அன்பான தள சகோதர சகோதரிகளே இந்த தளத்தில் கடந்த சில நாங்களாக HMV என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு பதிவுகளை தந்துவரும் சகோதரரின் பதிவுகள் பற்றி அனைவரும் அறிவோம். தொடர்ந்து தளத்தில் செயல்பாட்டை ஏதாவது ஒரு விதத்தில் குழப்பும் நோக்கத்திலேயே செயல்படும் இவர், //சுந்தர் சிவபெருமானின் அவதாரம்// என்பது போன்ற நாம் எழுதாத சொல்லாத கருத்துக்களை தளத்தில் பதிவிட்டு நம்மேல் ஒரு தவறான அபிப்ராயத்தை எல்லோருக்கும் ஏற்ப்படுத்த முற்படுகிறார்.
இவரது குற்றசாட்டுகளுக்கு வரிக்கு வரி என்னால் பதில் எழுத முடியும் என்றாலும் ஏனோ எழுதிய பதிவுகளை கூட பலநேரங்கள் நான் பதிவிட விரும்புவது இல்லை. ஆகினும் இவரது சில பதிவுகளுக்கு நான் விளக்கம் தர கடமைபட்டுள்ளேன். இவர் யார் என்பது நமக்கு தெரிந்தாலும் துணிகரமாக உண்மையை மறைத்து வருகிறார்!
மேலும் தள சகோதரர்களோடு தனி மடலில் தொடர்பு கொண்டு நம்மை பற்றி தவறான கருத்துக்களை கூறி வருகிறதாகவும் நாம் அறிய முடிகிறது.
இந்நிலையில் இவரது பதிவுகளை/பயனர் பெயரை தடை செய்ய விரும்பவில்லை என்று நான் முன்னர் எழுதி யிருந்தாலும் அது எனக்கு தூரமாக இருப்பதாக! நம்முடைய மாம்சத்தால் தடுக்க முடிந்த தீமைகளை நாம்தான் தடுக்கவேண்டும். முடியாத காரியங்களையே கர்த்தரின் தீர்ப்புக்கு வைத்துவிடவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
ஆட்டுக்குட்டிக்கு ஓநாயை காவல் வைக்கமுடியாது! குடியை கெடுக்க நினைப்பவனை குடும்ப காவலனாக வைக்க முடியாது! அதேபோல் ஆரோக்கிய உபதேசம் என்று சொல்லிக்கொண்டு அடுத்த வரை குறை கூறுவதையே பிழைப்பாக கொண்டு தளம் நடத்திவரும் அதி மேதாவிகளை இங்கு நாம் அனுமதித்தால் இந்த தளத்தின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிவிடும் என்று கருதுகிறேன்.
நானும் இந்த தளத்தில் ஒரு நிர்வாகி என்ற முறையில் தற்காலிகமாக அவர் அவரது பயனர் பெயரை தடை செய்துள்ளேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பான தள சகோதர சகோதரிகளே இந்த தளத்தில் கடந்த சில நாங்களாக HMV என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு பதிவுகளை தந்துவரும் சகோதரரின் பதிவுகள் பற்றி அனைவரும் அறிவோம்.... நானும் இந்த தளத்தில் ஒரு நிர்வாகி என்ற முறையில் தற்காலிகமாக அவர் அவரது பயனர் பெயரை தடை செய்துள்ளேன்.
என்னை இத்தனை நாட்கள் பொறுத்துக்கொண்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே. நான் எழுதியதையெல்லாம் இங்கேயே விட்டுச்செல்லுகிறேன்.ஆனாலும் தேவையற்ற அழுக்கைப் போல இருக்கும் என்னுடைய எழுத்துக்களை நீங்களே நீக்கிவிட்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
திரு.சுந்தர் அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் வருத்தமும் அல்லது பொறாமையும் இப்படி எந்த தீய எண்ணமும் இல்லை. இங்கே என்னுடைய கருத்துக்கள் பொருந்தாமைக்கு மெய்யாகவே வருந்துகிறேன். ஆனாலும் கர்த்தர் ஒருவரே அனைத்தையும் அறிவார். அவருடைய பரிசுத்த சித்தத்துக்கு அனைத்தையும் ஒப்புகொடுக்கிறேன்.
இந்த கடைசி வார்த்தைகளைப் பகிர கொடுத்த நல்ல வாய்ப்புக்காக இந்த தளத்தின் நிர்வாகி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
சகோ.HMV-ன் பயனர் பெயர் தடைசெய்யப்பட்டதில் எனது பதிவுகளுக்கும் பங்கிருப்பதாக நான் உணர்கிறேன். ஏனெனில், எனது பதிவுகளுக்கு HMV பின்னூட்டமிடும்போதுதான் சகோ.சுந்தருக்கும் HMV-க்கும் இடையிலான பிணக்கு வேகமாக வளர்ந்து, உச்சக்கட்டத்தை எட்டியது. எனவே இதுபற்றி எனது கருத்தைக் கூறுவது அவசியமென நான் கருதுகிறேன்.
ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமை என்பது இயல்பானதே. அவ்வகையில் சுந்தரின் பல கருத்துக்களை HMV எதிர்த்ததில் தவறு எதுவுமில்லை. ஆனால் HMV-ன் அணுகுமுறையில்தான் தவறு இருப்பதாக நான் அறிகிறேன். இதற்கு உதாரணமாக அவரது 2 பதிவுகள்:
இம்மாதிரி எதிராளியை தனிப்பட்ட முறையில் தாக்கும் பதிவுகளை அவர் தவிர்த்திருக்கலாம்.
சுந்தரைப் பொறுத்தவரை, சகோ.எட்வினுக்கு HMV எழுதின தனிமடலை பகிரங்கமாக வெளியிட்டது தவறுதான். மேலும், போலி பெயரில் HMV வந்துள்ளதாக தான் கருதியதை திட்டவட்டமாக அறிவித்ததும் தவறுதான்.
HMV-ன் பயனர் பெயரை முடக்குவதென்பது நிர்வாகியின் நிர்வாக வசதிக்கு உட்பட்டது. எனவே அதுபற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை.
HMV அவர்கள் என்னைப் பாராட்டி எனக்காகப் பரிந்துபேசியதையும் ஒரு பொருட்டாக நான் கருதவில்லை; எட்வினுக்கு எழுதின தனிமடலில் என்னை “யோக்கியமில்லை” என எழுதியதையும் ஒரு பொருட்டாக நான் கருதவில்லை. மனிதர்கள் இப்படியும் அப்படியும் மாறி மாறி பேசுவார்கள் என்பது யாவரும் அறிந்ததே! HMV-யும் முன்னுக்குப் பின் முரணான ஒரு பதிவைத் தந்துள்ளார்.
சுந்தரைப் பொறுத்தவரை, சகோ.எட்வினுக்கு HMV எழுதின தனிமடலை பகிரங்கமாக வெளியிட்டது தவறுதான். மேலும், போலி பெயரில் HMV வந்துள்ளதாக தான் கருதியதை திட்டவட்டமாக அறிவித்ததும் தவறுதான்.
தாங்கள் கருத்துக்கும் சுட்டி காட்டலுக்கும் மிக்க நன்றி சகோதரரே. நான் எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டிய முறைமைப்படி சரியாக செய்பவன் அல்ல என்பது எனக்கு ஏற்கெனவே தெரியும். மேலும் சில காரியங்களில் உள்ள நன்மை தீமைகள் தீர்மானிக்கும் போது அது குறித்து ஜெபித்து ஆண்டவர் சொல்லும் காரியத்தின் படி முடிவு எடுப்பதால் வெளிப்பார்வைக்கு அது தவறாக தோன்றலாம், ஆகினும் தங்கள் கருத்துக்களை ஏற்று இனி அதுபோல் தவறுகள் நேராதபடி ஜாக்கிரதையாக இருக்க கற்றுக்கொள்கிறேன்.
என்னை மேலும் தேவனுக்கேற்றபடி சரியாக்கிகொள்ள தாங்கள் போன்றவர்களின் வழிகாட்டுதல் எனக்கு மிகுந்த அவசியம் என்றே கருதுகிறேன்.
நன்றி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)