இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


அன்பு wrorte:.
--------------------------------------------------------------------------------------
சுந்தர்:

//ஆண்டவரின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.//

நல்லது சகோதரரே! அப்படியே ஆகட்டும்.
--------------------------------------------------------------------------------------

ஐயா... HMV ...அவர்களே திரு சுந்தரும் அன்புவும் நீண்ட விவாதத்திற்கு பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்ட பிறகு தாங்கள் ஏன் ஐயா புதிதாக ஒரு பிரச்னையை ஆரம்பிக்கிறேர்கள்.....

எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களை மனமடிவாகுவதற்கு மட்டும் தெரிந்து வைத்து இருக்கிறேர்களே... இது நியாயமா.....

HMV wrote :
-------------------------------------------------------------------------
இந்த வகையில் நீங்களே வாதநோயினால் பீடிக்கப்பட்ட சாத்தானின் தூதுவனோ என்று ஐயப்படுகிறேன்; நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, அவ்வளவு தான் ஒருவேளை இது தவறாகக்கூட இருக்கலாம், அதனால் என்ன அதற்கும் ஒரு மன்னிப்பு கேட்டால் போகிறது,என்ன நான் சொல்றது சரிதானே எட்வின்..?
--------------------------------------------------------------------------
ஐயா... HMV ...அவர்களே நீங்கள் இவ்வளவு துணிகரமா எழுதிவிட்டு நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, என்று சொல்கிறேர்களே...இது உங்களுக்கே நியாமாக தோன்றுகிறதா..!..

உங்களுக்கா..ஒன்றும் தெரியாது. தூங்குகிரவனைகூட எழுபிவிடலாம் தூங்குகிரவனைபோல் நடிகிரவனை எழுப்ப முடியாது என்று யாரோ சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்.
அதோ தங்களுக்கு பொருந்துமோ...!



-- Edited by Stephen on Friday 18th of November 2011 02:31:04 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

வெளிபடுத்தல் : 20 ௦
 
 12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்
 
 
 
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
 
 
 
சகோ : அன்பு அவர்களே எல்லோருடைய கிரியைகளுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்பதற்காகவே மேலே உள்ள வசனத்தை உங்களுக்கு பதித்தேன்
 
 
 
சரி நீங்கள் சுந்தரை குறித்து  கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்க ஆசையாய் இருக்கின்றேன்
 
 
 
ANBU  WROTE  :
 
_________________________________________________________________________________
தேவனும் அவனை மன்னித்து புதிய எருசலேமாகிய நகரத்தினுள் பிரவேசிக்க அனுமதிக்கும்படி (அதாவது நித்திய ஜீவனைப் பெறும்படி) வேண்டுவேன்” என்கிறீர்கள். உங்கள் வேண்டுதல் தேவசித்தத்திற்கு விரோதமானது என இப்போதாவது புரிகிறதா?
_________________________________________________________________________________
 
 
 
அதாவது ஒரு பாவி புதிய எருசலேமுக்கு வரும்படி சுந்தர் வேண்டுகின்றார்  என்று நீங்கள்  சொல்கின்றீர்கள் சரிதானே  
 
 
 
ஆனால் என்னவே தெரியவில்லை சுந்தர் ஜெபத்தை கர்த்தர் கேட்டார் என்று எண்ணுகின்றேன் ஆம் பாவி கூட புதிய எருசலேமில் இருக்கின்றான் கிழே உள்ள வசனத்தை நன்கு வாசித்து பாருங்கள்
 
 
 
 
ஏசாயா : 65
 
18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
 
 
19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
 
 
 
20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும்
வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
 
 
 
 
சகோ : அன்பு அவர்களே தேவன் புதிய எருசலேமில் பாவியை எதற்காக அனுமதிக்கின்றார்  என்பதை எனக்கு தெளிவாக சொல்லுங்கள் தமிழ் வேதத்தில் இருந்து ......................


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 18th of November 2011 02:40:08 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


SUNDAR wrote:
நீங்கள்  மாற்று பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும்  சகோ. சில்சாம்  இல்லை என்பதை கர்த்தருக்குள் உறுதியாக சொன்னால் மட்டுமே இனி உங்கள் பதிவு அனுமதிக்கப்படும். முகாந்திரமில்லாமல் பொத்தம் பொதுவாக எழுதி குழப்பத்தை  விளைவித்தால் உங்கள் பயனர் பெயர் முடக்கப்படும்.

 திரு.சுந்தர் அவர்களே, இந்த நிமிடம் வரை உங்களை நல்லதொரு மனிதராகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் இதுபோன்றதொரு கீழ்த்தரமான மிரட்டல் விடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.சில்சாம் என்பவரே ஒரு டூப்ள்கேட் என்றால் நான் அவருடைய டூப்ளிகேட் என்கிறீர்களே இது நியாயமா..? உங்களுக்கு சில்சாம் சம்பந்தமான ஏதோவொரு கிலி பிடித்திருக்கும் போலிருக்கிறது. சில்சாம் ஒருவேளை உங்கள் ஆபீஸில் எதிர்சீட்டில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளுங்கள். biggrin

ஐயா, என்னை நீங்கள் சில்சாம் என்பவருடன் ஒப்பிட்டதைவிட கோவை பெரியன்ஸ் ஆட்கள் யாருடனாவது ஒப்பிட்டு யோசித்திருந்தால் கொஞ்சம் கௌரவமாக இருந்திருக்கும். கடைசியாக, ஒரு சந்தேகம் இந்த தளத்தின் நிர்வாகி நேசன் என்பவர் தானே, நீங்கள் எப்படி என்னை மிரட்டுகிறீர்கள்? அவர் கேள்வி கேட்பார், நீங்கள் பதில் சொல்லுவீர்கள், இதுதானே இங்கு வழக்கம்? இப்படி இரண்டு இரண்டு பேராக எத்தனை ஜோடிகளோ ? இதுவும் நல்ல ஐடியா தான் ! நீங்க என்னை கேள்வி கேட்பது நல்ல தமாஷ் ! எப்படியோ என்னை குறிவைத்துவிட்டீர்கள்,எப்படியும் ஒழித்துகட்டிவிட்டே மறுவேலை பார்ப்பீர்கள் போலிருக்கிறது. பிறகு எந்த உரிமையில் ஓயாமல் சகோதரர் என்றும் நண்பர் என்றும் அழைத்துக்கொள்ளுகிறீர்களோ ? இயேசுநாதர் நண்பர்களை மட்டுமே நேசிக்க சொன்னாரா. ஐயா ?



__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

Stephen wrote:
HMV wrote :

-------------------------------------------------------------------------
இந்த வகையில் நீங்களே வாதநோயினால் பீடிக்கப்பட்ட சாத்தானின் தூதுவனோ என்று ஐயப்படுகிறேன்; நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, அவ்வளவு தான் ஒருவேளை இது தவறாகக்கூட இருக்கலாம், அதனால் என்ன அதற்கும் ஒரு மன்னிப்பு கேட்டால் போகிறது,என்ன நான் சொல்றது சரிதானே எட்வின்..?
--------------------------------------------------------------------------
ஐயா... HMV ...அவர்களே நீங்கள் இவ்வளவு துணிகரமா எழுதிவிட்டு நான் உங்களை அவ்வாறு நியாயந்தீர்க்கவில்லை ஆனால் அதுபோல- அந்த வண்ணமாக- அந்த சாயலில் எனக்குத் தோன்றுகிறது, என்று சொல்கிறேர்களே...இது உங்களுக்கே நியாமாக தோன்றுகிறதா..!..


 அன்பான சகோதரா, நான் எழுதியுள்ள சாயல் உங்களுக்குத் தெரியவில்லையா, இது முழுக்க முழுக்க இதே திரியில் திரு.சுந்தர் அவர்கள் எழுதியதன் பாதிப்பே.ஆம்,அவர் திரு.அன்பு அவர்களை எப்படி சூசகமாக தாக்கிவிட்டு சமாளிக்கிறாரோ அதுபோலவே நானும் முயற்சித்தேன். திரு.சுந்தர் அவர்களுக்கு எதிராக நீங்கள் எதாவது எழுதி பாருங்கள், உங்களுக்கும் இதே மரியாதை தான். ஆளாளுக்கு ஒரு ஓசி தளத்தை ஆரம்பித்து வைத்துக்கொண்டு உறுப்பினர்களையும் சேர்த்துவிட்டு இவர்கள் எழுதுவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்று நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. எனக்கு சில்சாமும் ஒன்றுதான் சுந்தரும் ஒன்றுதான் இருவருமே  பிடிவாதக்காரர்கள். வாதம் என்றாலே எதிர்கருத்தை எதிர்கொள்ளும் மனோதிடமும் இருக்கவேண்டும். ஆனால் இங்கோ ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டால் கூட வாதத்துக்கே அழைக்கிறீர்கள்; எனக்கு வாதிடுவதில் நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே எனது ஐயங்களை கேட்கிறேன். நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வெறுத்து விடாதிருங்கள், உங்கள் நட்பாவது எனக்கு லாபமாக இருக்கட்டும்.எல்லாவற்றுக்கும் நன்றி,நண்பர்களே..!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

HMV wrote:

என்னை நீங்கள் சில்சாம் என்பவருடன் ஒப்பிட்டதைவிட கோவை பெரியன்ஸ் ஆட்கள் யாருடனாவது ஒப்பிட்டு யோசித்திருந்தால் கொஞ்சம் கௌரவமாக இருந்திருக்கும். 


சகோ. HMV நான் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் மட்டுமே வேண்டும். சும்மா சுற்றி வளைத்து எதுவும் எழுதவேண்டாம்.  உம்முடைய முதல் பதிவே சில்சாம் தளத்துக்குதான் தொடுப்பு கொடுத்து எழுதினீர். அது நீக்கப்பட்டது. ஓன்று நீர் சில்சாமாக இருக்க வேண்டும் அல்லது அவரோடு தொடர்புடன் இருந்து அவரது ஆவி உம்மையும் தொற்றியிருக்க வேண்டும். தந்திரக்காரர்கள் நிறைந்த உலகம் இது. எங்களுக்கு உம்போல்  தந்திரம் எல்லாம் தெரியாது செய்வதை நேரடியாகவே செய்வோம்.      

இங்கு எழுதுவதை அப்படியே நம்பவேண்டும் என்று யாருக்கும் நாங்கள் சொல்லவில்லை. நம்பாத கோஸ்டிகள் விலகிபோங்கள் என்றே  சொல்கிறோம். விவாதிக்க விரும்பினால் உருப்படியாக ஏதாவது எழுத வேண்டும் ஆனால் வீம்புக்கு ஏதாவது எழுதுவோம் என்று எழுதிக் கொண்டு தேவையற்ற வார்த்தைகளை எழுதிவருகிறீர். 

இங்கு எழுதப்பட்ட எந்த ஒரு கருத்து குறித்து சந்தேகம் இருந்தால் அந்த குறிப்பிட்ட திரியில் அல்லது தனியாக ஒருதிரியில் உம்முடைய கருத்தை முன்வைக்கலாம் அதுகுறித்து விவாதித்து அது தவறு என்று தெரியும்பட்சத்தில் நான் உடனே அந்த பதிவை நீக்கிவிட தயார்.
 
இதை நான் எத்தனை முறையோ எழுதிவிட்டேன். ஆனால் எந்த முறைமையும் இல்லாத ஏதோபோல எல்லா விவாதத்துக்குள்ளும்  புகுந்து சொன்னதையே திரும்ப திருமப் சொல்லிக்கொண்டு வரும் உம்முடய  எண்ணமெல்லாம் இந்த தளத்தின் செயல்பாட்டை  எப்படியாவது முடக்குவதுதான் என்பது நன்றாகவே தெரிகிறது.       
 
சகோ. அன்பை நீர் அடிக்கடி சுட்டிகாட்ட வேண்டாம் அவர் எந்த ஒன்றை செய்தாலும் சரியான முறைமைபடி செய்பவர். அவரோடு உம்மை ஒப்பிட்டு நீர் பெரியாளாக நினைக்க வேண்டாம்.   
 
இனி சரியான திரியில் சரியான கேள்வியை முன்வைத்து விவாதம் செய்ய விரும்பாத பட்சத்தில்  உம்முடய எந்த ஒரு பதிவுக்கும் நன் பதில் தரமாட்டேன்.  
 
கர்த்தர் உமக்கும் எனக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சகோ.எட்வின்:

//சகோ : அன்பு அவர்களே தேவன் புதிய எருசலேமில் பாவியை எதற்காக அனுமதிக்கின்றார்  என்பதை எனக்கு தெளிவாக சொல்லுங்கள் தமிழ் வேதத்தில் இருந்து ......................//

நல்லதொரு கேள்வியை எழுப்பியுள்ளீர்கள் சகோதரரே!

புதிய எருசலேம் பற்றி வெளி. புத்தகம் கூறுவதன் அடிப்படையில் நான் எழுதியிருந்தேன்; நீங்கள் ஏசாயாவின் புத்தகம் கூறுவதன் அடிப்படையில் கேள்வி கேட்டுள்ளீர்கள். இதனால் உங்கள் கேள்விக்கும் புதிய எருசலேமுக்கும் சம்பந்தமில்லை என நான் கூறவில்லை. இரு வேதபகுதிகள் சொல்வதையும் ஒப்பிட்டு Balance செய்து ஒரு முடிவுக்கு வருவோம்.

முதலாவது வெளி. 21,22-ம் அதிகாரங்கள் கூறுகிற புதிய எருசலேம் பற்றி பார்ப்போம்.

வெளி. 21:1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; ... 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; ... 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், ...4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

16 அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. ... 22 அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். 23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

24 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

22:1 பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். 2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். 4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சிக்காலம் முடிந்து, வெள்ளை சிங்காசன இறுதி நியாயத்தீர்ப்பும் முடிந்த பின்னர்தான் புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பற்றி வெளி. 21:2 கூறுகிறது. புதிய எருசலேம் இறங்கி வருவதற்கு முன் இரண்டாம் மரணம் எல்லாம் முடிந்திருக்கும். எனவேதான் புதிய எருசலேமில் மரணமில்லை என வசனம் 4 கூறுகிறது.

அதினுள் தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிற எதுவும் பிரவேசிக்காது என வசனம் 24 கூறுகிறது. இதைத்தான் எனது பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் மட்டுமே அதினுள் பிரவேசிப்பார்கள் என்றும் வசனம் 24 கூறுகிறது. இவ்வசனங்கள் நேரடியானவை. இவற்றின் அடிப்படையில் நாம் என்ன சொல்லமுடியும்? புதிய எருசலேமுக்குள் பாவிகள் யாரும் பிரவேசிக்கமாட்டார்கள் என்றுதானே சொல்லமுடியும்? இக்கருத்தில் சற்றும் சந்தேகம் உண்டாக வாய்ப்பில்லையல்லவா? எனவே புதிய எருசலேமில் பாவிகள் இருக்கமாட்டார்கள் எனத் திட்டவட்டமாகச் சொல்லலாம்.

இனி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏசாயா 65 கூறுகிற எருசலேம் பற்றி பார்ப்போம்.

புதிய வானம் புதிய பூமி காணப்பட்டதாக வெளி. 21:1 கூறுவதைப் போல், புதிய வானம் புதிய பூமி சிருஷ்டிக்கப்படுவதாக ஏசாயா 65:17 கூறுகிறது. அதன் பின்னர்தான் எருசலேம் பற்றி 18,19 வசனங்கள் கூறுகின்றன. எனவே ஏசாயா 65:18,19 கூறுகிற எருசலேமும் வெளி. 21:2 கூறுகிற எருசலேமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

வெளி. 21:24-ன் அடிப்படையில், புதிய எருசலேமில் பாவிகள் யாரும் பிரவேசிக்கமாட்டார்கள் என ஏற்கனவே பார்த்தோம். ஆனால் ஏசாயா 65:20-ன்படி பார்த்தால், புதிய எருசலேமில் பாவிகள் இருப்பார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

புதிய எருசலேமில் பாவிகள் இருப்பார்கள் என இவ்வசனம் கூறுவதாயிருந்தால், அது வெளி. 21:24-க்கு முரணாகிவிடும்; மாத்திரமல்ல, புதிய எருசலேமிலுள்ள பாவி சபிக்கப்படுவான் என இவ்வசனம் கூறுவதாயிருந்தால், அது வெளி. 22:3-க்கு முரணாகிவிடும்; மாத்திரமல்ல, புதிய எருசலேமில் நூறு வயது சென்றவர்கள் மரிப்பார்கள் என இவ்வசனம் கூறுவதாயிருந்தால், அது வெளி. 21:4-க்கு முரணாகிவிடும். இப்படி 3 முரண்பாடுகள் ஏசாயா 65:20-ல் இருப்பதால், அதன் மொழிபெயர்ப்பில் தவறு இருக்கவேண்டும் என நான் யூகிக்கிறேன்.

அதிலுள்ள 4 வாசகங்களில், முதல் 2 வாசகங்களும் வெளி. 21,22-ன் கருத்துக்கு இசைவாகவே உள்ளன. ஆனால் 3-ம் மற்றும் 4-ம் வாசகங்கள்தான் வெளி. 21,22-ன் கருத்துக்கு முரணாக உள்ளன. இவ்விரு வாசகங்களுக்கான மூலபாஷை வார்த்தைகள், அவற்றின் அமைப்புகள் மற்றும் அர்த்தங்களின்படி, அவற்றைப் பின்வருமாறு மொழிபெயர்த்தால், அவற்றின் கருத்துக்கள் வெளி. 21,22-ன் கருத்துகளுக்கு இசைவாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரித்தவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுசென்று சபிக்கப்பட்டவனோ பாவி என்று ண்ணப்படுவான்.

இவ்வசனத்தின் 3-ம் மற்றும் 4-ம் வாசகங்களின் மூலபாஷை வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தங்களையும் தருகிறேன்.

naar - ben - meah - shaneh - muwth
chata - ben - meah - shaneh - qalal

இவ்வார்த்தைகளின் அர்த்தங்கள்:

வாலிபன் - ஒரு மகன் - நூறு - வருடம் - மரித்தல்;
பாவி - ஒரு மகன் - நூறு - வருடம் - சபிக்கப்படுதல்.

இரு வாசகங்களுக்குமான வார்த்தைகளை ஒப்பிட்டுப்பார்க்கையில், இரு வாசகங்களும் ஒரே பாணியில் (style-ல்) மொழிபெயர்க்கப்படவேண்டுமென்ற குறிப்பை அறிகிறோம். muwth மற்றும் ben எனும் வார்த்தைகளை ஒருங்கிணைத்து, மரிக்கிறவன் என்றும் மொழிபெயர்க்கலாம், மரித்தவன் என்றும் மொழிபெயர்க்கலாம். ஆனால் மரிக்கிறவன் என மொழிபெயர்த்தால், புதிய எருசலேமில் மரணம் உண்டு எனும் முரண்பாடான கருத்து வருவதால், மரித்தவன் என நான் மொழிபெயர்த்துள்ளேன்.

அவ்வசனத்தின் முதல் 2 வாசகங்கள்தான் புதிய எருசலேமில் நடப்பவற்றைக் கூறுகின்றன. கடைசி 2 வாசகங்களும், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் நிகழ்ந்தவற்றை எண்ணிப்பார்ப்பதாக உள்ளன.

முதல் 2 வாசகங்கள், புதிய எருசலேமில் அற்ப ஆயுள்ள பாலகனாகவும் யாரும் மரிக்கமாட்டார்கள், கிழவனாகவும் யாரும் மரிக்கமாட்டார்கள் எனக் கூறுகின்றன. ஆனால் கடைசி 2 வாசகங்கள், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் 100 வயதுசென்று மரித்தவர்களும் சபிக்கப்பட்டவர்களும், எப்படி எண்ணப்படுவார்கள் என்பதைக் கூறுகின்றன. 100 வயது சென்று மரித்தவன் புதிய எருசலேமில் வாலிபனாகக் கருதப்படுவான்; 100 வயது சென்று சபிக்கப்பட்டவன் புதிய எருசலேமில் பாவியாக எண்ணப்படுவான் என்பதையே அவ்விரு வாசகங்களும் கூறுகின்றன.

எனவே புதிய எருசலேமில் பாவிகள் இருப்பார்கள் என நீங்கள் நினைப்பது சரியல்ல; புதிய எருசலேமில் பாவிகள் இருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.



-- Edited by anbu57 on Saturday 19th of November 2011 07:15:45 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: பூகம்ப இடிபாடுகளுக்கும் மாட்டிய மனுஷர்கள்!
Permalink  
 


சகோ.எட்வின்:

//ஆனால் என்னவே தெரியவில்லை சுந்தர் ஜெபத்தை கர்த்தர் கேட்டார் என்று எண்ணுகின்றேன் ஆம் பாவி கூட புதிய எருசலேமில் இருக்கின்றான் கிழே உள்ள வசனத்தை நன்கு வாசித்து பாருங்கள்//

அன்பான சகோதரரே!

நீங்கள் சொல்வதுபோல் சகோ.சுந்தரின் ஜெபத்தை தேவன் கேட்டு, பாவிகளை புதிய எருசலேமுக்குள் அனுமதித்து, பின்னர் அவர்களை சபிப்பதால் என்ன பயன்? புதிய எருசலேமுக்குள் பாவிகள் வந்தால் மட்டும் போதுமா? சந்தோஷமாக நித்தியமாக ஜீவிக்க வேண்டாமா?

சபிக்கப்படுதல் என்பது துன்பத்தைத்தானே கொடுக்கும்? புதிய எருசலேமுக்குள் வந்து, சபிக்கப்பட்டு, துன்பத்தைப் பெறுவதால் பாவிகளுக்கு என்ன பயன்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.எட்வின்:

//ஆனால் என்னவே தெரியவில்லை சுந்தர் ஜெபத்தை கர்த்தர் கேட்டார் என்று எண்ணுகின்றேன் ஆம் பாவி கூட புதிய எருசலேமில் இருக்கின்றான் கிழே உள்ள வசனத்தை நன்கு வாசித்து பாருங்கள்.

20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும்
வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.//

அன்பான சகோதரரே!

இவ்வசனம் சுமார் 2500 வருடங்களுக்கு முன் தீர்க்கதரிசி மூலம் கூறப்பட்டது. எனவே சுந்தரின் ஜெபத்தை கர்த்தர் கேட்டதற்கும் இவ்வசனத்திற்கும் சம்பந்தமில்லை. நீங்கள் சொல்வதுபோல், புதிய எருசலேமுக்குள் பாவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இவ்வசனம் கூறுவதாயிருந்தால், அதற்காக சுந்தர் தற்போது ஜெபிக்க வேண்டிய அவசியமே இல்லையே!



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.எட்வின்:

//

தீத்து : 3
 
10. வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.

11. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று
அறிந்திருக்கிறாயே.

 
 
சகோதரர் சுந்தர் அவர்களே மேலே வசனம் சொல்வது போல  
நீங்கள் அவர்களுக்கு வசன ஆதாரத்துடன் சொல்லிவிட்டீர்கள்
அவர்கள் யார் என்று இப்பொழுது உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்
 
 
 
நீங்கள் நேற்று இரவு தேவனே இந்த  காரியங்களை எனக்கு சொன்னார் என்று 1000 ௦௦ முறை அவர்களுக்கு அழுது
சொன்னாலும் அவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வேதத்தை மாம்ச பிரகாரமாக புரட்டி பார்த்து கிழித்தவர்கள் எனவே நீங்கள் தேவையில்லாமல் உங்கள் எனர்ஜியை வேஸ்ட் பண்ணுகின்றீர்கள்
 
 
 
சகோ : சுந்தர் அவர்களே நீங்கள் இவர்களுக்கு சொன்ன ஒரு காரியம் கூட தேவன் பார்வையில் தவறாக இருக்காது ஆனால் இவர்களுக்கு
நீங்கள் சொல்லி கொண்டே இருப்பது தான்  தேவனுடைய பார்வையில் தவறாக இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன்
 
 
 
 
ஞானவானை கடிந்து கொண்டு அவனுக்கு புத்தி  சொல்லுங்கள் 
மூடனை கடிந்து  கொண்டு நீங்கள் கரை பட்டு போகாதிருங்கள்...............

//

அன்பான சகோதரரே!

இப்பதிவில் அவர்கள், இவர்கள், அவன் என்றெல்லாம் நீங்கள் எழுதியுள்ள வார்த்தைகள் என்னைத்தான் குறிப்பிடுவதாக இருக்கவேண்டும். ஏனெனில் இத்திரி முழுவதிலும் சகோ.சுந்தருடன் விவாதம் செய்தவன் நான்தான். இம்மட்டும் என்னைக் குறித்து இப்படியாக நிதானித்து சுந்தருக்கு ஆலோசனை கூறியுள்ளீர்கள்.

நீங்கள் என்னைக் குறித்து சொல்லியுள்ள கருத்துகளை சுந்தர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என நம்புகிறேன்.

நீங்கள் இளவயதுக்காரர்; எனவே நிதானமில்லாமல் தீர்ப்பு சொல்லிவிட்டீர்கள். எதிர்காலத்தில் இப்படியாக நிதானமில்லாத அவசரத் தீர்ப்பு சொல்லிவிடாதீர்கள் என உங்களைவிட நாம் மூத்தவன் என்ற முறையில் ஆலோசனை சொல்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.எட்வின்:

//அவர்கள் வேதத்தை மாம்ச பிரகாரமாக புரட்டி பார்த்து கிழித்தவர்கள்//

அன்பான சகோதரரே!

நாங்கள் மாம்சப்பிரகாரமாக வேதத்தைப் புரட்டிப் பார்த்து கிழித்தவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால் நீங்களும் சுந்தரும் ஆவிக்குரிய பிரகாரமாக வேதத்தைப் புரட்டிப் பார்ப்பவர்கள் தானே? அப்படியானால் புதிய எருசலேம் பற்றி ஏசாயா 65:20 கூறுவதையும் வெளி. 21,22 கூறுவதையும் ஆவிக்குரியபிரகாரமாக அலசி ஆராய்ந்து அவற்றிற்கிடையிலேயான பின்வரும் முரண்பாடுகளை தெளிவிக்கலாமே! செய்வீர்களா?

1. புதிய எருசலேமில் பாவி உண்டென ஏசாயா 65:20 சொல்கிறது; ஆனால் அங்கு பாவிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளி. 21:27 கூறுகிறது.

2. புதிய எருசலேமில் சாபம் உண்டென ஏசாயா 65:20 சொல்கிறது; ஆனால் அங்கு சாபமிராது என வெளி. 22:3 கூறுகிறது.

3. புதிய எருசலேமில் மரணம் உண்டென ஏசாயா 65:20 சொல்கிறது; ஆனால் அங்கு மரணமில்லை என வெளி. 21:4 கூறுகிறது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.எட்வின்:

//மேலே சொன்ன அனைத்து ஆவிகளுக்கும் ஒரே ஒருவேலைதான். அந்த வேலை என்னவென்றால் மனிதர்களை பாவத்தில் விழவைப்பதுதான். ஆனால் மனிதனாகிய நமக்கோ இந்த பூமியில் சாத்தானுடைய தந்திரங்களை எதிர்த்து நம்மை பாதுகாப்பது மட்டும் தான் மனிதனின் வேலையாக இருந்தால் சரி, நீங்கள் சொல்கின்றபடி பாவத்தின் முழுகாரணமே மனிதன் தான் என்று சொல்லலாம்.//

அன்பான சகோதரரே!

பாவத்தின் முழு காரணமே மனிதன்தான் என நான் பதித்த பதிவை எடுத்துக்காட்டுங்கள்; அல்லது உங்களது கூற்றை வாபஸ் பெறுங்கள். அரைகுறையாகப் படித்துவிட்டு இல்லாத கூற்றைச் சொல்லி நேரத்தை வீணாக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாவம்செய்ய சாத்தான் தூண்டுகிறான்; ஆனால் அந்த தூண்டுதலுக்கு அடிபணிந்து எல்லோரும் பாவம்செய்வதில்லை. எவன் இச்சையுள்ளவனாக இருக்கிறானோ அவன் மட்டுமே சாத்தானின் தூண்டுதலுக்குப் பலியாகிறான். இச்சையடக்கம் உள்ளவன் சாத்தானின் தூண்டுதலுக்குப் பலியாவதில்லை. எனவேதான் யாக்கோபு இவ்வாறு எழுதுகிறார்:

யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

இவ்வசனத்தை எத்தனையோ முறை எழுதிவிட்டேன். ஆகிலும் மீண்டும் மீண்டும் நாம் செய்கிற பாவங்களுக்கான பொறுப்பை ஏற்கமனதில்லாமல் சாத்தானின் மீதே பொறுப்பை சுமத்துகிறீர்கள்.

சாத்தானின் தந்திரங்களை எதிர்ப்பதைவிட வேறென்ன முக்கிய வேலை உங்களுக்கு? மனிதன் இவ்வுலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன என இயேசு கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

முதலாவது உங்கள் ஜீவனை ஆதாயப்படுத்தும் வேலையைச் செய்யுங்கள்; அதன்பின்னர் மற்ற வேலைகளைப் பார்க்கலாம். ஜீவனை ஆதாயப்படுத்துவதற்கு சாத்தானின் தந்திரங்களை எதிர்க்கத்தான் வேண்டுமெனில், முதலில் அந்த வேலையை ஒழுங்காகச் செய்யுங்கள். மாறாக, எனக்கு வேறு எத்தனையோ வேலைகளுள்ளன எனச் சொல்லி, சாக்குப்போக்கு சொல்லாதிருங்கள்.

சாத்தானின் தந்திரங்களை வெல்வதற்கு தேவனின் சர்வாயுதங்களை எடுக்கவேண்டும் என்பதற்கான வசனங்களைச் சொன்னீர்களல்லவா? அப்படியானால் நீங்கள் சாத்தானிடம் தோற்பதற்குக் காரணமென்ன? தேவனின் ஆயுதங்களை நீங்கள் எடுக்கவில்லையா, அல்லது நீங்கள் எடுத்துள்ள “தேவனின் ஆயுதங்களுக்கு” வல்லமையில்லையா?

//ஆனால் ஒரு மனிதனுக்கு பூமியில் எத்தனை வேலை இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன்.//

இப்படியெல்லாம் சொல்லி உங்களை சமாதானப்படுத்திக்கொள்ளும் உங்களுக்காக நான் மிகவும் பரிதபிக்கிறேன் சகோதரரே!

//இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் சாத்தான்  பாவத்தில் மனிதர்களை சிக்க வைத்து தண்டனை வாங்கி கொடுப்பது சாத்தானுக்கு எவ்வளவு லேசான காரியம் என்று//

சாத்தானுக்குக் கடினமா எளிதா என்ற கேள்வி எனக்கு எதற்கு? சாத்தானின் தூண்டுதலுக்கு நான் பலியானால், எனக்கல்லவா தண்டனை கிடைக்கப்போகிறது? எனவே சாத்தானின் தூண்டுதலுக்கு நான் பலியாகாமல் இருப்பதற்குத் தீவிரப்படுவதுதான் எனக்கு முக்கியமேயொழிய, என்னைச் சிக்கவைப்பது சாத்தானுக்கு எளிதா, கடினமா என ஆராய்வது எனக்கு முக்கியமல்ல.

//தேவனே மனிதர்களாகிய நம்மேல் இரக்கும் வைத்து தன் குமாரன் மூலமாய் எல்லோரையும் மன்னிகின்றார் என்றால் மனிதர்களாகிய நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் உண்டானவர்கள்//

தேவன் எல்லாரையும் மன்னிக்கிறார் என்றால் பின்வரும் வசனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

(இயேசு இங்கு சொல்வது சொல்லர்த்தமான மரத்தை, அக்கினியை மட்டுந்தானா?)

மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 3:5 ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 கொரி. 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இன்னும் எத்தனையோ வசனங்களைச் சொல்லலாம். வசனம் இப்படிச் சொல்லியிருக்க, தேவன் எல்லோரையும் மன்னித்து தமது ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்வார் எனும் தவறான தகவலை கோவைபெரியன்ஸ் தளத்தாரைப் போல் சொல்லி, பின்வரும் வசனம் கூறுகிறதுபோல பிறருக்கு இடறலாயிராதேயுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.





__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

anbu57 wrote:

////பாவத்தின் முழு காரணமே மனிதன்தான் என நான் பதித்த பதிவை எடுத்துக்காட்டுங்கள்; அல்லது உங்களது கூற்றை வாபஸ் பெறுங்கள். அரைகுறையாகப் படித்துவிட்டு இல்லாத கூற்றைச் சொல்லி நேரத்தை வீணாக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.////

தேவன் எல்லோரையும் மன்னித்து தமது ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்வார் எனும் தவறான தகவலை கோவைபெரியன்ஸ் தளத்தாரைப் போல் சொல்லி, பின்வரும் வசனம் கூறுகிறதுபோல பிறருக்கு இடறலாயிராதேயுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


சகோ. அன்பு அவர்களே மனுஷர்களின் துன்பத்துக்கு அடிப்படை காரணம் பாவம்.  மீறுதலுக்கு பின்னரே சாபமும் துன்பமும் பூமிக்குள் நுழைந்தது அவ்வாறு இருக்கையில் மனிஷர்களின் துன்பத்துக்கு அவர்கள்தான் பொறுப்பு என்று தாங்கள் எழுதினால் பாவத்துக்கும்  அவர்கள்தான் பொறுப்பு என்பது போன்ற தோற்றமே உண்டாகும் அதையே எட்வின் எழுதியிருக்கிறார்.

அதாவது மனுஷனின் மீறுதல் அல்லது  பாவத்தினால் துன்பம் உண்டானது, சாத்தானின் தூண்டுதலால் பாவம் உண்டானது.
 
எங்கள் கருத்துப்படி பாவம் செய்தவனுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு! எல்லோருக்கும் மீட்பு கிடைத்துவிடும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை.  ஆனால் தேவனின் சித்தம் எல்லோரும்  சத்தியத்தை அறியவேண்டும் என்று இருப்பதாலும்,   சாதாரண மனுஷனாகிய எமக்கு யாருக்கு  மீட்பு உண்டு யாருக்கு அழிவு என்று சரிவர தெரியாத காரணத்தால் எல்லோருக்காவும் தேவனிடம்  விண்ணப்பத்தை முன் வைக்கிறோம்
 
I தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
 
பவுலின் இந்த பிரதான புத்திமதி அடிப்படையில் எல்லோருக்காகவும் இரக்கத்துடன் ஜெபிக்கிறோம் அத்தோடு தேவனின் சித்தம் நிறைவேரவும் நாங்கள் விட்டுகொடுத்தே ஜெபிக்கிறோம்  அவ்வளவே!
 
மற்றபடி பாவம் செய்தவனுக்கு எந்த தண்டனையோ அழிவோ இல்லை என்பது எங்கள் கருத்து அல்ல!
 
நாங்கள் ஜெபித்த உடன் கண்ணை மூடிக்கொண்டு தேவன் அப்படியே செய்துவிட மாட்டார். அவர் சர்வ வல்லவர் சர்வ ஞானி, எப்படி என்றாலும் அவருடைய சித்தப்படிதான்  காரியங்கள் நடைபெறும். நாங்களும் ஜெபித்து விட்டு "இது என்னுடய வேண்டுகோள் தேவனே! நான் ஒரு மாம்சமானவன், எனக்கு எல்லா உண்மையும் தெரியாது எனவே உம்முடய சித்தபடியே ஆகக்கடவது" என்றே ஜெபித்து முடிக்கிறேன்.
 
எதை எங்கு எப்படி செய்யவேண்டுமோ அதை தேவன் தான் அநாதி தீர்மானத்தின்படி சரியாக செய்துமுடிப்பார் என்றும் நம்புகிறோம்.
  
இங்கு தங்களுக்கும் எங்களுக்கும் பிரச்சனை எங்கு உருவாகிறது  என்றால்,  நீங்கள் சிலரை தேவனின் ராஜ்யத்துக்கு தகுதியற்றவர்கள்  என்றுதீர்மானித்து அவர்களுக்காக ஜெபிக்கவோ அல்லது இரக்கபடவோ கூடாது என்று சொல்கிறீர்கள். அப்படி யாரையும் நம்மால் தீர்க்க முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். அதுவே முரண்பாடு.
 
நான் இவ்வாறு தீர்க்க விரும்பாததற்கு காரணம் என்னால் யாரையும் இப்படிபட்டவர்கள் உன்று உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை  "நான் பிறரை ஆகவதன் என்று தீர்த்தால் தேவன் என்னை ஆகதவன் என்று தீர்க்க அதிக நேரம் ஆகாது"  
 
மத்தேயு 7:2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
 
நான் என்னை பற்றி பெரிய பரிசுத்தவான் என்று எண்ணிக்கொண்டு அடுத்தவனை பார்த்து இவன் தேவனின் ராஜ்யத்துக்கு தகுதியற்றவன் என்று தீர்த்து அவனுக்காக ஜெபிக்கவோ அல்லது வேண்டுதல்  செய்யாமலோ இருக்கலாம். ஆனால வசனம் இவ்வாறு சொல்கிறது.    
 
