இயேசு கிறிஸ்துவும் பிதாவும் நம்மிடத்தில் சில சமயம் வாசமாய் இருப்பார்கள்.
இதற்க்கு ஆதாரமாக ஒரு வசனம்....
யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்;நாங்கள்அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்
அப்படி இருவரும் வாசம் பண்ணும்பொழுது பிசாசு நம்மிடம் நெருங்க முடியாது.
அனால் பரிசுத்த ஆவியானவரின் மகிமை நம்மேல் இருக்கும் பொழுது பிசாசு நம்மிடம் நெருங்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது....
இதை பற்றி தெரிந்தவர்கள், தயுவு செய்து விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
-- Edited by Sugumar S T on Tuesday 6th of December 2011 12:47:20 PM
__________________
Sugumar Samuel T
யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
அசுத்த ஆவி கொண்ட சவுல் மீது தேவ ஆவி இறங்கும் போது விடுதலை பெறுகிறார்..
1சாமுவேல் 16 :23 அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.
I சாமுவேல்19 அதிகாரம்:24. தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
ஏசாயா 59 :19. அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
தேவனுடைய விரல் மாத்திரம் பிசாசை விரட்ட, அவன் கிரியைகளை ரத்து செய்ய போதுமானது..
யாத்திராகமம் 8 அதிகாரம்:19. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
தேவனுடைய திரித்துவம் பனி கட்டி,நீராவி, தண்ணீர் இவைகளுக்கு ஒப்பாய் இருக்கிறது சகோதரனே..
பொதுவான நிலைகளில், மேற்கூறிய மூன்றும் ஒரே இடத்தில் இருக்கலாகாது.. அவ்வாறு இருக்க கூடும் என்று வைத்து கொண்டால் அதை நீங்கள் திறிதுவதோடு ஒப்பிட முடியும்.. இம்மூன்றும் வேறு நிலைகளில் இருந்தாலும் மூன்றும் தண்ணீர் தான்..
ஆதியில் எவ்வாறு வார்த்தை இருந்ததோ,அதை போலவே தேவ ஆவியானவரும் ஜலத்தின் மீது அசைவாடி கொண்டு இருந்தார்... தேவ ஆவிஆனவரும் பரிபூரணசர்வேசுரன்..அவர் பிதாவிற்கும் குமரனுக்கும் இடையே உள்ள அன்பு(என் புரிதலின் படி) நம்முடிய இயேசு நாதரும் பரிசுத்த ஆவி அவர் மீது பூரனமாய் தங்கின பின்பே 40 நாள் சோதனையில் பிசாசை மேற்கொள்ள முடிந்தது....
ஆவினால் நடத்த படுகிரவர்களே தேவனுடை புத்திரர் என்று தெளிவை வேதத்தில் உள்ளதே..
பவுல் மற்றும் மற்ற அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவிக்கு உள்ளாய் ஊழியத்தை பெற்றிருக்க,அவர்களுக்கு முன்பாக பிசாசு முரிந்தோடியதே..
பரிசுத்த ஆவியானவர், பிதா சுதன் இவர்களுக்கு எல்லா விதத்திலேயும் சரிசமநிகர் ஆனவர் என்று அறியவேண்டும்..
அப்போஸ்தலர்களை நிறைத்த தேவ ஆவியானவர் அவர்களிலும் மேற்பட்டவர்.குமாரனுக்கு சமமானவர்..தேவ அக்கினி ஆனவர்..
பொதுவாக கர்தர்,தேவன்,எஹோவா என்கிற அணைத்து பதங்களும் திரித்துவ தேவனை குறிப்பதாக உள்ளது..
வெளி 20 அதிகாரம்:9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
பிசாசின் ஆளுகை தேவஅக்கினியால் முடிவிற்கு வருவதை நீங்கள் இங்கு காணலாம்.
நம் ஜெப தூபங்களை தேவனிடத்திற்கு கொண்டு செல்லும் நம்முடிய ஆவியானவர் அவரே.அவரே நம்மை வழிநடத்தி தேவசித்தம் போதித்து பரலோகம் சேர்ப்பவர்...
-- Edited by JOHN12 on Monday 5th of December 2011 07:09:53 PM
-- Edited by JOHN12 on Tuesday 6th of December 2011 11:04:28 PM
அனால் பரிசுத்த ஆவியானவரின் மகிமை நம்மேல் இருக்கும் பொழுது பிசாசு நம்மிடம் நெருங்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது....
இதை பற்றி தெரிந்தவர்கள், தயுவு செய்து விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
_____________________________________________
சகோதர்களே நீங்கள் கேட்ட கேள்வியில் சிறிய வித்யாசம் இருக்கின்றது
நாம் பாவத்திற்கு இடம் கொடுத்தால் பரிசுத்த ஆவியானவரின் மகிமை நம்மேல் இருக்கும்
பொழுது கூட பிசாசு நம்மை நெருங்க முடியும் அதினால் தான் பவுல் சாத்தானுக்கு இடம் கொடுக்காதீர்கள்
என்று தெளிவாய் சொல்லியுள்ளார் இன்னும் தெளிவாக சொன்னால் நம்முடைய அனுமதியை
பொறுத்து தான் இருக்கின்றது
யோசித்து பாருங்கள் லூசிபர் பரலோகத்தில் தானே இருந்தான் தேவன் பக்கத்தில் இருந்தவனுக்கு எப்படி பெருமை வந்தது அவன் அசுத்த ஆவியை தனக்குள் அனுமதி கொடுத்ததினாலே தானே
ஆம் சகோதரனே நமக்குள் எப்படி பட்ட அபிஷேகம் இருந்தாலும் சரி ஏன் மோசையை போல தேவனை முக முகமாய் கண்டவனாய் இருந்தாலும் சரி அவன் பாவம் செய்தால் அவனுக்குள் பாவத்தின் சொந்தக்காரன் வந்துவிடுவான் மனிதன் கொடுக்கும் அனுமதி தான் சாத்தானை நமக்குள் வரவளைக்கின்றதே இன்றி இங்கு தேவனுக்கும் அவருடைய வல்லமைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.......
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 5th of December 2011 09:21:15 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
Sugumar S T wrote:அனால் பரிசுத்த ஆவியானவரின்மகிமை நம்மேல் இருக்கும் பொழுது பிசாசு நம்மிடம் நெருங்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது....
நிச்சயமாக நெருங்க முடியும் என்பதே என்னுடய கருத்து. இன்னும் ஆழமாக சொன்னால் பரிசுத்த ஆவி இருப்பவரை சுற்றிதான் எப்பொழுதும் சாத்தானின் நோக்கமெல்லாம் இருந்து கொண்டு இருக்கும். மற்ற உலக மக்களை பற்றி அவனுக்கு கவலையே இல்லை!
உதாரணமாக் இயேசு கிறிஸ்த்து பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்ற பிறகுதான் சாத்தான் அவரை சோதிப்பதற்காக வந்தான்.
மத்தேயு 4:1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
எனவே ஆவியானவர் ஒருவரில் தங்கியிருக்கும்போது அவர்களை பிசாசு அதிகமாக சோதனைககுள்ளாக்குவது உறுதி. ஆனால் ஆவியால் அபிஷேகம் பண்ணபட்டவர்களை மேற்க்கொள்ளுவது என்பது லேசான காரியம் அல்ல.
கர்த்தராகிய இயேசு சாத்தானை ஜெயித்த பிறகுகூட சிலகாலம்தான் அவரைவிட்டு விலகிபோனான் என்று வேதம் சொல்கிறது
லூக்கா 4:13பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
எனவே ஆவியால் அபிஷேகம் பெற்றவர்கள்முன் சாத்தான் பலமுறை தோற்று போனாலும் அவ்வப்பொழுது வந்து ஏதாவது சோதனைகளை / இடறல்களை வைப்பது சகஜம். அதுதான் அவனது முக்கிய வேலையும்கூட, ஆனால் நாம் விசுவாசத்தில் உறுதியாக இருந்து தேவனின் சர்வாயுதங்களை தரித்துகொள்ளும் பட்ச்த்தில் அவனால் நம்மை மேற்கொள்ள முடியாது என்பது என்னுடய கருத்து.
சகோ.சுகுமாரின் கேள்வி என்னவேனில்.. பரிசுத்தஆவியின் மகிமை இருக்கும் போது!! அவர் அபிஷேகத்தையோ அல்லது பிசாசினால் உண்டாகும் சோதனை பற்றி எழுப்பாமல் பரிசுத்தஆவியின் மகிமை பற்றி கேள்வி எழுப்பி இருக்கின்றார்.. கவனிக்க...
சோதனையில் ஜெயித்த பின் மாத்திரமே நம் இயேசுநாதரும் பிசாசை துரத்தினார்.. வனாந்திர சோதனைக்கு முன் அவர் பிசாசுகளை துரத்த வில்லை.. ஜெயித்த பின் பிசாசுகளை துரத்த நம் கிறிஸ்துவிற்கு வல்லமை கிடைத்தது.. சகோ.சுகுமாரின் கேள்வி என்னவேனில்.. பரிசுத்தஆவியின் மகிமை இருக்கும் போது!!! என்னுடைய தேவனின் மஹா வல்லமை இருக்கும் போது!!.. எஹோவா மேக்காதிஸ் என்னும் நாமம் விளங்கும் போது!!!
தேவமகிமையை நீங்கள் இழக்கின்ற பட்சத்தில் அவர் உங்களை விட்டு நீங்க்வார்.. உதாரணம்:சவுல்,சிம்சோன் மற்றும் பலர்.. பிசாசு தேவ மகிமை இல்லாத நிலையில் தான் ஜெயிக்கிரான்..
பாவம் செயும் போது தேவ மகிமை நீங்கும்.. இது நிச்சயம்.. எனவே சகோ. சுகுமார் அவர்களின் கேள்விக்கு பதில்.. பிசாசால் தேவஆவியின் மகிமையின் முன் நிற்கவே இயலாது..
பாவ சிந்தை கொண்ட சாத்தானால் பரலோக தேவனின் மகிமைக்கு முன்னால் நிற்க்கமுடியாமலேயே அவன் தாழ தள்ளபட்டு போனான்.
எனவே தேவ ஆவியானவரின் முழுமையான மகிமைக்கு முன்னால் சாத்தானால் நிச்சயம் எதிர் நிற்க முடியாது என்பது உண்மை
ஆண்டவராகிய இயேசு முழுவதும் தேவ மகிமையால் நிரப்ப பட்டிருந்தார். தேவன் தம்முடைய ஆவியை அவருள் அளவில்லாமல் கொடுத்திருந்தார் ஆகினும் பல அசுத்த ஆவிகள் அவருக்கு முன்னால் நின்று பேசின. அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லின என்பதை அறிய முடியும். அவர் "போ" என்று விரட்டிய பின்னரே அவைகள் புறப்பட்டு போயின.
மாற்கு 9:25அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
இவ்வாறு இயேசுவுக்கு எதிரேயே நின்று அசுத்த ஆவிகள் பேசியிருக்கும் போது இயேசுவை விட ஒரு உயர்ந்த ஆவிக்குரிய நிலையை அநியாயத்தை தண்ணீர்போல குடிக்கும் ஒரு சாதாரண மனுஷன் எட்டுவது சாத்தியமே இல்லை எனவே பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறோம் என்று சொல்லும் இன்றைய சாதாரண கிறிஸ்த்தவர்கள் முன்னால் அசுத்த ஆவிகளால் எதிர் நின்று பேச முடியும் நிச்சயம் நெருங்க முடியும்.
சாத்தான், தேவனாகிய கர்த்தரின் சந்நிதி வரை சென்று தேவனிடமே யோபுவை பற்றி பிராது பண்ணியவன்
யோபு 1:6ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
தேவ ஜனங்களை பற்றி தேவனிடமே குற்றம் சாட்டுபவன்
வெளி 12:10இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
அவனை சாதாரணமாக எண்ணி தப்புகணக்கு போட்டு இடறிபோய்
ஏமாந்து போனவர்கள் ஏராளம். அவன் ஒரு மனுஷனுக்குள் வருவதும் தெரியாது, வெளியில் போவதும்தெரியாது. அந்த மனுஷனோ சாத்தான் என்னை நெருங்கவில்லை என்று எண்ணிக்கொண்டுஇருப்பான். ஆனால் அந்த மனுஷனை அவன் பயன்படுத்தி சாத்தான் தன் காரியத்தை செய்துவிட்டு கடந்து சென்றிக்க முடியும்.
உலகில் நடக்கும் அனைத்து கொடூரங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் சாத்தான் சாதாரணமானவன்ல்ல! அவன் சாதாரானமானவன் என்று உங்களை எண்ணவைத்து ஏமாற்றுபவனும் அவனே!
ஆகினும் உலகத்தில் இருக்கும் அவனைவிட நம்மில் இருக்கும் தேவன் நிச்சயம் பெரியவர் பெரியவரே!
I யோ 4:4உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)