இந்த திரியின் தலைப்பை படித்ததும் என்னுடய சிந்தனைகள் வேறு மாதிரி போய்விட்டது: வந்த சிந்தனையை எழுதிவிட்டேன்.
மலர்கள் பூத்து குலுங்கும் வசந்த காலத்தில் அனேக வண்ணத்து பூச்சிகள அங்கும் இங்கும் பரந்து திரிவதை நாம் பார்க்கமுடியும். இவைகளை பிடிப்பதற்கு இலை தழைகளின் நிறத்தைபோல் தாங்கள் நிறத்தையும் மாற்றிக்கொண்டு பூவோடு பூவாக இலை யோடு இலையாக அமர்ந்திருக்கும் பச்சோந்திகள் நம் கண்களுக்கு அவ்வளவு சுலபமாக தெரிவதில்லை.
அங்கும் இங்கும் ஆடிபறக்கும் வண்ணத்து பூச்சுகள் எதிர்பாராத விதமாக இந்த பச்சோந்திகள் பக்கத்தில் வந்துவிட்டால் அவவளவுதான் அதன் ஆயுசு முடிந்துபோனது. வண்ணத்து பூச்சால் பறக்காமலும் இருக்க முடியாது பச்சோந்தியால் அதை பிடித்து உண்ணாமலும் இருக்க முடியாது.
"பச்சோந்தியா? அல்லது வண்ணத்து பூச்சா?" இரண்டுக்கும் எப்பொழுதம் ஒரு போராட்டமே!
இந்த போராட்டம் என்பது எல்லா உயிரிகளுக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது! இங்கு யாரை குறை சொல்வது? உணவை தேடி அலையும் வண்ணத்து பூச்சை குறை சொல்வதா அலல்து அதை உண்டால்தான் வயிறு நிரம்பி பிழைக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் பச்சோந்தியை குறைகூறுவதா அல்லது இவைகளை இதுபோன்ற ஒரு நிலையில் உண்டாக்கிய ஆண்டவரை கேள்வி கேட்பதா?
அதுபோல் நமது மாம்ச சரீரமானது எப்பொழுதும் இன்பத்தை தேடி ஓடுவதாகவே இருக்கிறது. அதேநேரம் உலகில் இருக்கும் பச்சோந்திபோன்ற சாத்தானோ நேரத்துக்கு தகுந்தால்போல் நிறத்தை மாற்றி மனுஷர்களுக்கு இன்பத்தைகாட்டி தேவன் நியமித்த கொட்டை தண்டி தன் பக்கம் வருபவரகளை எல்லாம் விழுங்கி அழிவை நோக்கி நடத்துகிறான்.
எச்சரிக்கை இல்லாத ஜனங்களோ அறிவில்லாமல் சங்காரம் ஆகிறார்கள்!
-- Edited by SUNDAR on Tuesday 22nd of November 2011 04:17:16 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)