//சகோதரர் அவர்களே தங்களை நான் நியாயம் தீர்த்துவிட்டதாக கருதி தாங்கள் பதிவிட்டிருக்கும் என்னுடய வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை நன்றாக படித்து பாருங்கள். "நீங்கள் இப்படித்தான்' என்று திட்டமாக நான் எழுதவில்லை. "வண்ணமாக இருக்கிறது" "போல் இருகிறது" "என்று கருதுகிறேன்" என்றே எழுதியிருக்கிறேன். இவைகள் எல்லாமே இந்த திரியில் பதிவிட்டிருக்கும் தங்கள் வார்த்தையின் அடிப்படையிலான என்னுடய அனுமானமேயன்றி நியாயம்தீர்த்தல் அல்ல.//
அன்பான சகோதரரே!
“நீங்கள் இப்படித்தான்” எனத் திட்டமாக எழுவதற்கும், அனுமான வார்த்தைகளை இணைத்து எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. சட்டரீதியான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்குத்தான் அனுமானமான வார்த்தைகளில் எழுதுவார்கள்.
எனது எழுத்தை வைத்து நான் எப்படிப்பட்டவன் என நீங்கள் நியாயந்தீர்க்கவும் வேண்டாம், அனுமானம் செய்யவும் வேண்டாம், அது இங்கு அவசியமுமில்லை. இப்படியே மாறி மாறி எழுதுவதால், விவாதத்தில் முழுமையாகக் கவனம் செய்யமுடியாமல் போய்விடுகிறது.
//"உங்கள் அன்பு" நிபந்தனையின் அடிபடையில்தான் இருக்கிறது எனபதை இடிபாடுகளுக்குள்மாட்டிய மனுஷனை நீங்கள் விமர்சிப்பதன் அடிப்படையில் சுலபமாக கண்டு கொள்ளலாம்.//
மீண்டும் எனது அன்பு எப்படிப்பட்டது என்பதைத்தான் ஆராய்கிறீர்கள். இதைத்தான் வேண்டாம் என்கிறேன். நான் எப்படிப்பட்டவன், எனது அன்பு எப்படிப்பட்டது என்பதை எழுதித்தான் ஆகவேண்டுமென விரும்பினால், அதற்கென தனியாக ஒரு திரி துவக்கி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் விவாதத்தின்போது அப்படிச் செய்வது தேவையில்லாமல் விவாதத்தை திசை திருப்புகிறது.
//நாங்கள் வேறுவழியில்லாமல்தான் அடுக்குமாடியில் தங்கியிருக்கிறோமேயன்றி ஆசையோடு இங்கு தங்கியிருக்கவில்லை.//
நீங்கள் வேறுவழியின்றி தங்கியிருக்கிறீர்களா அல்லது ஆசையில் தங்கியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கெல்லாம் நான் வரவில்லை. அடுக்குமாடியில் “risk” உண்டு என்பது தெரிந்துதான் அங்கு தங்குகிறீர்கள்; தெரிந்தே “risk” எடுத்துவிட்டு, ஆபத்து நேருகையில் “அய்யோ, சாத்தான் இப்படி வேதனைப்படுத்துகிறானே” என சாத்தான் மீது பழிபோடுவதுதான் தவறு என்கிறேன்.
//"தேவன் ஜனங்களுக்காக பரிதபிக்கிறார்" என்று நான் எழுதினால் ,நீங்கள் உங்கள் கருத்தை கூறி அது மனுஷ னுடைய தவறு என்று சொல்கிறீர்கள்.//
தேவன் ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறார் என்றால், நான் கேட்ட பின்வரும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள். அல்லது தேவன் பரிதபிக்கிறார் என்பதற்கான வசன ஆதாரமாவது தாருங்கள்.
நான் ஏற்கனவே கேட்ட கேள்விகள்:
//இதே தேவன்தான் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” எனும் நியாயத்தீர்ப்பை செயல்படுத்தும்படி மோசே மூலம் கட்டளையிட்டார். கண்ணைத் தோண்டி எடுத்தல் என்பது எத்தனை துன்பமானது, கண்ணிலாமல் வாழ்வதென்பது எத்தனை துன்பமானது என்பதெல்லாம் தேவனுக்குத் தெரியாதா? அந்த துன்பத்தைப் பார்த்து தேவன் வேதனையடையமாட்டாரா?
தப்பு செய்தவனுக்கு தண்டனையான இதை விடுங்கள்; பாவமேயறியாத பச்சிளங்குழந்தைகள்மீதுகூட இரக்கம் வைக்காமல் கொல்லும்படி சவுல் ராஜாவிடம் கட்டளையிட்டாரே (1 சாமு. 15:3); அப்போதும் தேவன் வேதனையடையமாட்டாரா? சவுலின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், அதெப்படி குழந்தைகள்மீது இரக்கம் வைக்காமல் அவர்களைக் கொல்லமுடியும் எனத் தேவனிடம் கேள்வி கேட்பீர்கள் போலும்.
1 ராஜாக்கள் 13:1-24 வசனங்களைப் படித்துப் பாருங்கள். தேவமனுஷன் ஒருவன், தேவன் தனக்குக் கட்டளையிட்ட பணியை முடித்துவிட்டுத் திரும்புகையில், தேவன் தனக்குச் சொன்னபடியே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கையில், மற்றொரு தீர்க்கதரிசியின் பொய்யை நம்பி, தேவகட்டளையை மீறி அப்பம் புசித்ததின் நிமித்தம் தேவன் அவனை ஒரு சிங்கத்தைக் கொண்டு கொன்றாரே! சிங்கம் ஒரு மனிதனைக் கடித்துக் குதறிக் கொல்கையில் அவன் எத்தனை வேதனையடைவான்? அந்த வேதனை தேவனுக்குத் தெரியாதா? அதைப் பார்த்து அவர் வேதனையடையமாட்டாரா?
இப்படி பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் காரணம் சாத்தான்தான் என்றால், சாத்தான்தான் மனிதர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுப்பவனா? சாத்தானின் நிர்ப்பந்தத்தால்தான் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்பது போன்ற நியாயத்தீர்ப்பை தேவன் கட்டளையிட்டாரா? அமலேக்கியரின் குழந்தைகளைக் கொல்ல கட்டளையிட்டாரா? யுத்தம் செய்யக் கட்டளையிட்டாரா? தேவமனுஷனைக் கொல்லும்படி சிங்கத்துக்குக் கட்டளையிட்டாரா?
வெளி. 6:3 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். 4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
வெளி. 6:7 அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். 8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
பரலோகத்தில் தேவசமூகத்தில்தான் 4 ஜீவன்கள் நின்றன. அப்போதுதான் முத்திரைகள் உடைக்கப்பட்டன. அப்போது ஒவ்வொரு குதிரையிலும் ஒவ்வொருவன் ஏறி பூமிக்குப் புறப்படுவதாக வசனங்கள் கூறுகின்றன. அப்படி புறப்பட்டவர்களில் இருவருக்குத்தான் மேற்கூறிய பிரகாரமாக அதிகாரம் கொடுக்கப்பட்டதாக வசனங்கள் கூறுகின்றன. அந்த அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்? தேவனா? சாத்தானா?//
எனது இக்கேள்விகளுக்கு நீங்கள் பதில் தந்தால்தான் விவாதத்தில் ஒரு முடிவை எட்டமுடியும். அதைவிடுத்து, நீ அப்படி, நான் இப்படி எனச் சொல்லிக்கொண்டிருந்தால், இருவருக்கும் நேரம்தான் விரயமாகும்; விவாதமும் முடிவுக்கு வராது.
//எங்களுக்காகவும் தேவன் பரிதபிக்கிறார் எனபதை நாங்கள் அறிந்து, ... //
உங்களுக்காக தேவன் பரிதபிக்கிறார் என்றால், இந்த நிலையிலிருந்து தேவன் ஏன் உங்களை விடுவிக்கவில்லை? தேவனால் உங்களை விடுவிக்க முடியவில்லையா? அல்லது சாத்தானை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லையா?
//தேவனை பற்றிய அன்பு நிலையை எழுதியிருக்கும் இடத்தில் உங்கள் அன்பு நிலைபடி கருத்து சொன்னதாலேயே அவ்வாறு எழுதினேன். "மனுஷ அன்பு" என்பது மனுஷஅன்புதான்! பாவி என்று அறிந்திருந்தும் ஆடுகளுக்காக தன் ஜீவனையே தரும் தேவனின் அன்பு முற்றிலும் மாறுபடாது.//
மனுஷ அன்பு மனுஷ அன்புதான் என்கிறீர்கள். இது உங்களுக்கும், ஏன் எல்லோருக்கும் பொருந்தும்தானே? பின்னர் என்னிடம் மட்டும், “எனக்கு அன்பு உள்ளது, ஆனால் தேவ அன்பு இல்லை” எனச் சொல்கிறீர்கள்?
//மேலும் இத்திரியில் எனது கடைசிபதிவானது, இந்த திரியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று எல்லா பார்வையாளர்களுக்காகவும் பொதுவாக எழுதியது. அதில் "நாம்" "நமக்கு" என்று என்னையும் சேர்த்தே எழுதினேன். நான் நியாயம் தீர்த்துவிட்டேன் என்று சொல்ல வேண்டாம்.//
நீங்க அத்தனை பேரையும் சேர்த்து பொதுவாக எழுதினாலும், விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்னைத்தான் அவை முதலாவது குறிக்கும். பார்வையாளர்களின் பார்வையில் என்னை நியாயந்தீர்ப்பதாகத்தான் அவை இருக்கும்.
//உங்கள் எழுத்தின் அடிப்படையில் உங்களை எப்படிபட்டவர் அனுமானிக்க எனக்கு அனுமதி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.//
நான் எப்படிப்பட்டவன் என்பதை அனுமானிப்பதானாலும் சரி, நியாய்ந்தீர்ப்பதானாலும் சரி, அதை தனியாக வேறு திரியில் வைத்துக்கொள்வோம்.
//இங்கு நீங்கள் மனுஷர்களின் துன்பத்துக்கு/ அல்லது பூகம்பத்தில் சிக்கி மனுஷர்கள் இறப்பதற்கு மனுஷரே காரணம் என்று தீர்க்கிறீர்கள். ஆனால் வேதம் இவ்வாறு சொல்கிறது.
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்.
ஆதி முதல் கொண்டு மனுஷ கொலைபாதகனாக இருப்பது சாத்தான் ஒருவனே! அவனாலேயே மனுஷன் கொல்லப்பட வேண்டிய நிலை உண்டானது. தேவனும் சில இடங்களில் மனுஷர்களை கொன்றிருந்தாலும் அவர் ஆதிமுதல் மனுஷ கொலைபாதகன் இல்லை. அவர் ஜீவனை உண்டாக்கியவர். ஆனால் சாத்தான் அப்படியல்ல கொல்லவும் அழிக்கவுமே வந்தவன்.//
இப்பொழுதுதான் விவாதத்தின் சரியான பாதைக்கு வந்துள்ளீர்கள்.
சாத்தான் கொலைபாதகன்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனுஷர்கள் செய்கிற எல்லா கொலைக்கும் சாத்தானை தேவன் பொறுப்பாக்கவில்லையே!
ஆபேலைக் காயீன் கொலைசெய்தபோது காயீனைத்தான் தேவன் கடிந்துகொண்டு, அவனுக்குத் தண்டனையும் கொடுத்தார் (ஆதி. 4:11,12). நீங்களோ தேவனைவிட ஒருபடி மேலே சென்று, காயீன் செய்த கொலைக்கு சாத்தானைப் பொறுப்பாக்க முயல்கிறீர்கள்.
1 நாளா. 21:9-13 வசனங்களில் கூறப்பட்டுள்ள சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன். சாத்தானின் தூண்டுதலால்தான் தாவீது பாவம் செய்தார் என வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் தேவன் தாவீதையே தண்டித்தார். அதுவும் தாவீதை நேரடியாகத் தண்டிக்காமல், தாவீது மிகவும் நேசித்த அவரது ஜனங்களைக் கொன்றதன் மூலம் தாவீதை தேவன் தண்டித்தார். இச்சம்பவத்தில் அந்த அப்பாவி ஜனங்களின் சாவுக்கு யார் காரணம்? தாவீதைப் பாவம் செய்யத் தூண்டின சாத்தானா? பாவம் செய்த தாவீதா? தாவீதைத் தண்டிக்கும்படி ஜனங்களைக் கொன்ற தேவனா?
பாரபட்சமற்ற பதில் சொல்லவேண்டுமென்றால், தேவன் தான் காரணம் எனச் சொல்லவேண்டும். சாத்தானின் பங்கு தாவீதைப் பாவம் செய்யத்தூண்டியதோடு முடிந்துவிட்டது. தாவீதின் பங்கு பாவம்செய்ததோடு முடிந்துவிட்டது. தாவீதுக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தேவனின் அதிகாரம்தான் அப்பாவி ஜனங்களைக் கொல்லத் தீர்மானித்தது.
ஆயினும், தேவன் தான் அப்பாவி ஜனங்களின் சாவுக்குக் காரணம் என நாம் தீர்ப்பதற்கு நமக்கு அதிகாரமும் இல்லை, அது நமக்கு அவசியமுமில்லை என்பதே எனது கருத்து.
மனிதர்களாகிய நாம்: நமது தவறு என்ன? தவறுக்கு நாம் எப்படி பொறுப்பானோம்? என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். தாவீது அதைத்தான் செய்தார்.
1 நாளா. 21:17 தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்னசெய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.
ஆம், தாவீதைப் போல் நாம் நமது தவறைத்தான் உணரவேண்டும். பாவ விஷயத்தினாலும் சரி, அல்லது நமக்கு நேரிடும் துன்பங்களைக் குறித்தானாலும் சரி. “நாம் எப்படி பாவம் செய்தோம், நமது எச்செயலால் இத்துன்பம் நமக்கு நேர்ந்தது” என நாம் நம் தவறுகளைத்தான் அலசி ஆராயவேண்டும். அதைவிடுத்து, “அய்யோ, சாத்தான் என் மனதைக் கெடுத்துவிட்டானே, சாத்தான் இப்படி துன்பப்படுத்துகிறானே” என்று சொல்லி, சாத்தானைப் பொறுப்பாக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
வேதாகமத்தில் ஏவாள் மட்டுமே தன் தவறுக்கு சாத்தானைக் கைகாட்டினாள் என நினைக்கிறேன்; அதுவும் தேவன் கேள்வி கேட்டதால் அப்படி செய்தாள். வேறு யாரும் அப்படிச் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அப்படி யாரேனும் இருந்தால் தெரிவியுங்கள்.
//அத்தனை கொலைக்கும் அடிப்படை காரணமாக இருப்பது ஆதி முதல் கொண்டு மனுஷ கொலைபாதகனாக இருக்கும் சாத்தானே.
