இன்று நாம் தளத்தில் மேலேயுள்ள பயனர் பெயரில் புதிதாக பதிவு செய்தவரின் பயனர் பெயர் தடை செய்யபட்டது. அவர் பெயர் முகவரி மற்றும் எந்த ஒரு விபரமும் தராமல் பதிவு செய்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கபட்டது.
அந்த பெயரில் பதிவு செய்த சகோதரர் யாராக இருந்தாலும் என்னை மன்னிக்கவும். தங்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும்
வருத்தமும் நிச்சயம் இல்லை, ஆகினும் தாங்கள் மீண்டும் மீண்டும் உள்ளே வந்து குழப்பத்தை ஏற்ப்படுத்த முயற்ச்சிக்க வேண்டாம் என்று ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் கேட்டு கொள்கிறோம்.
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக.
அன்புடன்
சுந்தர்
-- Edited by SUNDAR on Friday 30th of December 2011 08:55:18 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// அவர் பெயர் முகவரி மற்றும் எந்த ஒரு விபரமும் தராமல் பதிவு செய்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கபட்டது.//
நேசன் என்பவர் யார்? அவர் பெயர் முகவரி தங்களிடம் உள்ளதா? அவர் தங்களுடைய மற்றொரு 'ஆள்' தத்துவம் என்ற குற்றச்சாட்டிற்கு தங்கள் பதில் என்ன
அன்பர் ஜான் அவர்களே என்னுடய பயனர் பகுதியில் தேவையான விபரத்தை தந்துதானே நான் உறுப்பினராக உள்ளேன். இந்நிலையில் பெயரே இல்லாமல் உறுப்பினராக அவரோடு என்னை இணையாகக வேண்டாம்.
முன்பு ஒருவர் "எட்வின் சுதாகரும், ஸ்டீபனும் ஒருவர்" என்பதுபோல் ஒரு சந்தேகத்தை எழுப்பினார் அடுத்து குழப்பவேண்டும் என்ற நோக்கிலேயே வந்த HMV என்னும் ஒருவர் சுந்தரும், இறைநேசனும் ஒருவர் என்ற சந்தேகத்தை உருவாக்க, அவரை அப்படியே நம்பும் நீங்கள் ஒருவர்மட்டுமே இந்த கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். உங்களை விட அதிக பதிவுகளை தந்துள்ள வேறு யாரும்கூட இது போன்று ஒரு கேள்வியை எழுப்பவில்லை. உங்களின் நோக்கம் உண்மை என்ன வென்பதை அறியவேண்டும் என்பது அல்ல ஏதாவது புகார் அளிக்கவேண்டும் என்பதுதான் என்பது எனக்கு தெரியும்.
நீங்கள் இந்த தளத்தில் பெரிய பங்களிப்பு எதையும் தரவில்லை. உங்களிடம் நேரடியாக விளக்கம் கேட்கபட்ட "சாத்தான் நியாயம் தீர்க்கபட்டது எப்பொழுது" என்ற கேள்விக்கு கூட எந்த பதிலையும் தரவில்லை. அவ்வாறிருக்க நானும் சுந்தரும் ஒன்றா என்று தன்னிலை விளக்கத்தை உங்களுக்கு தெரிவிப்பதால் யாருக்கு என்ன லாபம்?
"நம்பிக்கையே வாழ்க்கை" "விசுவாசித்தவளே பாக்கியவதி" உங்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கிறதோ அப்படியே வைத்துகொள்ளுங்கள். மற்றபடி புனைப்பெயரில் எழுதும் என்னை பற்றிய முழு விபரத்தை என்னுடய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம் மட்டுமே தரமுடியும்.
இறைவனை பற்றிய உண்மைகளை எவரும் அறிந்ததில்லை இந்நிலையில் சொல்லபட்டுள்ள ஒரு கருத்தை தனியாக பிரித்து எடுத்து அதை பொறுமையோடு விவாதித்தால் மட்டுமே சரியான முடிவுக்கு வரமுடியும் என்ற நோக்கிலேயே இந்த தளத்தை நடத்தி வருகிறேன்.குறைகளையும் குற்றசாட்டுகளையும் மாத்திரம் அள்ளி தெளித்து விட்டு போவதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
//"சாத்தான் நியாயம் தீர்க்கபட்டது எப்பொழுது" என்ற கேள்விக்கு கூட எந்த பதிலையும் தரவில்லை.//
இது போன்ற கேள்விகளுக்கு வேதத்தில் விடை இல்லை ஏனென்றால் தெரிந்து கொள்ளுவதால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
II தீமோத்தேயு 4:3-4 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
//"சாத்தான் நியாயம் தீர்க்கபட்டது எப்பொழுது" என்ற கேள்விக்கு கூட எந்த பதிலையும் தரவில்லை.//
இது போன்ற கேள்விகளுக்கு வேதத்தில் விடை இல்லை ஏனென்றால் தெரிந்து கொள்ளுவதால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
தெரியவில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட வேண்டியது தானே. வேதத்தில் பதில் இல்லை என்று என்ன பேச்சு. "சாத்தான் உலகத்தோற்றத்திற்கு முன்பே நியாயம் தீர்க்கப்பட்டு விட்டான்" என்று தாங்கள் எழுதிய வார்த்தையின் அடிப்படையிலேயே அந்த கேள்வி எழுப்பபட்டிருந்தது. இப்போது விடையில்லை அது தேவை இல்லை என்று சொல்கிறீர்கள். சத்துரு என்ன நிலையில் இருக்கிறான் என்பதை அறிவது அவசியம் இல்லையா? நல்லது ஆனால் ஆனால் எனக்கு அப்படியல்ல. எங்கள் வீட்டில் இரவில் அதிகம் கரப்பான் பூச்சி இருக்கிறது இரவு எழுந்துபோனால் அவைகள் எல்லாம் மீட்டிங் போட்டுகொண்டு இருக்கும் அதை கொல்வதற்கு போகும்போது, இதை எல்லாம் இறைவன் ஏன் படைத்தார் என்று கேள்வி எழுகிறது. எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காரணம் இருக்கும் எனவேதான் எனக்கு எல்லா கேள்விக்கும் பதில் வேண்டும் வேண்டும் என்று தேடுகிறேன்.
சகோ. ஜான் எழுதியது
///II தீமோத்தேயு 4:3-4 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்///
எதையா ஆரோக்கிய உபதேசம்? எது சத்தியம்? யாரு சத்தியத்தை விட்டு விலகி போகிறார்கள்? அந்த வார்த்தையை எழுதிய பவுலை போல் யார் வாழ்கிறார்கள்? எல்லாமே மாறிபோய்விட்டது.
இந்த காலத்தில் எந்த மனுஷனையும் நம்பமுடியாது. மனுஷனை நம்பாதே என்று விவிலியமும் சொல்கிறது
நமது உள்ளத்தில் உருவாகும் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்துவிட்டால் நாம் யார் சொல்வதையும் நம்ப வேண்டிய அவசியம் இருக்காது. அனால் பல கேள்விக்கு பதில் தெரிவதில்லை பலர் சொல்லும் கருத்தில் ஒரு முழுமை இல்லை. எனவே எல்லோர் சொல்வதையும் கேடடு எல்லா இடத்திலும் சென்று பார்க்கவேண்டிய அவசியம் வருகிறது. ஒருவர் சொல்வதையே நம்பிவிட்டு கடைசியில் அது பிழையான உபதேசம் என்று தீர்வாகிவிட்டால் என்ன செய்ய? எனவே எல்லாருடய வார்த்தையையும் ஆராய்ந்து பார்த்து உண்மையை எடுத்துகொள்வதில் எந்த தவறும் இல்லை.
-- Edited by Nesan on Thursday 19th of January 2012 09:34:19 PM
//சத்துரு என்ன நிலையில் இருக்கிறான் என்பதை அறிவது அவசியம் இல்லையா?//
என்ன நிலையிலிருக்கிறான் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. எப்போது நியாயம்தீர்கப்பட்டான் என்று எழுதியிருக்க வில்லை. இது போன்ற கேள்விகள் தான் திரு. சுந்தர் அவர்களின் கற்பனைக்கு ஆதாரம். அவரை நீங்கள் துண்டி விடுகிறீர்கள்!
// நல்லது ஆனால் ஆனால் எனக்கு அப்படியல்ல. எங்கள் வீட்டில் இரவில் அதிகம் கரப்பான் பூச்சி இருக்கிறது இரவு எழுந்துபோனால் அவைகள் எல்லாம் மீட்டிங் போட்டுகொண்டு இருக்கும் அதை கொல்வதற்கு போகும்போது, இதை எல்லாம் இறைவன் ஏன் படைத்தார் என்று கேள்வி எழுகிறது. //
ஒரே வரி பதில் பாவம்!! பாவம் வந்தபோது அதோடு கூட எல்லாம் வந்தது. ஒரே நம்பிக்கை இயேசு கிறிஸ்து!
Nesan Wrote://சத்துரு என்ன நிலையில் இருக்கிறான் என்பதை அறிவது அவசியம் இல்லையா?//
என்ன நிலையிலிருக்கிறான் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. எப்போது நியாயம்தீர்கப்பட்டான் என்று எழுதியிருக்க வில்லை. இது போன்ற கேள்விகள் தான் திரு. சுந்தர் அவர்களின் கற்பனைக்கு ஆதாரம். அவரை நீங்கள் துண்டி விடுகிறீர்கள்!
சகோதரரே "சாத்தான் உலக தோற்றத்துக்கு முன்னரே நியாயம் தீர்க்கப்ட்டுவிட்டான்" என்று நீங்களே ஓரிடத்தில் எழுதியிருந்தீர்கள் அதன் அடிப்படையில் தான் இந்த கேள்வியையே கேட்டேன் இப்பொழுது மாற்றுகிறீர்கள. அத்தோடு இப்படிபட்ட கேள்வியும் கேட்ககூடாது என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு பல உண்மைகள் தெளிவாக தெரிந்திருக்கலாம் அனால் எனக்கு தெரியாததை நான் யாரிடமாவது கேள்வி கேட்டுதானே அறிய முடியும்?
John wrote:////இது போன்ற கேள்விகள் தான் திரு. சுந்தர் அவர்களின் கற்பனைக்கு ஆதாரம். அவரை நீங்கள் துண்டி விடுகிறீர்கள்!////
கேள்விகளை கேட்டால்தான் உண்மையை அறிய முடியும் சந்தேகங்கனால் தீர்க்கமுடியும் சகோதரரே. நீங்கள் மட்டும் ஒரு சகோதரர் எழுதும் கருத்துக்கு பலகேள்விகளை கேட்பீர்கள் நான் கேட்கக்கூடாதா?
அவரை மட்டுமல்ல உங்களையும் கேள்விகள் கேட்பேன். இயேசுவை சுற்றி வளைத்து எத்தனை கேள்விகள் கேட்டார்கள் அதற்க்கு எல்லாம் அவர் பொறுமையாக பதில்சொன்னாரே. நீங்கள் சொல்வதை
அப்படியே ஏற்றுக் கொள்ள நீங்கள் என்ன தேவனா/ தீர்க்கதரிசியா? அல்லது நீங்கள் எழுதுவது எல்லாம் சரி என்று சொல்வதற்கு இறைவன் தந்த உத்திரவாதம் எதாவது இருக்கிறதா? யார் சொல்லும் கருத்தையும் நான் கேள்வி கேட்பேன். எனக்குள்ள சந்தேகங்கள் தீரும் வரை கேள்வி கேட்பேன். ஆயிரம் விதமான இறை கருத்துக்கள் உலகில் இருக்கும்போது ஒருவர் சொல்வதை மட்டும எந்த கேள்வியும் கேட்காமல் பிடித்துக கொண்டுபோய் இறுதியில் அது தவறான இடத்துக்க கொண்டு போய் விட்டால நான் என்ன செய்வது/?
உண்மை எது வென்ற சரியான ஆராயாமல் என்னால் எப்பட ஒரு கருத்தை ஏற்க்க முடியும்? எனவே அனேக கேள்விகளை கேட்டு அதற்க்கு சரியான பதில் கிடைத்தால் மட்டுமே நான் ஏற்பேன். யார் சொல்வதையும் அப்படியே ஆராயாமல் பின்பற்ற இறைவன் எனக்கு அறிவை கொடுக்கவில்லை. ஆராய்ந்து உண்மையை அறியவே அறிவை கொடுத்துள்ளார்.
.
எனவே கேட்கப்படும் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள் இல்லேன்னா விட்டுவிடுங்கள் கேள்வி கேட்ககூடாது என்று தயவுசெய்து சொல்ல வேண்டாம்.