இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


கடந்த  நாளில் அலுவலகத்தில் வந்திருந்த தீபாவளி இனிப்புகளை சாப்பிட்டுக்கொண்டே கணினியில் செய்திகளை பார்த்துகொண்டு இருந்தபோது துருக்கியில் நிலநடுக்கத்தால கட்டிட இடிபாடுகளுக்குள்  மாட்டிகொண்டு ஐந்து  நாட்களுக்கு பின்னர் மீட்கபட்ட ஒருவரைப்பற்றிய செய்தி அங்கு  இருந்தது. அதை  படித்த நான்
மிகவும் கலங்கிபோனேன்.
 
"உன்னை நீ நேசிப்பதுபோல் பிறரையும் நேசி" என்று ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கிறார். அதன் அடிப்படையில் நான் சற்று யோசித்து,  ஐந்து நாட்கள் அந்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலேயெல்லாம் இடிபாடுகள் மூடப்பட்டுள்ள நிலையில் காயங்களினால் உண்டான வேதனை ஒருபுறம் வாட்டி எடுக்க  பசியோடும் தண்ணீர் தாகத்தோடும் மன வேதனையோடும் உள்ளே மாட்டிகொண்ட அந்த மனுஷ ஜீவன் எத்தனை வேதனை பட்டிருக்கும் என்பதை எண்ணி பார்க்க பார்க்க மனசு மிகவும் கனத்துப்போனது.
 
உடனடியாக செத்துப்போனவர்களை விடுங்கள். அவர்கள் பெரிய துன்பம் எதுவும் இல்லாமல் போய் சேர்ந்துவிடுவார்கள் இன்னும் அந்த இடிபாடுகளுக்கும் எத்தனை உயிர்கள் மீட்கப்பட முடியாமல் கடைசிவரை யாராவது மீட்கவருவார்களா என்று எதிர்பார்த்து  துடித்துதுடித்து இறந்துகொண்டிருக்கும் அல்லது இறந்துபோயிருக்கும் என்பதை எண்ணி பார்க்கும்போது என்னால் கலங்காமல் இருக்கமுடியவில்லை.
 
நானும் அவர்களை போல ஒரு மனுஷனே! எங்கோ ஒரு இடத்தில்  சொகுசாக அமர்ந்து இனிப்பு  சாப்பிடுகிறேன். இதே நேரத்தில் எத்தனை உயிர்கள் எத்தனை வேதனையை அனுபவித்துகொண்டிருக்கும்? என்பதை எண்ணி எண்ணி கலங்குகிறேன்.  
 
மனுஷர்களாகிய நமக்கு நாம் கண்ணின் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சர்வ வல்ல தேவனுக்கோ "அவர் கண்களுக்கு மறைவானது ஒன்றும் இல்லை"என்ற நிலையில், இப்படி குற்றுயிரும் குலையுயிருமாய் துன்பம் அனுபவிக்கும் தான் உண்டாக்கிய மனுஷர்களை பார்த்து எத்தனை வேதனை அடைவார். எல்லா படைப்புகளுமே  அவருக்காக  அவர் உண்டாக்கிய அவரது பிள்ளைகள் தானே.
 
தேவனால் படைக்கபட்ட மனுஷர்களை கொடூரமான துன்பத்துக்குள் கொண்டு சென்று அதன்மூலம் தன்னை ஆகாதவன் என்று தள்ளிய தேவனுக்கு மன வேதனையை உண்டாக்க வேண்டும் என்பதே சாத்தனின் நோக்கம். அவன் பிடியில் கீழ் இருக்கும் ஜனங்களை அவன் எப்படி வேண்டுமானாலும் துன்புருத்த்தி சித்திரவதை செய்து கொல்கிறான்.  அதை பார்த்து தேவன் ஒவ்வொருநாளும் பரிதபிக்கிறார்.
 
எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
 
சாத்தானின் இந்த கொடூர ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு! ஆனால் அதற்காக அபிஷேகிக்கபட்ட ஜனங்கள் ஆதாரமற்ற காரியங்களை பின்பற்றி தடம்மாறி போய்கொண்டு இருக்கையில் அது எப்பொழுது நிறைவேறும் என்பதே இங்கு கேள்விக்குரியாக இருக்கிறது!   


-- Edited by SUNDAR on Saturday 29th of October 2011 11:07:33 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


அன்பான சகோதரரே!

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பவர்களைக் குறித்து நானுங்கூட உங்களைப் போல் நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் இம்மாதிரியான நிலைகளுக்கெல்லாம் காரணம் சாத்தான் என்றோ தேவன் என்றோ கூறிவிட முடியாது என நான் கருதுகிறேன்.

இன்றைய மனிதர்களின் பல துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களேதான். மனிதர்கள் தாங்களாகவே ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.

காசு கொடுத்து கேஸ் ஸ்டவ் வாங்குகிற நாம், அத்தோடுகூட அதனால் விளையும் ஆபத்தையும் வாங்குகிறோம். விறகு அடுப்பு பயன்படுத்துகிற யாராவது ஆபத்தை சந்திக்கிறார்களா?

காசு கொடுத்து வாகனம் வாங்குகிற நாம், அத்தோடுகூட அதனால் விளையும் ஆபத்தையும் வாங்குகிறோம்.

பகலை ஆள சூரியனையும் இரவை ஆள சந்திரனையும் தேவன் தந்தார்; பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் உன்னை சேதப்படுத்துவதில்லை எனும் வாக்குத்தத்தத்தையும் தந்தார். ஆனால் நாமோ பகலையும் இரவையும் ஆள மின்சாரத்தின் மூலமான ஒளியை உண்டாக்கினோம். அந்த மின்சாரத்தால் விளையும் ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டோம்.

பூகம்பம் உண்டாகையில் பல மாடி கட்டிடங்களுக்குள் வசிப்போர் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதை நாம் நன்கறிவோம்தான். ஆனாலும் பல மாடி கட்டிடங்களில் குடியிருக்க நாம் தயங்குவதில்லையே!

இட நெருக்கடியால் நாம் இப்படிச் செய்யவேண்டியதுள்ளது என நாம் கூறலாம். ஆனால் இன்னமும் பயன்படுத்தப்படாத ஏராளமான இடங்கள் உலகில் உள்ளதே! அவற்றை நம் குடியிருப்புக்குப் பயன்படுத்தாமல், மாடி மேல் மாடி கட்டி நாம் குடியிருக்கக் காரணமென்ன? சுயநல மனிதர்கள் ஏராளமான இடங்களை வீணாக தங்களிடம் வைத்திருப்பதும், நகரத்தின் மத்தியில் நாம் குடியிருக்கவேண்டும் என்ற நம் விருப்பமும்தானே?

தரைப்பகுதியில் மாடி வீடு கட்டுவதே ஆபத்தானதாக இருக்கையில், கடலுக்குள்கூட பல மாடிக் கட்டிடங்களை மனிதன் கட்டி பயன்படுத்துகிறானே! இப்படி அவன் ஆபத்தை சந்திக்க ஆயத்தமாயிருக்கையில், அவனுக்காகப் பரிதாபப்படுவதில் அர்த்தமில்லையே!

நேப்பாளத்தில் பல அடி உயரமுள்ள தொங்குபாலம் அறுந்துவிழுந்து 2 மாணவிகள் சமீபத்தில் இறந்தனரே, அவர்களுக்காக பலரும் வருத்தப்பட்டனரே! அம்மாதிரி தொங்குபாலம் அறுந்துவிழக்கூடும் என்பதை அம்மாணவிகள் அறியார்களா? ஆபத்தான அப்பாலத்தில் சென்றுதான் சுற்றுலாவை அனுபவிக்கவேண்டும் என்பது அவசியந்தானா? ஆபத்தை நாமே விலைகொடுத்து வாங்கிவிட்டு தேவனையோ சாத்தானையோ அதற்குப் பொறுப்பாக்குவது அர்த்தமற்றது.

என் ஜனங்கள் அறிவில்லாமையால் கெட்டுப்போகிறார்கள் எனும் வசனம் மறுமைக்கு மட்டுமின்றி, இம்மைக்கும் பொருத்தமானதே!

தற்காலத்தில் அடிக்கடி பூமியதிச்சி நேரக் காரணமென்ன? பல மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு பூமியின் ஒரு பகுதியை ஆழமாகத் தோண்டி மண்ணை எடுத்தும் மலைகளை உடைத்து கல்லை எடுத்தும் பூமியின் Balanace தன்மையை பாதிப்பதுதான் என நான் கருதுகிறேன்.

பூமியதிர்ச்சி பற்றி வேதாகமம் தீர்க்கதரிசனம் கூறியுள்ளது மெய்தான். ஆனால் அதை வைத்து பூமியதிர்ச்சி நேருவது தேவனின் திட்டம் அல்லது சித்தம் எனக் கூறமுடியாது. மனிதன் பூமியைத் தாறுமாறாக சிதைப்பதால் உண்டாகப் போகும் பூமியதிர்ச்சியை வேதாகமம் முன்னதாக அறிவித்துள்ளது, அவ்வளவே என நான் கருதுகிறேன்.

வேதாகமம் சொல்கிற பிரகாரமாக “உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருப்போம்” என்றிருந்தால், நாம் அனேக ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

மனிதன் தன் சுகவாழ்வுக்காக பல வசதிகளை உண்டாக்கிக்கொண்டான்; ஆனால் அவன் உண்டாக்குகிற ஒவ்வொரு வசதிக்குப் பின்னாலும் ஓர் ஆபத்து மறைந்துள்ளது. இதையறியாமல் மனிதனின் துன்பங்களுக்குக் காரணம் சாத்தான் என்றோ தேவன் என்றோ நாம் சொல்லிக் கொள்கிறோம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


anbu57 wrote:

அன்பான சகோதரரே!

