நான் வாழ்க்கையில் பல காரியங்களைச் சந்தித்திருந்தாலும் எனது வாழ்க்கையின் மனமாற்றத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
2008ம் ஆண்டு எனக்குப் பாரிய வயிற்று வலி. அதன்போது பாரம்பரியக்கிறிஸ்தவனாக வாழ்ந்த என்னிடம் தேவ அன்பும் இரட்சிப்பின் அனுபவமும் இருக்கவில்லை.
அந்த வயிற்று வலியின் போது வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
எனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக வைத்தியசாலையிலே ஒப்பிரேசன் தியேட்டரிலே காத்திருந்தேன் என்னும் 15 நிமிடங்களில் ஒப்பிரேசன் ஆரம்பித்து விடுவார்கள் என்றிருந்தது.
என்னோடு தேவன் பேசினார். அந்த நிமிடம் என்னையும் அறியாமல் தேவனுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
தேவனிடம் என்னை ஒப்புவித்தேன்.
எத்தனைமுறை ஆண்டவரிடம் விளையாட்டாக பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது மனம் திறந்து தேவனிடம் பேசினேன்.
எனது மனமாற்றம். ஒப்பிரேசனின் பின்னர் வைத்தியருடன் கதைத்த போது சொன்னார் இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் பிந்தியிருந்தால் உங்கள் உயிர் உங்களிடம் இருந்திருக்குமோ தெரியாது.
johndanu wrote:எனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக வைத்தியசாலையிலே ஒப்பிரேசன் தியேட்டரிலே காத்திருந்தேன் என்னும் 15 நிமிடங்களில் ஒப்பிரேசன் ஆரம்பித்து விடுவார்கள் என்றிருந்தது.
என்னோடு தேவன் பேசினார். அந்த நிமிடம் என்னையும் அறியாமல் தேவனுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
தேவனிடம் என்னை ஒப்புவித்தேன்.
இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் பிந்தியிருந்தால் உங்கள் உயிர் உங்களிடம் இருந்திருக்குமோ தெரியாது.
அநேகருக்கு பயனுள்ள மிக அருமையான சாட்சியை பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே. தேவன் ஒரு மனுஷனோடு இடைபடுவது என்பது மிகப்பெரிய காரியம்தான். அதுவும் மிக முக்கியமான அந்த நேரத்தில் தேவனால் தொடப்பட்டிருக்கிரீர்கள். தங்களை தேவன் முன்குரித்திருந்தால் மட்டுமே இப்படி காரியங்கள் நடக்கும்.
இறுதியில் தங்களுக்கு ஆப்பரேசன் நடந்ததா அல்லது நடக்காமலேயே தாங்கள் சுகம் பெற்றீர்களா என்று அறிய ஆவல்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒப்பிரேசன் நன்றாய் நடந்தது. அதன் பின்னரே அதாவது ஒப்பிரேசன் நடந்த பின்னரே நான் சுகம் பெற்றேன். என்றாலும் அந்த ஒப்பிரேசனை மனிதர்கள் செய்து முடிக்கவில்லை அது தேவனால் எனக்கு உண்டான ஈவு.
__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22:12