முதல் கொலையை செய்த காயீன்கூட பொல்லாங்கனால் உண்டாயிருந்தான் என்று வேதம் சொல்கிறது.
1 யோவான் 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்க வேண்டாம்;//
இவ்வசனத்தில் யோவான் என்ன சொல்கிறார்? காயீனைப் போலிருக்க வேண்டாம் என்றுதானே? அப்படியானால் காயீனைப் போல் கொலை செய்வது யாருடைய கையிலுள்ளது? நம் கையில்தானே? ஆனால் நாமோ சாத்தானைக் காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
காயீன் பொல்லாங்கனால் உண்டாயிருந்ததால் ஆபேலைக் கொல்லவில்லை; அவன் ஆபேலைக் கொன்றதால் பொல்லாங்கனால் உண்டானவன் என அழைக்கப்பட்டவன். பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
1 யோவான் 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
நாம் பாவம் செய்வது, அல்லது செய்யாதிருப்பது என்பதைக் கொண்டுதான், நாம் பிசாசின் பிள்ளையா அல்லது தேவனின் பிள்ளையா என்பது தெரியவரும். எனவே நாம் பிசாசின் பிள்ளை அல்ல தேவனின் பிள்ளைதான் எனக் காட்டத்தக்கதாக, நாம் பாவம் செய்யாதிருக்க முழுப்பலத்தோடும் முயல வேண்டும். அதைவிடுத்து, பாவம் செய்துவிட்டு “அய்யோ, பிசாசு என்னைப் பாவம் செய்ய வைத்துவிட்டானே” எனப் புலம்பக்கூடாது. பாவம் செய்கையில், “அய்யோ நான் பிசாசின் இச்சை வலையில் விழுந்து விட்டேனே” என்று சொல்லி நம்மைத்தான் காரணமாகச் சொல்லவேண்டும்.
நாம் பாவம் செய்தால் தண்டிக்கப்படப்போவது நாம் தானேயன்றி, பிசாசு அல்ல.
//இங்கு நான் யோவான் 8-51 தவறாக புரிந்துகொண்டுள்ளேன் என்று நீங்கள் கருதவில்லை. நீங்கள் தீர்த்து விட்டீர்கள். இந்த கருத்து குறித்த விவாதம் இன்னும் ஒரு முடிவை எட்டாத நிலையில் "மரணத்தை காண்பதில்லை" என்று தெளிவாக சொல்லும் வசனத்துடன் "இரண்டாம்" என்றொரு வார்த்தையை நீங்களேசேர்த்து புரிந்துகொண்டு, வசனத்தை அப்படியே விசுவாசிக்கும் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளதாக நீங்கள் நியாயம் தீர்ப்பது சரியா?//
விவாதத்தின் போங்கு முடிவுக்கு நேராக போகாமல், வேறு திசைக்குச் சென்றதால், உடனடியாக முடிவைக் கூறிவிட்டேன். வேண்டுமானல் முடிவை ஒதுக்கிவைத்துவிட்டு, விவாதத்தை மீண்டும் தொடருவோம்.
//BRO. ANBU Wrote: ///ஒரு வேண்டுகோள்! நான் பிறரை நியாயந்தீர்ப்பதாக சொல்கிறீர்களே, அதற்கு ஆதாரமான எனது ஒரேயொரு பதிவை எடுத்துக் காட்டுங்கள்.///
///இன்றைய மனிதர்களின் பல துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களேதான். மனிதர்கள் தாங்களாகவே ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.////
எனது இவ்வரியை எனது நியாயத்தீர்ப்பாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த நியாயத்தீர்ப்பு எனது சுய நியாயத்தீர்ப்பு அல்ல. வேதாகமம் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
ஏசாயா 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்;
எரேமியா 4:22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்;
உபாகமம் 11:26 இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். 27 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், 28 எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
சங்கீதம் 54:5 அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
எரேமியா 5:21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள். 22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாகச் சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு முன்பாக அதிராதிருப்பீர்களோ? 23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள். 24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை. 25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. 26 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள். 27 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள். 28 கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.29 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது. 31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?
சங்கீதம் 107:17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
1 தீமோ. 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம். 9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். 10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய மனிதர்களின் பல துன்பங்களுக்குக் காரணம் மனிதர்களேதான். மனிதர்கள் தாங்களாகவே ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.
அறிவில்லாமல், ஆபத்தைக் குறித்து சிந்தியாமல், பணத்துக்காகவும் நம் இச்சைகளை நிறைவேற்றுவதற்காவும், நன்றாகத் தெரிந்தே பாம்புப் புற்றுக்குள் கையை விடுகிறோம். பின்னர் கொத்துப்பட்டதும், “அய்யோ சாத்தான் இப்படி கொத்து வாங்க வைத்துவிட்டானே” எனச் சொல்வதில் என்ன நியாயம் உள்ளது?
மனிதர்களின் பாவங்களுக்கோ அல்லது தவறான செயல்களுக்கோ சம்பந்தப்பட்ட மனிதனைத்தான் வேதாகமம் காரணம் சொல்கிறதேயன்றி, சாத்தானைக் காரணம் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் வசனம் இருந்தால் அதைத் தெரிவியுங்கள்.
-- Edited by anbu57 on Wednesday 9th of November 2011 07:16:56 AM
"பாவம் செய்தவனுக்கு தண்டனை இல்லை" என்பதோ அல்லது பரிசுத்தராகிய தேவன் அவனை சேர்த்து அணைத்து பாராட்டுவார் என்றோ நான் எங்கும் சொல்லவரவில்லை சகோதரரே. தொடக்கத்தில் இருந்தே "தவறு செய்தவன் எவனும் தண்டனை இல்லாமல் தப்ப முடியாது" என்றுதான் எழுதிவருகிறேன். பாவம் செய்தவர்களை தேவன் தண்டித்திருக்கிறார் தண்டிப்பார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
ஆனால், ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அந்த சம்பவத்தை வெறும் மேலோட்டமாக பார்க்காமல் அடிப்படை காரணமாக யார் இருக்கிறார் என்பதை பார்த்து அதை களைவதுதான் சரியான காரியமேயன்றி, யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொலை செய்த ஒருவனை பிடித்து தண்டிப்பதால் அந்த பிரச்சனை தீர்ந்துவிடாது. ஒரு தீயவன் தனது வல்லமையை பயன்படுத்தி அனேக அடியாட்களை வைத்து தனக்கு பிடிக்காத பலரை கொலை செய்கிறான் என்று வைத்து கொண்டால், இங்கு பிறர் தூண்டுதலின் பேரில் கொலை செய்தவனை பிடித்து தண்டித்தால் கொலைகள் குறையபோவது இல்லை.
கொலைசெய்தவன் மீதும் குற்றம் இருந்தாலும் பிழைப்புக்கு வழி தேடியோ அல்லது மிரட்டுதளுக்கு பயந்தோதான் அந்த காரியத்தை செய்கிரானேயன்றி அவனது நோக்கம் யாரையும் கொல்லுவது அல்ல. மேலும் "பாவம் செய்தவன் பிசாசினால் உண்டானவன் அவன் பிசாசின்
கிரியை செய்கிறான்" என்றும் பிசாசின் கிரியைதான் பாவம் செய்தல் என்று வேதம் சொல்கிறது.
I யோவான் 3:8பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்
மாம்சபிரகாரமாக நியாயம் தீர்க்கும் உலக நீதிபதியே ஒரு கொலைக்கு பின்னால் இருந்து தூண்டும் குற்றவாழி என்பதை ஆராய்ந்தே அதற்க்கு தண்டனை கொடுப்பார்கள். அனால் நீங்களோ "கொலை செய்தவன் மட்டும்தான் குற்றவாழி அவனுக்கு பின்னால் இருந்து தூண்டுவபன் மேல் எந்த தவறும் இல்லை" என்பதுபோல் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.
கொலை செய்தவன் அதை தூண்டியவன் இரண்டுபேருமே குற்றவாழிகள் தான் இருவருக்குமே நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால் அடிப்படை குற்றவாழி யாரென்பதை ஆராய்ந்து களைந்தல்தான் இந்த காரியங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
நான் அடிப்படை குற்றவாழியை அடையாளம் கண்டு அவனே அனைத் துக்கும் காரணம் என்கிறேன். நீங்கள் சூழ்நிலை கைதிதான் குற்றவாழி என்கிறீர்கள். இருவருமே குற்றவாழிதான் ஆனால் "ஆதி முதல் மனுஷ கொலை பாதகன்" என்று வேதம் யாரை சொல்கிறது?சாத்தானை தானே! அந்த வசனத்தின் அடிப்படையில் தான் நானும் அனைத்து மரணத்துக்கும் சாத்தான்தான் காரணம் என்ற கருத்தை எழுதுகிறேன்.
உதாரணத்துக்கு ஒரு வேத சம்பவத்தை எடுத்துகொள்வோம்:
இயேசுவிடம் அசுத்தஆவி பிடித்த ஒருமனுஷனை கொண்டு வந்தவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
மாற்கு 9:22இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
இங்கு மாம்சத்தின் பிரகாரமாக நாம்பார்த்தால், அவனது கை கால்களை
சேர்த்து ஒரு மரத்தோடு கட்டிபோட்டுவிட்டால் அவன் எங்கும் எழுத்து
போக முடியாது அவன் தீயிலும் தண்ணீரிலும் விழ முடியாது. இதுவும் ஒரு தீர்வாக நாம் கருதலாம். அனால் அது நிரந்தரமானது அல்ல.
இன்னொரு தீர்வாக, அவனை பிடித்து ஆட்டும் அசுத்த ஆவியை அடையாளம் கண்டு அதை துரத்திவிட்டால் அவனுக்கு முழு விடுதலையும் நிரந்தர தீர்வும் கிடைக்கும்.
இது இரண்டில் அசுத்த ஆவியை விரட்டி அவனை விடுவிக்கும் வேலையையே இயேசு கைகொண்டார். நானும் பாவத்தின் அடிப்படை எதுவென்று பார்த்து அதையே இங்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
இதுபோன்று இன்னொரு உதாரணமாக:
ஒருவன் உடம்பில் இருக்கும் கேன்சர் கட்டி வெளியில் புண்ணாகி மிகப்பெரிய வேதனையை கொடுக்கிறது. அவனை பார்த்த ஒருவர் வெளியில் தெரியும் இந்த புண்தான் இவ்வளவு வேதனை தருகிறது என்று சொல்லி அதற்க்கு மருந்து போடுகிறார். அதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவனை பரிசோதித்த மருத்துவரோ அனைத்துக்கும் அடிப்படை காரணம் அவனுக்குள் இருக்கும் கேன்சர் கட்டிதான் என்று கண்டறிந்து அதை நீக்கிவிட தீர்மானிக்கிறார்.
இதில் எது சரியான முறை என்று நீங்களே தீர்மானித்துகொள்ளுகள்.
"பாவம் செய்தவனுக்கு தண்டனை உண்டு" என்ற வசனத்தின் அடிப்படையிலான உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் "சாத்தானே ஆதிமுதல் மனுஷ கொலைபாதகன்" என்ற வசனத்தின் அடிப்படையில் நான் எழுதும் கருத்தை தங்களுக்கு ஏற்க்க மனதில்லை, சாத்தானை கொலைபாதகன் என்று குறைசொல்ல கூடாது என்பது போல் சொல்கிறீர்கள்..
மேலும், இங்கு நான் ஒரு பாவம் செய்துவிட்டு அதற்க்கு சாத்தனே காரணம் என்று சொல்லிக்கொண்டு இருக்க வில்லை. அது நிச்சயம் தவறு. மாறாக சாத்தானால் தூண்டப்பட்டு பாவம் செய்து
பூகம்பத்துக்குள் மாட்டி மரித்த ஏதோ ஒரு மனுஷனுக்காகவே பரிதபிக்கிறேன். தேவனும் தான் ஜனத்துக்காக அழுவதாக கூறுகிறார்.
என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
ஜனங்களுக்காக பரிதபியாமல் இருப்பேனா? என்றும் சொல்கிறார்.
யோனா 4:11வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
ஆதாம் ஏவாள் சம்பவத்தை எடுத்துகொண்டால்: ஆதாமை பாவம்செய்ய தூண்டியது ஏவாள், ஏவாளை பாவம் செய்ய தூண்டியது சர்ப்பம். இங்கு பாவத்தின் அடிப்படை யார் என்றால் சர்ப்பமகிய சாத்தானே. அவனே ஆதி முதல் மனுஷ கொலை பாதகனும் எல்லா பாவத்துக்கும் அடிப்படை காரணியுமாக இருக்கிறான். ஆவிக்குரிய நிலையில் இல்லாமல் மாம்சத்தின்படி தீர்ப்பு செய்பவர்களுக்கு ஆதாம் ஏவாள் செய்தது மட்டுமே பாவம் என்று தெரியலாம். ஆனால் ஆவிக்குரிய நிலையில் காரியங்களை பார்க்கும் தேவனுக்கு அங்கு ஆதாம் ஏவாளை பாவம் செய்ய தூண்டிய சாத்தானின் அடிப்படை கிரியை தெரிவதால்தான் ஆதாம் ஏவாளுக்கு சில தண்டனைகளை மட்டும் கொடுத்த தேவன், சாத்தானின் தலையே நசுக்கப்படும் என்று அவனுக்கு முழு முடிவையே எழுதுகிறார்.