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பவர்களைக் குறித்து நானுங்கூட உங்களைப் போல் நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் இம்மாதிரியான நிலைகளுக்கெல்லாம் காரணம் சாத்தான் என்றோ தேவன் என்றோ கூறிவிட முடியாது என நான் கருதுகிறேன்.

இன்றைய மனிதர்களின் பல துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களேதான். மனிதர்கள் தாங்களாகவே ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.

 


சகோதரர் அவர்களே! இந்த திரியில் தாங்கள் இட்டுள்ள பின்னூட்டம் கொஞ்சமும் ஆவிக்குரிய நிலையில் இல்லாது முற்றிலும் மாம்சத்துக்குரிய  நிலையில் ஒரு சுற்று சூழல் ஆர்வலரோ  அல்லது அரசு அதிகாரியோ  பேசும் வண்ணமாக இருக்கிறது.

உலகில் நடக்கும் எல்லா செயல்களுக்குமே இரண்டு நிலைகள் உண்டு. ஓன்று மாம்சத்தில் தெரியும் மாம்சநிலை இன்னொன்று அந்த மாம்சகிரியைகள் நிறைவேர பின்னால் இருந்து செயல்படும் அல்லது செய்யதூண்டும் ஆவிக்குரிய நிலை. நாம் மாம்சத்துக்குரிய நிலையில் நடக்கும் காரியங்களை பார்த்து அதற்க்கு ஏற்ப மாம்சத்தில் உள்ள மனுஷர்களை நியாயம்தீர்ப்பது ஒரு சரியான நிலை இல்லை. காரணம் ஆவியில் நிறைவேறாத எதுவும்  மாம்சத்தின் நிறைவேர முடியாது.
 
உலகில் காரியங்கள் நிறைவேறுவதற்கு அடிப்படை ஆவிக்குரிய நிலையே. தங்களின் எழுத்துக்கள் சில நேரங்களில் முற்றிலும் மாம்ச நிலையை சார்ந்து  எழுதப்படுவதை நான் பலமுறை கவனிக்க நேர்கிறது.
 
உதாரணமாக:
பொதுவான ஒரு சுவரில் ஒரு ஆபாசமான போஸ்டர் ஒட்டப்படுகிறது. அதை அனேக ஜனங்கள் பார்த்து தங்கள் சிந்தையில் இச்சையால் பாவம் செய்ய தூண்டப்படுகிறார்கள் என்றால் அதற்க்கு உலக பிரகாரமாக ஒரு காரணமும் ஆவிக்குரிய பிரகாரம் ஒரு காரணமும் நிச்சயம்  இருக்கும்
 
இங்கு உலகபிரகாரமாக பார்த்தால் ஒருமனுஷன் அந்த சுவரொட்டியை ஓட்டுகிறான் அதற்க்கு காரணமாக அந்த படம் ஓடும் தியேட்டரின் நிர்வாகியும்
அதன் முதலாளி போன்ற மனுஷர்களே இருக்கிறார்கள் என்பதை  இந்த உலகில் உள்ள எல்லோருமே அறியமுடியும். இது ஒரு சாதாரண எல்லோரும் அறிந்த விஷயம். இந்த மனுஷர்கள்தான்  இந்த படம் ஓட்டபடுவதர்க்கு முழு காரணம் என்று எண்ணினால் நாம் நிச்சயம் ஏமாந்து போவோம்.
 
இந்த படத்துக்கு பின்னால் இருக்கும் ஆவிக்குரிய செயல்பாடுகளை நாம் ஆராய்ந்தால் மட்டுமே இந்த படத்தை பார்த்து அனேக ஜனங்களை  பாவம் செய்ய தூண்டும் சாத்தானின் செயல் நமக்கு புரியவரும். இங்கு மனுஷர்கள் பக்கம் சில தவறுகள் இருந்தாலும் அவர்கள்  வெறும் பகடைகாய்களே! தனதுபிடியில் உள்ள மனுஷர்களை ஏதாவது ஒரு உலக இன்பத்தையோ அல்லது பணத்தையோ எதையோ காண்பித்து அவர்களை இதுபோல் செயல்களை செய்ய தூண்டுவது சாத்தானே. அதன்மூலம் இன்னும் அனேகஜனங்களை தேவனைவிட்டு பிரிப்பதற்கு
அல்லது தேவனைபற்றி சிந்திக்காமல்  தடுப்பதற்கு  அவன் திட்டமிட்டு செயல்படுகிறான்.
 
அதாவது  மரத்துப்போன இருதயமுள்ள மனுஷர்கள் சாத்தானின் தூண்டுதலினால்
தங்களை அறியாமலேயே  தாங்கள் போன்ற வேறு மனுஷர்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்குமே படுகுழியை தோண்டுகிறார்கள்.
 
சென்னை நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் நான் இதை விரும்பி  ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கு தங்கும்படி  நிர்பந்திக்கபடுகிறேன். சென்னையே வேண்டாம் என்று ஊருக்கு குடிபெயர்ந்து வந்த எனக்கு ஒன்பது
 மாதங்கள் எந்த வேலையும் கிடைக்கவில்லை. அனைத்து பொருட்களையும் விற்று வாழ்க்கை நடத்தி விட்டு, வேறு வழியில்லாமல் மீண்டும் சென்னை வரவேண்டிய நிலையே ஏற்ப்பட்டது. இதெல்லாம் எனது சித்தப்படியோ அல்லது நான் விரும்பியோ ஏற்றது போல் எனக்கு தெரியவில்லை. இவ்வாறு எனது விருப்பத்துக்கு மீறி நடக்கும் இந்த செயலுக்கு நான் பொறுப்பும் ஆக முடியாது. 
 
இதுபோல் அனேக ஜனங்கள் இங்கு வாழ்கின்றனர்.  இந்நிலையில் ஒரு இடிபாடுக்குள் மாண்டிக்கொண்ட ஒருவரை தாங்கள் இவ்வாறு விமர்சிப்பதற்கு
நான் என்னபதில் சொல்வதென்பது புரியவில்லை.
 
ஒருமுறை நான் ரயில் பயணத்தில் இருந்தபோது ஒரு நடத்தர வயது இஸ்லாம் காரரிடம் ஒரு பெண்மணி  கீழ் இருக்கையை தனக்கு தரும்படி வேண்டினார்கள். அதற்க்கு மறுப்பு தெரிவித்த அந்த இஸ்லாமியர் சொன்ன  பதிலே எனக்கு இங்கு ஞாபகத்துக்கு வருகிறது   "உங்களுக்கு கீழ் இருக்கை வேண்டுமென்றால்  நீங்கள்
முன்னமே பதிவு செய்திருக்க வேண்டும்" என்பதே அந்த பதில்.
 
அது மனுஷ பிரகாரகம ஒரு நியாயமான பதில் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை!  ஆனால் ஆவிக்குரிய நிலையில் அது இரக்கமற்ற  மிக தவறான பதில்! அதுபோலவே தாங்கள் பதிலும் இருக்கிறது.
 
அவரவர் பிரச்சனையிலும் துன்பத்திலும் மாட்டிகொள்வதர்க்கும்  பரிதபிபதற்க்கும் ஆயிரம் காரணம் இருக்கும்  அதன் அடிப்படையை  ஆராய்ந்தால்  யாருக்கும்  இரக்கம் காட்டமுடியாது. இயேசு சொன்னதுபோல் சபிப்பவனை ஆசீர்வதிக்க முடியாது, துன்பபடுகிறவர்களுக்காக  ஜெபிக்க முடியாது.  
 
இந்த பூமியில்  முதல் துன்பத்தில் இருந்து அனைத்து துன்பத்துக்கும் பின்னால் இருந்து  செயல்படுவது ஆதாம் ஏவாளை பாவம் செய்ய தூண்டி  எல்லோரையும் பாவத்துக்குள் விழதள்ளிய  சாத்தானே!   
 
மதியற்ற மனுஷர்களோ விளக்கை தேடி ஓடும் விட்டில் பூச்சுகளாய், அவன் காட்டும் உலக இன்பத்தை நாடி ஓடி  உள்ளே விழுந்து அழிந்து போகிரார்கள்!


-- Edited by SUNDAR on Monday 31st of October 2011 04:09:25 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சுந்தர்:

//இந்த பூமியில்  முதல் துன்பத்தில் இருந்து அனைத்து துன்பத்துக்கும் பின்னால் இருந்து  செயல்படுவது ஆதாம் ஏவாளை பாவம் செய்ய தூண்டி  எல்லோரையும் பாவத்துக்குள் விழதள்ளிய  சாத்தானே!//

அன்பான சகோதரரே! நமது சில அல்லது பல பாவங்களுக்குப் பின்னணியில் சாத்தான் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதினிமித்தம் சாத்தானைக் காரணங்காட்டி நம் பாவங்களுக்கான பொறுப்பிலிருந்து நாம் தப்பிக்கவும் முடியாது; அதனால் நேரும் தண்டனைக்குத் தப்பவும் முடியாது. நம் ஆதிப்பெற்றொரே இதற்கொரு நல்லுதாரணமாக உள்ளனர்.

பாவம் செய்த ஆதாமிடம் தேவன் கேள்விகேட்டபோது அவர் ஏவாளைக் கைகாட்டினார்; ஏவாள் சர்ப்பத்தைக் கைகாட்டினாள். இதனால் அவர்களின் பாவத்துக்கு அவர்கள் பொறுப்பல்ல என தேவன் கருதினாரா? இல்லையே! அவர்களின் பாவத்துக்கு அவர்கள் பொறுப்பு என்பதால்தான் தேவன் அவர்களுக்குத் தண்டனை கொடுத்தார். அவர்களின் பாவத்துக்கு அவர்கள் பொறுப்பு இல்லையெனில், தேவன் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை அநீதியானதாக அல்லவா இருக்கும்?

எனவே சாத்தான் தூண்டினான், சூழ்நிலை என்னை நிர்ப்பந்தித்தது என்றெல்லாம் நாம் சாக்குப்போக்கு கூறமுடியாது. நமது செயல்களுக்கு நாம்தான் முதல் பொறுப்பு. அதற்குப் பிறகுதான் சந்தர்ப்பம், சூழ்நிலை, சாத்தான் etc. etc.

சாத்தான் ஆதிமுதல் மனுஷகொலைபாதகனாக இருக்கிறான் என இயேசுவுங்கூட சொல்கிறார் (யோவான் 8:44). ஆனால் அதற்காக யாரையும் அவர் கண்டிக்காமல் இருக்கவில்லை. சாத்தானின் விருப்பப்படி செய்பவர்களைப் பார்த்து, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்; என் உபதேசத்தைக் கேட்க உங்களுக்கு மனதில்லை” என்று சொல்லி அவர்களைக் கடிந்துகொள்ளவே செய்தார்.

வேதாகமம் முழுவதையும் படித்துப் பார்த்தால், “பாவம் செய்த எவருக்குமே பாவத்தின் பொறுப்பிலிருந்து தேவன் விலக்கு அளிக்கவில்லை” என்பதை நாம் அறியலாம்.

தாவீதின் விபசார பாவத்திற்கு தாவீதே பொறுப்பாக்கப்பட்டார்; தாவீதின் மற்றொரு பாவத்திற்குக் காரணம் சாத்தானின் தூண்டுதலே என வேதாகமம் சொல்லியுள்ள போதிலும் (1 நாளா. 21:1), அந்தப் பாவத்திற்கும் தாவீதுதான் பொறுப்பாக்கப்பட்டார் (1 நாளா. 21:9-13). சாலொமோனின் பாவத்திற்கு சாலொமோனே பொறுப்பாக்கப்பட்டார். இப்படி பல உதாரணங்களைக் கூறலாம்.

சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழத்தள்ளலாம் என சுற்றித் திரிவதாகக் கூறிய பவுல், ஜனங்களுக்குச் சொன்ன ஆலோசனை என்ன? நீங்கள் சாத்தானை எதிர்க்கும்படி தேவனுடைய சர்வாயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதானே?

பாவத்துக்கு எதிராகப் போராடுவதில் நீங்கள் இன்னமும் இரத்தம் சிந்தவில்லை என எபிரெயர் 12:4 கூறுகிறது. இதிலிருந்து நாம் அறிவதென்ன? பாவத்துக்கு எதிராகப் போராடுவதில் நாம் இரத்தம் சிந்தக்கூட தயாராக இருக்கவேண்டும் என்பதே.

இனி உலகப்பிரகாரமான காரியங்களில் நம்மைநாமே ஆபத்தில் உட்படுத்தும் காரியங்களுக்கு வருவோம். வேலை கிடைக்கவில்லை எனும் காரணத்தைச் சொல்லி, ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தை தெரிவுசெய்வதில் உங்களுக்குப் பொறுப்பில்லை எனச் சொல்வது எப்படி சரியாகும் சகோதரரே?

அடுக்குமாடி கட்டிடத்தில் குடியிருப்பது பாவமல்லதான். ஆனால் அதிலிருக்கும் ஆபத்தை அலட்சியம்செய்துவிட்டு, பின்னால் ஆபத்தைச் சந்திக்கும்போது, அந்த ஆபத்துக்கு சாத்தானைப் பொறுப்பாக்க முயல்வது எப்படி சரியாகும் சகோதரரே?

சென்னையில் வசிக்கும் எனது மகன்கூட சமீபத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளான். ஒருவேளை பூகம்பத்தால் அக்கட்டிடம் இடிந்து அவன் பாதிக்கப்பட்டால், அதை தேவசித்தம் என்று வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்வேனேயன்றி, சாத்தானைக் குற்றஞ்சொல்ல மாட்டேன்.

நீங்களானாலும் சரி, எனது மகனானாலும் சரி, அல்லது வேறு யாரானாலும் சரி; சென்னையில்தான் வேலை வாங்கமுடியும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. ஒருவேளை நாம் எதிர்பார்க்கிற சம்பளத்தில், அல்லது அந்தஸ்தில் வேலை கிடைக்காமல் இருக்கலாம்.

இன்றைய தமிழகத்தில், இலவச அரிசி கிடைக்கிற இந்நாட்களில் ஒருவேளை நாம் இலவச அரிசியை பயன்படுத்தாவிட்டால்கூட, அதிகபட்சமாக ரூ.5000-ல் ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் வாழ்க்கையை நடத்தமுடியும். ஆனால் அடிப்படைத் தேவைகளான உணவு உடைக்கு மேலாக, செல்போன், வாகனம், ஆபரணம், உயர்தர சாப்பாடு, etc etc வசதிகளை நாம் நாடுவதால்தான் அதற்கேற்ற வேலையைத் தேடி பட்டணம் செல்கிறோம்; ஆபத்தான அடுக்குமாடியில் குடியிருக்க முன்வருகிறோம்.

நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைப்பது தவறில்லைதான்; ஆனால் அதினிமித்தம் சில ஆபத்தான நிலைக்கு நம்மைநாமே உட்படுத்திக்கொண்டு, பின்னர் ஆபத்து நேர்கையில் அதற்கு சாத்தானைப் பொறுப்பாக்க முயல்வதுதான் தவறு.

நாங்களெல்லோரும் வாகனம் வாங்கி சாலைகளில் வேகமாக செல்வோம்; ஆனால் விபத்து எதுவும் நேராமல் நாங்கள் அனைவரும் பத்திரமாக இருக்கவேண்டும் என நாம் விரும்பினால் அது சரியாகுமா? அல்லது விபத்து நேர்ந்தால் அதற்கு சாத்தானைப் பொறுப்பாக்குவது சரியாகுமா?

//ஒருமுறை நான் ரயில் பயணத்தில் இருந்தபோது ஒரு நடத்தர வயது இஸ்லாம் காரரிடம் ஒரு பெண்மணி  கீழ் இருக்கையை தனக்கு தரும்படி வேண்டினார்கள். அதற்க்கு மறுப்பு தெரிவித்த அந்த இஸ்லாமியர் சொன்ன  பதிலே எனக்கு இங்கு ஞாபகத்துக்கு வருகிறது   "உங்களுக்கு கீழ் இருக்கை வேண்டுமென்றால்  நீங்கள்

முன்னமே பதிவு செய்திருக்க வேண்டும்" என்பதே அந்த பதில்.
 
அது மனுஷ பிரகாரகம ஒரு நியாயமான பதில் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை!  ஆனால் ஆவிக்குரிய நிலையில் அது இரக்கமற்ற  மிக தவறான பதில்! அதுபோலவே தாங்கள் பதிலும் இருக்கிறது.//

நீங்கள் அப்பெண்மனியின் சார்பில் நின்று பேசுகிறீர்கள். நான் அந்த இஸ்லாமியர் சார்பில் நின்று பேசுகிறேன். அவருங்கூட ஏதோ தவிர்க்க இயலாத காரணத்தால், மேலிருக்கைக்குப் போக இயலாத நிலையில் இருக்கலாமே! தனது நிலையை அவர் வெளிப்படையாக சொல்லித்தான் ஆகவேண்டுமென்பதில்லையே! தனக்கு கீழிருக்கைதான் வேண்டுமென்ற காரணத்தால் கீழிருக்கை பதிவுசெய்த அவர், அதுபோலவே அப்பெண்மணியும் செய்திருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லையே!

இரக்கம் என்பதைப் பொறுத்தவரை, நாம்தான் மற்றவர்களுக்கு இரக்கஞ்செய்யவேண்டுமேயொழிய, மற்றவர்களிடம் நாம் இரக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது. ஒரு நல்ல ஆவிக்குரிய மனிதன், தேவனிடம் மட்டுமே இரக்கத்தை எதிர்பார்க்க வேண்டுமேயொழிய, சகமனிதரிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாது. ஒருவேளை பிற மனிதர்களின் இரக்கம் நமக்குக் கிடைத்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம்தான். ஆனால் அதை ஒருபோதும் எதிர்பார்க்கக்கூடாது.

எனவே அப்பெண்ணைப் பொறுத்தவரை, பிறரது இரக்கத்தை நம்பி இரயிலில் வராமல், தனக்கு கீழிருக்கை உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே இரயிலில் ஏறியிருக்க வேண்டும்.

//இதெல்லாம் எனது சித்தப்படியோ அல்லது நான் விரும்பியோ ஏற்றது போல் எனக்கு தெரியவில்லை. இவ்வாறு எனது விருப்பத்துக்கு மீறி நடக்கும் இந்த செயலுக்கு நான் பொறுப்பும் ஆக முடியாது. //

இந்த நாள் இந்த தேதியில் நீங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி இடிந்துவிடும் என உங்களுக்கு முன்னறிவிக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதே மாடியில்தான் குடியிருப்பீர்களா? வசதிக்குறைவாகவும் தூரத்திலும் இருந்தால்கூட பரவாயில்லை, உடனடியாக இந்த மாடியைக் காலிசெய்யவேண்டும் என நினைப்பீர்களல்லவா?

இந்த நேரத்தில் ஆபத்து நிச்சயம் நேரிடும் எனத் தெரிந்தால் எடுக்கக்கூடிய நடவடிக்கையை, எந்த நேரமும் ஆபத்து நேரக்கூடும் என்ற நிலையில் ஏன் எடுக்கக்கூடாது? அப்படி நடிவடிக்கை எடுக்காவிடில் அதற்கு யார் பொறுப்பு?

தற்போதைய உலகம் ஆபத்துக்கள் நிறைந்ததுதான். அந்த ஆபத்துக்களைத் தவிர்க்கவேண்டுமெனில், சில வசதிகளை தியாகம் செய்துவிட்டு ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஆபத்து வந்தாலும் பரவாயில்லை, எனக்கு வசதிகள் கட்டாயம் வேண்டும் என நினைத்தால் அதுவுங்கூட தவறில்லைதான்; ஆனால் ஆபத்து நேர்ந்த பின்னர் அதற்கான பொறுப்பு நாமே என்பதை உணராமல் சாத்தானையோ தேவனையோ பொறுப்பாக்க முயல்வதுதான் தவறு.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


ஆதியிலே கர்த்தர் ஆதாமை உண்டாக்கி எல்லா கனியையும் புசிக்கலாம் 
ஆனால் இந்த தீமையான கனியை புசிக்காதே என்று சொல்லிவிட்டார் 
 
 
 
 
ஆதியாகமம் : 2
 
 
17. ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
 
 

கர்த்தர் சொன்னபடி அவர்கள் ஒழுங்காக தான் இருந்தார்கள் ஆனால் சாத்தான் சர்பத்தின் மூலம் அவர்களை பாவம் செய்ய வைக்கின்றான்

 

இங்கு பாவத்திற்கு முழு காரணம் யார் என்பது  தெரிய வரும்

 
 
ஆதியாகமம் : 3
 
4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
 
 
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது
 
 
 
ஆனால் ஆதாமுக்கோ ஏவாளுக்கோ  கர்த்தர்  முன்பே சொல்லியிருந்தார் இந்த கனியை புசிக்க கூடாது என்று ஆனால் அவர்கள இருவரும் சாத்தான் வார்த்தைக்கு செவிகொடுத்து கர்த்தர் செய்யாதே என்று சொன்ன வார்த்தையை மீறி கனியை புசித்து விட்டார்கள்
 
 
 
ஆதாமும் ஏவாளும் ஒழுங்காக தான் இருந்தார்கள் சாத்தான் என்பவன் வந்த பிறகுதான் அவர்கள் பாவத்தில் விழுந்தார்கள் இங்கு முழு காரணனம் சாத்தான் தான்
 
 
அதற்காக மனிதர்கள் தவறு செய்ய வில்லை என்று நான் கூறவில்லை சாத்தானுடைய வார்த்தைக்கு இணங்கி அவர்களும் பாவம் செய்தார்கள் இங்கு மனிதர்களுக்கும் சம்மந்தம் இருக்கின்றது
 
 
 
சகோ : சுந்தர் சொல்ல வருவது அது தான் என்று நான் நினைக்கின்றேன்
 
 
sundar wrote :
_____________________________________________________________________________________
மதியற்ற மனுஷர்களோ விளக்கை தேடி ஓடும் விட்டில் பூச்சுகளாய், அவன் காட்டும் உலக இன்பத்தை நாடி ஓடி  உள்ளே விழுந்து அழிந்து போகிரார்கள்!
____________________________________________________________________________________
 
 
அதாவது கர்த்தர்  சொன்ன வார்த்தைக்கு கீழ் படியாமல் ஆதாம் ஏவாள் செய்தது போல சாத்தான் காட்டும் மற்றும்  சொல்லும் வார்த்தைகளுக்கு
கீழ்படிகின்றார்கள்
 
 
தேவனுக்கு பிடிக்காதவைகளை சாத்தான் மனிதன் முன்பு கொண்டு வருகின்றான் தேவன் அவனுக்கு தெரியபடுத்தி இருந்தும்  மனிதன் அதின் மேல் ஆசை பட்டு விழுந்துபோகின்றான் 
 
 
(1 ) மனிதர்களை அழிக்க பாவத்தை கொண்டு வருவது சாத்தான் தான் என்பது உண்மை
 
 
(2 ) அதின் மேல் ஆசை பட்டு அந்த அழிவுக்கு காரணமாகின்றது மனிதர்களாகிய நாம்
 
 
 
இங்கு பாவத்திற்கும் மனிதனின் அழிவிற்கும்  மூல காரணம் யார் என்றால் சாத்தான் தான்..........
 

தூண்டில் போடுகின்றவன் சாத்தான் அதில் ஆசை பட்டு 

மாட்டிகொள்கின்றவர்கள்  மனிதர்களாகிய நாம்.................



-- Edited by EDWIN SUDHAKAR on Monday 31st of October 2011 08:50:42 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சகோதரர் அன்பு  அவர்களே "மனுஷன் அவனவன் செய்த தப்புக்கு தண்டனை உண்டு" என்பதும் "அவனவன் செய்த பாவத்துக்கு அவனன்வந்தான் பொறுப்பு என்பதும்" "சாத்தானை காரணம்  காட்டி  யாரும்  தப்பித்துகொள்ள  முடியாது" என்பதும்,  நானும்  ஏற்கிறேன், அதை குறித்து நானும் எழுதிவருகிறேன்.
 
அதற்காக,  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன் விபத்துக் குள்ளானால் அவனை பார்த்து "இவன் நடந்து வந்திருந்தால இப்படி ஒரு விபத்து நடந்திருக்காது" என்று சொல்வதும் நடந்து வந்த  ஒருவனுக்கு விபத்து நடந்தால் "இவன் வீட்டிலேயே இருந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" என்றும்  வீட்டில் தூங்கிய ஒருவன்மேல் லாரி ஏறிவிட்டால் "இவன் வீட்டில் தூங்காமல்  ஆள் இல்லாத காட்டில் தூங்கிஇருந்தால் இப்படி நடந்திருக்குமா எல்லாவற்றிக்கும் இவன்தான் பொறுப்பு" என்று சொல்லுவதும் தங்களின் இரக்கநிலை எந்த அளவில் இருக்கிறது என்பதை அப்படியே வெளிக்காட்டுகிறது.
 
முற்றிலும் கிரியைசார்ந்த நிலையில் இருக்கும் தங்களின் பதிவு சாத்தானை நான் குறை சொல்லவேமாட்டேன், "தேவனின் சித்தம்" அதாவது தேவனை வேண்டுமானால் கொலைபாதகன் என்றுசொல்லுவேன் என்பதுபோல் இருக்கிறது.  கொலை செய்தவனைவிட கொலை செய்ய தூண்டியவனே அடிப்படை குற்றவாளி என்பது எல்லோருக்கும் தெரியும்!  அதுபோல் ஒன்றுமறியாத நிலையில் இருந்த ஆதாம் ஏவாளை பாவம் செய்ய தூண்டிய சாத்தான்தான்  அடிப்படை குற்றவாளி.  
 
மனுஷர்களுக்கு தேவன் எத்தனைமுறையோ வெவேறு வடிவங்களில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்த போதும் "எல்லோருமே பாவம் செய்து தேவ மகிமையை இழந்துபோனோம்" என்று வேதம் சொல்கிறது. ஒருவேளை தேவனும் தாங்கள் சொல்வதுபோல், "அவன் பாவத்துக்கு அவனேபொறுப்பு, நான் சொன்னதை கேட்காமல் பாவம் செய்கிறான் எக்கேடும் கெட்டுபோகட்டும்" என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள் எனது நிலை மட்டுமல்ல எல்லோர் நிலையும் கேள்விக்குறியே!
 
ஆனால்   தேவன் அப்படி செய்யவில்லை "நாம் பாவி, உருப்படாதவர்கள், தேவனை விட்டு விலகி போனவர்கள்" என்று நன்றாகவே தெரிந்திருந்தும் தன் குமாரனையே 
நமக்காக தந்திருக்கிறார் என்றால் அதன் பெயர்தான் "தேவ அன்பு" என்பது. அவ்வாறு அவர் செய்யகாரணம் பாவத்தின் அடிப்படை சாத்தான்என்பது அவருக்கு தெரியும்.  அத்தோடு  அவ்வாறு அன்பு செய்த தேவன் நம்மையும் பார்த்து "நான் உனக்கு இரங்கியதுபோல நீ பிறருக்கு இரங்கு" என்று சொல்லியிருக்கிறார் அதற்க்கு காரணமும் பாவத்தின் அடிப்படை சாத்தான் என்பது அவருக்கு தெரிந்ததால்தான்.  
 
"நீ செய்தாய் அல்லவா?  நீ அனுபவி" என்பது தேவ அன்பு அல்ல!  ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அவனுக்காகவும்  பரிதபிப்பது தான் "தேவ அன்பு" என்பது!
 
தங்களிடத்தில் அன்பு இருக்கிறது ஆனால் தேவ அன்பு இருப்பதுபோல் தெரியவில்லை!
 
மத்தேயு 18:33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ
  
என்ற வார்த்தைப்படி, ஒருபுறம் பாவம் தண்டனையை கொண்டுவரும் என்று எச்சரித்தாலும் இன்னொருபுறம்  பாவியாகிய நம்மேல் தேவன் இரக்கம் காட்டியது போல, துன்பபடுகிரவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்ன பாவம் செய்திருந்தாலும் நமக்கு வேண்டாதவனாக இருந்தாலும்கூட  அவர்களுக்காகவும் பரிதபித்து ஜெபிப்போம்  இரக்கம் காட்டுவோம்! தேவனிடத்தில் இரக்கம் பெறுவோம்!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர்:

//அதற்காக,  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன் விபத்துக் குள்ளானால் அவனை பார்த்து "இவன் நடந்து வந்திருந்தால இப்படி ஒரு விபத்து நடந்திருக்காது" என்று சொல்வதும் நடந்து வந்த  ஒருவனுக்கு விபத்து நடந்தால் "இவன் வீட்டிலேயே இருந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" என்றும்  வீட்டில் தூங்கிய ஒருவன்மேல் லாரி ஏறிவிட்டால் "இவன் வீட்டில் தூங்காமல்  ஆள் இல்லாத காட்டில் தூங்கிஇருந்தால் இப்படி நடந்திருக்குமா எல்லாவற்றிக்கும் இவன்தான் பொறுப்பு" என்று சொல்லுவதும் தங்களின் இரக்கநிலை எந்த அளவில் இருக்கிறது என்பதை அப்படியே வெளிக்காட்டுகிறது.//

//தங்களிடத்தில் அன்பு இருக்கிறது ஆனால் தேவ அன்பு இருப்பதுபோல் தெரியவில்லை!//

அன்பான சகோதரரே!

உங்களது இம்மாதிரி விமர்சனங்கள், கோவை பெரியன்ஸாரைத்தான் நினைவுபடுத்துகிறது. இம்மாதிரி விமர்சனங்கள் விவாதத்தை திசைதிருப்பி ஒருவரையொருவர் கோபமூட்டத்தான் பயன்படுமேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது.

பொருத்தமற்ற ஓர் உதாரணத்தைச் சொல்லி, அதனடிப்படையில் எனது இரக்க நிலையையும் விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் சந்தர்ப்பங்களில் நான் இப்படித்தான் சொல்வேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இம்மாதிரி சம்பவங்களுக்கு சாத்தான்தான் காரணம் என நீங்கள் சொன்னதால், அப்படியல்ல, மனிதர்களின் தவறுதான் பிரதான காரணம் என நான் கூறினேன். இதை வைத்து எனது இரக்கநிலையை எப்படி எடை போடுகிறீர்கள் என்பது புரியவில்லை.

எனது இரக்கநிலை எப்படிப்பட்டது, எனது அன்பு எப்படிப்பட்டது என்பதை நாம் இங்கு விவாதிக்கவில்லை. மனிதர்களின் துன்பங்களுக்கான காரணம் பற்றித்தான் இங்கு நாம் விவாதிக்கிறோம்.

இரு சக்கர வாகனம் வாங்குகிற ஒருவர் அதை வாங்கும்போதே, அதன் மூலம் தனக்கு விபத்து நேரிடக்கூடும் என்பதை அறிவாரல்லவா? அந்த விபத்தைத் தவிர்க்கவேண்டுமெனில், அந்த வாகனத்தை அவர் வாங்காதிருப்பதுதான் புத்திசாலித்தனம். அதை விடுத்து, நான் வாகனம் வாங்கத்தான் செய்வேன், ஆனால் எனக்கு விபத்து நேரிடக்கூடாது என்பது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கதையாகத்தான் இருக்கும்.

வாகனத்தால் வரக்கூடிய risk-ஐ நன்றாகத் தெரிந்தே வாகனத்தை வாங்கிவிட்டு, பின்னர் விபத்து நேர்ந்த பின், “அய்யோ, சாத்தானால் எனக்கு விபத்து நேர்ந்துவிட்டதே” என ஓலமிடுவதுதான் புத்திசாலித்தனமா? வாகனத்தால் வரக்கூடிய வசதி வேண்டுமெனில், அதோடுகூட வரக்கூடிய risk-ஐயும் சந்திக்கத்தான் வேண்டும்.

பல வாகனங்கள் செல்லும் சாலையில் நடந்துசென்றாலுங்கூட விபத்து நேரிடக்கூடும் என்பதை அறிந்துதான் சாலையில் நாம் நடக்கிறோம். அப்படி நடக்கும்போது விபத்து நேர்ந்தால், அதற்குக் காரணம் நடந்து சென்றவரின் தவறாக இருக்கவேண்டும், அல்லது வாகன ஓட்டியின் தவறாக இருக்கவேண்டும், அல்லது இருவரின் தவறாக இருக்கவேண்டும். நீங்களோ, அவற்றை ஒதுக்கிவிட்டு, சாத்தான் தான் விபத்துக்குக் காரணம் என்கிறீர்கள். இப்படிச் சொல்வதுதான் ஆவிக்குரிய விளக்கம் என்றும், நான் சொல்வது மாம்சப்பிரகாரமான விளக்கம் என்றும் சொல்கிறீர்கள்.

மனிதன் பாவம் செய்வதைப் பற்றி ஆராய்வதில் மட்டும்தான் ஆவிக்குரிய நிலையில் சிந்திக்கமுடியுமேயொழிய, ஒருவன் கைதவறி ஒரு பொருளைக் கீழே போடுவதிலும், கல் தடுக்கி கீழே விழுவதிலுமா ஆவிக்குரிய நிலையில் ஆராயமுடியும்? பிதாவின் சித்தம் இல்லாமல் ஓர் அடைக்கலான் குருவிகூட கைதவறி கீழேவிழுவதில்லை என வசனம் இருக்கையில், நமக்கு நேரிடுகிற விபத்துகளுக்குக் காரணமாக சாத்தானை இழுப்பது முறையாகுமா?

வேதாகமத்தில் சில சம்பவங்கள் உண்டு. அவற்றை சற்று படியுங்கள்.

2 சாமுவேல் 4:4 சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.

அப்போஸ்தலர் 20:9 அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.

இச்சம்பவங்களில், மேவிபோசேத் முடவனானதற்குக் காரணம், அவனது தாதி அவனைத் தூக்கிக்கொண்டு அவசரமாக ஓடியதாகும்; ஐத்திகு மரித்ததற்குக் காரணம், அவன் 3-ம் மாடியின் ஜன்னலில் உட்கார்ந்து தூங்கியதாகும். இக்காரணங்களைத்தான் வசனம் சொல்கிறதேயன்றி, சாத்தான்தான் தாதியை வேகமாக ஓடவைத்து சிறுவனை விழச்செய்தான் என்றோ, சாத்தான்தான் ஐத்திகுக்கு நித்திரையைக் கொடுத்து கீழே தள்ளினான் என்றோ கூறுகின்றனவா? ஆனால் நீங்களோ சாத்தான்தான் அப்படிச் செய்தான் எனக் கூறுவீர்கள் போலும்.

மனிதர்களுக்கு நேரிடும் விபத்துக்கள் மற்றும் இயற்கை அழிவுகளுக்கு யார் காரணம் என்ற அடிப்படையில் துவக்கிய விவாதம், மனிதர்களின் பாவங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு திரும்பிவிட்டது. இதற்குக் காரணம் சுந்தரின் பின்வரும் கூற்றாகும்.

//மதியற்ற மனுஷர்களோ விளக்கை தேடி ஓடும் விட்டில் பூச்சுகளாய், அவன் காட்டும் உலக இன்பத்தை நாடி ஓடி  உள்ளே விழுந்து அழிந்து போகிரார்கள்!//

சுந்தரின் இக்கூற்றுக்கு பதிலாக நான் எதையோ எழுத, சகோ.எட்வின் சுதாகர் இப்படிக் கூறுகிறார்.

//இங்கு பாவத்திற்கும் மனிதனின் அழிவிற்கும்  மூல காரணம் யார் என்றால் சாத்தான் தான்..........

தூண்டில் போடுகின்றவன் சாத்தான் அதில் ஆசை பட்டு 

மாட்டிகொள்கின்றவர்கள்  மனிதர்களாகிய நாம்.................//

ஆனால் வேதாகமமோ இப்படிச் சொல்கிறது:

யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். 16 என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.

சுந்தர்:

//முற்றிலும் கிரியைசார்ந்த நிலையில் இருக்கும் தங்களின் பதிவு சாத்தானை நான் குறை சொல்லவேமாட்டேன், "தேவனின் சித்தம்" அதாவது தேவனை வேண்டுமானால் கொலைபாதகன் என்றுசொல்லுவேன் என்பதுபோல் இருக்கிறது.//

நான் சொல்லாதையெல்லாம் தங்களின் கற்பனையில் உருவாக்கி சம்பந்தமில்லாமல் எழுதுகிறீர்கள். தன் பிழையை உணருகிறவன் யார் என வேதாகமம் கேட்கிறது. நீங்களோ, என் பிழையை நான் உணருகிறேன், ஆனால் அதற்குக் காரணம் சாத்தான்தான் என்கிறீர்கள். இதேவிதமாகத்தான் ஆதாமும் ஏவாளும் கூறினர்கள்; ஆனால் அதன் பலனாக அவர்கள் தண்டனையைத்தான் பெற்றார்கள். ஆதாம் ஏவாளைப் போல் நமக்கும் தண்டனை உண்டு என்கிறீர்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் காரணம் சாத்தான்தான் என்றும் சொல்கிறீர்கள்.

சுந்தர்:

//ஆனால்   தேவன் அப்படி செய்யவில்லை "நாம் பாவி, உருப்படாதவர்கள், தேவனை விட்டு விலகி போனவர்கள்" என்று நன்றாகவே தெரிந்திருந்தும் தன் குமாரனையே நமக்காகத் தந்திருக்கிறார் என்றால், அதன் பெயர்தான் "தேவ அன்பு" என்பது.//

சரி, அப்படியானால் நாம் பாவம் செய்துகொண்டே இருக்கலாம் என்கிறீர்களா, அல்லது பாவம் செய்தால் தண்டனை உண்டு என்கிறீர்களா? பாவம் செய்பவனுக்குத் தண்டனை உண்டு என்றால், அவன்மீது தேவ அன்பு கிடையாதா?

சுந்தர்:

//அத்தோடு  அவ்வாறு அன்பு செய்த தேவன் நம்மையும் பார்த்து "நான் உனக்கு இரங்கியதுபோல நீ பிறருக்கு இரங்கு" என்று சொல்லியிருக்கிறார் //

பிறருக்கு இரங்கத்தான் வேண்டும்; ஆனால் எந்தெந்த விஷயங்களில் இரங்க வேண்டும் என்பதை சற்று விளக்கமாக வசன ஆதாரத்துடன் கூறும்படி வேண்டுகிறேன்.

சுந்தர்:

//மத்தேயு 18:33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ

என்ற வார்த்தைப்படி, ஒருபுறம் பாவம் தண்டனையை கொண்டுவரும் என்று எச்சரித்தாலும் இன்னொருபுறம்  பாவியாகிய நம்மேல் தேவன் இரக்கம் காட்டியது போல, துன்பப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்ன பாவம் செய்திருந்தாலும் நமக்கு வேண்டாதவனாக இருந்தாலும்கூட  அவர்களுக்காகவும் பரிதபித்து ஜெபிப்போம்; இரக்கம் காட்டுவோம்! //

நீங்கள் மேற்கோள் காட்டின வசனத்துக்கும், அதை ஆதாரமாக வைத்து நீங்கள் கூறுகிற கூற்றுக்கும் சம்பந்தமில்லை. நமக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களுக்கு இரங்குவதை மட்டும்தான் அவ்வசனம் குறிப்பிடுகிறது. மற்றபடி நமக்கு விரோதமாக இல்லாமல், தேவனுக்கு விரோதமாகவோ பிற மனிதர்களுக்கு விரோதமாக பாவம் செய்தவர்களுக்கு இரங்கும்படி அவ்வசனம் கூறவில்லை. அப்படிப்பட்டவர்களைக் கண்டிக்கும்படித்தான் வேதாகமம் சொல்கிறது.

இரக்கம் என்றால் என்ன, யாரிடம் எப்போது இரக்கம் காட்டவேண்டும் என்பது பற்றி சற்று ஆழமாக தியானித்து, வசன ஆதாரத்துடன் ஒரு கட்டுரை பதிக்கும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//ஆனால் சர்வ வல்ல தேவனுக்கோ "அவர் கண்களுக்கு மறைவானது ஒன்றும் இல்லை"என்ற நிலையில், இப்படி குற்றுயிரும் குலையுயிருமாய் துன்பம் அனுபவிக்கும் தான் உண்டாக்கிய மனுஷர்களைப் பார்த்து எத்தனை வேதனை அடைவார்.//

இதே தேவன்தான் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” எனும் நியாயத்தீர்ப்பை செயல்படுத்தும்படி மோசே மூலம் கட்டளையிட்டார். கண்ணைத் தோண்டி எடுத்தல் என்பது எத்தனை துன்பமானது, கண்ணிலாமல் வாழ்வதென்பது எத்தனை துன்பமானது என்பதெல்லாம் தேவனுக்குத் தெரியாதா? அந்த துன்பத்தைப் பார்த்து தேவன் வேதனையடையமாட்டாரா?

தப்பு செய்தவனுக்கு தண்டனையான இதை விடுங்கள்; பாவமேயறியாத பச்சிளங்குழந்தைகள்மீதுகூட இரக்கம் வைக்காமல் கொல்லும்படி சவுல் ராஜாவிடம் கட்டளையிட்டாரே (1 சாமு. 15:3); அப்போதும் தேவன் வேதனையடையமாட்டாரா? சவுலின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், அதெப்படி குழந்தைகள்மீது இரக்கம் வைக்காமல் அவர்களைக் கொல்லமுடியும் எனத் தேவனிடம் கேள்வி கேட்பீர்கள் போலும்.

யுத்தங்களின்போது எத்தனையோ வீரர்கள் குற்றுயிராய் கிடக்க நேரிடும்தானே? அப்படியிருந்தும் எத்தனை யுத்தங்களை தேவனே முன்னின்று நடத்தினார்? அப்போதெல்லாம் குற்றுராய் கிடக்கப்போகிறவர்களின் வேதனையை தேவன் அறியாமல் இருந்தாரா? அவர்களுக்காக தேவன் வேதனையடையமாட்டாரா?

1 ராஜாக்கள் 13:1-24 வசனங்களைப் படித்துப் பாருங்கள். தேவமனுஷன் ஒருவன், தேவன் தனக்குக் கட்டளையிட்ட பணியை முடித்துவிட்டுத் திரும்புகையில், தேவன் தனக்குச் சொன்னபடியே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கையில், மற்றொரு தீர்க்கதரிசியின் பொய்யை நம்பி, தேவகட்டளையை மீறி அப்பம் புசித்ததின் நிமித்தம் தேவன் அவனை ஒரு சிங்கத்தைக் கொண்டு கொன்றாரே! சிங்கம் ஒரு மனிதனைக் கடித்துக் குதறிக் கொல்கையில் அவன் எத்தனை வேதனையடைவான்? அந்த வேதனை தேவனுக்குத் தெரியாதா? அதைப் பார்த்து அவர் வேதனையடையமாட்டாரா?

இப்படி பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் காரணம் சாத்தான்தான் என்றால், சாத்தான்தான் மனிதர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுப்பவனா? சாத்தானின் நிர்ப்பந்தத்தால்தான் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்பது போன்ற நியாயத்தீர்ப்பை தேவன் கட்டளையிட்டாரா? அமலேக்கியரின் குழந்தைகளைக் கொல்ல கட்டளையிட்டாரா? யுத்தம் செய்யக் கட்டளையிட்டாரா? தேவமனுஷனைக் கொல்லும்படி சிங்கத்துக்குக் கட்டளையிட்டாரா?

தேவன் நமக்குக் கட்டளையிடாத காரியங்களில் நாம் அதிகமாக யோசித்து, இதற்கெல்லாம் சாத்தான்தான் காரணம், எனவே இதற்காக நாம் ஜெபிக்கவேண்டும், அப்படி ஜெபிக்காதவர்களெல்லாம் இரக்கமில்லாதவர்கள், தேவ அன்பு இல்லாதவர்கள் என நீங்கள் முடிவுகட்டினால், அது உங்கள் அறியாமையைத்தான் வெளிப்படுத்தும்.

எந்தெந்த விஷயங்களில் எவர்களிடம் இரக்கம் காட்டவேண்டும் எனத் தேவன் கட்டளையிட்டுள்ளாரோ அவ்வண்ணமே இரக்கம் காட்டினால் போதுமானது. எழுதப்பட்டதற்கு மிஞ்சி எதையும் எண்ணவேண்டாமென வேதாகமம் கூறுகிறது (1 கொரி. 4:6). அப்படியே நான் இருந்துவிட்டுப் போகிறேன். அதினிமித்தம் நான் இரக்கமற்றவன், தேவ அன்பில்லாதவன் என விமர்சிக்கப்பட்டாலும் பரவாயில்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//ஆனால் சர்வ வல்ல தேவனுக்கோ "அவர் கண்களுக்கு மறைவானது ஒன்றும் இல்லை"என்ற நிலையில், இப்படி குற்றுயிரும் குலையுயிருமாய் துன்பம் அனுபவிக்கும் தான் உண்டாக்கிய மனுஷர்களைப் பார்த்து எத்தனை வேதனை அடைவார்.//

இப்படிச் சொல்லும் சகோதரரே! பின்வரும் வசனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

வெளி. 6:3 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். 4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

வெளி. 6:7 அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். 8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

பரலோகத்தில் தேவசமூகத்தில்தான் 4 ஜீவன்கள் நின்றன. அப்போதுதான் முத்திரைகள் உடைக்கப்பட்டன. அப்போது ஒவ்வொரு குதிரையிலும் ஒவ்வொருவன் ஏறி பூமிக்குப் புறப்படுவதாக வசனங்கள் கூறுகின்றன. அப்படி புறப்பட்டவர்களில் இருவருக்குத்தான் மேற்கூறிய பிரகாரமாக அதிகாரம் கொடுக்கப்பட்டதாக வசனங்கள் கூறுகின்றன. அந்த அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்? தேவனா? சாத்தானா? பதில் சொல்லுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோ. அன்பு அவர்களே  உங்கள் இரக்கம் எப்படிபட்டது என்பதை குறித்த என்னுடய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். உங்கள் இரக்கம் பற்றி  தேவன் ஒருவரே அறிவார். மேலும்  விவாதத்தை நான் பெரிதாக வளர்க்க விரும்பவில்லை. தங்கள் கருத்துக்கும் முடிவுக்கும் மிக்க நன்றி! 
 
தங்களின் நிபந்தனையுடன் கூடிய இரக்கம் மற்றும் அன்பை, நிபந்தனையற்ற இரக்கம் மற்றும் தேவ அன்போடு கூட கொண்டுவந்து ஒப்பிடவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்!  
  
I கொரிந்தியர் 13: 7. (அன்பு)  சகலத்தையும் தாங்கும்,சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்
 
இங்கு சகலம் என்ற வார்த்தை எந்த நிபந்தனையும் இல்லாத எல்லாவற்றையுமே குறிக்கிறது.
 
I தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
 
இங்கு எல்லா மனுஷர்களுக்காகவும் என்பது எந்த நிபந்தனையும் இல்லாமல் எல்லோரையும் குறிக்கிறது.  
 
மத்தேயு 5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
மத்தேயு 5:48 ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
லூக்கா 6:36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
 
"பூரண சற்குணம்" அல்லது "பூரண இரக்கம்" என்பது தீயோர் மேலும் நல்லோர் மேலும் எந்த பாகுபாடும் இல்லாமல் இரக்கம் காட்டுவதும் காரியங்களை செய்வதுமே ஆகும்!   
 
தேவன் பரிசுத்தர்! அவர்  நியாயாதிபதி! அவர் எப்படி வேண்டு மானாலும் நியாயம் தீர்க்கட்டும். ஆனால் நாம்   ஒவ்வொருவருமே பாவ மனுஷர்களே! நாம் ஒவ்வொருநாளும் தேவனின் பெரிதான கிருபையாலும் அவரது மகாபெரிய இரக்கங்களாலும் வாழ்ந்துகொண்டு 
இருக்கிறோம். இந்நிலையில்  நம் போன்ற பிற மனுஷர்கள் என்ன நிலையில் இருந்தாலும் அவர்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் நடந்து, ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்கி அவர்களுக்காக ஜெபிப்பதே நமக்கு தேவஇரக்கம் கிடைக்க வழி செய்யும். அதைவிட்டு "நான் பரிசுத்தன்" என்று எண்ணிக்கொண்டு பிறரை நான் நியாயம்தீர்க்க முற்ப்பட்டால், நம்மில் உள்ள சிறு சிறு குறைகளும்  பெரிதாக்கபட்டு நாமும் நியாயம்தீர்க்கப்படுவோம்!
 
மத்தேயு 7:2  நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//தங்களின் நிபந்தனையுடன் கூடிய இரக்கம் மற்றும் அன்பை, நிபந்தனையற்ற இரக்கம் மற்றும் தேவ அன்போடு கூட கொண்டுவந்து ஒப்பிடவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்!  //

//அதைவிட்டு "நான் பரிசுத்தன்" என்று எண்ணிக்கொண்டு பிறரை நான் நியாயம்தீர்க்க முற்ப்பட்டால், நம்மில் உள்ள சிறு சிறு குறைகளும்  பெரிதாக்கபட்டு நாமும் நியாயம்தீர்க்கப்படுவோம்!//

மீண்டும் மீண்டும் அபாண்டமாக என்னை விமர்சிக்கவே முயல்கிறீர்களேயொழிய, எனது வாதங்களுக்கு பதிலளிக்க முன்வரவில்லை.

சில வசனங்களைப் பதித்து ஏதேதோ கருத்துக்களைச் சொல்லியுள்ளீர்கள்; ஆனால் அவற்றில் பல ஏற்கத்தக்கதாக இல்லை. இது சம்பந்தமாக உங்களுடன் விவாதிக்க நான் விரும்பவில்லை. எனினும், நீங்கள் பதித்துள்ள வசனங்களின் முன்/பின் வசனங்களைப் பதிக்கிறேன்; அத்துடன் அடைப்புக்குறிக்குள் சில வார்த்தைகளைச் சேர்க்கிறேன். அதன் மூலம் அவ்வசனங்களின் சரியான கருத்தை நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ, மற்றவர்களாவது அறிய அது ஏதுவாயிருக்கும்.

1 தீமோ. 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; (எதற்காக?) 2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

மத்தேயு 5:39  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
 43 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? 48 ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

1 கொரி. 13:7 (பிறர் நம்மைத் துன்புறுத்தும் வண்ணம் செய்கிற) சகலத்தையும் (அன்பு) தாங்கும், (பிறர் சொல்கிற) சகலத்தையும் (அன்பு) விசுவாசிக்கும், (பிறர் சொல்கிற) சகலத்தையும் (அன்பு) நம்பும், (நம்மைக் குறித்த பிறரது அபாண்டங்கள் அவதூறுகள்) சகலத்தையும் (அன்பு) சகிக்கும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

மீண்டும் மீண்டும் அபாண்டமாக என்னை விமர்சிக்கவே முயல்கிறீர்களேயொழிய, எனது வாதங்களுக்கு பதிலளிக்க முன்வரவில்லை.


சகோதரரே நான் தங்களை குற்றாளியாக தீர்க்கவில்லை. பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் எல்லோருக் காகவும் ஜெபிக்கவேண்டும் என்பதற்கு ஆதரமான சில வசனங்களை  சுட்டினேன். அவ்வளவே! அதற்கும் தாங்கள் சில நிபந்தனைகளை  சேர்த்துள்ளீர்கள்  இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை, தாங்கள் விருப்பம்.  

 
நான் எழுதியது:
//அதைவிட்டு "நான் பரிசுத்தன்" என்று எண்ணிக்கொண்டு பிறரை நான் நியாயம்தீர்க்க முற்ப்பட்டால், நம்மில் உள்ள சிறு சிறு குறைகளும்  பெரிதாக்கபட்டு நாமும் நியாயம்தீர்க்கப்படுவோம்!//
 
மேலும் நான் எழுதிய இந்த வார்த்தை எனக்கு சேர்த்து  பொதுவாக எழுதினேன் காரணம் என் மனதிலும் சில நேரங்களில் இதுபோன்ற எண்ணங்கள்  எழுவது உண்டு. அதுபோன்ற பெருமையை  தலை தூக்க விடாமல் அமுக்கவே இது போன்று எழுதினேன். 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பூமியில் நடக்கும் எந்த ஒரு காரியத்தையும் நாம் முற்றிலும்  மாம்ச சூழ்நிலையில் பார்க்காமல் ஆவிக்குரிய நிலையிலும் பார்த்தால் மட்டுமே ஒரு காரியம் நடப்பதன் அடிப்படை உண்மையை  புரிந்து கொண்டு அதற்க்கேற்ப செயல்பட முடியும்! 
 
பேதுருவை குறித்த ஒரு சம்பவத்தை நாம் எடுத்துகொண்டால் இயேசு  தனது சிலுவை  மரணத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான் (மத்16:22)    
 
ஆண்டவரின் X-REY கண்களுக்கோ அங்கு அங்கு நின்று பேசிய பேதுரு தெரியவில்லைமாறாக தேவனின்திடடத்தை கெடுப்பதற்கு அவனுக்குள் இருந்து கிரியைசெய்த சாத்தான்தான் தெரிந்தான் எனவேதான்   திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்ற வைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத் 16:23) 
 
இங்கு இயேசு அவரோடு பேசிக்கொண்டு இருந்த பேதுருவை கடிந்து கொள்ளாமல் அவனுக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானையே கடிந்துகொண்டார்.  எனவே நாமும்  நமக்கு முன்னால் இருந்து கிரியை  செய்யும் மனுஷர்களை  மட்டும் பார்க்காமல் அவர்களுக்குள் இருந்து கிரியை செய்யும் ஆவி எப்படிபட்டது எனபதையும் அறிந்து செயலபட வேண்டியது அவசியமாகிறது.
 
இந்த உலகத்தில் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு போராட்டம் இல்லை!
 
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
 
மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடினால் அல்லது மாம்ச நிலைகளை மட்டும் பார்த்து முடிவெடுத்தால் நாம் தொற்றுபோவது உறுதி என்பது எனது  கருத்து.  
 
சாத்தானின் பிடியில் அகப்பட்டு அல்லது சாத்தானால் தூண்டபட்டு பாவம் செய்தாலும் அவன் தண்டனை இல்லாமல் தப்பிக்க முடியாது என்பதும் உண்மை. அதற்க்கு அத்தாட்சியாக ஆதாம் செய்த பாவம் மற்றும் அதற்க்கு கிடைத்த தண்டனை அடுத்து  யூதசைகூட கூறலாம் யூதாசின் மனதில் சாத்தான் புகுந்தபின்னர் அவன் இயேசுவை  காட்டி கொடுக்க ஆயத்தமாகிறான். ஆகினும் அவனுக்கு மன்னிப்பு  கிடைக்கவில்லை.
    
நான் இங்கு முக்கியமாக சொல்லவருவது என்னவெனில்: எதிலும் ஒரு சமநிலை பிரமாணம் மிக மிக அவசியம்.  பாவம் செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு! ஆகினும்  அதை நிறைவேற்றுவதோ அல்லது அதை  மன்னிப்பதோ முற்றிலும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும்.
 
உதாரணமாக பிறன் மனைவியை எடுத்துகொண்டு அவளது கணவனை
கொன்றுபோட்ட தாவீதுக்கு  தண்டனையுடன் கூடிய மன்னிப்பு கிடைத்தது, ஆனால் சாதாரணமாக, தேவன் அழித்துவிட சொன்ன மிருக ஜீவன்களை கர்த்தருக்கு பலியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரோடு வைத்திருந்த சவுலுக்கோ மன்னிப்பில்லை அவன் மரிக்க நேர்ந்தது.
 
நமது ரட்சகர் கூடவே இருந்துவிட்டு பின்னர் தெரியவே தெரியாது என்று மறுதலித்த பேதுருவுக்கு மன்னிப்பு கிடைத்தது ஆனால் தங்கள் சொந்த சொத்தை விற்ற கிரயத்தில் ஒருபாதியை எடுத்துகொண்டு பொய் சொன்ன அனனியா சப்பீராளுக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை. மரிக்க நேர்ந்தது.    
  
எனவே, எந்த பாவத்துக்கு எவ்வளவு தண்டனை வழங்குவது அதை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் அல்லது அதை எதன் அடிப்படையில் மன்னிக்கவேண்டும் என்பதெல்லாம் முடிவெடுக்க தேவன் ஒருவர்க்கே உரிமை உண்டு. அதில் நாம் தலையிடுவது முற்றிலும் சரியானதல்ல.   
 
நமக்கு தேவன் கட்டளையிடுவது  எல்லோரிடமும் இரக்கம் செய்து எல்லோரையும் மன்னிப்பதுதான்
 
மத்தேயு 5:7 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
 
லூக்கா 6:36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது
போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
மாற்கு 11:25  உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்  
 
எபேசியர் 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
 
இவைகளை மாத்திரம் நிறைவேற்றி நான் ஒரு அப்பிரயோஜனமான ஊளியக்காரன் என்று சொல்வோமாக!
 
"பழி வாங்குவதும் பதில் செய்வதும் தேவனுக்குறியது" அதை அவர் பார்த்துகொள்வார். நாம் யாரையும் நியாயம் தீர்க்காமல் இருப்போமாக. ஏனெனில் நாம் பிறரை என்ன தீர்க்கிறோமோ அதுவே நமக்கு திருப்பி
கிடைக்கும்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர்:

//சகோதரர் அவர்களே! இந்த திரியில் தாங்கள் இட்டுள்ள பின்னூட்டம் கொஞ்சமும் ஆவிக்குரிய நிலையில் இல்லாது முற்றிலும் மாம்சத்துக்குரிய  நிலையில் ஒரு சுற்று சூழல் ஆர்வலரோ  அல்லது அரசு அதிகாரியோ  பேசும் வண்ணமாக இருக்கிறது.//

//முற்றிலும் கிரியைசார்ந்த நிலையில் இருக்கும் தங்களின் பதிவு சாத்தானை நான் குறை சொல்லவேமாட்டேன், "தேவனின் சித்தம்" அதாவது தேவனை வேண்டுமானால் கொலைபாதகன் என்றுசொல்லுவேன் என்பதுபோல் இருக்கிறது.//

//தங்களிடத்தில் அன்பு இருக்கிறது ஆனால் தேவ அன்பு இருப்பதுபோல் தெரியவில்லை! //

//தங்களின் நிபந்தனையுடன் கூடிய இரக்கம் மற்றும் அன்பை, நிபந்தனையற்ற இரக்கம் மற்றும் தேவ அன்போடு கூட கொண்டுவந்து ஒப்பிடவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்! //

//அதைவிட்டு "நான் பரிசுத்தன்" என்று எண்ணிக்கொண்டு பிறரை நான் நியாயம்தீர்க்க முற்ப்பட்டால், நம்மில் உள்ள சிறு சிறு குறைகளும்  பெரிதாக்கபட்டு நாமும் நியாயம்தீர்க்கப்படுவோம்!//

//எனவே, எந்த பாவத்துக்கு எவ்வளவு தண்டனை வழங்குவது அதை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் அல்லது அதை எதன் அடிப்படையில் மன்னிக்கவேண்டும் என்பதெல்லாம் முடிவெடுக்க தேவன் ஒருவர்க்கே உரிமை உண்டு. அதில் நாம் தலையிடுவது முற்றிலும் சரியானதல்ல. //

//"பழி வாங்குவதும் பதில் செய்வதும் தேவனுக்குறியது" அதை அவர் பார்த்துகொள்வார்.//

இப்படியாக பதிந்துள்ள சுந்தர் அவர்களே!

இவற்றின் மூலம் நீங்கள் என்னை பின்வருமாறு நியாயந்தீர்த்துள்ளீர்கள்.

1. எனது பதிவு ஆவிக்குரிய விதமாக இல்லாமல், மாம்சத்திற்குரியதாக உள்ளது.

2. நான் முற்றிலும் கிரியை சார்ந்தவன்.

3. நான் சாத்தானைக் குறை சொல்லாதவன்.

4. நான் தேவனை கொலைபாதகன் எனச் சொல்லத் தயங்காதவன்.

5. என்னிடத்தில் தேவ அன்பு இல்லை.

6. எனது அன்பை தேவனின் அன்போடு ஒப்பிடுபவன்.

7. நான் என்னைப் பரிசுத்தன் என எண்ணிக் கொண்டு, பிறரை நியாயந்தீர்க்க முற்படுபவன்.

8. யாருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் தேவனின் உரிமையில் நான் தலையிடுபவன்.

9. நான் பழி வாங்குபவன்.

இப்படி என்னை நீங்கள் நியாயந்தீர்த்துவிட்டு, பிறரை நான் நியாயந்தீர்ப்பதாகக் கூறுகிறீர்கள்.

ஒரு விவாதத்தில் கலந்துகொண்டு வசனங்களின் அடிப்படையில் கருத்து சொன்னால், எனது கருத்துக்கு பதில் விவாதம் வைக்காமல், என்னை தனிப்பட்ட முறையில் நியாயந்தீர்க்கிறீர்கள். அத்தோடு விடாமல், நான் தான் பிறரை நியாயந்தீர்ப்பதாகவும் சொல்கிறீர்கள்.

உங்கள் தளத்தில் நான் எழுத வேண்டாம் என ஏற்கனவே ஓரிருமுறை சொல்லியுள்ளீர்கள்; ஆனாலும் அதையெல்லாம் மனதில் வைக்காமல் பதிவு தந்தேன். அதற்கு நல்ல சன்மானம் வழங்கி விட்டீர்கள்.

ஒயேயொரு வேண்டுகோள்! நான் பிறரை நியாயந்தீர்ப்பதாக சொல்கிறீர்களே, அதற்கு ஆதாரமான எனது ஒரேயொரு பதிவை எடுத்துக் காட்டுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

BRO. ANBU Wrote:
///என்னை நீங்கள் நியாயந்தீர்த்துவிட்டு, பிறரை நான் நியாயந்தீர்ப்பதாகக் கூறுகிறீர்கள்.////
 
சகோதரர்  அவர்களே தங்களை நான் நியாயம் தீர்த்துவிட்டதாக கருதி தாங்கள் பதிவிட்டிருக்கும் என்னுடய வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை நன்றாக படித்து பாருங்கள். "நீங்கள் இப்படித்தான்' என்று திட்டமாக நான் எழுதவில்லை. "வண்ணமாக  இருக்கிறது"  "போல்  இருகிறது" "என்று கருதுகிறேன்" என்றே எழுதியிருக்கிறேன். இவைகள் எல்லாமே இந்த திரியில்  பதிவிட்டிருக்கும் தங்கள் வார்த்தையின் அடிப்படையிலான என்னுடய அனுமானமேயன்றி நியாயம்தீர்த்தல் அல்ல.  
 
"உங்கள் அன்பு" நிபந்தனையின் அடிபடையில்தான்  இருக்கிறது எனபதை இடிபாடுகளுக்குள்மாட்டிய மனுஷனை நீங்கள் விமர்சிப்பதன் அடிப்படையில் சுலபமாக கண்டு கொள்ளலாம். நாங்கள் வேறுவழி யில்லாமல்தான் அடுக்குமாடியில் தங்கியிருக்கிரோமேயன்றி ஆசயோடு இங்கு தங்கியிருக்கவில்லை.  "தேவன் ஜனங்களுக்காக பரிதபிக்கிறார்" என்று நான் எழுதினால் ,நீங்கள் உங்கள் கருத்தை கூறி அது மனுஷ னுடைய  தவறு என்று சொல்கிறீர்கள். எங்களுக்காகவும் தேவன் பரிதபிக்கிறார் எனபதை நாங்கள் அறிந்து, தேவனை பற்றிய அன்பு நிலையை  எழுதியிருக்கும் இடத்தில் உங்கள் அன்பு நிலைபடி கருத்து சொன்னதாலேயே  அவ்வாறு எழுதினேன். "மனுஷ அன்பு"  என்பது மனுஷஅன்புதான்! பாவி என்று அறிந்திருந்தும்  ஆடுகளுக்காக தன் ஜீவனையே தரும் தேவனின் அன்பு முற்றிலும் மாறுபடாது.     
 
மேலும் இத்திரியில் எனது கடைசிபதிவானது,  இந்த திரியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று எல்லா பார்வையாளர்களுக்காகவும் பொதுவாக எழுதியது. அதில் "நாம்"  "நமக்கு" என்று என்னையும்  சேர்த்தே எழுதினேன். நான் நியாயம் தீர்த்துவிட்டேன் என்று சொல்ல வேண்டாம். நான் யாரையும்  நியாயம்  தீர்ப்பதும் இல்லை  அந்த  தகுதியும் எனக்கு  இல்லை. உங்கள் எழுத்தின் அடிப்படையில் உங்களை  எப்படிபட்டவர் அனுமானிக்க எனக்கு அனுமதி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். 
 
BRO. ANBU Wrote: 
///ஒரு வேண்டுகோள்! நான் பிறரை நியாயந்தீர்ப்பதாக சொல்கிறீர்களே, அதற்கு ஆதாரமான எனது ஒரேயொரு பதிவை எடுத்துக் காட்டுங்கள்.///
 
///இன்றைய மனிதர்களின் பல துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களேதான். மனிதர்கள் தாங்களாகவே ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.//
 
இது தங்களின் தீர்மானமான கருத்து என்று கருதுகிறேன். இதில் என்னையும் சேர்த்து எல்லா மனுஷர்களும் அடங்குகிறார்கள் இங்கு நீங்கள் மனுஷர்களின்  துன்பத்துக்கு/  அல்லது பூகம்பத்தில் சிக்கி மனுஷர்கள் இறப்பதற்கு மனுஷரே  காரணம் என்று  தீர்க்கிறீர்கள். ஆனால் வேதம் இவ்வாறு சொல்கிறது.
 
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்
 
ஆதி முதல் கொண்டு மனுஷ கொலைபாதகனாக இருப்பது சாத்தான் ஒருவனே! அவனாலேயே மனுஷன் கொல்லப்பட வேண்டிய நிலை உண்டானது. தேவனும் சில இடங்களில் மனுஷர்களை கொன்றிருந்தாலும் அவர் ஆதிமுதல் மனுஷ கொலைபாதகன் இல்லை. அவர் ஜீவனை உண்டாக்கியவர். ஆனால் சாத்தான் அப்படியல்ல கொல்லவும் அழிக்கவுமே வந்தவன்.  
 
யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்
 
எனவே அத்தனை கொலைக்கும் அடிப்படை காரணமாக   இருப்பது ஆதி முதல் கொண்டு மனுஷ கொலைபாதகனாக இருக்கும் சாத்தானே.
 
முதல் கொலையை செய்த காயீன்கூட பொல்லாங்கனால் உண்டாயிருந்தான் என்று வேதம் சொல்கிறது.  
 
யோவான் 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்க வேண்டாம்; 
 
சாத்தான் உள்ளே   புகுந்தபின் தான் யூதாஸ் இயேசுவை காட்டிகொடுக்க வகை தேடினான். என்றும் வேதம் சொல்கிறது.
 
லூக்கா 22:3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
 
இந்நிலையில் மொத்த மனுஷர்களையும் நியாயம் தீர்க்கும் உங்கள் தீர்ப்பு சரியாது அல்ல என்றே நான் கருதுகிறேன். 
 
BRO. ANBU. Wrote: 
///அப்போது யோவான் 8:51-ஐ நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்வீர்கள்//
 
இங்கு நான் யோவான் 8-51 தவறாக புரிந்துகொண்டுள்ளேன்  என்று நீங்கள் கருதவில்லை  நீங்கள் தீர்த்து விட்டீர்கள். இந்த கருத்து  குறித்த
விவாதம் இன்னும் ஒரு முடிவை எட்டாத நிலையில் "மரணத்தை காண்பதில்லை"  என்று தெளிவாக  சொல்லும்  வசனத்துடன் "இரண்டாம்" என்றொரு வார்த்தையை நீங்களேசேர்ந்து புரிந்துகொண்டு, வசனத்தை  அப்படியே விசுவாசிக்கும் என்னை  தவறாக புரிந்து கொண்டுள்ளதாக நீங்கள் நியாயம் தீர்ப்பது சரியா?
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2 37  >  Last»  | Page of 7  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard