கடந்த சில நாட்களாக நம்முடய தளத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பல்வேறு சகோதரர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மிக முக்கியமாக சகோ. HMV அவர்கள் நம்முடய எழுத்துக்களை அதிகமாக எதிர்ப்பதோடு நான் மனமாற்றம் அடைய வேண்டும் என்று எனக்காக ஜெபிப்பபாதகவும் கூறியிருக்கிறார். நான் இங்கு எழுதும் கருத்துக்கள் எதுவுமே உண்மைக்கு புறம்பாகவோ அல்லது ஆண்டவரின் அனுமதியிலாமல் எழுதவில்லை என்றாலும், அவரடைய ஜெபத்தை கருத்தில் கொண்டு நானும் தேவனிடம் நான் எழுதும் கருத்துக்கள் குறித்த உண்மை நிலையை இன்னொரு முறை கன்பார்ம் செய்ய விரும்புகிறேன்.
தேவனின் காரியங்களில் ஈடுபடும் எல்லோருக்குமே சாத்தானின் எதிர்ப்புகள் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கத்தான் செய்யும். அனால் சில நேரங்களில் நாம் வழி தவறி விட்டால் தேவன் கூட நம்மை பிறர் மூலம் நம்மை எச்சரிக்க கூடும். அத்தோடு கர்த்தரின் அனுமதி இல்லாமல் யாரும் என்னை எவ்விதத்திலும் குற்றம் சாட்டிவிட முடியாது என்றே நான் கருதுகிறேன்.
நான் இங்கு எழுதியிருக்கும் அனேக கருத்துக்கள் பிரதிட்ச்சமாக நடந்த நான் பார்த்து அனுபவித்து அறிந்த பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதியது என்றாலும் இவைகளை இங்கு தொடர்ந்து எழுதுவது ஆண்டவரின் சித்தமா என்பதை நான் இன்னொரு முறை ஆண்டவரிடம் அமர்ந்து விசாரித்து அறிய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறேன்.
எனவே தள சகோதர சகோதரிகளே நான் ஆண்டவரிடம் இருந்து ஒரு தெளிவான அடையாளத்தை பெரும் வரைக்கும் இந்த தளத்தில் சர்ச்சை ஏற்ப்படுத்தும் அல்லது வெளிப்பாடுகள் சம்பந்தமாக கருத்துக்கள் எதையும் பதிவிடுவதை தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். அதுவரை எல்லோருக்கும் பயனுள்ள நல்ல கருத்துக்களை மட்டுமே தியானித்து இங்கு பதிவிட முடிவெடுத்துள்ளேன்.
ஒருமுறை ஆண்டவரின் அனுமதியை தெளிவாக பெற்றபிறகு வேறொரு பரிணாமத்துடன் இந்த தளத்தில் எழுத ஆரம்பிபேன். அப்பொழுது யார் எந்த விதமாக அவதூறை பரப்பினாலும் தடைகளை ஏற்ப்படுத்தினாலும் எதற்கும் கலங்காமல் கர்த்தர் கட்டளையிட்டதை செய்வேன். தேவையற்றவர்களின் பதிவை எல்லாம் உடனுக்குடன் நீக்கிவிட்டு தேவனுக்கு சித்தமான பதிவுகளை மட்டுமே தளத்தில் வைப்பேன்.
ஆனால் ஒருவேளை கர்த்தர் இதற்குமேல் வெளிப்பாடுகளையும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கான விளக்கமும் கொடுக்கவேண்டாம் அதில் எந்த பயனும்இல்லை என்று கட்டளையிடுவாராகில் தொடர்ந்து வெளிப்பாடுகளோ அல்லது தரிசனங்கள் பற்றியோ உண்மை சம்பவங்கள் பற்றியோ எழுதப்பட மாட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். அவரது சித்தத்துக்கு விரோதமாக நான் எதையும் செய்ய தயாராக இல்லை!
தளத்தை பார்வையிடும் சகோதர சகோதரிகள் எனக்காக ஜெபித்து கொள்ளவும்! மேலும் இந்த அறிவிப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் ஏதாவது இருக்குமாயின் இங்கு தெரிவிக்கவும் அது எனக்கு பயனுள்ளதாக அமையும்!
கர்த்தர் தம்முடய பார்வைக்கு நலமானதை செய்வாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பு சகோதரர்களே, நமது தளத்தில் HMV , சில்சாம் என்ற பெயரிலுள் பிற தளங்களில் அசோக் குமார் கணேசன் மற்றும் பல பெயர்களிலும் குறைகூருதலையே ஊழியமாக கொண்டு தகாத வார்த்தைகளை எழுதி குழப்பத்தை விளைவித்து வந்த சகோதரர் ஒருவரை (அவரது உண்மையான பெயர் வேறு) face book உதவியுடன் நமது கிறிஸ்த்தவ சகோதரர்களே முகத்திரையை கிழித்துள்ளனர். அது குறித்த முழு தொகுப்பு அவருடய தளமாகிய யௌவன ஜனம் தளத்திலேயே சில்சாம் என்றொரு விஷ(க்கிரு)மி என்ற தலைப்பில் பதிவிடப் பட்டுள்ளது.
பகிரங்கமாக எழுதப்பட அந்த கட்டுரையை குறித்து நான் சற்று மன வேதனை அடைந்தால் கூட, இந்த காரியம் தேவனால் நடந்த ஓன்று என்றே கருதுகிறேன்! இனி நம்மை பற்றிய அவருடய குறை கூருதலையும் கடின வார்த்தைகளையும் சாபங்களையும் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி தள்ளிவிட்டு, நாம் நமது பணியை தொடர கர்த்தர் நமக்கு உண்டாக்கிய வழியாகவே நாம் எடுத்துகொள்ளலாம்.
-- Edited by SUNDAR on Tuesday 13th of December 2011 10:45:10 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)