இதற்க்குமேல் என்னால் விளக்கம் கொடுக்க முடியாது சகோதரரே. "தேவன்தான் தனது திட்டப்படி மனிதனை சோதிப்பதற்காக சாத்தானை படைத்தார் அல்லது அனுமதித்தார்" என்ற கருத்து
இருக்குமாயின் அதற்க்கு ஒரு முடிவு காணாமல் இந்த விவாதத்தை தொடர்வதில் பயனேதும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Wednesday 9th of November 2011 04:08:37 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எத்தனையோ ஜாதிகளையும் அளித்து இருக்கின்றார் அவர் இஸ்ரவேலுக்காக அப்படி செய்தாலும் அதில் ஒரு நியாயம் நீதி இல்லாமல் தேவன் செய்ய மாட்டார்
அதே போல தேவன் வேண்டும் என்று ஒருவரையும் தண்டிக்க மாட்டார் மனிதர்களிடம் பாவம் இருந்தால் மட்டுமே அவர்களை தண்டிப்பார் அவர் நீதியானவர் இஸ்ரவேலுக்கு முன்பாக எத்தனையோ ஜனங்கள் ஜாதிகளை தேவன் அளித்தார் அல்லவா
25ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்;தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
26 இந்த அருவருப்புகளையெல்லாம்உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
27 இப்பொழுதும்உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு
சகோதரரே இந்த வசனத்தை நன்கு கவனித்தால் உங்களுக்கு தெரியவருவது என்னவென்றால் இஸ்ரவேலுக்கு முன் இருந்த தேசம் பாவமும் அக்கிரமும் நிறைந்த தேசமாய் இருந்து இருக்கின்றது
எனவே தேவன் அதின் அக்கிரமத்தினால் அந்த தேசத்தின் குடிகளை அளித்து இஸ்ரவேலை அதிலே வைத்து முன் இருந்த தேசம் செய்த பாவத்தை அக்கிரமத்தை நீங்கள் செய்யாதீர்கள் அப்படி செய்தால் அந்த தேசத்தை தண்டித்தது போலவே உங்களையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்கின்றார்
சகோதரர் தேவன் அன்பு இறக்கம் உள்ளவர் ஆனால் அதே நேரத்தில் எரிச்சல் உள்ளவர் என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் தேவன் நீதி நீயாயம் இல்லாமல் ஒன்றியும் செய்ய மாட்டார் என்பதையும் அறியவேண்டும்
அனைத்து துன்பத்திருக்கும் காரணம் சாத்தான் என்று நான் முன்பே சொல்லி இருந்தேன் அதேபோல மனிதனுடைய தவறுக்கு காரணம் மனிதன் தான் என்பதை யாரும் மறுபத்ர்க்கு இல்லை
ஆனால் சாத்தான் என்பவன் தான் அவனை துண்டி விட்டு அவனுக்கு தண்டனையை வரவழைத்து அதினால் தேவனை வேதனை படுத்து சந்தோஷமடைகின்றான்
இதை அறிந்த நம் தேவனாகிய கர்த்தர் ஆதியாகமம் முதல் வெளிபடுத்தின விஷேசம் வரை என் கட்டளைகள் கற்பனைகள் கைகொல்லுங்கள் கைகொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார்
ஆனால் நாமோ அதை மறந்து சாத்தான் காட்டும்உலக பாவ இன்பங்களை செய்து தண்டனையைஅனுபவிக்கின்றோம்
நீதி எது நீயாயம் எது என்பதை தேவன் சொல்லிவிட்டதால் இனி அதை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய நம்மிடம் தான் இருக்கின்றது
நான் ஏற்கனவே சொன்னதுபோலவே சாத்தான் துண்டில் போடுகின்றான் அதில் மாட்டிகொல்கின்றவர்கள் தான் நாம்
ஆனால் பாவம் அனைத்துக்கும் அக்கிரமம் அனைத்துக்கும் காரணம் சாத்தான் தான்
அப்படியே சகோ அன்பு சொல்வது போல தவறுகள் தப்புகள் எல்லாவற்றிற்கும் மனிதர்கள் தான் காரணம் என்றால் தேவன் நீதிமானாகிய சாத்தானை ஏன் அழித்துவிடுவேன் என்று சொல்லவேண்டும்
இந்த பூமியிலே ஒன்றையும் செய்யாத அசுத்த ஆவியை தேசத்தை விட்டு துரத்துவேன் என்று தேவன் ஏன் சொல்லவேண்டும் என்பது தான் எனக்கு புரியவில்லை
சாத்தான் என்பவன் ஒன்றையும் செய்யவில்லை என்றால் ஆனால் வெளிபடுத்தின விசேஷத்தில் சகோதரர்மேல் ஓயாமல் இரவும் பகலும் குற்றம் சொன்னவன் ஏன் கீழே துதர்களால் தள்ளப்பட வேண்டும் என்பதை எனக்கு தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கின்றேன்...............
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 9th of November 2011 06:45:51 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
//அப்படியே சகோ அன்பு சொல்வது போல தவறுகள் தப்புகள் எல்லாவற்றிற்கும் மனிதர்கள் தான் காரணம் என்றால் தேவன் நீதிமானாகிய சாத்தானை ஏன் அழித்துவிடுவேன் என்று சொல்லவேண்டும்//
அன்பான சகோதரரே!
பாவங்களுக்குக் காரணம் மனிதர்கள் மட்டுமே என்றோ, சாத்தான் நீதிமான் என்றோ நான் கூறவில்லை. சாத்தான்தான் முதல் துன்மார்க்கன் எனும் இந்த விஷயங்கூட தெரியாமலா இத்தனை நாள் வேதாகமத்தைப் படித்து ஒரு பத்திரிகை மற்றும் விவாதமேடையை நடத்திக்கொண்டு இருக்கிறேன்?
பதிவுகளை நன்றாகப் படித்துப் புரிந்து கொண்டு விவாதத்தை வையுங்கள். மனிதன் பாவம் செய்யும்படி ஆதி முதல் இன்றுவரை சாத்தான் தூண்டிக்கொண்டிருக்கிறான் என்பதை நான் மறுக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. ஆனால் சாத்தானின் தூண்டுதலுக்கு இசைந்து எல்லாருமா பாவஞ்செய்கிறார்கள்?
எல்லாருமா கொலை செய்கின்றனர்? எல்லாருமா திருடுகின்றனர்? எல்லாருமா பொருளாசை கொள்கின்றனர்? எல்லாருமா லஞ்சம் வாங்குகிறார்கள்? சாத்தானின் தூண்டுதலுக்கோ அல்லது நம் சுய உணர்வுகளுக்கோ அடிபணிவதால்தான் நாம் கொலை செய்கிறோம், திருடுகிறோம், பொருளாசை கொள்கிறோம், லஞ்சம் வாங்குகிறோம், எல்லா பாவங்களையும் செய்கிறோம். எல்லாவற்றையும் நாம் செய்துவிட்டு, ஏவாளைப் போல் “சாத்தான்தான் சொன்னான், சாத்தான்தான் தூண்டினான்” என்று சொன்னால் தண்டனைக்குத் தப்பவா முடியும்? “சொல்கிறவன் சொன்னால் கேட்கிறவனுக்கு அறிவு எங்கே போனது?” எனக் கேட்டு தேவன் நம்மைத் தண்டிப்பார் தானே? அப்படித்தானே ஏவாளைத் தண்டித்தார்?
இதை மறந்துவிட்டு “என் பாவத்துக்கு சாத்தான் தான் காரணம், சாத்தான் தான் காரணம்” எனச் சொல்வதால் நமக்கு என்ன பயன்?
என்னதான் சாத்தான் தூண்டினாலும், நாம் செய்கிற பாவத்துக்கு நாம் தான் பொறுப்பு. சாத்தான் தான் என்னைத் தூண்டினான் என்று சொல்லி பாவத்துக்கான பொறுப்பை நாம் தட்டிக் கழிக்க முடியாது. எனவேதான் “நாம் நம் பாவத்தை உணர்ந்து பாவம் செய்யாதிருக்க முயலவேண்டும்” என மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
சாத்தான் நம் பாவத்துக்காரணம் எனச் சொல்வதால் நமக்கு என்ன நன்மை? ஒரு நன்மையுங்கிடையாது. ஒருவனுக்கு அடியாளாக இருந்து, அவன் சொல்லைக்கேட்டு கொலை செய்தவனைப் பார்த்து, “நீ ஏன் கொலை செய்தாய்” என நீதிபதி கேட்கையில், “அவர் சொன்னார், அதனால் தான் செய்தேன்” எனக் கூறினால் “சரி, உன் மீது தப்பில்லை, நீ போகலாம்” என நீதிபதி சொல்லவா போகிறார்? அவனை விசாரித்து, அவனுக்குரிய தண்டனையைக் கொடுக்கத்தானே செய்வார்?
அதுபோல்தான் தேவனும். தேவனைப் பொறுத்தவரை சாத்தான் பொல்லாதவன் என ஏற்கனவே அவனைத் தீர்த்துவிட்டார். எனவே இனிமேல் சாத்தானிடம் விசாரணை என்பதே கிடையாது. சாத்தனைப் பார்த்து, “நீ மனிதர்களைப் பாவம் செய்யவைக்காதே” என தேவன் எப்போதாவது சொல்லியுள்ளாரா? ஒருபோதும் சொல்லவில்லை.
மனிதர்களைப் பார்த்துதான், “நீ அதைச் செய்யாதே, இதைச் செய்” என மீண்டும் மீண்டும் சொல்கிறார். நாமோ தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடாமல், சாத்தானின் வார்த்தைக்கு செவிகொடுத்துவிட்டு, “அய்யோ சாத்தான் என்னை வஞ்சித்து விட்டது” என ஓலமிட்டுக்கொண்டிருக்கிறோம்.
நமது ஓலத்தை தேவன் ஒருபோதும் கேட்கப்போவதில்லை. எனவே ஓலமிடுவதை நிறுத்திவிட்டு “எங்களை சோதனைகுட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சியும், பாவியாகிய எங்கள்மேல் கிருபையாயிரும்” என ஜெபித்துவிட்டு, சாத்தானுக்கு விலகிஓட உருப்படியான நடவடிக்கைகளை எடுப்போமாக.
கோவைபெரியன்ஸ் தளத்தார், “நாம் என்ன செய்தாலும் அதற்கு தேவன் தான் காரணம்” எனச் சொல்லி பொறுப்பை தேவன் மீது வைத்துவிடுகின்றனர்.
சுந்தரோ, “நாம் பாவம் செய்தால் சாத்தான் காரணம், நன்மை செய்தால் தேவன் காரணம்” என்று சொல்லி, பொறுப்பை பங்கு வைத்து விடுகிறார்.
ஆக, மொத்தத்தில் மனிதனை “dummy piece" ஆக்கி விடுகின்றனர்.
பின்னர் ஏன்தான் “துன்மார்க்கனுக்குத் தண்டனை/அழிவு” என்றும், “நீதிமானுக்குப் நற்பலன்/ஜீவன்” என்றும் தேவன் சொல்கிறாரோ, தெரியவில்லை.
//அத்தோடு அவ்வாறு அன்பு செய்த தேவன் நம்மையும் பார்த்து "நான் உனக்கு இரங்கியதுபோல நீ பிறருக்கு இரங்கு" என்று சொல்லியிருக்கிறார் அதற்குக் காரணமும் பாவத்தின் அடிப்படை சாத்தான் என்பது அவருக்கு தெரிந்ததால்தான்.//
சகோதரரே!
பாவத்தின் அடைப்படையில் சாத்தான் இருக்கிறான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் சாத்தானின் பிடியில் இருக்கிற மனிதனைப் பார்த்து, “நான் உனக்கு இரங்கியதுபோல நீ பிறருக்கு இரங்கு” என எந்த நம்பிக்கையில் தேவன் கூறுகிறார்? சாத்தானின் தூண்டுதலையும் மீறி மனிதனால் இரக்கம் செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தானே? அதுவும் “தனக்குத் துன்பம் செய்பவர்களைக்கூட மனிதனால் மன்னிக்கமுடியும்” என்ற நம்பிக்கை இருப்பதால்தானே?
அது மாத்திரமல்ல, “நீ மன்னிக்காவிடில் பிதாவும் உன்னை மன்னிக்கமாட்டார்” என்றுகூட சொல்கிறாரே, அப்படியானால் “பிறனை மன்னித்தேயாக வேண்டும்” என மனிதனை தேவன் நிர்ப்பந்திக்கிறார் அல்லவா? சாத்தானின் பிடியில் இருக்கும் மனிதனை தேவன் இவ்வாறு நிர்ப்பந்திக்கக் காரணம் என்ன? என்னதான் சாத்தானின் பிடியில் இருந்தாலும், “பிறன்மீது மனிதன் இரக்கம்பாராட்டாதற்கு முழு பொறுப்பு அவனே” என்பதால்தானே?
பாவத்தின் அடிப்படை சாத்தானே என நன்கறிந்த தேவன், எந்த நம்பிக்கையில் “சத்துருக்களை சிநேகியுங்கள், துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்றெல்லாம் கூறுகிறார்? சாத்தானை மேற்கொண்டு மனிதனால் இவற்றைச் செய்யமுடியும், செய்யத்தான் வேண்டும், அப்போதுதான் அவனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதால்தானே?
சாத்தானின் தூண்டுதலால் மனிதன் பாவம் செய்தால்கூட, அவனது பாவத்துக்கு அவனே முழுபொறுப்பு. பாவத்திற்கு பொறுப்பில்லாதவனுக்கு தேவன் தண்டனை கொடுத்தால், தேவன் அநீதியுள்ளவராகிவிடுவார்.
அவ்வாறே பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் மனிதன் நற்கிரியை செய்தால்கூட, அவனது நற்கிரியைகளுக்கு அவனே பொறுப்பு. நற்கிரியைக்கு பொறுப்பில்லாதவனுக்கு தேவன் பரிசு கொடுத்தால், அவ்விஷயத்திலும் அவர் அநீதியுள்ளவராகிவிடுவார்.
கிரியையினால் ஒருவன் நீதிமானாக்கப்படுவதில்லை என வேதாகமம் கூறுகிறபோதிலும், கிரியை செய்பவனை தேவன் பாராட்டத் தவறவுமில்லை.
அவ்வாறே பாவத்தின் அடிப்படையில் சாத்தான் உள்ளபோதிலும், பாவம் செய்பவனை கண்டிக்கவோ/தண்டிக்கவோ தேவன் தவறவுமில்லை.
//ஆவிக்குரிய நிலையில் காரியங்களை பார்க்கும் தேவனுக்கு அங்கு ஆதாம் ஏவாளை பாவம் செய்ய தூண்டிய சாத்தானின் அடிப்படை கிரியை தெரிவதால்தான் ஆதாம் ஏவாளுக்கு சில தண்டனைகளை மட்டும் கொடுத்த தேவன், சாத்தானின் தலையே நசுக்கப்படும் என்று அவனுக்கு முழு முடிவையே எழுதுகிறார்.//
ஏன், மனிதனுக்கும் 2-ம் மரணம் எனும் முழுமுடிவைச் சொல்லியுள்ளாரே? அதை நீங்கள் அறியீர்களா சகோதரரே?
//சாத்தான் என்பவன் ஒன்றையும் செய்யவில்லை என்றால் ஆனால் வெளிப்படுத்தின விசேஷத்தில் சகோதரர்மேல் ஓயாமல் இரவும் பகலும் குற்றம் சொன்னவன் ஏன் கீழே தூதர்களால் தள்ளப்பட வேண்டும் என்பதை எனக்குத் தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்...............//
சாத்தான் என்பவன் ஒன்றையும் செய்யவில்லை என எப்போது கூறினேன்?
//ஆனால் சாத்தான் என்பவன் தான் அவனை துண்டி விட்டு அவனுக்கு தண்டனையை வரவழைத்து அதினால் தேவனை வேதனை படுத்து சந்தோஷமடைகின்றான்.//
உங்கள் கூற்றில் சில திருத்தங்கள்:
சாத்தான் என்பவன் தான் மனிதனைத் தூண்டுகிறான்; அவனது தூண்டுதலுக்குப் பலியாகிறவன் தண்டனைக்குள்ளாகி, தானும் வேதனையடைந்து தேவனையும் வேதனைப் படுத்துகிறான். இதைப் பார்த்து சாத்தான் சந்தோஷப்படுகிறான்.
அதேவேளையில், சாத்தானின் தூண்டுதலுக்குப் பலியாகாதவன் தானும் சந்தோஷம் பெற்று தேவனையும் சந்தோஷப்படுத்துகிறான்; இதைப் பார்த்து சாத்தான் வேதனையடைகிறான்.
தேவன் இஸ்ரவேலருக்காக எத்தனையோ ஜனங்களையும் எத்தனையோ ஜாதிகளையும் அழித்திருக்கிறார். அவர் இஸ்ரவேலருக்காக அப்படி செய்தாலும் அதில் ஒரு நியாயம் நீதி இல்லாமல் தேவன் செய்ய மாட்டார்.
அதே போல தேவன் வேண்டும் என்று ஒருவரையும் தண்டிக்க மாட்டார். மனிதர்களிடம் பாவம் இருந்தால் மட்டுமே அவர்களைத் தண்டிப்பார். அவர் நீதியானவர் இஸ்ரவேலருக்கு முன்பாக எத்தனையோ ஜனங்கள் ஜாதிகளை தேவன் அழித்தார் அல்லவா?
தேவன் அவர்களை அழிக்கக் காரணம் என்ன என்பதை கீழ்கண்ட வசனத்தை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
லேவியராகமம் 18:24 இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். 26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
27 இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு
சகோதரரே இந்த வசனத்தை நன்கு கவனித்தால் உங்களுக்கு தெரியவருவது என்னவென்றால் இஸ்ரவேலுக்கு முன் இருந்த தேசம் பாவமும் அக்கிரமும் நிறைந்த தேசமாய் இருந்து இருக்கின்றது.
எனவே தேவன் அதின் அக்கிரமத்தினால் அந்த தேசத்தின் குடிகளை அழித்து இஸ்ரவேலை அதிலே வைத்து முன் இருந்த தேசம் செய்த பாவத்தை அக்கிரமத்தை நீங்கள் செய்யாதீர்கள் அப்படி செய்தால் அந்த தேசத்தை தண்டித்தது போலவே உங்களையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.
சகோதரர் தேவன் அன்பு இரக்கம் உள்ளவர், ஆனால் அதே நேரத்தில் எரிச்சல் உள்ளவர் என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். தேவன் நீதி நீயாயம் இல்லாமல் ஒன்றையும் செய்ய மாட்டார் என்பதையும் அறியவேண்டும்.//
நீங்கள் எழுதியுள்ள அத்தனையையும் சகோ.சுந்தர் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான், அவரிடம் அக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மனிதர்களின் பாவங்களினிமித்தம் தேவன் தான் அவர்களை அழிக்கிறார் என்பதை சுந்தருக்கு நன்கு விளக்கியதற்காக நன்றி சகோ.எட்வின் அவர்களே!
மனிதனை தேவன் அழிக்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேதனையடைந்து மரிக்கின்றனர். அதற்கு ஓர் உதாரணமாகத்தான், சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு தீர்க்கத்தரிசியைக் குறிப்பிட்டுருந்தேன் (1 ராஜா.13:1-30).
இத்தீர்க்கதரிசி தேவன் சொன்னபடியே யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து யெரோபெயாமிடம் தீர்க்கதரிசனம் உரைத்துவிட்டு, தேவன் சொன்னபடியே அப்பம் புசியாமல் தண்ணீர் குடியாமல் தன் ஊருக்குத் திரும்பும் வழியில், ஒரு கிழட்டுத் தீர்க்கதரிசியின் பேச்சை நம்பி, அப்பம் புசித்து தண்ணீர் குடித்ததால், சிங்கத்தைக் கொண்டு தேவன் அவனைக் கொன்றார்.
தேவன் அவனைக் கொல்வதற்கு வேதனைகுறைந்த எத்தனையோ வழிகள் உள்ளன. ஆகிலும் சிங்கம் அவனை அடித்து வேதனைப்படுத்திக் கொல்லும்படி தேவன் கட்டளையிட்டார். இதில் தேவனின் செயலைக் குறித்து நாம் கேள்வி கேட்கக்கூடுமோ?
ஒரு கிழட்டுத் தீர்க்கதரிசியின் பேச்சைக் கேட்டு, தேவனின் வார்த்தையை மீறியதால், அந்தத் தீர்க்கதரிசி சிங்கத்தால் கொல்லப்பட்டான். அவன் மேல் சுந்தர் பரிதாபம் கொள்கிறார், நீங்களும் பரிதாபம் கொள்கிறீர்கள், இன்னும் பலரும் பரிதாபம் கொள்கின்றனர்; நானுங்கூட பரிதாபங்கொள்கிறேன். அத்தோடு நாம் நிறுத்திக் கொள்வோமே!
அதற்கும் மேலாக, அத்தீர்க்கதரிசி இப்படி வேதனைப்பட்டு மரிப்பதற்கு சாத்தான் தான் காரணம் எனச் சொல்லி, சாத்தான் மீது ஏன் பழிபோட வேண்டும் என்பதே என் கேள்வி.
சாத்தான் பொல்லாதவன், அவன் அப்படித்தான் செய்வான்; ஆனால் அவனது தூண்டுதலுக்குச் செவிசாய்த்த தீர்க்கதரிசின் அறிவு எங்கே போனது? கிழட்டுத் தீர்க்கதரிசியின் பேச்சைக் கேட்ட அவனது அறிவு எங்கே போனது? சொல்கிறவன் சொன்னால் கேட்கிறவனுக்கு அறிவு எங்கே போனது?
தனது அறிவின்மையால் பிறர் பேச்சைக் கேட்டு, தேவனின் வார்த்தையை மீறி, அதினிமித்தம் வேதனைப்பட்டு மரித்தான். அத்தோடு நிறுத்திக்கொண்டு, அவனது சம்பவத்தை நமக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம்.
அதைவிடுத்து, சாத்தானைக் குற்றஞ்சொல்வதால் யாருக்கு என்ன பயன் என்பதே என் கேள்வி.
-- Edited by anbu57 on Saturday 12th of November 2011 07:06:39 AM
//சாத்தானால் தூண்டப்பட்டு பாவம் செய்து பூகம்பத்துக்குள் மாட்டி மரித்த ஏதோ ஒரு மனுஷனுக்காகவே பரிதபிக்கிறேன். தேவனும் தான் ஜனத்துக்காக அழுவதாக கூறுகிறார்.
ஏசாயா 22:4 என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்.
புலம்பல் 3:48 என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
ஜனங்களுக்காக பரிதபியாமல் இருப்பேனா? என்றும் சொல்கிறார்.
யோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.//
ஏசாயா 22:4-ல் தமது ஜனத்துக்காக மனங்கசந்து அழுகிற தேவன், தமது ஜனம் பாழாய்ப்போனதற்குக் காரணம் சாத்தான் எனச் சொல்லி, “அய்யோ, சாத்தான் பேச்சைக் கேட்டு இப்படி பாழாய்ப்போகிறார்களே” என்று சொல்லியா அழுகிறார்? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
உபாகமம் 30:15 இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். 16 நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன். 17 நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால், 18 நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். 19 நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, 20 கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
ஜீவன், நன்மை, மரணம், தீமை, ஆசீர்வாதம், சாபம் எல்லாவற்றையும் இஸ்ரவேலர் முன்பாக வைத்து, அவற்றில் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லி வைத்தார். அவர்கள் மரணத்தை/தீமையை/சாபத்தைத் தேடிக்கொண்டனர். இப்படி அறிவில்லாமல் செய்து அவர்கள் பாழாய்ப்போனதால், அதினிமித்தம் தேவன் மனங்கசந்து அழுதார்.
புலம்பல் 3:48-ஐச் சொன்னது, தேவன் அல்ல, எரேமியா. அவரும் ஜனங்களின் அக்கிரமங்களைத்தான் சொல்லிச் சொல்லி அழுகிறாரேயொழிய, சாத்தானைக் குறித்து எதுவும் சொல்லவில்லை.
யோனா 4:11-ல் தேவன் பரிதாபப்பட்டது, மனந்திரும்பின ஜனங்களுக்காக. மனந்திரும்பின ஜனங்கள் மீது பரிதாபங்கொண்டு, அவர்களை அழிக்கவேண்டும் எனும் தமது முடிவை மாற்றிக்கொண்டார்.
//இது இரண்டில் அசுத்த ஆவியை விரட்டி அவனை விடுவிக்கும் வேலையையே இயேசு கைக்கொண்டார். நானும் பாவத்தின் அடிப்படை எதுவென்று பார்த்து அதையே இங்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.//
பாவத்தின் அடிப்படையைச் சொல்கிறீர்கள், சரி. அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்? அதைச் சொன்னால்தானே தீர்வு கிடைக்கும்?
//ஒருவன் உடம்பில் இருக்கும் கேன்சர் கட்டி வெளியில் புண்ணாகி மிகப்பெரிய வேதனையை கொடுக்கிறது. அவனை பார்த்த ஒருவர் வெளியில் தெரியும் இந்த புண்தான் இவ்வளவு வேதனை தருகிறது என்று சொல்லி அதற்கு மருந்து போடுகிறார். அதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவனை பரிசோதித்த மருத்துவரோ அனைத்துக்கும் அடிப்படை காரணம் அவனுக்குள் இருக்கும் கேன்சர் கட்டிதான் என்று கண்டறிந்து அதை நீக்கிவிட தீர்மானிக்கிறார்.//
நல்லதொரு உதாரணம் சொல்லியுள்ளீர்கள் சகோதரரே!
கேன்சர் கட்டுக்கு மருந்து போடுவதை மருத்துவர் பார்த்துக்கொள்வார்; ஆனால் மீண்டும் கேன்சர் வராமலிருக்க நோயாளி என்ன செய்ய வேண்டும்? புகை பிடிக்கக்கூடாது, போயிலை போடக்கூடாது என்பது போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமல்லவா?
அதுபோலவே சாத்தானை அழிக்கும் பணியை (மருத்துவராகிய) தேவன் பார்த்துக்கொள்வார். (நோயாளியான) நாம் சாத்தானுக்கு இடங்கொடாமல், சாத்தானை எதிர்க்கும் பணியைத் தீவிரமாகச் செய்வோம்.
-- Edited by anbu57 on Saturday 12th of November 2011 07:54:13 AM
தங்கள் விளக்கங்களுக்கு நன்றி சகோதரரே! உலகில் எந்த காரியங்கள் நடந்தாலும் சாத்தானை குற்றம் சொல்லவேகூடாது என்றஉண்மையை எனக்கு உணரவைத்துவிட்டீர்கள் மிக்க நன்றி.
நான் என்னவோ "உலகம் அனைத்தையும் மோசம்போக்கி கொண்டி ருப்பவன் சாத்தான்தான் அவனை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று தவறான கணக்கு போட்டுவிட்டேன் என்றே கருதுகிறேன். தவறு செய்யும் மனுஷனை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற உண்மை எனக்கு தெரியவில்லை.
ஆண்டவர் கூட ஒருமுறை:
ஆதியாகமம் 6:11பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
ஆதியாகமம் 6:12தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
என்று அறிந்ததும் அவர்களைதானே அழித்தார்.
13. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.என்றுதானே சொன்னார்!
இங்கு சாத்தானையா அழித்தார்? இல்லையே மனுஷர்களைதனே அழித்தார்! எனவே தேவனின் எச்சரிப்புக்கு செவிகொடாமல் சாத்தானின் மோசத்துக்கு உட்பட்டு தவறு/பாவம் எவன் செய்தாலும், அவனுக்கு எந்த இரக்கமும் காட்டாமல் இஸ்லாமிய நாடுகளைப்போல அவனை தண்டித்தோ அலது கொன்றோ விட்டால் நிச்சயம் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற கருத்து உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறதுபோல் தெரிகிறது.
ஆனால் இன்னொருபுறம் நடந்த காரியம் என்னவெனில், அநீதியான
ஜனங்களை மொத்தமாக அழித்தும், நீதிமானாகிய நோவாவின் சந்ததிக் குள்ளும் பாவம் பெருகி "நீதிமான் ஒருவரும் இல்லை" என்ற நிலை மீண்டும் ஏற்ப்பட்டுவிட்டது. அவர்களையும் மொத்தமாக தேவன் அழித்திருக்கலாம் ஆனால் ஏனோ இயேசுவின் மூலம் மன்னிப்பை கொடுத்துவிட்டார். ஆனால் மீண்டும் தற்க்காலத்தில் பாவம் அதிகமாகி விட்டது. இதன் முடிவு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதற்கிடையில் பூகம்ப இடிபாடுக்குள் மாட்டிய மனுஷனுக்கு இரக்கம் காண்பிக்க விருப்பம் இல்லாதவர்கள் காண்பிக்க வேண்டாம். ஆனால நானோ! "உன்னைப்போல் பிறரையும் நேசி" என்ற இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில், அதே இடத்தில் நான் அகப்பட்டால் எப்படி துடித்து துடித்து பாடுபடுவேன் என்பதை எண்ணி எண்ணி அவர்களுக்காக பரிதபிக்கிறேன்.
அதே நேரத்தில் வலதுக்கும் இடத்துக்கும் வித்தியாசம் தெரியாத அந்த ஜனங்களை மோசம்போக்கி நீதிக்கெல்லாம் பகைஞனாக இருந்த கொண்டு, எவனை விழுங்கலாம் எவனை துன்பத்துக்குள் தள்ளலாம் எவன்மேல் குற்றம் சுமத்தலாம் என்று சுற்றித்திரிந்து மனுஷர்களுக் குள்ளேயே புகுந்து கிரியை செய்து அவர்களை துன்பத்துக்குள் விழ வைக்கும் சாத்தனை மாத்திரம் நான் வெறுக்கிறேன். அவன் தலையை தேவன் விரைவில் நசுக்குவார் என்று எதிர்பாக்கிறேன்.மனுஷர்கள் எல்லோரையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் மன்னிக்கிறேன். மன்னிப்பது மட்டுமல்ல, அன்று பாவம் செய்த இஸ்ரவேல் ஜனங்களுக்காக மோசே தேவனுக்கு முன்னால் நின்று மன்றாடியதுபோல நானும் அவர்களுக்காக மன்றாடுகிறேன் தங்களுக்கு அது தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்! எனது இந்த நிலைக்கு கூலியாக தேவன் எந்த பிரதிபலன கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி!
-- Edited by SUNDAR on Saturday 12th of November 2011 04:02:41 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//மனுஷர்கள் எல்லோரையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் மன்னிக்கிறேன்.//
எந்தெந்த பாவங்களையெல்லாம் மன்னிக்கிறீர்கள்? நீங்கள் மன்னிக்கிற பாவங்களில், “தேவனுக்கு விரோதமான பாவங்கள்” மற்றும் “பிறருக்கு விரோதமான பாவங்கள்” ஆகியவை அடங்குமா?