இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துன்மார்க்கனுக்கு "நித்திய வாதை" உண்டா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
துன்மார்க்கனுக்கு "நித்திய வாதை" உண்டா?
Permalink  
 


"நித்திய வாதை" என்று எதுவும் இல்லை என்று சகோதரர் அன்பு அவர்கள் அவரது தளத்தில் வேத வசனத்தின் அடிப்படையில் விளக்கியிருக்கிறார்கள்
 
 
சகோதரர் அன்பு அவர்கள் எழுதியது:
//////துன்மார்க்கருக்கு நிரந்தர அழிவு எனத் தெளிவாகக் கூறுகிற வேதாகமம், அவர்களுக்கு நித்திய வாதை என ஒரு வசனத்திலும் கூறவில்லை. ஆகிலும், நரகம் எனும் இடத்தில் துன்மார்க்கர் நித்திய நித்தியமாக வாதிக்கப்படுவார்கள் எனும் கருத்து பெரும்பாலான கிறிஸ்தவர் மத்தியில் காணப்படுகிறது. லாசரு-ஐசுவரியவான் உதாரணத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதால்தான் அம்மாதிரி கருத்து நிலவுகிறது. லாசரு-ஐசுவரியவான் கதையை உண்மையான நிகழ்வாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால் அது ஓர் உதாரணமே.

அவனவன் கிரியைக்குத்தக்க பலன் இயேசுவின் 2-ம் வருகையின்போதுதான் இருக்கும் என பல வசனங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கையில் (வெளி.22:12), இயேசுவின் வருகைக்கு முன்னதாகவே லாசருவும் ஐசுவரியவானும் பலனைப் பெறுவதாக நிச்சயம் இருக்க முடியாது.

இவ்வுலகில் மனிதர்களிடையே காணப்படும் ஏற்ற/இறக்கம், மறுமையில் சரிக்கட்டுப்படும் என்பதை விளக்கவும், இவ்வுலக ஐசுவரியவான்கள் தங்களைச் சுற்றியுள்ள பிறரைக் குறித்த கரிசனையின்றி தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால், மறுமையில் அவர்களின் கதி என்னாகும் என்பதை விளக்கவுமே லாசரு-ஐசுவரியவான் உதாரணத்தை இயேசு கூறினார்.

தரித்திரரைக் குறித்த கரிசனையின்றி வாழ்கிற ஐசுவரியவான்கள், லாசரு-ஐசுவரியவான் உவமானத்தில் சொல்லப்பட்டுள்ள ஐசுவரியவானைப் போல மறுமையில் வேதனையடைய நேரிடும் என்பது மெய்தான்; ஆனால் அந்த வேதனை நித்திய வேதனையாக இருக்கும் என எந்த வசனமும் சொல்லவில்லை.

நித்திய வேதனை எனும் கருத்துக்கு சற்று இசைவானதாக பின்வரும் காணப்படுகிறது.

வெளி. 14:9 அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, 10 அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.11 அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. 12 ... என்றான்.

வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்”, “எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது” எனும் வாசகங்களை தவறாகப் புரிந்துகொண்டு, “துன்மார்க்கருக்கு நித்திய வேதனை” எனும் கருத்தை பலரும் கூறுகின்றனர். ஆனால் இவ்வசனம் துன்மார்க்கரைக் குறித்து எதுவும் கூறவில்லை என்பதை முதலாவதாக நாம் அறியவேண்டும்.

அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் மிருகத்தை வணங்காதவர்கள் மற்றும் முத்திரையைத் தரிக்காதவர்களைக் குறித்தே இவ்வசனம் கூறுகிறது. அவர்களுக்கு “இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது” என ஒரு வாசகம் கூறுகிறது. ஆனால் நித்திய நித்தியமாக அவர்களுக்கு இளைப்பாறுதலிராது என வசனம் கூறவில்லை. அவர்கள் உயிரோடிருக்கிற காலம் வரைஇரவும் பகலும் அவர்களுக்கு இளைப்பாறுதல் இருக்காது” என்றே வசனம் கூறுகிறது.

அடுத்து, “வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” எனும் வாசகத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வாசகம் “வாதையின் புகையைப்” பற்றி மட்டுமே கூறுகிறதேயொழிய “வாதையைப்” பற்றி கூறவில்லை. “வாதையின் புகை” என்பது நேரடியான அர்த்தமுடைய சொற்றொடர் அல்ல; இது ஓர் உவமானமான சொற்றொடர் மட்டுமே. “மிருகத்தை வணங்கினவர்கள் மற்றும் முத்திரையைத் தரித்தவர்களுக்கு” உண்டான வாதையைக் குறித்த நினைவுகள் அல்லது சுவடுகள் அல்லது அடையாளங்கள் சதாகாலங்களிலும் இருக்கும் என்பது போன்ற கருத்துக்கு உவமானமாகத்தான் “வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வாசகத்தை வைத்து “துன்மார்க்கருக்கு நித்திய வேதனைஎனக் கூற இயலாது.

இறுதியாக, நித்திய வேதனை எனும் கருத்துக்கு இசைவாகத் தோன்றுகிற பின்வரும் வசனத்தைப் பார்ப்போம்.

வெளி. 20:10 அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. 10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

பிசாசு, மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகியோர்தான் “சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” என இவ்வசனம் கூறுகிறதேயொழிய “துன்மார்க்கர் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்எனக் கூறவில்லை. மிருகம் என்றால் என்ன, கள்ளத்தீர்க்கதரிசி என்பது தனிப்பட்ட ஒரு ஜீவனா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான், “அவர்கள் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” எனும் கூற்றுக்கான சரியான விளக்கத்தை நாம் அறிய முடியும்.

இப்போதைக்கு அவ்வசனம் துன்மார்க்கருக்கானதல்ல எனும் தகவல் நமக்குப் போதுமானது.

இனி நித்திய ஆக்கினை என்றால் என்னவெனப் பார்ப்போம்.

துன்மார்க்கருக்கு அழிவுதான் ஆக்கினை (அல்லது தண்டனை) என கடந்த பதிவில் தெளிவாகப் பார்த்தோம். அந்த அழிவு நித்தியமானது என்பதே “நித்திய ஆக்கினை” என்பதன் அர்த்தமாகும்.

ஆதாமின் பாவத்துக்கு ஆக்கினையாக நேரிட்ட முதலாம் மரணம் தற்காலிகமானது; ஏனெனில் ஆதாமுக்குள் மரித்த அனைவரும் கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1 கொரி. 15:22).

ஆனால் அவரவர் சுயபாவத்துக்கு ஆக்கினையாக நேரிடுகிற இரண்டாம் மரணத்திலிருந்து ஒருவரும் உயிர்ப்பிக்கப்படுவதில்லை. அந்த மரணம் நிரந்தரமானது. இதைத்தான் “நித்திய ஆக்கினை” என மத்தேயு 25:46; மாற்கு 3:29 போன்ற வசனங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் “துன்மார்க்கருக்கு நித்திய வேதனை” என்பது வேதாகமத்தில் கூறப்படாத ஒன்றாகும். தேவன் தமது சித்தப்படி உருவாக்கின மனிதர்களின் அற்பகால பாவத்திற்காக அவர்களை நித்திய நித்தியமாக வாதிப்பதென்பது தேவனை அநீயுள்ளவராக மட்டுமல்ல, மிகவும் கொடூரராகவும் சித்தரிப்பதாக உள்ளது. இவ்வாறு தேவனை “அநீதியுள்ளவராக/கொடூரராக” சித்தரிப்பது ஒரு மாபெரும் தேவதூஷணமாகும். அம்மாதிரி தேவதூஷணம் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போமாக.////

அவர் சொல்லும் இந்த கருத்து  உண்மை என்றே எண்ண தோன்றுகிறது. இது குறித்து தள சகோதரர்கள் கருத்து என்ன?  
 
துன்மார்க்கனுக்கு நிரந்தர அழிவா? அல்லது நித்திய வாதையா?   

 

 



-- Edited by Nesan on Friday 28th of October 2011 10:02:03 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Nesan wrote:
துன்மார்க்கனுக்கு நிரந்தர அழிவா? அல்லது நித்திய வாதையா?   

துன்மார்க்கனுக்கு வெறும் நித்திய அழிவு மட்டும்தான் முடிவு என்றால், இன்று உலகில் அநேகர் துணிந்து துன்மார்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். எத்தனை கொலை செய்தாலும் எத்தனை கொள்ளை  அடித்தாலும்  எத்தனை பெண்களை கெடுத்து கண்ணை பிடுங்கி காலை ஒடித்து குற்றம் செய்யும் துன்மார்க்கனுக்கு எல்லாம் வெறும் நித்திய மரணம்தான் முடிவு என்றால் எல்லோரும் சந்தோஷமாக ஆர்ப்பரிப்போடு தீய செயல்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.   

ஆண்டவரை அறியும் முன்னர் முன்னர் நான் இவ்வாறு நினைத்தது உண்டு "வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை!  அதில்  என்னென்ன இன்பம் கிடைக்கிறதோ அதை எல்லாம் அனுபவித்து விட்டு பின்னர் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?"  யாருக்கு தெரியப்போகிறது" என்று எண்ணிக் கொண்டு  அனேக தீய பழக்கவழக்கங்களை செய்து வந்தேன்.  இன்று உலகில்கூட  அநேகர் இவ்வாறு பேசுவதை நாம் கேட்க முடியும். 

ஆனால் ஒருநாள் ஆண்டவர் என்னை பாதாளத்துக்குள் இரங்கி வெளியே கொண்டு வந்தபோதுதான் தெரிந்த்தது அங்கே வேதனை  அனுபவிக்கும் ஜனங்கள் ஏராளம் என்பது.

லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது

அதை பார்த்தபிறகுதான் "துன்மார்க்கனுக்கு மரணத்துக்கு பிறகும் வாதை நிச்சயம்  இருக்கிறது" என்பதை அறிந்துகொண்டேன். உடனே மனம் திரும்பினேன் ஆண்டவரை ஏற்றுக்கொண்டேன்.     

சகோ. அன்பு அவர்கள் சொல்வதுபோல் துன்மார்க்கனுக்கு "நித்திய நித்தியமாக வாதிக்கப்படுதல்" ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால் வெறும் அழிவு மட்டும் அவனது முடிவு அல்ல. அவனவன் செய்த கிரியைக்கு  தக்க பலனை அடையாமல் ஒருவரும் அழிந்துபோக முடியாது.

மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறதது.

எனவே அன்பானவர்களே, நாம்செய்யும் ஒவ்வொரு காரியமும் நமக்கு சரிக்கட்டபட்ட பின்பு வேண்டுமானால் அழிவு இருக்கலாமேயன்றி, அவனவன் செய்த கிரியைக்கு தக்க பலனை பெறாமல் அல்லது செய்த தீமைக்கு தக்க  துன்பத்தை அனுபவிக்காமல் எவருக்கும் அழிவு வராது என்பதை அறியவேண்டும்.  

 


-- Edited by SUNDAR on Tuesday 8th of November 2011 10:05:34 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர்:

//சகோ. அன்பு அவர்கள் சொல்வதுபோல் துன்மார்க்கனுக்கு "நித்திய நித்தியமாக வாதிக்கப்படுதல்" ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால் வெறும் அழிவு மட்டும் அவனது முடிவு அல்ல. அவனவன் செய்த கிரியைக்கு  தக்க பலனை அடையாமல் ஒருவரும் அழிந்துபோக முடியாது.//

துன்மார்க்கருக்கு நித்திய வேதனை கிடையாது என்றுதான் சொல்லியுள்ளேன். வேதனை கிடையாது எனச் சொல்லவில்லை.

முதலாம் மரணம் நேரிடுவதற்கு முன் பலரும் பல விதமாக வேதனைப்படுவது நாம் அறிந்ததே. அது போலவே 2-ம் மரணத்திற்கு முன்னும் வேதனை இருக்கத்தான் செய்யும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard