இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எந்தெந்த நியமனங்கள் பழைய ஏற்பாட்டு காளத்தோடு முடிந்திபோயின


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
எந்தெந்த நியமனங்கள் பழைய ஏற்பாட்டு காளத்தோடு முடிந்திபோயின
Permalink  
 


இங்கு   நாம்   எந்தெந்த   நியமனங்கள்  பழைய  ஏற்பட்டு  காளத்தோடு   முடிந்திபோயின  என்பதை  பாப்போம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில்    வேசித்தன   பாவத்தை  குறித்து   பாப்போம்.......

கிழ்கண்ட  பழைய   ஏற்பாடு    வசனத்தை  முதலில்  படிப்போம்......... 

 

உபாகமம் 22:21அந்தப்    பெண்ணை   அவள்   தகப்பனுடைய    வீட்டுவாசலுக்கு   முன்பாகக்  கொண்டுவந்துஅவள்  இஸ்ரவேலில்  மதிகெட்ட   காரியத்தைச்  செய்து,  தன்  தகப்பன்  வீட்டிலே  வேசித்தனம் பண்ணினபடியினாலே,   அவளுடைய  பட்டணத்து   மனிதர்  அவளைக்  கல்லெறிந்து    கொல்லக்கடவர்கள்இப்படியே   தீமையை   உன்   நடுவிலிருந்து   விலக்கக்கடவாய்.

 

இந்த  பழைய   ஏற்பாடு   வசனம்    என்ன   சொல்லுகிறது   என்றால்,   நடத்தை  தவறியவள்  வேசித்தனம் பண்ணுகிறாள்   என்று   சொல்கிறது.   அதோடு   அவள்  கல்   எரிந்து   கொள்ளப்படகடவாள்    என்று   சொல்கிறது.

 

இந்த   புதியஏற்பாடு   வசனத்தை   படிப்போம்......

 

மத்தேயு  5:28நான்   உங்களுக்குச்   சொல்லுகிறேன்   ஒரு   ஸ்திரீயை   இச்சையோடு   பார்க்கிற   எவனும்    தன்   இருதயத்தில்    அவளோடே   விபசாரஞ்செய்தாயிற்று.

 

யோவான் 8:7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி

 

மேற்கண்ட    புதியஏற்பாடு   நியமத்தின்படி    நடத்தை   தவறுகிறவர்   மட்டுமே   வேசித்தனம்   செய்யவில்லை,   ஒரு   ஆண்   ஒரு   பெண்ணையோ,   ஒரு   பெண்   ஆணையோ   இச்சையோடு   பார்த்தாலே   பார்த்தாலே   பாவம்   என்று   சொல்கிறது.

 

மேலும்   பாவம்   செய்தவர்   கல்   எரிந்து   கொள்ளப்படவேண்டும்என்று   பழைய   ஏற்பாடு   நியமனம்    சொல்கிறது.   ஆனால்   புதிய  ஏற்பாடு   நியமத்தின்படி    இயேசு   கிருஸ்துவே மனிதன்   செய்த   பாவத்தை   ஏற்று   கொள்கிறார்.   மேலும்   பாவம்செய்தால்   ஆக்கினை   தீர்படைகிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீட்டை   குறித்து   எங்கு   பாப்போம்......

 

கிழ்கண்ட   பழைய   ஏற்பாடு   நியமத்தை   இங்கு   பாப்போம்.....

 

லேவியராகமம் 5:2அசுத்தமான   காட்டுமிருகத்தின்    உடலையாவதுஅசுத்தமான    நாட்டுமிருகத்தின்     உடலையாவதுஅசுத்தமான   ஊரும்பிராணிகளின்   உடலையாவதுஇவ்வித    அசுத்தமான   யாதொரு   வஸ்துவையாவது,   ஒருவன்   அறியாமல்   தொட்டால்,   அவன்   தீட்டும்   குற்றமும்   உள்ளவனாவான்.

 

இந்த   வசனத்தின்   படி   ஒருவன்   அசுத்தமான   காட்டுமிருகத்தின்உடலைபுசித்தால்மட்டும்   அல்ல   அதை   தொட்டாலே   பாவம்என்று   சொல்கிறது.

 

ஆனால்   புதிய   ஏற்பாடு   நியமனம்   இவ்வாறு   சொகிறது..

 

மாற்கு 7:15  மனுஷனுக்குப்   புறம்பே   இருந்து   அவனுக்குள்ளே  போகிறதொன்றும்   அவனைத்   தீட்டுப்படுத்தமாட்டாது;    அவன்   உள்ளத்திலிருந்து   புறப்படுகிறவைகளே   அவனைத்   தீட்டுப்படுத்தும்.

 

 இங்கு   மனுஷனுக்கு   புறம்பே   என்று   குரிபுட்டுள்ளது,   இந்த   உலகத்தில்   இருக்கும் 

  எல்லாவற்றையும்  குறிக்கும். மனுஷனுக்குப்   புறம்பே   இருந்து   அவனுக்குள்ளே   போகிறதொன்றும்   அவனைத்   தீடுபடுத்தாது.   அவன்   இருதயத்தின்  நிறைவால்வாயில்   இருந்து   புறப்படும்   தகாத   வார்த்தைகளே  

அவனை   தீட்டுபடுத்தும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மேலும்   எந்தெந்த   நியமங்கள்   பழைய   ஏற்பாடோடு   முடிந்து   போயின   என்பதை,   தெரிந்தவர்கள்   விளக்குமாறு   கேட்டு  கொள்கிறேன்.



-- Edited by Sugumar S T on Monday 21st of November 2011 11:26:02 AM



-- Edited by Sugumar S T on Wednesday 23rd of November 2011 01:15:34 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சுகுமார் wrote :
-----------------------------
மேலும் எந்தெந்த நியமங்கள் பழைய ஏற்பாடோடு முடிந்து போயின என்பதை, தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
----------------------------

எனக்கும் கூட இந்த சந்தேகம் இருக்கிறது.....

இன்றைக்கு அனேக பாரம்பரியங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டு இருக்கிறோம்.....

உங்கள் பிதாக்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளைகளை அவமாகுகிறேர்கள். என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறாரே....

எது பாரம்பரியம்....

எது முடிந்துபோன நியமனம்.....

எதை கைகொள்ள கூடாது.......

இன்றைக்கு மனிதர்கள் தங்கள் இஸ்டபடி ஒன்றை சேர்கிறார்கள் ஒன்றை ஒதுக்குகிறார்கள்..

இதிலே எது உண்மை எது பொய் என்று கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு வசனத்தையும் கூறுகிறார்கள்.

சபை ஆராதனைகளில் / அடக்க ஆராதனைகளை / ஊழியங்களில் இன்னும் எத்தனையோ காரியங்களில் எவளவோ வேறுபாடுகள் காணபடுகிறது...ஒருவர் சொல்லுவதை ஒருவர் ஏற்று கொள்ள முடியாமல் இது சரியாய் அது சரியா என்று தெரியாமல் குழம்பி கொண்டிரும் அநேகரை காண முடிகிறது...

தெரிந்த சகோதர்கள் விளக்கும்படி அன்போடு கேட்கிறேன்.........



-- Edited by Stephen on Friday 18th of November 2011 03:04:43 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: எந்தெந்த நியமனங்கள் பழைய ஏற்பாட்டு காளத்தோடு முடிந்திபோயின
Permalink  
 


Sugumar S T wrote:

 மேலும்   எந்தெந்த   நியமங்கள்   பழைய   ஏற்பாடோடு   முடிந்து   போயின   என்பதை,   தெரிந்தவர்கள்   விளக்குமாறு   கேட்டு  கொள்கிறேன்.

 


 

பழையஏற்பாட்டு நியமனங்களில் நிச்சயமாக முடிந்து போய்விட்டது என்று சொல்லகூடிய ஓன்று  "பலியிடுதல்" என்ற நியமணம். .
 
பழைய ஏற்பாட்டு லேவியராகமம் முழுவதும் ஆடு மாடு புற போன்றவற்றை தேவனுக்கு தகன பலி, பாவ நிவாரண பலி என்று பலியிடும் நியமணம் கொடுக்கபட்டிருந்தது.  தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் ஒரே பலியின் மூலம் மற்ற அத்தனை  பலிகளும் முடிவுக்கு வந்துவிட்டது.
 
எபி 7:27  ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.
      
புதிய ஏற்பாட்டின் முறைமைப்படி இனி பாவ நிவர்த்திக்காக நாம் பலியிடவேண்டிய அவசியம் 
இல்லை. இயேசுவை விசுவாசித்தாலே போதும் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.   


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

"விருத்தசேதனம்"  என்ற கட்டளை தேவனாலேயே மாற்றபட்டு முடிந்து விட்டது 
 
ஆண்டவராகிய இயேசுவின் சிலுவைபலி  மரணத்தை தீர்க்கமாக கொண்டு தேவனாகிய கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலம் மாம்சத்தின் நுனித்தோலை இருதயத்தின் நுனிதோலாக தேவனே மாற்றியிருக்கிறார். 
 
எரேமியா 4:4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
 
உபாகமம் 10:16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
எந்தெந்த நியமனங்கள் பழைய ஏற்பாட்டு காளத்தோடு முடிந்திபோயின
Permalink  
 


புதிய ஏற்பாட்டு சபைக் காலத்தில் ஓய்வு நாள் கட்டளையும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. ஓய்வு நாளான சனிக்கிழமையை கடைப்பிடிக்காமல் இயேசு உயிர்த்த நாளான வாரத்தின் முதல் நாளையே நாம் ஆராதனை சபை கூடுவதற்கு பளன்படுத்துகிறோம்.



-- Edited by t dinesh on Monday 23rd of June 2014 10:20:34 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
RE: எந்தெந்த நியமனங்கள் பழைய ஏற்பாட்டு காளத்தோடு முடிந்திபோயின
Permalink  
 


ஓய்வுநாள் சடங்கானது முடிவுக்கு வரும் என்று தேவன் தீர்க்கதரிசி ழுலமாக முன்னறிவித்தார்.

ஓசியா 2:11 அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவர்களுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.

இயேசு கூட ஓய்வு நாளில் குணமாக்குதல்களை செய்து யூதர்களின் ஓய்வுநாள் குறித்த சடங்காச்சாரங்களை முறித்தார்.

இயேசுவோ அப்போஸ்தலர்களோ 7ம் நாள் ஓய்ந்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் சபை கூடுவதற்காக ஏதாவதொரு நாளை நாம் நியமித்து கொள்ள வேண்டியிருந்தது. ஆகவேதான் ஆதி திருச்சபையானது இயேசு உயிர்த்தெழுந்த நாளான வாரத்தின் முதல் நாளில் சபை கூடத் தொடங்கியது.

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

அப்போஸ்தலர் 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.

I கொரிந்தியர் 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard