சன்மார்க்கம் ஒன்றே மரணமில்லாப் பெருவாழ்வை வாழ வைக்கும் ஒரே வழியாகும். சன்மார்க்கம் அல்லது பொதுவழி என்பது சாதி, மத பேதமற்ற வழியாகும். எவ்வுயிரையும்தம்முயிர் போல் எண்ணுவதை போதிப்பதே சன்மார்க்கமாகும்.
சாதி மத பேதங்களற்று அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் உண்மை அன்பால் இறைவனை ( ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி) வழிபடுவதே சன்மார்க்க வழிபாடாகும். இரக்கம், தயவு, கருணை இவையே சன்மார்க்கத்தின் முக்கிய கருவியாகும். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம் , ஆன்ம ஒழுக்கம் இவையே சன்மார்க்க வேதமாகும்.
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற திருவாச வரிகளில் இருந்து இறைவனின் திருவடியை அடைய ஆன்ம உருக்கம் அதாவது மாணிக்கவாசகரைப் போல் அழுது இறைவனை அடைதல் வேண்டும். இந்த நிலைப்பாடு உயர்ந்த ஞானியர்க்கும் இறைவனின் அருளை
அருளை பெற்றவர்க்கும் மட்டுமே கிடைக்கக் கூடிய பேறாகும். எனில் சாதாரண மனிதர்களான நாம் எவ்வாறு இறைவனது அருளை பெறக்கூடும் எனில், உயிர் இரக்கம் ஒன்றே ஆகும்.
அனைத்து உயிர்களூம் இறைவன் உறைந்திருக்கும் இடமே என்று அறிந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர் போன்றுய் எண்ணி இரக்கங்கொண்டு அன்பு செலுத்தி அவ்வுயிர்களின் துன்பத்தை துடைப்பதே ஜீவதயவு. இந்த ஜீவதயவை கொண்டே எல்லாம் வல்ல கடவுள் தயவினைப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடியும்.
இத்தகைய உயர்ந்த உண்மை நெறியை காட்டு அதை வாழ்வாக வாழ்ந்தவரே வள்ளல் பெருமான் அவரது ஜீவதயவை ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை இப்பாடலின் மூலம் அறியலாம்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றாரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோரென்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்
என்பதன் மூலம் அன்பும் இரக்கமும் மனிதனின் இயற்கை குணம் என்று அறிவுருத்துகின்றார். மேலும் பசியால் வாடுவோர்க்கு உணடு கொடுத்து அவர்களின் துன்பத்தை போக்கி அவர்களை அரவணைப்பதே ஜீவகாருண்யமாகும்.
ஆனால் இன்றோ மனிதன் அன்பு, இரக்கம், என்றால் என்ன? என்று கேட்கும் நிலையிலுள்ளான். இதற்கு முக்கிய காரணம் சுயநலம் மட்டுமே. இந்த சுயநலத்தால் மனிதன் தன் இயற்கை குணங்களை மறந்து மனிதனை மனிதனே கொல்லும் மிருக வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.
எந்த இனமும் தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்றோர் உயிரை கொல்லாது. ஆனால் மனிதன் மட்டுமே சுயநல குணத்தால் இத்தகைய இழிசெயலை செய்கின்றான்
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 19th of October 2011 08:32:02 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
//சாதி மத பேதங்களற்று அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் உண்மை அன்பால் இறைவனை ( ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி) வழிபடுவதே .//
யார் அந்த இறைவன்? இந்துக்களும் , முஸ்லிம்களும் அந்த இறைவனை வழிபடுகிறார்களோ?
அவர்கள் எந்த தெய்வத்தை கும்பிடுகிறார்கள் என்பது நமக்கு தெரியாது ஆனால் வேதம் இவ்வாறு சொல்கிறது
யாக்கோபு 1:17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
மனுஷர்களாகிய நமக்கு ஆயிரம் மாறுதல்கள் வேற்றுமைகள் நான் பெரியவன் அவன் சிறியவன் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் சோதிகளின் பிதாவிடத்தில் எந்த வேற்றுமையும் இல்லை.
என்று வேதம் சொல்லும் பட்சத்தில் யாரையும் அற்பமாக என்ன வேண்டாம் என்பதே எனது கருத்து.
மத்தேயு 21:31இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
யாரை பற்றியும் நாம் முடிவான எந்த கருத்தையும் கூறிவிட முடியாது!
சகோ. எட்வின் அவர்களுக்கு:
மாற்றுமத சகோதரர்களின் கருத்துக்களை இங்கு பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன். அதன் அடிப்படையில் யாரவது கேள்விஎழுப்பினால் அவர்கள் கருத்துக்கு நாம் விளக்கம் கொடுக்க முடியாது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
மனுஷர்களாகிய நமக்கு ஆயிரம் மாறுதல்கள் வேற்றுமைகள் நான் பெரியவன் அவன் சிறியவன் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் சோதிகளின் பிதாவிடத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. //
சோதிகளின் பிதாவினிடத்தில் கிறிஸ்துவை ஏற்று கொண்டவன் அல்லது ஏற்று கொள்ளாதவன் என்ற வேற்றுமை இருக்கிறதா இல்லையா?
என்று வேதம் சொல்லும் பட்சத்தில் யாரையும் அற்பமாக என்ன வேண்டாம் என்பதே எனது கருத்து.//
இந்த வசனம் யாருக்கு பொருந்தும்? அவர்களை குறித்து பரிதபிப்பது சரி ஆனால் அவர்களும் தேவனை வணங்குகிறார்கள் என்று சொல்லுவது அக்கிரமம்!
ஏசாயா செய்வது சரியா? தவறா?
ஏசாயா 44:19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
சோதிகளின் பிதாவினிடத்தில் கிறிஸ்துவை ஏற்று கொண்டவன் அல்லது ஏற்று கொள்ளாதவன் என்ற வேற்றுமை இருக்கிறதா இல்லையா?
"அவரிடத்தில் யாதொரு வேற்றுமையும் இல்லை" என்று வசனம் சொல்லும் கருத்தை காட்டிய பிறகு "இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல் குறித்த வேற்றுமை உண்டா" என்பதற்கு நான் என்ன பதில் தரமுடியும் சகோதரே? அப்படியே ஒரு வேற்றுமை இருந்தாலும் இறுதி நியாயதீர்ப்புவரை யார் எந்த பக்கம் சாய்வார்கள் என்பது நமக்கு தெரியாது.
John wrote:
---------------------------------------------------------------------------------------sundar://பிலிப்பியர் 2:3 மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். என்று வேதம் சொல்லும் பட்சத்தில் யாரையும் அற்பமாக என்ன வேண்டாம் என்பதே எனது கருத்து.//
இந்த வசனம் யாருக்கு பொருந்தும்? அவர்களை குறித்து பரிதபிப்பது சரி ஆனால் அவர்களும் தேவனை வணங்குகிறார்கள் என்று சொல்லுவது அக்கிரமம்!
ஏசாயா செய்வது சரியா? தவறா?
ஏசாயா 44:19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. --------------------------------------------------------------------------------------------------------
வள்ளலாரில் சமரச சன்மார்க்கவழி என்பது விக்கிரக ஆராதனை செய்யும் மார்க்கம் அல்ல. அவர்கள் "அருட் பெருஞ்சோதி" என்னும் உருவமில்லாத பெரோழியாக இறைவனை வழிபடுகிறவர்கள். அவர்கள் இந்துக்கள் வழிபடும் எந்த தெய்வங் களையும் இறைவன் என்று ஏற்ப்பது இல்லை. மேலும் விக்கிரகத்தை வழிபடுவது பற்றி, சகோ. எட்வினோ நானோ இங்கு எதுவும் பேசவில்லை. அது தேவனுக்கு அருவருப்பானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை ஊக்குவிக்கும் எந்த கருத்தும் இங்கு இல்லை!
அத்தேனே பட்டணத்தார் அறியப்படாத தேவனை வழிபடுவதை பார்த்த பவுல் அதுவேறு இதுவேறு என்று ஒதுக்காமல்
அப்போஸ்தலர் 17:23எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக் குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
என்று சொல்லி, அவர்களுக்கு ஆண்டவரை பற்றி எடுத்து சொல்லி சரியான வழியை காட்டியது போல, சரியான வழியை அறியாமல், யார் தேவன் என்பது தெரியாமல் ஆராதிதித்துகொண்டிருக்கும் அவர்களை, இயேசு என்னும் ஒரே சரியான வழியில் மூலமாக தேவனை அடையும் வழியை அறிவிக்க வேண்டியதே நமது கடமை என்று கருதுகிறேன்.
தேவபக்தி உள்ள எவரும் "தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது அதை நாம் ஆராதிக்க வேண்டும் அதை தொழவேண்டும்" என்ற எண்ணத்திலேயே இறைவனை தேடுகின்றனர். அனால் அவர்கள் வழிமுறைகள் தவறாக இருப்பதால் அது தேவனுக்கு ஏற்ற நிலையில் இல்லாமல் இருக்கிறது. சரியான வழியை காட்டுவதே யன்றி வேறு பிரிவினையை ஏற்ப்படுத்துவதை நான் விரும்பவில்லை. காரணம், ஒருகாலத்தில் அறியாமல் அக்காரியங்களை செய்துகொண்டிருந்த நம்மையும் தேவன் தம் பெரிதான கிருபையால் இரட்சித்திருக்கிறார். எனவே இறுதியில் யார் எந்தப்பக்கம் இருப்பார்கள் என்று நிர்ணயிக்க முடியாதவரை நான் யாரையும் பற்றி எதுவும் சொல்லபோவது இல்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)