யோவான் 8:7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி
சுகுமார் wrote : ----------------------------- மேலும் எந்தெந்த நியமங்கள் பழைய ஏற்பாடோடு முடிந்து போயின என்பதை, தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டு கொள்கிறேன். ----------------------------
எனக்கும் கூட இந்த சந்தேகம் இருக்கிறது.....
இன்றைக்கு அனேக பாரம்பரியங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டு இருக்கிறோம்.....
உங்கள் பிதாக்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளைகளை அவமாகுகிறேர்கள். என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறாரே....
எது பாரம்பரியம்....
எது முடிந்துபோன நியமனம்.....
எதை கைகொள்ள கூடாது.......
இன்றைக்கு மனிதர்கள் தங்கள் இஸ்டபடி ஒன்றை சேர்கிறார்கள் ஒன்றை ஒதுக்குகிறார்கள்..
இதிலே எது உண்மை எது பொய் என்று கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு வசனத்தையும் கூறுகிறார்கள்.
சபை ஆராதனைகளில் / அடக்க ஆராதனைகளை / ஊழியங்களில் இன்னும் எத்தனையோ காரியங்களில் எவளவோ வேறுபாடுகள் காணபடுகிறது...ஒருவர் சொல்லுவதை ஒருவர் ஏற்று கொள்ள முடியாமல் இது சரியாய் அது சரியா என்று தெரியாமல் குழம்பி கொண்டிரும் அநேகரை காண முடிகிறது...
தெரிந்த சகோதர்கள் விளக்கும்படி அன்போடு கேட்கிறேன்.........
-- Edited by Stephen on Friday 18th of November 2011 03:04:43 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
பழையஏற்பாட்டு நியமனங்களில் நிச்சயமாக முடிந்து போய்விட்டது என்று சொல்லகூடிய ஓன்று "பலியிடுதல்" என்ற நியமணம். .
பழைய ஏற்பாட்டு லேவியராகமம் முழுவதும் ஆடு மாடு புற போன்றவற்றை தேவனுக்கு தகன பலி, பாவ நிவாரண பலி என்று பலியிடும் நியமணம் கொடுக்கபட்டிருந்தது. தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் ஒரே பலியின் மூலம் மற்ற அத்தனை பலிகளும் முடிவுக்கு வந்துவிட்டது.
"விருத்தசேதனம்" என்ற கட்டளை தேவனாலேயே மாற்றபட்டு முடிந்து விட்டது
ஆண்டவராகிய இயேசுவின் சிலுவைபலி மரணத்தை தீர்க்கமாக கொண்டு தேவனாகிய கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலம் மாம்சத்தின் நுனித்தோலை இருதயத்தின் நுனிதோலாக தேவனே மாற்றியிருக்கிறார்.
எரேமியா 4:4யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின்நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
உபாகமம் 10:16ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின்நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
புதிய ஏற்பாட்டு சபைக் காலத்தில் ஓய்வு நாள் கட்டளையும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. ஓய்வு நாளான சனிக்கிழமையை கடைப்பிடிக்காமல் இயேசு உயிர்த்த நாளான வாரத்தின் முதல் நாளையே நாம் ஆராதனை சபை கூடுவதற்கு பளன்படுத்துகிறோம்.
-- Edited by t dinesh on Monday 23rd of June 2014 10:20:34 PM
ஓய்வுநாள் சடங்கானது முடிவுக்கு வரும் என்று தேவன் தீர்க்கதரிசி ழுலமாக முன்னறிவித்தார்.
ஓசியா 2:11 அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவர்களுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.
இயேசு கூட ஓய்வு நாளில் குணமாக்குதல்களை செய்து யூதர்களின் ஓய்வுநாள் குறித்த சடங்காச்சாரங்களை முறித்தார்.
இயேசுவோ அப்போஸ்தலர்களோ 7ம் நாள் ஓய்ந்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் சபை கூடுவதற்காக ஏதாவதொரு நாளை நாம் நியமித்து கொள்ள வேண்டியிருந்தது. ஆகவேதான் ஆதி திருச்சபையானது இயேசு உயிர்த்தெழுந்த நாளான வாரத்தின் முதல் நாளில் சபை கூடத் தொடங்கியது.
யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
அப்போஸ்தலர் 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.
I கொரிந்தியர் 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.