இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராட்சை ரசம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
திராட்சை ரசம்
Permalink  
 


கிறிஸ்து ஏற்படுத்தின உடன்படிக்கையின் நினைவுகூருதல் புளித்ததிராட்சை ரசமா அல்லது புதுதிராட்சை ரசமா?

 

மத்தேயு 26:27-பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது

                           இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

நவமான ரசம் என்றால் என்ன?  ஆங்கில பதிப்பில்'புதிய'என்று அர்த்தம் வருகிறது..

பரியாசம் செய்யும் திராட்சை ரசம் புளித்தரசமா? அல்லது புதுரசமா ?

நீதிமொழிகள் 20:1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

 

வேதஆதரங்களுடன் தெரிந்தவர்கள் விளக்கவும்..





 



-- Edited by JOHN12 on Wednesday 7th of December 2011 12:57:07 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

பரியாசம் செய்யும் திராட்சை ரசம் புளித்தரசமா? அல்லது புதுரசமா ?


பழமையான திராட்சை ரசமே நல்லதும் சுவை  மிகுந்தததாக இருக்கும் என்று வேதாகமம்  சொல்கிறது.

லூக்கா 5:39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
 
மேலும் சிறந்த கொழுமையான விருந்துக்கும்  பழமையான திராட்சை ரசமே பரிமாறப்படும்  என்பதை இவ்வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.  
 
ஏசாயா 25:6 சேனைகளின் கர்த்தர் இந்த  மலையிலே  சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை  ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.
 
 திராட்சைரசம் என்பது பொதுவாகவே ஒரு போதை தரும் பொருள் போலவே வேதாகமம் காட்டுகிறது. எனவேதான் ஆசாரியர்கள் தேவ  சந்நிதிக்கும்  பிரவேசிக்கும்போது திராட்சை ரசத்தை குடிக்ககூடாது என்றும், திராட்சை ரசத்தில் மயங்குகிற ஒருவரும் ஞானவான் அல்ல என்றும் வேதம் சொல்கிறது. 
   
எசேக்கியேல் 44:21 ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
 
நீதி 20:1 திராட்சரசம்  பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
 
ஒரு வேளை புதியதாக வார்த்து வைக்கப்படும்  திராட்சரசம் போதை தராததாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நமக்கு அது குறித்து அனுபவம்  இல்லாத காரணத்தால் கருத்து சொல்ல முடியவில்லை. விவிலியம் குறிப்பிடும் திராட்சரசத்தை ருசித்து பார்த்த அனுபவம் உள்ள நண்பர்கள் யாராவது விளக்கினால்தான் புரியும்.          


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

Nesan  wrote  :
__________________________________________________________________________________
எசேக்கியேல் 44:21 ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
__________________________________________________________________________________
 
 
 
சகோதரரே எனக்கு சிறு சந்தேகம் அதாவது மாதத்தில் ஒருமுறை நாம் திருவிருந்து எடுப்போம் அல்லவா அப்பொழுது 
திராட்சை ரசம் சபையில் நமக்கு கொடுக்கின்றார்கள் ஆனால் மேலே குறிப்பிட்டு உள்ள வசனத்தை பார்த்தால் சபைக்குள் திராட்சை ரசம் குடிக்ககூடாது என்பது போல உள்ளது ஆனால் இப்பொழுது  நாம்  சபைக்குள்ளேயே  திராட்சை ரசம் குடிக்கின்றோம் எனக்கு ஒன்றும் புரியவில்லை என் குழப்பத்தை சகோதர்கள் தெளிவுபடுத்துங்கள்.............
 


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 9th of December 2011 06:52:07 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard