ஓரிரு நாட்களுக்கு முன்பு "பரலோகமும் பாதாளமும்" என்ற ஒரு புத்தகத்தை படித்தேன்
அந்த புத்தகத்தில், சில ஆவிக்குரிய சகோதரர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு குழுவாக ஜெபத்தில் ஈடுபட்டிருந்த போது ஆண்டவராகிய இயேசு அவர்களை தம்மோடு கூட அழைத்துசென்று பாதாளம் மற்றும் நரகத்தை காட்டி எல்லோரையும் எச்சரிக்கும்படி சொன்னாராம். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உள்ள இயேசுவால் அது நிச்சயம் முடியக்கூடிய காரியமே.
அந்த புத்தகத்தில் வேதனை மிகுந்த பாதாளத்தை குறித்து அவர்கள் எழுதியிருக்கும் பல காரியங்கள் பலபேர் தரிசனத்தில் பார்த்து அனுபவித்து/எழுதிய காரியங்களுக்கு ஒத்ததாக இருந்தது. அதாவது பூமியில் விபச்சாரம் செய்தவர்கள் மற்றும் பாவம் செய்தவர்கள் எல்லோருமே அவரவர் செய்த பாவங்களுக்குஏற்ப தண்டனை அனுபவித்து கொண்டே இருந்ததாகவும் அவர்களை பிசாசுகள் போன்ற உருவங்கள் தண்டனைக்குள் நடத்தியதாக வும் எழுதி யிருந்தார்கள்.
அவர்கள் அங்கு பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு இடத்தில் தசமபாக காணிக்கையை ஒழுங்காக கொடுக்காத பலர் பாதாளத்தில் கிடந்தது வேதனை பட்டதாகவும், அவர்களைபற்றி ஒரு சகோதரர் இயேசு விடம் "தசம பாகம் கொடுக்காதவர்கள் எல்லாம் பரலோகம் போகமுடியாதா ஆண்டவரே" என்று கேட்டபோது. அதற்க்கு இயேசு "தசமபாகம் சரியாக
கொடுக்காதகாரணத்தால் பூமியில் என்னுடய சுவிஷேச ஊழியம் அதிகமாக தடை படுகிறது" என்று சொன்னதோடு. இயேசு கீழ்கண்ட வசனத்தை கூறி தசமபாகம் கொடுப்பது அவசியம் என்றும் சொன்னாராம்.
அதாவது தசம பாகம் கொடுக்காதது தேவனை வஞ்சிப்பதற்கு ஒப்பாகிறதாம்.
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே. (லூக் 11:42)
அவர்களின் தரிசனத்தைசிலர் "இது ஒரு பொய்" என்று சொல்லலாம் ஆனால் தசமபாகம் கொடுக்க வேண்டாம் என்று வேதம் எங்கும் சொல்லாத நிலையில் எனெக்கென்னவோ அது உண்மை என்றே படுகிறது. இதுபோன்ற பொய்யை எழுதி எல்லோரை யும் நம்பவைக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. எனவே தசமபாகம் கொடுக்க கடமை பட்டவர்கள், வசனம் சொல்வது போல் அதை சரியாக கொடுத்து விடுவது நல்லது என்று கருதுகிறேன்.
இது குறித்த இறைவெளிபாடு உள்ளவர்கள் இங்கு தெரிவிக்கவும்.
//அதாவது பூமியில் விபச்சாரம் செய்தவர்கள் மற்றும் பாவம் செய்தவர்கள் எல்லோருமே அவரவர் செய்த பாவங்களுக்குஏற்ப தண்டனை அனுபவித்து கொண்டே இருந்ததாகவும் //
I thought all are sinners and virtually all committed adultry based on Jesus's definition for adultry. I don't know anyone other than Bro.Sundar has "direct" communication with God so i would say what ever Sundar says is FINAL. even we can add one more book called "Book of Sundar" after revelation!!
II கொரிந்தியர் 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
இங்கு வேதம் கட்டாயம் அல்ல என்று சொல்ல்படுவதை கவனிக்கவும் இந்நிலையில் கட்டாயம் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்லாத பட்சத்தில் நாம் ஒருவரை கட்டாயபடுத்தி தசமபாகங்களையும் காணிக்கைகளையும் வாங்க கூடாது ஏனென்றால் தேவன் உற்சாகத்துடன் கொடுப்பதை தான் எதிர் பார்க்கின்றார்
தேவனே கட்டாயம் அல்ல என்று சொல்லிவிட்டதால் அது ஒரு கட்டளை அல்ல என்று நினைக்கின்றேன் கட்டளை என்றால் கட்டாயமாகும்
அதற்காக தசமபாகம் கொடுக்க கூடாது காணிக்கைகள் கொடுக்க கூடாது என்று நான் சொல்லவில்லை சந்தோஷத்துடன் கொடுத்தால் சரி விசனமாய் கொடுக்க கூடாது என்று சொல்கின்றேன்
அதாவது ஊழியர்கள் சொல்கின்றார்கள் போதகர்கள் சொல்கின்றார்கள் வாரம் வாரம் நம்மை பார்த்து கேட்கின்றார்கள் என்பதினால் கொடுக்காமல் தேவனுக்கு கொடுக்கின்றோம் என்று மனுற்சாகத்துடன் கொடுக்க வேண்டும்
அதில் கணக்கே வேண்டாம் நாம் எவ்வளவு பணத்தை கொடுத்தோம் என்பது தேவனுக்கு முக்கியம் அல்ல நாம் எப்படி கொடுத்தோம் என்பதையே தேவன் பார்க்கின்றார்
அவர்கள் அங்கு பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு இடத்தில் தசமபாக காணிக்கையை ஒழுங்காக கொடுக்காத பலர் பாதாளத்தில் கிடந்தது வேதனை பட்டதாகவும், அவர்களைபற்றி ஒரு சகோதரர் இயேசு விடம் "தசம பாகம் கொடுக்காதவர்கள் எல்லாம் பரலோகம் போகமுடியாதா ஆண்டவரே" என்று கேட்டபோது. அதற்க்கு இயேசு "தசமபாகம் சரியாக
கொடுக்காதகாரணத்தால் பூமியில் என்னுடய சுவிஷேச ஊழியம் அதிகமாக தடை படுகிறது" என்று சொன்னதோடு. இயேசு கீழ்கண்ட வசனத்தை கூறி தசமபாகம் கொடுப்பது அவசியம் என்றும் சொன்னாராம்
தசமபாகம் கொடுக்காதவன் நரகத்திற்கோ பாதாளத்திர்க்கோ செல்வான் என்று ஒரு வசனம் கூட வேதத்தில் சொல்லப்படவில்லை என்று நினைக்கின்றேன் மேலே சொல்லப்பட்டது பொய்யாய் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்...........
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 8th of November 2011 09:26:20 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
தசமபாகம் கொடுகாதவர்களுக்கு நரகம் போக வாய்ப்புண்டா இல்லையோ ...ஆனால்
கட்டயாம் கொடு இல்லாவிட்டால் நீ சரியான கிறிஸ்தவன் இல்லை, உன்னை பிசாசு குடுக்ககூடாதபடி வஞ்சித்து வைத்து இருக்கிறான் என்று போதிபவர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை நரகம் போக வைப்பு இருக்குமோ என்று தோனுகிறது.
ஏனென்றால் எத்தனையோ சபைகளில் காணிக்கை தசமபாகம் கட்டாயம் குடுத்தே ஆகவேண்டும் என்று சொல்லி எத்தனையோ விசுவாசிகள் முதலில் சபையை விட்டும் பின்பு கிறிஸ்துவை விட்டும் ஒரேடியாக விசுவாசத்தை விட்டும் வழி விலகி போனதை நான் நேரடியாகவே பார்திருக்கிறேன்.
மாற்கு : 9 42. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
இதினிமித்தம் இடறல் வந்தாலும் அதுவும் இடரல்தானே.......
அந்நாளில் வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்றார்கள் ஆனால் இன்றோ கொடுத்தால் தான் பாக்கியம் / பாக்கியவான் என்கிறார்கள்....
தேவனுக்கு அன்பின் நிமித்தம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் கட்டயபடுதுகிரத்தை பார்க்கும்போது கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.......
-- Edited by Stephen on Thursday 1st of December 2011 08:54:22 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
அந்நாளில் வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்றார்கள் ஆனால் இன்றோ கொடுத்தால் தான் பாக்கியம் / பாக்கியவான் என்கிறார்கள்....
தேவனுக்கு அன்பின் நிமித்தம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் கட்டயபடுதுகிரத்தை பார்க்கும்போது கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.......
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரரே! சில சபைகளில் சில நேரங்களில் ஒரு முறைக்கு மூன்று முறைவரை எதாவது காரணம் சொல்லி காணிக்கை எடுக்கிறார்கள். சில சபைகளில் சில காரியங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்று வர்ப்புருத்துகிரார்கள்.
ஒரு சபையில் மாதம் ஒருமுறை மதிய உணவு அளிப்பது வழக்கம். அதை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விசுவாச குடும்பம் தாங்கி செய்யவேண்டும். கூலி வேலை பார்க்கும் மிகவும் ஏழை மக்கள் வரும் அந்த சபையில் சிலருக்கு அது மிகப்பெரிய பாரமாகவே அமைகிறது. அதுபோல் "கட்டிட நிதி" என்பது என்றுமே கட்டி முடிக்காத நிதியாகவே வசூலிக்கபடுகிறது. ஓன்று அதற்கு மேல் ஓன்று அடுத்த இடத்தில் ஓன்று என்று தொடர்கதையாகி அனேக விசுவாசிகளுக்கு சலிப்பை ஏற்ப்படுத்துகிறது.
அதனால் தாங்கள் பல விசுவாசிகள் சபைக்குபோவதை தவிர்த்து காலப்போக்கில் தடம்புரண்டுபோக வாய்ப்புண்டு. இதுபோன்று மந்தையை சிதறடிக்கும் மேய்ப்பர்கள் நிச்சயம் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்றே கருதுகிறேன்