இரண்டாம் வருகை பற்றி பழைய ஏற்பாட்டில் ஏதேனும் வசன ஆதாரம் இருக்கிறதா..? தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் கூறவும்
சகோதரர் அவர்களே இரண்டாம் வருகையை பற்றி சபைகளிடையே பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. என்னை பொறுத்தவரை ஆணடவராகிய இயேசுவின் வருகை மற்றும் உலகின் முடிவு என்பது ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளாகவே நான் கருதுகிறேன்.
பழைய ஏற்பாட்டில் அனேக இடங்களில் "கர்த்தருடய நாள்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது எல்லாமே ஆண்டவரின் இரண்டாம்வருகையை பற்றிய நாளை குறித்த செய்தி என்பதே எனது கருத்து.
யோவேல் 2:31கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
ஏசாயா 13:9இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது.
ஒபதியா 1:15எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது
இதுபோல் இன்னும் அனேக வசங்கள் பழய ஏற்பாட்டில் உள்ளது.
புதிய ஏற்பாட்டில் அதற்க்கு ஒத்த வசனங்கள்:
I தெசலோனிக்கேயர் 5:2இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்
அப்போஸ்தலர் 2:20கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
II பேதுரு 3:10கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்
வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள அனேக காரியங்கள் ஆவியில் நிறைவேறும் அவை மாம்சத்தில் தெரிய வரும்போது இரண்டாம் வருகை சம்பவிக்கும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)