலும் நம் வெளிப்பாட்டை படிக்கும் பலர் அதை எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அதே வெளிபாட்டை பெற்ற தேவ ஊழியர் தேவனுக்கு மகிமையான சாட்சியாய் இருந்து தன்னை நிரூபித்திருக்கிறார்.
நம்முடைய கருத்தை வெளியிடும் முன் சிறிது நேரம் இணைத்தில் தேடினால், நமது கருத்தை ஒத்து யாராவது சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். அதையும் சேர்த்து வெளியிடும் போது, நம் கருத்துக்கு எதிர் வாதம் செய்கிறவர்கள், அதை கேலி, கிண்டல் செய்பவர்கள் அந்த ஊழியரின் நிமித்தம் நம்மை அவ்வாறு செய்ய மாட்டார்கள். மன மடிவாக்க மாட்டார்கள். அதனால் நம்முடைய வெளிப்பாடு / தரிசனம் / கருத்து சரிதானா என்று கலங்கவும் தேவையில்லை.
நம் வெளிப்பாட்டை சொல்லும் போது "அண்ணே!, நீங்க பெரிய ஆள், உங்களுக்கு பெரிய, பெரிய விஷயங்களை தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார், ரொம்ப சூப்பரா எழுதறீங்க" என யாராவது நம்மை புகழுவார்கள் என எதிர்பார்த்து அதை சொல்வது தவறு. பொதுவாக யாரும் புகழ மாட்டார்கள். இகழ்ச்சிதான் அதிகமாக இருக்கும். அப்படி யாராவது புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சி நமக்கு கண்ணியாக அமையும்.
ஆகையால் தேவனுக்கு சாட்சியாய் வாழ்ந்து தங்கள் ஓட்டத்தை முடித்த ஊழியர்களின் கருத்தோடு, ஒத்து நமது கருத்தை சொல்வது சிறப்பான விஷயமாகும். அதுவும் வெளி நாட்டவரின் கருத்து என்றால் நமது நாட்டவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும். (ஏன் நம்ம நாட்டுகாரர்கள் புத்தகங்கள் எழுதவில்லை?) இதனால் நாம் நம்மை குறித்து பெருமை கொள்ளவும் இடமிருக்காது.
(நான் குறிப்பிட்ட அந்த ஊழியர்தேவனுக்கு சாட்சியாய் 20 வருட காலங்கள் சிறை வாசம் அனுபவித்து சிறையிலேயே இறந்தார்.)
அடுத்ததாக நமக்கு தேவையில்லாத காரியங்களை நாம் விசுவாசிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக எனக்கு நல்ல வேலை கிடைத்து அந்த வேலையில் இருந்தால், தேவன் எனக்கு நல்ல வேலையை கொடுப்பார், பண வசதியை கொடுப்பார் போன்றவற்றை சொல்லும் வசனங்களை விசுவாசிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எனக்கு அந்த தேவையில்லை.
அது போலவே சரீர மரணத்தை சந்திக்காமல் இருப்பது என்பது சுந்தர் அவர்களுக்கு வேண்டுமானால் பெரிய ஆசிர்வாதமாக இருக்கலாம். எனக்கு அப்படியில்லை. அதிக நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு என்றாலும், சரீர மரணமே இல்லாமல் வாழ வேண்டும் என நான் ஆசைப்படவில்லை. அதனால் மரணத்தை வெல்லும் வசனங்கள் முதல் மரணத்தை குறிக்கிறதா? இரண்டாம் மரணத்தை குறிக்கிறதா? அல்லது இரண்டையும் குறிக்கிறதா? என்பதை குறித்த ஆராய்ச்சியோ, சந்தேகமோ எழவில்லை அது எனக்கு முக்கியமானதாயும் இருக்கவில்லை. "வாட்ச்மேன் நீ" எழுதிய புத்தகத்தை படித்த போது, சுந்தர் சொன்ன அதே காரியத்தை பற்றி அவரும் சொல்லியிருப்பதால், சுந்தர் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே அதை குறிப்பிட்டேன்.
(வசனமானது முதல், இரண்டாம் என இரண்டு மரணங்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறது என்பது சரியே.) தேவனுடைய வசனத்தை ஒருவர் விசுவாசித்தும், அவரது விசுவாசத்தை தேவன்அங்கீகரித்தும் அவர் சரீர மரணமே இல்லாமல் வாழ்ந்தாலும் அல்லது அவர் தேவனால் உயிரோடு எடுத்து கொள்ளப்பட்டாலும் அது சந்தோஷமான விஷயமே.
ஆனால் இந்த வசனங்களில் ஒரே ஒருவர் மட்டுமே சரீர மரணம் அடையாமல் தப்பிப்பார் எனவும் மற்றவர்கள் யாருக்கும் இந்த அருகதை கிடையாது என எங்கும் சொல்லப்படவில்லை என்றே நம்புகிறேன்.
அது மட்டுமல்லாது வெளி.11.3 அதிகாரத்தில் இரண்டு சாட்சிகள் (மரித்து, உயிர்த்து) சரீரத்தோடு எடுத்து கொள்ளப்படுவதை பார்க்கலாம் (இவர்கள் மரணம் அடைந்தார்களா? இல்லையா? அல்லது மரணத்தை ஜெயித்தவர்களா இல்லையா? இது அடுத்த குழப்பம்) இவர்கள் எடுத்து கொள்ளப்படும் சமயத்தில் சாத்தானின் ஆட்சி மாத்திரமே பூமியில் நடைபெறுகிறது. இவர்களின் காலம் வரை சாத்தானின் ஆட்சிக்கு எந்த ஜெயம் கொண்டவர்களும் முடிவு கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தானின் தோல்வி மூன்று கட்டங்களாக உள்ளது.
1. முதலாவது அவன் வானத்தில் இரண்டு தள்ளப்படுதல் :
அவனை தள்ளியது மிகாவேலும் அவனை சேர்ந்த தூதர்களும் என சொல்லப்பட்டாலும் அவர்கள் சாத்தானை தள்ள காரணமாயிருந்த ஜெயம் கொண்டவர்களை பற்றி 11ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. (ஜெயம் கொண்டவர்கள் என்பது பன்மையாகும் அதாவது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்.)
8. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 2. பாதளத்தில் சிறை வைக்கப்படுதல் :
சாத்தானை பாதளத்தில் தள்ளி சிறை வைத்தது ஒரு தூதன் என சொல்லப்பட்டாலும் அதற்கு காரணமாய் இருந்தது இயேசு கிருஸ்துவும் அவருடைய சேனைகளுமே என அறிய முடியும்.
வெளி.19.19. பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். 20. அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளி.20.1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
3. அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
3. சாத்தான் அக்கினி கடலில் தள்ளப்படுதல் :
வெளி.20.7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8.. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
மரணம் பற்றி சொல்லும் வேத வசனங்கள் முதலாம் மரணத்தையும் குறிப்பிடுகிறது என சரியான ஒன்றை சொல்லும் சுந்தர் அவர்கள், அதோடு கூடவே இந்த வசனங்கள் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என சொல்லும் போது வேதத்தில் இல்லாத தன் சொந்த கருத்தை சொல்கிறார். இந்த வெளிப்பாட்டை உண்மையென அவர் நம்பினால் "என்னுடைய இந்த கருத்துக்கு வேத ஆதாரம் இல்லை. ஆனாலும் நான் நம்புகிறேன். என்னை நம்புகிறவர்களும் இந்த கருத்தை நம்பலாம்" என தெளிவாக சொல்லலாம்.
சுந்தர் அவர்கள், அவரது கருத்தை ஆறு மாதமோ அலலது ஒரு வருடமோ பொறுத்து கூட, இப்போதுதான் தேவ ஆவியானவர் எனக்கு இதை உணர்த்தினார் என்று சொல்லி மாற்றி கொள்வார். அதனால் எட்வின் சுதாகர் அவர்களே, எதற்கும் ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ பொறுதிருந்து இதே கருத்தையே அவர் அப்பவும் சொல்கிறாரா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
கண்ணை மூடிக் கொண்டு என்னை நம்பாதீர்கள். நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் என அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதனால் ஒன்று வேத வசனத்துக்கு அப்பாற்பட்டு அவர் சொல்வதையும் நம்புங்கள். அல்லது வேத வசனத்தை மட்டும் வைத்து அவர் சொவது ரீலா? ரியலா? என்பதை முடிவு செய்யுங்கள்.
(தேவன் தந்த வெளிப்பாட்டை விசுவாசிப்பது சரிதான். ஆனால் அதை சரியான காலம் வரும் வரை ரகசியமாக வைத்து வைக்க வேண்டும். சில கருத்துக்களை, சில நேரத்தில், சிலர் சொல்வது மட்டுமே சிறப்பாயிருக்கும். உதாரணமாக இந்தியாவில் உள்ள மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 55 லிருந்து 60 வரை. அனேக மக்கள் இதை சாதரணமாக தாண்டுகிறார்கள். குறைந்த பட்சம் இந்த காலத்தையே ஒருவர் வாழாமல் நான் எப்போதும் உயிரோடு இருப்பேன், எனக்கு மரணமே இல்லை என சொன்னால், அவர் சொல்வதை சிலர் வேடிக்கை செய்வது தவிர்க்க முடியாது.இதையே அவர் தனது நூறு வயதில் சொன்னால் அதன் மதிப்பே தனி.)
சகோ. சந்தோஷ் அவர்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி!
BRO. SANDHOSH wrote:
////தேவன் ஒரு தரிசனத்தையோ, வெளிப்பாட்டையோ சொல்லும் போது, அதை நம் ஒருவருக்கு மட்டும்தான் வெளிப்படுத்தியிருப்பார் என எண்ணுவது தவறாகும். அது மனித குலத்திற்க்கு தேவையானதாக இருந்தால் அனேக தேவ ஊழியர்களுக்கு அவர் வெளிப்படுத்தியிருப்பார்.///
பவுலுக்கு வெளிப்படுத்தபட்ட அனேக காரியங்கள் வேறு எந்த அப்போஸ் தலருக்கும் வெளிபடுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை சகோதரரே. பேதுருவே அதை குறித்து அறிவதற்கு அரிதாய் இருக்கிறது என்று எழுதியிருக்கிறார். ஆனால் அதை அவர் பொதுவாக எழுதிவைத்திருக்கிறார்.
ஆனால் நான் இங்கு எழுதுவது புதிய வெளிப்பாடு அல்ல! நான் ஏதாவது புதிய வெளிப்பாட்டை எழுதினால் தாங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. எழுதப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு கால காலமாக ஏதோ ஒரு விளக்கத்தை தொடர்ந்து நம்பிவருவோருக்கு, சற்று மாறுபட்ட விளக்கம் கொடுக்கிறேன். இதில் புதிய வெளிப்பாடு இருப்பது போல் எனக்கு தெரியவில்ல சகோதரரே!
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை
இந்த வசனத்தின் அடிப்படையில் ஒருவன் இயேசுவின் வார்த்தையை கைக்கொண்டால் எந்த மரணத்தையும் காண்பதில்லை என்று சொல்கிறேன். இதில் வெளிப்பாடு என்று சொல்ல என்ன இருக்கிறது? இது இந்த மரணத்தைத்தான் குறிக்கிறது என்று திட்டமாக யாருமே சொல்லிவிட முடியாது.
BRO. SANDHOSH wrote:
///அவ்வாறு தேவையில்லாத பட்சத்தில் அது நமக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டதாகும். அதை பிறருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.///
வசனத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் விளக்கங்கள் அனைத்தும், வசனத்தை தவறான நோக்கிலேயே அனுமாதித்து வரும் அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய ஓன்று. அதை நாம் சொல்லியே ஆகவேண்டும் இல்லையேல் "எனக்கு தெரிவிக்கபட்டத்தை நான் மறைத்துவைத்த குற்றத்துக்கு ஆளாக நேரிடும்"
வசன ஆதாரம் இல்லாமல் தெரிவிக்கபட்டுள பல காரியங்கள் நமக்கு மாத்திரம் எனக்கே உறியதாக இருக்கலாம் என்று கருதி அப்படிபட்ட அனேக காரியங்களை நான் எழுதாமல் விட்டிருக்கிறேன்.
BRO. SANDHOSH wrote:
///அது போலவே சரீர மரணத்தை சந்திக்காமல் இருப்பது என்பது சுந்தர் அவர்களுக்கு வேண்டுமானால் பெரிய ஆசிர்வாதமாக இருக்கலாம். எனக்கு அப்படியில்லை.///
நான் எதற்க்காக மரணத்தை ஒருவர் ஜெயிக்கவேண்டும் என்று எழுதுகிறேன் என்பதை புரியாமலும் நான் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் மத்தியிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன் எனபதை அறியாமலும் ஏதோ எனக்கு பெருமை தேடிக்கொள்ள எழுதுவதுபோல் பாவித்து கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள்.
ஒருவர் மரணத்தை ஜெயித்தல் என்பதுதான் "ஜெயம்கொள்ளுதல்" என்ற முடிவான நிலை. அது எனக்காகவோ அல்லது உங்கள் விருப்பத்துக்க்காகவோ அல்ல! சாத்தானுக்கு முடிவை கொண்டுவரும் அந்நிலை சாத்தானின் கட்டுபாட்டில்
பாதாளத்தில் வேதனைப்படும் அனேக ஜனங்கள் மீட்கப்படவும், இந்த உலகத்தில் சாத்தானின் வெறிச்செயலால் சொலலொண்ணா வேதனையை அனுபவிக்கும் மக்கள் விடுபடவும் தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் புதிய உலகம் நிர்மாணித்தல் அனைத்துக்கும் அது அவசியம் என்பதாலேயே அதை இவ்வளவு அதிகமதிகமாக சொல்லி வருகிறேன். மற்றபடி உங்கள் ஆசீர்வாதத்துக்கோ அல்லது எனது நன்மைக்காகவோ அல்ல! நான் நீண்டநாள் வாழ்வேனா இல்லையா என்பது எனக்கு முக்கியம் அல்ல!
"ஜெயம்கொள்பவன்" என்பது குறித்து நான் சொல்வது என்னவெனில்:
வேதத்தில் வரும் ஒரே வார்த்தை வெவேறு இடங்களில் வெவேறு கருத்தை குறிப்பதாக அமைய வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் அறிய முடியும். உதாரணமாக "நல்லவன்" "நீதிமான்" போன்ற பதங்களை எடுத்துகொண்டால் சில இடங்களில் சிலரை நல்லவன் என்றும் நீதிமான் என்றும் சொல்லும் வேதம் சில இடங்களில் "நல்லவன் ஒருவனும் இல்லை" "நீதிமான் ஒருவனும் இல்லை" என்று சொல்வதை பார்க்கமுடியும். அதுபோல் பாதாளம், நித்திய அக்கினி, மிருகம் போன்ற அனேக வார்த்தைகள் பல்வேறு பொருளில் வேதாகமத்தில் வந்துள்ளது.
உலகப்பிரகாரமான உதாரணமாக "பாஸாகுதல்" என்ற வார்த்தை ஒண்ணாம் கிளாஸ் பாசானவனையும் குறிக்கும் IAS பாஸ் ஆனவனையும் குறிக்கும். அது போல் "ஜெயித்தல்" அல்லது "வெற்றி பெறுதல்" என்ற வார்த்தை ஒரு விளையாட்டில் வெற்றி பெறுவதில் இருந்து அமெரிக்க அதிபர்போட்டியில் வெற்றி பெறுவது வரை எல்லாவற்றையும் குறிக்கும் வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் "ஜெயம்கொள்ளுதல்" என்ற வார்த்தையானது எல்லா இடத்திலும் ஒரே ஒரு ஜெயம்கொள்ளுதலை மாத்திரம் குறிக்கவில்லை. ஒரு ஜெயம்கொள்ளுதலை இன்னொரு ஜெயம்கொள்ளுதலோடு ஒப்பிட்டு குழப்பகூடாது. இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக நின்று தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து சத்துருவை ஆவிக்குரிய நிலையில் வெற்றிகொண்டவர்களும் "ஜெயம் கொண்டவர்களே"! மேலும் சில ஜெயங்கொள்ளுதல்கூட வேதத்தில் உள்ளது!
ரோமர் 8:37இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
I கொரிந்தியர் 15:57
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
நாம் ஆண்டவராகிய இயேசுவும் கூட ஜெயம்கொண்டவரே!
வெளி 5:5இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
ஆனால் நான் இங்கு எழுதும் "மரணத்தை ஜெயித்தல் மற்றும் ஜீவ விருட்சத்தின் கனியை புசித்தல்" என்னும் "ஜெயம்கொள்ளுதல்" முற்றிலும் வேறான ஓன்று!
BRO. SANDHOSH wrote:
///ஆனால் இந்த வசனங்களில் ஒரே ஒருவர் மட்டுமே சரீர மரணம் அடையாமல் தப்பிப்பார் எனவும் மற்றவர்கள் யாருக்கும் இந்த அருகதை கிடையாது என எங்கும் சொல்லப்படவில்லை என்றே நம்புகிறேன்.////
சபையில் இருக்கும் எல்லோருக்குமே ஜெயம் கொள்ளவும் ஜீவவிருட்சத்தை புசிக்கவும் அருகதை இருக்கிறது ஆற்றலும் இருக்கிறது. ஆனால் இயேசுவின் வார்த்தைகளாகிய ஒருவன் என் வார்த்தையைக் கைக் கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை (யோ 8:51)என்ற வார்த்தையை நம்பி, அதை அப்படியே தங்கள் வாழ்வில் கைகொண்டு நடக்க எத்தனைபேர் பிரயாசம் எடுக்கிறோம். இயேசுவின் வார்த்தைகளுக்காக தனக்குண்டானவற்றை எல்லாம் விட்டுவிட்டவர்கள் எத்தனைபேர்? சபையில் இருக்கும் மொத்த கூட்டத்தையும் பார்த்துதான் ஆவியானவர் இவ்வாறு சொல்கிறார்!
வெளி 2:7ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது.
ஆனால் ஆவியானவர் சபையில் இருக்கும் மொத்த ஜன கூட்டத்தையும் பார்த்து "ஜெயம்கொள்ளுகிறவன் எவனோ, அவன்" என்று சொல்லுவது ஒரே ஒருவனைத்தான். அந்த ஒருவன்தான் ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க
முடியும்!
அது யாரால் நடந்தாலும் அங்கு அவன் பெருமை பாராட்ட எந்த முகாந்திரமும் இல்லை ஏனெனில் அந்தகாரியம் அவனுள் இருக்கும் தேவ ஆவியான்வராலேயே ஆகும். எப்படி ஒரேஒரு ஆதாம் நன்மை தீமை அறியும் கனியை புசித்ததால்
மொத்த மனுஷ கூட்டமும் நன்மைதீமை அறியும் நிலையை அடைந்ததோ, அதேபோல் ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கும் ஒருவன் மூலமே மொத்த மனுஷ கூட்டமும் ஜீவனை பெரும். அதற்க்கு பின்னர் பெல்வேறு ஜெயம் கொள்ளுதலை பெற்றி வேதம் சொல்கிறது. ஆனால் ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கும் ஜெயம்கொள்பவன் ஒருவனே என்பதை கீழ்கண்ட வசனம் ஒருமையில் மிக தெளிவாக சொல்கிறது.
வெளி 21:7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
அந்த ஒருவரை குறித்துதான் இங்கு வசனம் குறிப்பிடுகிறது
உன்னதப்பாட்டு 6:9என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
இந்த நிலையை அடைவதற்கு நாம் அனைவரும் செய்யவேண்டிய ஒரே காரியம் என்ன?
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருமே பாக்கியவான்களே! ஆனால்
மேலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள தரிசனங்கள் எல்லாமே ஆவிக்குள்ளான யோவானுக்கு ஆவியில் தெரிவிக்கப்ட்டவைகளும் ஆவியில் நிறைவேரக்கூடியவைகளுமாகும். அவைகளை ஆவிக்குரிய கண்களினால் மாத்திரமே பார்க்க முடியும். எழுதப்பட்டுள்ள பல காரியங்கள் என்றோ நிறைவேரப்பட்டுள்ள நிலையில் மாம்ச கண்களுக்கு வெளிப்படையாக அது தெரியவரும்போது எல்லாமே முடிந்துவிடும்.
சமுத்திரத்தில் இருந்து ஒரு மிருகம் வரும் என்றோ அல்லது எவராவது ஒருவர் பெரிய முத்திரையை கொண்டுவது போடவருவார் என்றோ, அல்லது சிகப்புநிற மிருகத்தின்மேல் ஸ்திரி ஏறி வருவாள் என்றோ அல்லது சூரியனில் ஒரு தூதன் வந்து நிற்ப்பார்கள் என்றோ எதிர்பார்த்து, மாம்ச கண்களால் அதை பார்க்கலாம் என்று காத்திருந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்பது எனது கருத்து!
மற்றபடி தாங்கள் அதிகமாக ஆராய்ந்து அனேக உண்மைகளை கண்டுகொண்டவர், யார் சொல்வது உண்மையில் நிறைவேறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். ஆனால் அதற்குள் அவசரப்பட்டு நான் எழுதுவதை ரீல் ரொம்ப ஓவர் என்று எழுதுவது தாங்கள் பர்வைக்கு நியாயமாக இருந்தால் சரி! அனால் நான் சரியான உண்மையை அறியாமல் எனக்கு தெரியாத காரியங்களை யார் சொன்னாலும் அதை ரீல் என்று சொல்ல விரும்புவது இல்லை. அப்படி சொல்வோமாகில் அதுகுறித்து தேவனுக்கு கணக்குஒப்புவிக்க வேண்டிய அவசியம் வரலாம் என்று பயந்திருக்கிறேன்.
-- Edited by SUNDAR on Friday 28th of October 2011 04:13:00 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
திரு. சுந்தர் அவர்கள் நான் மரணத்தை குறித்த அவருடைய தவறான உபதேசங்களை எதிர்த்து விட்டு ஓடிவிட்டதாக கருதுவதால் இதனை தொடர்கிறேன். "உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள்" "நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து கேட்டு எழுதுபவன் எனவே என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்" போன்ற பம்மாத்து இன்றி வசன ஆதாரத்தோடு பதில் தருவார் என்று நம்புகிறேன்.
//இயேசுவை ஏற்றுக்கொண்டு மரணத்தில் இருந்து விடுதலை பெற்றவர்கள் பூமியில் தொடர்ந்து வாழும் நாட்களில் இயேசுவின் வார்த்தைகளை மீறி, மீண்டும் மரணத்துக்கேதுவான பாவங்களை செய்யும்போது அவர்களை மீண்டும் மாம்ச மரணம் ஆட்கொண்டுவிடுகிறது. //
மரணத்தில் இருந்து விடுதலை பெற்றவர்கள் மீண்டும் பாவம் செய்தால் அதை கழுவுவதற்கு கிறிஸ்துவின் ரத்தத்திற்கு சக்தி இல்லையா? அது என்ன "மீண்டும் மரணத்துக்கேதுவான " பாவம்? விடுதலை பெற்ற பின்பு பாவம் செய்தால் அது எப்படி மன்னிக்கப்படும்?
கிறிஸ்துவை சாகும் தருவாயில் ஏற்று கொண்ட கள்வன் மீண்டும் தொடர்ந்து வாழ்ந்த சில மணித்துளிகளில் பாவம் செய்யவில்லை பின்ன ஏன் மரித்தான்?
கிழே உள்ள வசனத்தின் படி மரணம் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது என்று காண்கிறோம். நீங்கள் போதிப்பது விரோதமாக உள்ளதே?
எபிரெயர் 9:29 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
இரட்சிக்கப்பட்டவர்களும் நாங்கள் பாவம் செய்கிறதில்லை என்று சொல்லி தேவனை பொய்யராக்க கூடாது என்று யோவான் சொல்லுகிறாரே?
திரு. சுந்தர் அவர்கள் நான் மரணத்தை குறித்த அவருடைய தவறான உபதேசங்களை எதிர்த்து விட்டு ஓடிவிட்டதாக கருதுவதால் இதனை தொடர்கிறேன். "உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள்" "நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து கேட்டு எழுதுபவன் எனவே என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்" போன்ற பம்மாத்து இன்றி வசன ஆதாரத்தோடு பதில் தருவார் என்று நம்புகிறேன்.
பம்மாத்து பண்ணிக்கொண்டு இருப்பவன் நான் அல்ல சகோதரரே! நான் கொடுக்கும் வசனஆதாரங்களை ஏற்க்கமுடியாமல் அதை விசுவாசிக்கும் அளவுக்கு உருதியான இருதயம்இல்லாமல், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாமல் தடுமாறும் தாங்கள்தான்!
நீங்கள் என்ன கேள்வியை முன்வைத்தாலும், உடனே முடியவில்லை என்றாலும் சில நாட்களுக்குள் என்னால் பதில் தரமுடியும். இப்பொழுதுதான் தாங்கள் சரியான சில கேள்விகளை முன் வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. இப்படி தங்கள் மனதில் உண்டாகும் சந்தேகங்களை கேட்டால்தான் எனக்கும் வேதத்தை இன்னும் ஆராயவும், நான் சொல்லும் காரியங்கள் வேத வெளிச்சத்தில் சரியானதுதான் என்பதை நிரூபிக்கவும் வாய்ப்பு உண்டாகும்.
John wrote:
////மரணத்தில் இருந்து விடுதலை பெற்றவர்கள் மீண்டும் பாவம் செய்தால் அதை கழுவுவதற்கு கிறிஸ்துவின் ரத்தத்திற்கு சக்தி இல்லையா? அது என்ன "மீண்டும் மரணத்துக்கேதுவான " பாவம்? விடுதலை பெற்ற பின்பு பாவம் செய்தால் அது எப்படி மன்னிக்கப்படும்?////
இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பின் செய்யப்படும் பாவங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஓன்று மரணத்துக்கேதுவான பாவம்
இன்னொன்று மரணத்துக்கேதுவல்லாத பாவம். இதை குறித்து யோவான் இவ்வாறு சொல்கிறார்
I யோவான் 5:16மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
I யோவான் 5:17அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும்மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
இந்த இரண்டு விதமான பாவத்தில் "மரணத்துக்கேதுவான பாவத்திலேயே" "முதல் மரணத்துகேதுவான பாவம்" "இரண்டாம் மரணத்துக்கேதுவான பாவம்" என்று உண்டு.(அது குறித்த விளக்கங்கள் பழைய ஏற்பாட்டை ஒரு மூன்றுதரம் படியுங்கள் தெரியவரும்) இதில் எல்லா பாவங்களையும் மன்னிக்க கிறிஸ்த்துவின் இரத்தத்துக்கு சக்தி இருந்தாலும், இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவங்கள் கழுவப்பட்டவர்கள் பின்னும் மரணத்துக்கேதுவான பாவம் செய்தால் அவர்கள் மாம்சத்தில் மரித்தே ஆகவேண்டும். அங்கு வேறொரு பலி இல்லை என்று வேதம் சொல்வதோடு அதை குறித்து வேண்டுதல் செய்வதற்கு யோவானே சொல்லவில்லை.
John wrote:
////கிறிஸ்துவை சாகும் தருவாயில் ஏற்று கொண்ட கள்வன் மீண்டும் தொடர்ந்து வாழ்ந்த சில மணித்துளிகளில் பாவம் செய்யவில்லை பின்ன ஏன் மரித்தான்?///
சகோதரரே அந்த நேரத்தில் ஆண்டவராகிய இயேசுவே மரணத்தை ஜெயித்திருக்கவில்லை பிறகு கள்ளன் எவ்வாறு ஜெயிக்க முடியும்?
அடுத்து ஜீவதிபதியாகிய இயேசுவே அவனுக்கு இவ்வாறு தீர்ப்பு கொடுத்துவிட்டார் "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் (லூக்கா 23:43) அதற்க்கு பின்னர் வேறு கேள்வி ஏது?
John wrote:
/////கிழே உள்ள வசனத்தின் படி மரணம் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது என்று காண்கிறோம். நீங்கள் போதிப்பது விரோதமாக உள்ளதே? எபிரெயர் 9:29 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,////
இந்த கேள்விக்கு நான் ஏற்கெனவே விளக்கம் கொடுத்துவிட்டேன் அதாவது "ஒரே தரம் மரிப்பது" என்று சொன்ன பவுலே மரிக்காமல் மறுரூபம் ஆகுதலையும் பற்றி எழுதியிருக்கிறார். எனவே இரண்டு வார்த்தைக்குமே அதற்க்கு தகுந்த வல்லமை உண்டு. ஒரு வசனம் இன்னொரு வசனத்தை செயலிழக்க செய்ய முடியாது. அவரவர் விசுவாசத்தின் அடிப்படையில் அவரவருக்கு நிறைவேறும். அதாவது ஒருவர் "நான் ஒரு தரம் மரித்தேதான் தீருவேன்" என்று விசுவாசித்தால் அது அவ்வாறே நிகழும். இல்லை "நான் நித்திரை அடையாமல் மறுரூபமாவேன்" என்று விசுவாசித்தல் அது அப்படியே நிகழும். ஒருவர் விசுவாசத்தை இன்னொருவர் மீது திணிக்க முடியாது!
John wrote:
/////இரட்சிக்கப்பட்டவர்களும் நாங்கள் பாவம் செய்கிறதில்லை என்று சொல்லி தேவனை பொய்யராக்க கூடாது என்று யோவான் சொல்லுகிறாரே? I யோவான் 1:8 நமக்குப் பாவமில்லையென் போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. I யோவான் 1:10 நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது/////
சகோதரரே நான் பாவம் செய்யவில்லை என்று எங்காவது எழுதியிருந்தால் எனக்கு சுட்டிகாட்டுங்கள். பாவத்தால் நிறைந்துள்ள இந்த பூமியில் யாருமே பாவம் எதுவும் செய்யாமல் வாழமுடியாது. நானும் இன்றுவரை ஏதாவது ஒரு காரியத்தில் மீறுதல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆகினும் வசனத்தின் அடிப்படையில் தெரிவிக்கபட்டத்தை போதித்து "இயேசுவின் வார்த்தைகள்படி வாழ்ந்து பாவம் செய்யாமல் வாழ பிரயாசம் எடுக்கவேண்டும்" என்று எழுதுகிறேன் நானும் முயற்ச்சிக்கிறேன். ஆனால் இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகு நான் மரணத்துக்கேதுவான பாவம் செய்யவில்லை என்று எனக்குள் நிச்சயித்திருக்கிறேன். மரணத்துகேதுவல்லாத பாவங்களுக்கு எல்லாமே வேண்டுதலின் பேரில் மன்னிப்பு உண்டு என்று யோவான் சொல்கிறார். எனவே
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசுவின் வார்த்தையை சரியாக கைகொண்டு அவர் சொல்லியிருக்கும் நிலையை நான் எட்டினால் அவர் சொல்வதுபோல் நான் மரணத்தை ஜெயிப்பேன். இல்லையெனில் வாஞ்சையுடன் அவரது வார்த்தையை கைகொள்பவர் யாராவது ஜெயிக்கட்டும் என்று எழுதி வைக்கிறேன். அவ்வளவே! ஆனால் போதிய விசுவாசம் இல்லாத மனுஷர்கள் எல்லோரும் சேர்ந்து அவர் வார்த்தையின் அடிப்படையையே மாற்றிவிட்டது அறிந்து நானும் அதிகம் வேதனை படுகிறேன்
சகோதரரே! ஒருவேளை அப்படியே தங்களின் விசுவாசம்போல் "முதல் மரணத்தை ஜெயிக்கமுடியாது" என்ற ஒருநிலை இருந்தாலும் இயேசுவின் வார்த்தையை கைகொண்டு ஒருவர் வாழ பிரயாசம் எடுக்கவேண்டும் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லையே. இயேசு சொன்னதைத்தானே நானும் முக்கியபடுத்தி சொல்கிறேன்.
மேலும் ஒன்றை இங்கு நான் தெரிவித்துகொள்கிறேன்! பொதுவான கிறிஸ்த்தவ உபதேசம் சொல்லும் எந்த ஒரு கருத்துக்கும் நான் விரோதமானவன் அல்ல! அதை எல்லாமே அப்படியே ஏற்கும் நான், அதற்க்கு மேலேயுள்ள ஒரு நிலையையும் சேர்த்து சொல்கிறேன். வசன ஆதாரத்தோடு சொல்லும் அதை குறித்து தங்கள் போன்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அதை தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. இதற்க்கு மட்டுமல்ல இன்னும் அனேக கேள்விகளுக்கு தாங்கள் போன்றவர்களுக்கு பதில் தெரியாது ஆகினும் "இவன் எவன் அதைப் பற்றி சொல்ல" என்ற நிலையில் என்னை எதிர்க்கிறீர்கள். நல்லது! நான் என்ன விளக்கம் கொடுத்தாலும் என்னுடய கருத்தை தாங்கள் விசுவாசிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். காரணம் நீங்கள் அந்த நிலையை கடந்துவிட்டீர்கள். இனி அதை விசுவாசிப்பதிலும் தங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இந்நிலையில் இப்படி வீணாக கேள்விகளை கேட்டு என்னிடம் பதிலை எதிர்பாப்பதைவிட, நானும் தங்களுடன் போராடி என்னுடய நோக்கங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் நிற்ப்பதைவிட, என்னுடய கருத்துக்களால் கிறிஸ்த்தவத்துக்கு என்ன பாதிப்பு ஏற்ப்படும் அது எப்படி ஏற்ப்படும் என்பதை குறித்து மாத்திரம் தங்களுக்கு தெரிந்ததை தனிஒரு திரியில் எழுதுங்கள். என்னிடம் எதிர்பார்ப்பது போல தங்கள் கருத்துக்கு தெளிவான வசன ஆதாரம் வேண்டும். அதற்க்கு மாத்திரம் நான் பதில் தருகிறேன். மற்றபடி யாருக்கும் எந்த பாதிப்பும்ஏற்ப்படுத்தாத கருத்துக்களை குறித்து தயவுசெய்து மீண்டும் என்னிடம் கேள்விகளை கேட்கவேண்டாம். .
ஒருவேளை என் எழுத்தால் விசுவாசிகளுக்கு பெரிய பாதிப்பு/ இடறல் எதுவும் இருக்குமானால் நான் எழுதுவதை உடனே நிறுத்தி விடுகிறேன் சகோதரே.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவங்கள் கழுவப்பட்டவர்கள் பின்னும் மரணத்துக்கேதுவான பாவம் செய்தால் அவர்கள் மாம்சத்தில் மரித்தே ஆகவேண்டும். அங்கு வேறொரு பலி இல்லை என்று வேதம் சொல்வதோடு அதை குறித்து வேண்டுதல் செய்வதற்கு யோவானே சொல்லவில்லை.//
தங்களுடைய கூற்றுபடி அப்போஸ்த்தலர்கள் அனைவரும் கிறிஸ்துவை ஏற்று கொண்டபின்பு மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்து இருக்க வேண்டும் ஆகவேதான் மாம்சத்தில் மரித்து இருக்கிறார்கள் என்பது சரியா? பவுல் தன்னிடத்தில் எந்த ஒரு குற்றமும் இல்லை என்கிறார் ஆனால் அவர் மரணத்துக்கேதுவான பாவம் செய்தவர் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்!
I கொரிந்தியர் 4:4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
கிறிஸ்துவினால் வரும் பாவ மன்னிப்பின் மூலம் மரணத்தை ஜெயிக்கலாம் என்று பவுல் அறிந்திருந்தால் இப்படி எழுதுவாரா?
பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
//அவரவர் விசுவாசத்தின் அடிப்படையில் அவரவருக்கு நிறைவேறும். அதாவது ஒருவர் "நான் ஒரு தரம் மரித்தேதான் தீருவேன்" என்று விசுவாசித்தால் அது அவ்வாறே நிகழும். இல்லை "நான் நித்திரை அடையாமல் மறுரூபமாவேன்" என்று விசுவாசித்தல் அது அப்படியே நிகழும். ஒருவர் விசுவாசத்தை இன்னொருவர் மீது திணிக்க முடியாது! //
இதற்க்கு என்ன வேத ஆதாரம் இருக்கிறது? ஒருவன் நான் நித்திரை அடையாமல் மறுரூபமாவேன் என்று விசுவாசித்தல் அது அப்படியே நிகழும் என்று எழுதி இருக்கிறதா? (விசுவாசித்தால் எல்லாம் கூடும் என்ற வசனத்தை காண்பிக்காதீர்கள் அது யார் இரட்சிக்கப்பட கூடும் என்ற சிஷர்களின் கேள்விக்கு கிறிஸ்துவின் பதில் அதாவது "எப்பேர்பட்ட பாவியோ அல்லது பணக்காரனோ கிறிஸ்துவை விசுவாசித்தால் அவன் ரட்சிக்கபடுவான்")
////இந்த கேள்விக்கு நான் ஏற்கெனவே விளக்கம் கொடுத்துவிட்டேன் அதாவது "ஒரே தரம் மரிப்பது" என்று சொன்ன பவுலே மரிக்காமல் மறுரூபம் ஆகுதலையும் பற்றி எழுதியிருக்கிறார்.//
என்ன எழுதியிருக்கிறார்? கிறிஸ்து வரும்போது உயிரோடு இருப்பவர்கள் மரிக்காமல் மறுரூபம் ஆவார்கள் என்றுதான் வசனம் சொல்லுகிறது.
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
I கொரிந்தியர் 15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
I தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
//யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.//
கிறிஸ்து இந்த வசனத்தின் அர்த்தத்தை பின்னே வரும் வசனங்களில் சொல்லுகிறார். வசனம் , அதிகாரம் போன்ற பிரிவுகள் 15 ஆம் நுற்றாண்டில் தான் கொண்டுவரப்பட்டது. நிருபங்களை முழுமையையும் வாசித்து அர்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் ஏதோ வேதத்தை அம்புலிமாமா புத்தகம் போல வியாக்கியானம் செய்கிறீர்கள்!
பரிசேயர்களும் திரு.சுந்தரை போல ஆபிரகாம் மரிக்கவில்லை என்று இயேசு சொல்லுவாதாக நினைத்து விட்டார்கள்.
யோவான் 8:52 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.
ஆனால் இயேசு அவன் மரிக்கவில்லை என்று சொல்லாமல் , அவன் மரித்தாலும் உயிரோடு இருக்கிறான் என்கிறார். அதையே ஒருவன் மரிப்பதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்!
யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
//சகோதரரே அந்த நேரத்தில் ஆண்டவராகிய இயேசுவே மரணத்தை ஜெயித்திருக்கவில்லை பிறகு கள்ளன் எவ்வாறு ஜெயிக்க முடியும்? //
இயேசு மற்றவர்களின் பாவத்தை (கள்ளனின் பாவத்தையும் சேர்த்து) சுமந்ததால் மரித்தார். ஆனால் கள்ளன் அப்படி இல்லையே? அவன் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது பிறகு அவன் பாவமே செய்யவில்லை பின்னே ஏன் மரித்தான்?
ஸ்தோவான் ஏன் மரித்தான். இரட்சிக்கப்பட்ட அதே வருஷத்திலே மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்யாமல் மரித்து போனானே?
மரணத்தருவாயில் அவரை ஏற்று கொள்ளுபவர்கள் ஏன் மரிக்க வேண்டும்?
எலிசபெத்தும், சகரியாவும் ஏன் மரிக்க வேண்டும்?
லூக்கா 1:6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
கேள்விகள் சுற்றி சுற்றி மீண்டும் தொடங்கிய முதல் இடத்துக்கே வந்துவிட்டது போல தெரிகிறது. இந்த விவாதத்துக்கு முடிவு காண்பது கஷ்டம்தான். இயேசுவின் வார்த்தைகள் சொல்வதுபோல் முயற்சி செய்து வாழ்ந்துபார்த்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இதைதவிர வேறுவழி இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.யோ 14:15
என்று இயேசு சொல்வதால், அவர் கற்ப்பனைபடி வாழ்ந்தால் இறுதி நாளில் ஏதாவது ஒரு நன்மை நிச்சயம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் ஐயா.
//இயேசுவின் வார்த்தைகள் சொல்வதுபோல் முயற்சி செய்து வாழ்ந்துபார்த்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இதைதவிர வேறுவழி இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.யோ 14:15 என்று இயேசு சொல்வதால், அவர் கற்ப்பனைபடி வாழ்ந்தால் இறுதி நாளில் ஏதாவது ஒரு நன்மை நிச்சயம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் ஐயா.//
கிறிஸ்துவினால் வரும் நீதியினால் இரட்சிக்கப்பட்ட ஒருவன் நிச்சயமாக அதை கிரியைகளில் வெளிப்படுத்துவான். அந்த கிரிகைகள் இரட்சிப்பின் விளைவே தவிர காரணம் அல்ல! (Good works are not cause but effect) இரட்சிக்கபட்டவன் கிறிஸ்துவோடு நித்திய காலமாய் இருப்பான். அவரோடு இருப்பதை விட வேறு என்ன நன்மையை எதிர்பார்கிறீர்கள் என்று தெரியவில்லை? அவரோடு இருப்பதை தவிர பெரிய நன்மை வேறு ஏதும் உண்டா? இந்து புராணங்களில் தான் சரிர மரணத்தை எப்படி வெல்வது, வென்று இந்த பாவ உலகில் இன்னும் எப்படி வாழலாம் என்று உலக பிரகாரமாக சிந்திப்பார்கள். ஒரு உண்மை கிருஸ்தவனுக்கு இயேசு எப்போ வருவார் அல்லது நான் எப்போது மரித்து அவரிடம் போவேன் என்பதே சிந்தனையாக இருக்கும்.
எபிரெயர் 11:38 உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை
I கொரிந்தியர் 7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
பிலிப்பியர் 1:23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
இது ரொம்ப அவசியமான விவாதம். திரு. சுந்தர் அவர்கள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
இன்னும் அவரோடு திரித்துவம், சோதிகளின் பிதா , இரட்சிப்பிற்குரிய மற்ற வழிகள் மற்றும் மறுபிறப்பு கொள்கை (Reincarnation) போன்றவற்றை குறித்தும் விவாதிக்க வேண்டும்.
இதைபோன்ற அனேக முரண்பாடுகள் ஏன் நம் கிறிஸ்துவர்களிடம் தோன்றுகின்றது என கவனிக்கும் பொது ஒன்றை அறிந்து கொண்டேன்..இவைகள் செத்த கிரியையின் வெளிப்பாடுகளே..
இந்து மதத்தில் இருந்து மாறின சில சகோதரர்கள் இன்னும் விசுவாசிப்பது என்ன என்றால் .. ஒரு ஊருக்கு போகும் நிறைய வழியை போன்றது போல எந்த கடவுளையும் கும்பிடலாம்..உண்மையாய் கும்பிடும் போது கடவுள் ரட்சிப்பார் என்று விசுவசிப்பது..
இந்து மதத்தில் உள்ளது போல நம் தேவனையும் அனேக ஆள் தத்துவத்துடன் ஒப்பிடும் ஒரு செத்தகிரியையின் செயலை உடையவராக காணபடுவது..
ஆள்தத்துவதை அவதாரம் என எண்ணி வியாக்கினம் செய்வது..
ஏசுவின் அம்மாவும் கடவுளே என அவரையும் கும்பிடுவது..
பரிசுத்தவான்களையும்,வான ராக்கினியையும்,சம்மனசுகளையும் எங்களுக்காக வேடிகொள்ளும் என பரிசுத்த ஆவியின் இடத்தை பரிசுத்தவான்களுக்கு கொடுக்கும் கத்தோலிக்க விசுவாசமும் ஒரு செத்தகிரியைய்யின் வெளிப்பாடு என்பது எனது கருத்து...
மரியாள் பரம் ஏறினாள் என வசன விரோதமாய் சாட்சி இடுவது..
மூன்று ராஜாகளுக்கு (ஞானிகளுக்கு)பொங்கல் வைப்பது..வனத்து சின்னபருக்கு ஆடு வெட்டுவது..
ஆலயங்களுக்கு பரிசுத்தவான்கள் என தாங்கள் கருதுபவர்களின் பெயர்களை சுட்டும் பழக்கமும் இவ்வாறானதே..இது வேத அடிப்படை அட்றதே...
இறுதி காலத்தில் வாழ்கிறோம் சகோதரர்களே.. என்னால் அனேக காரியங்களை பேசவும்,வினவவும் முடியும்..தேவகிருபைக்கு காத்திருக்கிறேன்..
////அவரவர் விசுவாசத்தின் அடிப்படையில் அவரவருக்கு நிறைவேறும். அதாவது ஒருவர் "நான் ஒரு தரம் மரித்தேதான் தீருவேன்" என்று விசுவாசித்தால் அது அவ்வாறே நிகழும். இல்லை "நான் நித்திரை அடையாமல் மறுரூபமாவேன்" என்று விசுவாசித்தல் அது அப்படியே நிகழும். //
JOHN Wrote:
////இதற்க்கு என்ன வேத ஆதாரம் இருக்கிறது? ஒருவன் நான் நித்திரை அடையாமல் மறுரூபமாவேன் என்று விசுவாசித்தல் அது அப்படியே நிகழும் என்று எழுதி இருக்கிறதா?////
தங்களின் விசுவாசம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது சகோதரரே. வேத வசனங்கள் எல்லாமே விசுவாசித்து பெற்றுக் கொள்ளத்தான் ஆவியானவரால் எழுதப்பட்டிருக்கிறது . ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக இதை விசுவாசித்தல் இப்படி நடக்கும் என்று எழுதினால்தான் விசுவாசிப்பீர்களா? வேத வார்த்தைகளை சந்தேகப்படாமல் விசுவாசித்தல் தேவனின் மகிமையை நிச்சாயம் காண முடியும்.
யோவான் 11:40இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்
(விசுவாசித்தால் எல்லாம் கூடும் என்ற வசனத்தை காண்பிக்காதீர்கள் அது யார் இரட்சிக்கப்பட கூடும் என்ற சிஷர்களின் கேள்விக்கு கிறிஸ்துவின் பதில் அதாவது "எப்பேர்பட்ட பாவியோ அல்லது பணக்காரனோ கிறிஸ்துவை விசுவாசித்தால் அவன் ரட்சிக்கபடுவான்"////
மாற்கு 9:23இயேசு அவனை நோக்கி:நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும்என்றார்.
"எல்லாம் கூடும்" "All things என்பதன் பொருள் தெரியாதா சகோதரரே? "அது இதற்குதான்" சொல்லபட்டது என்று சொல்லி "எல்லாம் கூடும்" என்ற இயேசுவின் வார்த்தையை மட்டுபடுத்தி ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து ஏன் புரட்டுகிறீர்கள்!
மத்தேயு 8:13பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார்
மத்தேயு 9:29அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
இந்த வசனத்தின் அடிப்படையில் அவரவர் எப்படி விசுவாசிக்கிறாரோ அப்படியே நடக்கும்! இயேசுவின் உடையை தொட்டால் குணமாகும் என்று விசுவாசித்த இஸ்திரி குணமானாள் அதுபோல் இயேசுவின் வார்த்தைகள்படி நடந்தால் முதல் மரணத்தை ஜெயிக்கக முடியும் என்று விசுவாசித்தல் அது அப்படியே நடக்கும்.
அதை குறித்துதான் நானும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அப்படி கிறிஸ்த்து வரும்போது மறியாமல் மறுரூபம் ஆகும் தகுதிதான் மரணத்தை காணாத நிலை. இது கடைசி காலம்தானே? பிறகு கிறிஸத்து இப்பொழுது வரமாட்டார் என்று உறுதியாக தங்களால் சொல்ல முடியுமா? அவர் எப்பொழுது வருவார் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அவர் வரும்போது மறுரூபம் ஆகிறவர்கள் பற்றியே மரணத்தை காணாதவர்கள் என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் "மரித்தாலும் பிழைப்பவர்கள்" என்ற நிலைக்குள் அடங்கிவிடுவார்கள்.
JOHN Wrote: /////கிறிஸ்து இந்த வசனத்தின் அர்த்தத்தை பின்னே வரும் வசனங்களில் சொல்லுகிறார். வசனம் , அதிகாரம் போன்ற பிரிவுகள் 15 ஆம் நுற்றாண்டில் தான் கொண்டுவரப்பட்டது. நிருபங்களை முழுமையையும் வாசித்து அர்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் ஏதோ வேதத்தை அம்புலிமாமா புத்தகம் போல வியாக்கியானம் செய்கிறீர்கள்!////
சகோதரரே செங்கடலை பிளந்ததும் யோர்தானை நிறுத்தியதும், சூரிய சந்திரரை நிற்க செய்ததும்கூட அம்புலிமாமா கதை போன்றதுதான். அதை செய்த தேவனே "மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு" என்று சொல்லியிருக்க, இது மட்டும் நடக்காது என்று ஏன் பிடிவாதமாக நிற்கிறீர்கள்?
மாற்கு 11:23எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்த வார்த்தைகள் கூட அம்புலிமாமா வார்த்தைகள்போல்தான் இருக்கிறது சகோதரரே. இன்றுவரை யாராவது அவ்வாறு செய்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால நான் சொல்கிறேன் முடியும்! எப்படி முடியும் என்றால் விசுவாசத்தை தொடங்குகிறவர் தொடங்கினால் அது முடியும். தேவன் உருவாக்கும் அந்த விசுவாசம் எப்படியிருக்கும்
என்பதையே அறயாத தாங்கள் போன்றோர் இதுபோன்ற கேள்வி கேட்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. வேத வார்த்தைகள் மீதுள்ள அதீத விசுவாசம் என்பது நாம் பிரயாசப்பட்டு உருவாக்குவது அல்ல அந்த விசுவாசத்தை உருவக்குகிறவரும் முடிப்பவரும் தேவனே! வசன ஆதாரத்தோடு தேவன் உருவாக்கும் எந்த விசுவாசமும் நிச்சயம் நிறைவேறியே தீரும்.
JOHN Wrote: ////பரிசேயர்களும் திரு.சுந்தரை போல ஆபிரகாம் மரிக்கவில்லை என்று இயேசு சொல்லுவாதாக நினைத்து விட்டார்கள். யோவான் 8:52 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். ஆனால் இயேசு அவன் மரிக்கவில்லை என்று சொல்லாமல், அவன் மரித்தாலும் உயிரோடு இருக்கிறான் என்கிறார். அதையே ஒருவன் மரிப்பதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்!
யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்./////
இயேசுவை தேவ குமாரன் என்று நம்பாத பரிசேயர்கள் சொன்ன வார்த்தைகளை கொண்டுவந்து இயேசுவையும் அவர் வார்த்தைகளையும் அப்படியே நம்பும் என்னிடம் சொல்லி அதுபோல் இது என்று சொல்கிறீர்கள்.
உண்மையில் பரிசேயர்கள் தங்களை போலவே இயேசுவின் வார்த்தைகளை விசுவாசிக்க முடியாமல் ஒரு கேள்வியை கேட்கிறார்கள் என்பது அந்த வசனத்தில் இருந்து புரியவில்லயா? சரியாக படியுங்கள்:
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று இயேசு சொல்கிறார்
52. அப்பொழுது யூதர்கள் :...... ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். என்கிறார்கள்.
அதாவது, இன்று தாங்கள் சொல்லும் அதே நிலையில் அவர்கள் இருந்தார்கள். எனவே இயேசுவை நோக்கி "அது எப்படி முடியும்? அபிராஹாமில் இருந்து எல்லோரும் மரித்துகொண்டுதானே இருக்கிறார்கள்? என்று கோபத்தோடு கேட்கிறார்கள். இயேசு உடனே "நான் இந்த மாம்ச மரணத்தை பற்றி சொல்லவில்லை இரண்டாம் மரணம் என்றொரு மரணம் இருக்கிறது" அதை பற்றி சொல்கிறேன் என்று சொன்னாரா? இல்லை! அதன் பின்னர் அங்கு விவாதம் மாறுகிறது. இயேசு இவாறு சொல்கிறார். 56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
57. அப்பொழுது யூதர்கள் (அவரின் தெய்வத்தன்மையை நம்பாமல்) அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
இவ்வாறாக விவாதம் போகிறது. இதில் நான் சொல்லும் கருத்துக்கு தேவையான எந்த எதிர் கருத்தும் இல்லை!
அத்தோடு "என்றென்றும் மரிக்காமல் இருப்பது" மற்றும் "மரித்தாலும் உயிரோடு பிழைப்பது" என்று இரண்டு நிலைகளை பற்றி இயேசு இரண்டு வசனத்தில் அடுத்தடுத்து சொல்கிறார். இரண்டும் வெவ்வேறு நிலைகள்.
யோவான் 11:25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
இந்த இரண்டு வசனத்தை சமநோக்கில் ஆராய்ந்தாலே இயேசு எந்த மரணத்தை பற்றி குறிப்பிடுகிறார் என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
25 ம் வசனம் சொல்கிறது "மரித்தாலும் பிழைப்பான்" என்று. இதன் பொருள் "ஒருவன் முதல் மரணத்தை சந்தித்தாலும் அவன் பிழைப்பான்" - இதுவே - I கொரிந்தியர் 15:52எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;
26 ம் வசனம் சொல்கிறது "என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" என்று. இதன் பொருள் "முதல் மரணத்தையே காணாமலே அவன் மரியாமல் இருப்பான்" என்று. இதுவே I கொரிந்தியர் 15:51நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம் என்று சொல்லப்படும்\ நிலை.
JOHN Wrote:
//////இயேசு மற்றவர்களின் பாவத்தை (கள்ளனின் பாவத்தையும் சேர்த்து) சுமந்ததால் மரித்தார். ஆனால் கள்ளன் அப்படி இல்லையே? அவன் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது பிறகு அவன் பாவமே செய்யவில்லை பின்னே ஏன் மரித்தான்? ஸ்தோவான் ஏன் மரித்தான். இரட்சிக்கப்பட்ட அதே வருஷத்திலே மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்யாமல் மரித்து போனானே?
மரணத்தருவாயில் அவரை ஏற்று கொள்ளுபவர்கள் ஏன் மரிக்க வேண்டும்? எலிசபெத்தும், சகரியாவும் ஏன் மரிக்க வேண்டும்? லூக்கா 1:6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்./////
சகோதரரே எங்கு யார் எதற்கு மரித்தார்கள் என்றெல்லாம் சொல்வது எனக்கு தேவையில்லாத காரியங்கள். இயேசு என்ன சொல்லியிருக்கிறார் என்பதுதானா எனக்கு முக்கியம். தாங்கள் போன்ற விசுவாசத்தில் உள்ள ஆட்கள் அனுதினமும் மரித்துகொண்டு இருக்கலாம் அதற்க்கு நான் எதுவும் செய்யமுடியாது. அதற்க்கு பல காரணங்கள் உண்டு.
மேலும் "மரணத்தை ஜெயித்தல்" என்பது தாங்கள் நினைப்பதுபோல் ஒரு சாதாரண காரியம் அல்ல! அதற்க்கு இரண்டு முக்கிய காரியங்கள் நிறைவேற வேண்டும். மேலும் அதற்க்கு சில கால நிர்ணயங்கள் எல்லாம் உண்டு. இயேசுவை ஏற்றுகொண்டால் மட்டும் போதாது அத்தோடு தொடர்புடைய வேறு வசனைகளையும் இணைத்து பார்க்க வேண்டும். அது குறித்தெல்லாம் நான் ஜெயம்கொள்கிறவன் எவனோ என்ற தலைப்பில் எழுதிவிட்டேன்
சுருக்கமாக சொன்னால் "இயேசு தெளிவாக சொல்லியுள்ள வார்த்தைகளை நான் விசுவசிக்கிறேன்" அவ்வளவே அவர் சொன்னால் அது நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் இந்த காரியங்கள் குறித்து சுமார் எட்டு வசனங்கள் உறுதியளிக்கிறது. அதற்க்கு மேலும் இதை நம்பாதவர்கள் மறுரூபம் ஆக முடியாது அவர்களுக்கு முதல் மரணம் நிச்சயம் என்பதை மட்டும் அறிவுறுத்தி கொள்கிறேன்.
தங்கள் கேள்விக்கு நான் இவ்வளவு விளக்கம் எழுதிவிட்டேன். ஆனால் நான் கேட்டிருந்த ஒரே ஒரு கேள்வியை அது தேவையில்லை என்று சொல்லி ஒதுக்கிவிட்டீர்கள். மேலும் "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்- நாங்கள் இரண்டுபேர் என்று இயேசு சொல்ல
காரணம் என்ன? என்று கேட்கபட்ட கேள்வி பதில் இல்லாமல் இருக்கிறது. நான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் தாங்கள் போன்றவர்களின் புரிதலோடு சம்பந்தம் உள்ளது அதற்க்கு யாரும் பதில்சொல்ல விரும்பவில்லை. ஆனால் என்னை மட்டும் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு எனது விசுவாசத்தை அசைத்து பார்க்கிறீர்கள்.
நான் தொடர்ந்து தாங்கள் கேள்விக்கு பதில் தரவேண்டும் என்றால் என்னுடய நான் விசுவாசிக்கும் இந்த கருத்து குறித்து நான் தொடக்கத்தில் இருந்தே தங்களிடம் கேட்டுவரும் இரண்டு சாதாரண கேள்விக்கு தயவுசெய்து பதில் தாருங்கள்.
1. யோவான் 11:25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
இந்த வசனத்தில் இயேசு "மரித்தாலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா?
யோ 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும்மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். இந்த வசனத்தில் இயேசு "மரியாமலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா
சும்மா உங்கள் இஸ்டத்துக்கு முதலில் உள்ளது முதல் மரணம் இரண்டாவது உள்ளது இரண்டாவது மரணம் என்று வசன புரட்டு செய்ய கூடாது. சரியான பதிலை தாருங்கள்.
2. யோவா 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த வசனத்தில் சொல்லபட்டிருப்பது இரண்டாம் மரணம் என்றால், இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டவன் மட்டும்தான் இரண்டாம் மரணத்தை காணாமல் இருக்க முடியுமா? இயேசுவின் மலை பிரசங்கத்தில் போதித்துள்ள எலலா வார்த்தையையும் கருத்தில்கொண்டு பதில் தாருங்கள். தங்கள் விசுவாசத்தில் உள்ள எத்தனைபேர் இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு நடக்கிறீர்கள்? "உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள் இல்லதை இல்லதென்று சொல்லுங்கள்" என்று என்று இயேசு சொல்லியிருக்க அதை கைகொள்ளாது பொய் சொல்பவர்கள் எல்லோருக்கும் இரண்டாம் மரணம் உறுதிதானே? இயேசுவின் வார்த்தை சொல்வதுபோல் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று பிச்சை கொடுக்காத எல்லோருக்கும் இரண்டாம் மரணம் உறுதிதானே?
சகோதரரே, இது ஒரு சாதாரண விஷயம் அல்ல! இறுதி நாளில் நியாயம் தீர்க்கபோவது இயேசுவின் வார்த்தைகள் மட்டும்தான் என்று வேதம் சொல்வதை மறந்துவிட வேண்டாம். பவுல் சொல்லும் வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டு அதை பாவம் செய்ய கிடைத்த லைசென்சாக எண்ணிக் கொண்டு, தேவன் அளித்துள்ள கிருபையை தவறாக தீர்த்து, என்னை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு தங்களுக்கு வரப்போகும் நியாயதீர்ப்பை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டாம். யோசித்து சரியான பதில் தாருங்கள்.
-- Edited by SUNDAR on Wednesday 18th of January 2012 08:42:51 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//தங்களின் விசுவாசம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது சகோதரரே. வேத வசனங்கள் எல்லாமே விசுவாசித்து பெற்றுக் கொள்ளத்தான் ஆவியானவரால் எழுதப்பட்டிருக்கிறது . ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக இதை விசுவாசித்தல் இப்படி நடக்கும் என்று எழுதினால்தான் விசுவாசிப்பீர்களா? வேத வார்த்தைகளை சந்தேகப்படாமல் விசுவாசித்தல் தேவனின் மகிமையை நிச்சாயம் காண முடியும். // விசுவாசம் என்றால் என்ன என்றே உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் சொல்லுவேன்! வேதத்தில் இல்லாத அல்லது வேத விரோதமான ஒன்றை விசுவாசித்தால் அது நடக்குமா?
//"எல்லாம் கூடும்" "All things என்பதன் பொருள் தெரியாதா சகோதரரே? "அது இதற்குதான்" சொல்லபட்டது என்று சொல்லி "எல்லாம் கூடும்" என்ற இயேசுவின் வார்த்தையை மட்டுபடுத்தி ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து ஏன் புரட்டுகிறீர்கள்! // தேவனால் பாவம் செய்யக்கூடும் என்று விசுவாசித்தால் அது நடக்குமா? மலை உச்சியில் இருந்து குதித்தால் மரிக்கமட்டேன் என்று விசுவாசித்து குதிக்க வேண்டியது தானே? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடுமே!! பிசாசு இதையே கிறிஸ்துவிடம் சொல்லி குதிக்க சொன்னான் ஆனால் அவர் மறுத்து விட்டார் ஏனென்றால் அது out of context ல் சொல்லப்பட்டதால். இயேசுவுக்கு விசுவாசம் இல்லையா?
//ஆனால் அவர் வரும்போது மறுரூபம் ஆகிறவர்கள் பற்றியே மரணத்தை காணாதவர்கள் என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் "மரித்தாலும் பிழைப்பவர்கள்" என்ற நிலைக்குள் அடங்கிவிடுவார்கள்.//
அவர் கட்டளைகளை கைகொள்பவனுக்கு மரணமே இல்லை என்று உளறி விட்டு இப்போது ஏன் மாற்றுகிறீர்கள்? அவர் வரும்போது உயிரோடு இருக்கிற கிறிஸ்தவர்கள் மரிக்காமல் மறுரூபம் ஆவர்கள் என்று வேதம் சொல்லுகிறது இங்கே எங்கே கட்டளை வந்தது?
//வசன ஆதாரத்தோடு தேவன் உருவாக்கும் எந்த விசுவாசமும் நிச்சயம் நிறைவேறியே தீரும்.// உண்மைதான்! வசன ஆதாரம் இருகிறதா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி. எல்லாம் கூடும் என்று சொல்லி புரட்டுகளை அவிழ்த்து விடுவது தவறு!
//56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். // இதனுடைய அர்த்தம் ஆபிரகாம் இப்போது உயிரோடு இருக்கிறன் என்பதே! மரணமே இல்லாத நிலை பற்றி இயேசு பேசியிருந்தால் மாம்சத்தில் மரித்துப்போன ஆபிரகாமை ஏன் உதாரணம் கொடுக்கவேண்டும்?
// யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
யோவான் 11:26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். // பவுல் உயிரோடு இருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லையா அப்புறம் ஏன் அவன் மரித்தான்? தங்களுடைய 'பொன்னான' கருத்துப்படி பவுல் மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்தாரா? அல்லது ஸ்தேவான் செய்தாரா?
// "இயேசு தெளிவாக சொல்லியுள்ள வார்த்தைகளை நான் விசுவசிக்கிறேன்" அவ்வளவே அவர் சொன்னால் அது நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் இந்த காரியங்கள் குறித்து சுமார் எட்டு வசனங்கள் உறுதியளிக்கிறது. அதற்க்கு மேலும் இதை நம்பாதவர்கள் மறுரூபம் ஆக முடியாது அவர்களுக்கு முதல் மரணம் நிச்சயம் என்பதை மட்டும் அறிவுறுத்தி கொள்கிறேன்.. //
பவுல் நம்பவில்லையா? பேதுரு நம்பவில்லையா? அவர்கள் ஏன் மரித்தார்கள்?
//1. யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
இந்த வசனத்தில் இயேசு "மரித்தாலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா?//
முதல் அல்லது மாம்ச மரணத்தை
//யோ 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். இந்த வசனத்தில் இயேசு "மரியாமலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா//
இரண்டாவது அல்லது ஆவிக்குரிய மரணத்தை. ஒருவன் உலகத்திற்கு மரித்து கிறிஸ்துவில் பிறக்கும் போது புதிய சிருஷ்டியாய் இருக்கிறான். அவன் சரிரம் மரித்தாலும் ஆவி மரிக்காது (ஆபிரகாம் இப்போது ஆவியில் உயிரோடு தான் இருக்கிறான்). கிறிஸ்துவில் மறுபடியும் பிறந்த ஒருவன் உயிரோடு இருக்கும் போது கிருஸ்துவை ஏற்று கொண்டால் அவன் ஆவியில் அவனுக்கு மரணமே இல்லை !!
// 2. யோவா 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்த வசனத்தில் சொல்லபட்டிருப்பது இரண்டாம் மரணம் என்றால், இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டவன் மட்டும்தான் இரண்டாம் மரணத்தை காணாமல் இருக்க முடியுமா? இயேசுவின் மலை பிரசங்கத்தில் போதித்துள்ள எலலா வார்த்தையையும் கருத்தில்கொண்டு பதில் தாருங்கள்.//
அவருடைய வார்த்தையை கைகொண்டவன், கைகொள்வதின் நிமித்தம் மாத்திரம் தான் பரலோகம் போவான் என்றால் கிறிஸ்து மாத்திரம் தான் பரலோகத்தில் இருப்பார். கிறிஸ்தவம் என்றால் என்ன என்று தெளிவாய் புரிந்து கொள்ளுங்கள்.
எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
எபேசியர் 2:9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
ரோமர் 4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
கிழே உள்ள வசனங்களை அப்படியே எடுத்து கொண்டால் நீங்கள் பரலோகம் போவிர்களா? அல்லது இரண்டாம் மரணம் அடைவீர்களா?
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
//பவுல் சொல்லும் வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டு அதை பாவம் செய்ய கிடைத்த லைசென்சாக எண்ணிக் கொண்டு, தேவன் அளித்துள்ள கிருபையை தவறாக தீர்த்து, என்னை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு தங்களுக்கு வரப்போகும் நியாயதீர்ப்பை //
பரிசேயரை போல என்னை நியாயம் தீர்ப்பதை நிறுத்துங்கள். என் தேவனுக்கும் எனக்கும் தெரியும் நான் கிருபையை லைசென்சாக எண்ணிக் கொண்டு பாவம் செய்கிறேனா அல்லது அவருடையை சிலுவை ரத்தத்தில் நம்பிக்கை வைத்து பரலோக ராஜ்ஜியத்தை பலவந்தம் செய்கிறேனா என்பது. நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்தால் உங்களை மாத்திரம் அல்ல இன்னும் அநேகரை கிருபையில் இருந்து விழ செய்து விடுவீர்கள்!
மரணம், பாவம் என்பது பற்றி வேதம் முதலில் சொல்வது என்னவெனில் மரணம், பாவம் என்பவற்றின் மேல் அதிகாரம் கொண்ட சாத்தானிடமிருந்து இயேசு அந்த அதிகாரத்தை பறித்து கொண்டார் என்பதே.
அதாவது பாவத்தின் விளைவுகளில் மேலும், மரணத்தின் மேலும் சாத்தான் கொண்ட அதிகாரம் நீக்கப்பட்டு அதை இயேசு கிருஸ்து எடுத்து கொண்டார். இதனால் வரக்கூடிய நன்மையை இயேசுவை விசுவாசிப்பவர்கள் பெற்று கொள்ள முடியும்.
ஆனால் இதை ஒருவர் வாழ்வில் எந்த அளவில் பலிக்க பண்ணுவது என்பது தேவனுடைய தீர்மானம் ஆகும்.
இதை மூன்று விதமாக பிரிக்கலாம்.
1. இயேசு கிருஸ்துவை ஏற்று கொண்டதும் தீர்ந்து விடும் பிரச்சனைகள். 2. விசுவாசித்து பெற்று கொள்ளும் தீர்வுகள். 3. அனுபவித்தே ஆக வேண்டிய பிரச்சனைகள். (சில சமயம் இதை அனுபவிக்க வேண்டிய மன தைரியத்தை தருவார்)
இதை மேலும் பார்க்கும் முன் பாவம் என்றால் என்ன என்பது பற்றி பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.
மனிதன் அடையும் துன்பம், பிரச்சனைகள் எல்லாம் பாவத்தின் விளைவாக அவனுக்கு வருவதாகும். இவை வருவதற்க்கு அவன் தன் வாழும் காலத்தில் பாவம் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அல்லது அவன் பெற்றோர்கள் பாவம் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
எந்த பெரிய பாவமும் செய்யாதவர்கள் கூட ஏதாவது நோய் வந்து இறக்க கூடும் அல்லது மிக பெரிய பாவம் செய்தவனை கூட இயேசு கிருஸ்து மன்னித்து அவனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியும்.
சுந்தர் ஆராய்ந்து சொல்வது போல, இது எதனால் இப்படி நடக்கிறது என்பதை சுலபமாக சொல்ல முடியாது. இது மனித அறிவுக்கு மேற்பட்ட அல்லது வேதத்தில் மறைக்கப்பட்ட ஒரு ரகசியமாகும்.
மாமிச மரணத்தின் மேல் இருக்கும் அதிகாரத்தை இயேசு கிருஸ்து எடுத்து கொண்டது உண்மையே. அதை கொண்டு ஒருவனுக்கு சாகா வரத்தை அவர் அளிக்க முடியும் என்பதும் உண்மையே. இப்படிபட்ட ஒருவரை சாது சுந்தர் சிங் தான் சந்தித்ததாக சொல்லியுள்ளார்.
ஆனால் இதை எல்லாருக்கும் அவர் கொடுப்பதில்லை. ஏன் எனில், மனிதனை குறித்த அவரது நோக்கம் அவன் மாமிசத்தில் மரிக்காமல் இருக்க வேண்டும் எனபதோ, உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்து சுகமாக இருக்க வேண்டும் எனபதோ அல்ல.
மனிதன் தன் அடுத்த பரிணாம வளர்ச்சியான கிருஸ்துவை போல ஆக வேண்டும் எனபதே அவரது திட்டம். அதற்கு மாமிசத்தில் எப்பாதும் உயிரோடு இருக்க வேண்டும் என்பது தேவையில்லாதது. ஏனெனில் அவனுக்கு வேறு ஒரு சரீரத்தை கொடுப்பதே அவருடைய திட்டமாகும். அதற்கு மனிதனை தகுதியாக்க கொடுக்கப்பட்ட இடைப்பட்ட நிலையே மாமிச சரீரமாகும்.
அடுத்ததாக மரணத்துக்கேதுவான பாவத்தை செய்வதற்க்கு முன்பாகவே அந்த மனிதனை விட்டு தேவன் விலகி விடுவார் என்று நான் கருதுகிறேன். அவன் மறுபடியும் தான் செய்த பாவத்தை உணர்ந்து தேவனோடு ஒப்புரவாக வேண்டும்.
மனிதனுக்கு வரும் மாமிச மரணம், அவன் இந்த பூமியில் செய்யும் கிரியைகளை வைத்து மட்டும் அவனுக்கு வருவதில்லை.
இது வேதத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ஒரு விஷயமாகும். இதை பற்றி ஆராயலாம் என்றாலும், அவன் பூமியில் செய்யும் பாவம்தான் இதற்கு காரணம் என ஒரு முடிவுக்கு வருவது தவறானதாகும்.
-- Edited by SANDOSH on Thursday 19th of January 2012 07:26:55 PM
வேதத்தில் இல்லாத அல்லது வேத விரோதமான ஒன்றை விசுவாசித்தால் அது நடக்குமா?
**********************************************
எதை வேதத்தில் இல்லாதது என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்?
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லையோவா 8:51
இவ்வளவு தெளிவாக வசனம் இருக்கும்போது இங்கு "இரண்டாம்" என்னும் இல்லாத வார்த்தையை சேர்த்து சொல்லிக்கொண்டு பதில் சொல்லும் நீங்கள்தான் வேதத்தில் இல்லாததை சொல்வது போல் தெரிகிறது.
=========================================
சுந்தர் கேட்டது
//1. யோவான் 11:25 என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
இந்த வசனத்தில் இயேசு "மரித்தாலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா?//
சகோ.ஜான் எழுதியது முதல் அல்லது மாம்ச மரணத்தை
சுந்தர் கேட்டது
//யோ 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
இந்த வசனத்தில் இயேசு "மரியாமலும்" என்று சொல்வது முதல் மரணத்தையா அல்லது இரண்டாம் மரணத்தையா//
சகோ.ஜான் எழுதியது இரண்டாவது அல்லது ஆவிக்குரிய மரணத்தை.
இது என்ன பதில் சகோதரரே? ஒரே இயேசு கிறிஸ்து அடுத்தடுத்து வசனங்களில் "மரித்தாலும்", "மரியாமலும்" என்று சொல்கிறார். ஒன்றை முதல் மரணம் என்றும் இன்னொன்றை இரண்டாம் மரணம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் எங்கிருந்து தங்களுக்கு கிடைத்தது. இப்படி ஒரு அருத்தம் எடுத்து வியாக்கீனம் பண்ணினால் அவரவர் எப்படி வேண்டுமானாலும் வியாக்கீனம் பண்ணலாமே. அப்படியெல்லாம் தங்கள் இஸ்டத்துக்கு வியாக்கீனம் பண்ணுவதை கேட்பதற்குவேறு ஆட்களை பாருங்கள்.
வசனம் முதல்/இரண்டு என்று பிரித்து சொல்லாத நிலையில் ஓன்று, இரண்டையும் முதல் மரணம் என்று சொல்லுங்கள் அல்லது இரண்டையும் இரண்டாம் மரணம் என்று சொல்லுங்கள் அல்லது இரண்டுமே முதல் மற்றும் இரண்டாம் மரணத்தை குறிக்கிறது என்று சொல்லுங்கள். தங்கள் இஸ்டப்படி வேதவார்த்தைக்கு முன்னால் முதல், இரண்டு என்று அடைமொழிகளை சேர்த்துக்கொண்டு சொல்வது சரியா? இப்படிபட்ட உங்கள் வியாக்கீனத்தை நாங்களும் நம்பவேண்டுமா?
கொடுக்கப்படும் வசன ஆதாரத்தை இப்படியெல்லாம் புரட்டினால் கட்டுரைகள் எழுதுபவர் எங்கிருந்து வசன ஆதாரம் கொடுக்க முடியும்?
-- Edited by Nesan on Thursday 19th of January 2012 09:06:21 PM