மத்தேயு 21:31 இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
அதாவது  நான் இன்று ஒருவனை  பாவி என்று தீர்த்த்தால்  நாளை அவனே என்னைவிட பரிசுத்தவனாகி என்னை பாவி என்று தீர்த்து விடுவான். நான்கூட ஒரே இரவோடு தேவனால் தொடப்பட்டு மாரிப்போனவந்தான். பவுலும் கூட அப்படிதான். 
 
எனவே காலம் வரும் முன்னே எவரையும் குறித்து தீர்ப்பு சொல்ல விரும்பாமல் எல்லோர் மேலும் இரக்கத்துடன் இருக்க விரும்புகிறேன்
அவ்வளவே!
 
எங்கள் கருத்தில் எங்கும் தவறோ அல்லது இடரலை உண்டாக்கும் செய்தியோ இல்லை! மாறாக தங்கள் மனதில் தாங்களேஒரு தகுதியை  நிர்ணயித்துகொண்டு சிலர் தகுதியற்றவர்கள் என்றுதீர்த்து அவர்களுக்கு வேண்டுதல் செய்யகூடாது என்று சொல்கிறீர்கள். 
 
ஆண்டவரின் பிரசன்னம் ஒரே ஒரு முறை நம்மை முழுவதும் ஆட்கொண்டால் மட்டுமே தெரியும் நம்மிடம் எவ்வளவு கரைகளும் அழுக்குகளும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது  என்பது. அந்நேரம் "ஆண்டவரே நான் பாவி" என்று  கதறி அழுவதை தவிர வேறு ஒன்றும் நமக்கு செய்ய தோன்றாது.
 
நமது சரீரத்தை ஒடுக்கி பாவம் செய்யாமல் வாழ முயல்வதும் சாத்தானின் செயல்பாட்டுக்கு கீழ்படியாமல் எதிர்த்து நின்று ஜெயிப்பதும் மிக அவசியமே! அதே நேரத்தில் என்னை  பற்றி ஒரு மேலான எண்ணம் வராமல் பார்த்துகொள்வதும் மிக மிக அவசியம். எனவேதான் நான் எந்நாளும் பாவி என்றும் என்னை நியாயம் தீர்க்கிறவர் தேவன் ஒருவரே என்றும் எண்ணி என்போன்ற மனுஷர்களிடம் பட்சமாக இருக்க விரும்புகிறேன்.
 
தாங்கள் கருத்துக்கள் எதையும் நான் மறுக்கவில்லை நான் எங்கு சுற்றி வந்தாலும் "மனுஷன் பாவம் செய்யாமல் தேவனின் வார்த்தைகள் படி  வாழ வேண்டியது அவசியம்" என்றே போதிப்பேன். அதையே தாங்களும் போதிக்கிறீர்கள்.  ஆனால ஒரே ஒரு வேறுபாடு  நான் என்னை இன்னும் முழுமை அடையாத ஒரு பாவியாகவே  காண்பதால் என்போன்றவர்களை மன்னிக்கிறேன் அவ்வளவே!  
 
ஆனால் தேவனின் சித்தமே இறுதியானதும்  முடிவானதும் ஆகும்! அதுவே நிறைவேறும்!    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//இங்கு தங்களுக்கும் எங்களுக்கும் பிரச்சனை எங்கு உருவாகிறது  என்றால்,  நீங்கள் சிலரை தேவனின் ராஜ்யத்துக்கு தகுதியற்றவர்கள்  என்றுதீர்மானித்து அவர்களுக்காக ஜெபிக்கவோ அல்லது இரக்கபடவோ கூடாது என்று சொல்கிறீர்கள். அப்படி யாரையும் நம்மால் தீர்க்க முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். அதுவே முரண்பாடு.//

அன்பான சகோதரரே!

யாரை நான் தேவனின் ராஜ்யத்திற்கு தகுதியற்றவர்கள் எனத் தீர்த்தேன்? யாரிடம் இரக்கப்படக்கூடாது எனச் சொன்னேன்? நான் சொல்லாததை சொல்வதே உங்களுக்கு வழக்கமாகிவிட்டது. தேவனின் தீர்ப்பை எடுத்துச் சொன்னால் அது எனது தீர்ப்பு என்றாகி விடுமா? தேவனின் போதனைகளை எடுத்துச் சொன்னால் அது எனது போதனை என்றாகிவிடுமா?

பூகம்ப இடிபாட்டில் சிக்கியவரின் வேதனையைச் சொல்லி அதற்குக் காரணம் சாத்தானே என நீங்கள் சொன்னீர்கள். நான், “அப்படியல்ல, மனிதர்களின் பல துன்பங்களுக்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள்” எனச் சொன்னேன். சாத்தானும் மனிதனின் துன்பத்துக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்; ஆனால் எல்லா துன்பங்களுக்கும் சாத்தானை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது என்பதே எனது வாதம். நீங்களோ , மனிதன் ஓர் அப்பாவி என்பது போலவும், “எடுப்பார் கைப்பிள்ளை என்பது போலவும்” சொல்லி, மனிதன் மீது மிகவும் பரிதாபப்பட்டு, எப்பேற்பட்ட பாவியும் மன்னிக்கப்பட்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடவேண்டும் என்று சொல்லி அவர்களின் பாவங்களை மன்னிக்கிறீர்கள், அவர்களுக்காக ஜெபிக்கிறீர்கள்.

இது உங்களின் தனிப்பட்ட விருப்பம், உங்கள் செயலுக்கு வேத ஆதாரம் இல்லை என நான் கூறுகிறேன். உடனே நான் இரக்கமற்றவன் என்றும், மற்றவர்களை நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் எனத் தீர்க்கிறேன் என்றும் சொல்கிறீர்கள். என்னைக் குறித்து தனிப்பட்ட முறையில் சொல்வதும், அதற்கு எதிராக நான் விளக்கம் தருவதும் நேரத்தைத்தான் விரயமாக்கும் என எத்தனையோ தடவை சொல்லியும், மீண்டும் மீண்டும் அதைத்தான் செய்கிறீர்கள். சொல்லப்பட்ட வசனத்துக்கு, வசனத்தின் அடிப்படையிலான கருத்துக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

(இயேசு இங்கு சொல்வது சொல்லர்த்தமான மரத்தை, அக்கினியை மட்டுந்தானா?)

மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 3:5 ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 கொரி. 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவ்வசனங்களில் பலரையும் தேவனின் ராஜ்யத்துக்கு தகுதியற்றவர்கள் எனக் கூறுவது நானா? வசனம் சொல்வதை நான் அப்படியே சொல்கிறேன். நீங்களோ, வசனம் என்ன சொன்னாலும் சரி, நான் தேவனைவிட இரக்கசாலி, எனவே எப்பேற்பட்ட பாவியையும் நான் மன்னிக்கத்தான் செய்வேன், அவன் நித்தியஜீவனைப் பெறவேண்டும் எனப் போராடி ஜெபிக்கத்தான் செய்வேன் என்கிறீர்கள்.

உங்கள் ஜெபம் தேவசித்தத்திற்கு எதிரானது என்பதால் அது நிச்சயமாகக் கேட்கப்படமாட்டாது என நான் ஆணித்தரமாக சொல்கிறேன். ஏனெனில்,

வெளி. 21:24 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

எனும் தேவனின் இத்தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது என நான் சொல்கிறேன். முடிந்தால் இவ்வசனத்துக்குப் பதில் சொல்லுங்கள்.

முதலாவது உங்கள் தளத்தில் எழுதுபவர்களை நிபந்தனையின்றி மன்னித்து, எல்லோரையும் இங்கு அனுமதியுங்கள்; அதன்பின் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்பவர்களை நிபந்தனையின்றி மன்னியுங்கள், தேவன் மன்னிக்கும்படி ஜெபியுங்கள், அவர்கள் எல்லோரையும் தேவனுடைய ராஜ்யத்தினுள் அனுமதிக்கும்படி ஜெபியுங்கள்.

உங்களால் நேரடியாக செய்ய முடிகிற ஒரு செயலை நீங்கள் செய்யாமல், அதேவிதமான செயலை தேவன் செய்யும்படி ஜெபிப்பது வினோதமாக உள்ளது.

பின்குறிப்பு: வசனம் சொல்கிறதான மேற்கூறிய தீர்ப்பு மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அது எனக்கும் சேர்த்துதான். எனவே மற்றவர்களையே நான் தீர்ப்பதாகச் சொல்லாதிருங்கள். நான் பாவம் செய்தால் என்னை நானே கடிந்துகொள்ளத்தான் செய்வேனேயொழிய, என்மீதி நான் இரக்கம் பாராட்டமாட்டேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//நான் என்னை இன்னும் முழுமை அடையாத ஒரு பாவியாகவே  காண்பதால் என்போன்றவர்களை மன்னிக்கிறேன் அவ்வளவே!//

அதாவது, நான் என்னை பூரண நீதிமானாகக் காண்கிறேன், அதனால் யாரையும் நான் மன்னிப்பதில்லை என்கிறீர்கள், அப்படித்தானே?

நீங்கள் சொல்கிறபடியே வைத்துக்கொள்வோமே! பாவியாகிய நீங்கள் மற்றவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என நீங்கள் நினைப்பதுபோலவே, நீதிமானாகிய நான் என்னைப்போல் எல்லோரும் நீதிமானாக வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

உன்னைப் போல் பிறனை நேசி என்பது பாவியாகிய உங்களுக்குப் பொருந்துவதைப்போல, நீதிமானாகிய எனக்கும் பொருந்துமல்லவா?

பாவிகளாகிய நீங்களும் மற்றவர்களும் மனந்திரும்புவதற்கு வழியைப்பாராமல், தேவன் உங்கள் எல்லாரையும் மன்னிக்கவேண்டும் என்று மட்டுமே தாராளமாக ஜெபித்துக் கொண்டிருங்கள். ஆனால் விளைவு? மனந்திரும்புங்கள் என இயேசு சொன்னதற்குக் கீழ்ப்படியாத உங்களுக்கு வெளி. 21:24 கூறுகிறபடிதான் நடக்கும்.

இது எனது தீர்ப்பல்ல, வேதவசனத்தின் தீர்ப்பு, தேவனின் தீர்ப்பு, நியாயாதிபதியாக வரப்போகிற இயேசுவின் தீர்ப்பு.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சுந்தர்:

//1 தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

பவுலின் இந்த பிரதான புத்திமதி அடிப்படையில் எல்லோருக்காகவும் இரக்கத்துடன் ஜெபிக்கிறோம்.//

எல்லா மனுஷருக்காகவும் பவுல் ஜெபிக்கச் சொன்னார் என்பது சரிதான்; ஆனால் என்ன காரியத்திற்காக ஜெபிக்கச் சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டாமா? அதைப் பார்க்காமல் சரட்டுமேனிக்கு ஜெபிக்கலாமா?

உதாராணமாக, “தேவனே டாஸ்மாக் சென்று குடிக்கும் இவனை தயவாக மன்னியும். இவன் குடிப்பதற்கு இவன் காரணமல்ல; டாஸ்மாக்கை திறந்துவிட்ட அரசாங்கமும், டாஸ்மாக் எங்கிருக்கிறது என அறியும் அறிவை நீர் இவனுக்குக் கொடுத்ததும்தான் காரணம். மாத்திரமல்ல, இதற்கெல்லாம் பின்னணியாகச் செயல்படும் சாத்தான்தான் பிரதான காரணம். எனவே இவனை மன்னித்து, இவனை உம்முடைய ராஜ்யத்தில் தயவாய் சேர்த்துக்கொள்ளும். அற்ப மனிதனான நானே இவனுக்காக இத்தனை இரக்கப்படுகையில், இரக்கத்தில் ஐசுவரியவானாகிய நீர் இவன் மீது இரக்கங்கொள்ளக்கூடாதா? எனவே இவனுக்கு மட்டுமல்ல, இவனைப் போன்ற பாவிகள் எல்லாருக்கும் இரங்கும், எல்லாரையும் மன்னியும், எல்லாரையும் உம்முடைய ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளும்” என்றெல்லாம் ஜெபிக்கலாமா?

தொடர்ந்து வரும் வசனத்தைப் படியுங்கள்.

1 தீமோ. 2:2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

இவ்வசனத்தை முன்பே ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளேன். “தவறை வசன ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னால் என்னை நானே திருத்திக்கொள்கிறேன்; தவறான பதிவை நீக்குகிறேன்” என எழுத்தளவில் சொல்கிறீர்கள்; ஆனால் அதை செயல்படுத்தத் தவறுகிறீர்கள்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4 5 6 7  >  Last»  | Page of 7  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard