தேவன் இந்த உலகத்தில் பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்ற மூன்று ஆள்த்துவங்களில் செயல்படுகிறார் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இம்மூன்று ஆள்த்துவங்களும் தங்களுக்கென்று தனித்துவம் உள்ள தனி தனி செய்து கொண்டிருக்கும் ஒரே தேவனின் வெவ்வேறு பரிணாமங்களே என்பதே நான் அறிந்து உணர்ந்த செய்தி.
நான் மீண்டும் சொல்வது "தேவன் ஒருவரே" என்று வேதம் திட்டமாக சொல்வது போல் எடுத்துகொண்டால், தேவனின் இன்னொரு ஆள்த்துவமான இயேசுவும் தேவனும் ஒருவரே என்று எடுத்து கொள்ளுங்கள். அல்லது தேவனும் இயேசுவும் தனிதனி என்று எடுத்து கொண்டால் இயேசுவை தேவனுக்கு சமம் என்று சொல்லாதீர்கள் என்பதே வேதத்தின் அடிப்படையிலான என்னுடய கருத்து.
இந்த கருத்தை புரியவைக்க ஒருசிறு உதாரணம் இங்கு சொல்கிறேன்:
இந்த உலகம் முழுவதும் ஒரே ஒரு கடல்தான் இருக்கிறது. நாம் மெரீனா கடற்கரையில் நின்று கடல் நீரை பார்த்து, இதுதான் இந்த உலகத்தில் உள்ள ஒரே கடல் என்று சொல்வதில் எந்ததவறும் இல்லை காரணம் இந்த கடல் நீரின் தொடர்ச்சிதான் உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது . ஆனால் ஒரேகடலை தனித்தனியாக பெயர்வைத்து எல்கை போட்டு பிரித்து அட்லாண்டிக் கடல், பசிபிக் கடலுக்கு சமம் என்று சொல்வது ஒரு தவறான கருத்து. ஏனெனில் கடலின் நீர் ஒன்றாக இருந்தாலும் அதன் பரப்பளவு அதன் பக்கத்தில் வாழும் மக்கள் அங்குள்ள உயிரினங்கள எல்லாமே மாறுபடும்.
அதேபோல்தான் தேவத்துவமும்! "ஒரே கடவுள்" என்று எடுத்து கொண்டால், இயேசு, ஆவியானவர், தேவன் எல்லோரும் ஒருவரே. இல்லை நீங்கள இயேசுவை தனித்தாய பிரித்துதான் பார்ப்போம் என்று சொன்னால் அவர் தேவனுக்கு சமம் என்று சொல்வது "பிதா என்னிலும் பெரியவர்" என்ற இயேசுவின் வார்த்தையே பொய்யாகிவிடும்.
பல கிறிஸ்த்தவ சகோதரர்கள் தேவனை பற்றிய உண்மையை சரிவர அறியவில்லை அறிந்துகோண்டவர்களை சொல்ல விடுவதும் இல்லை. நானும் யாராவது சொல்லும் கருத்து சரியாக இருந்தால் ஏற்ப்பதர்க்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் வேத வசனத்தை குறித்த போதிய விசுவாசமோ அல்லது தேவ குமாரனாகிய இயேசுவின் வார்த்தைகளின் மேல் நம்பிக்கையோ இல்லாமல், அவர்கள் நம்பிக்கையை நம்மீது திணிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். தங்கள் கருத்துக்கும்
சரியான வசன ஆதாரம் சொல்லவில்லை என்பதோடு நேரடியாக் இருக்கும் வசனத்தையும் நம்புவது இல்லை!
திரித்துவம் என்ற கருத்தை தவறு என்று நான் இங்கு சொல்ல வரவில்லை! மாறாக, தேவன் தேவனுக்கு மட்டுமே சமம்! அவருக்கு சமானமில்லை! இவ்வாறிருக்கையில் அவரை யாருக்கும் சமமாக்கி மட்டு படுத்தாதீர்கள் என்பதும் அவருக்கு சமமான இன்னொரு தேவனை உருவாக்கவேண்டாம் என்பதுமே என்னுடய வேண்டுகோள்.
இப்படி பிடிவாதமான ஒரு நிலையில் நான் காரணம் என்னவெனில், திரித்துவ கொள்கையில் சாத்தானின் கீழ்கண்ட மிகவும் தந்திரமாக செயல்படுகளை என்னால் அறிய முடிகிறது!
1. ஆராய்ந்து அறிய முடியாத தேவனை அவரின் செயல்பாடுகள் அடிப்படையில் அவர் மொத்தம் மூன்று நிலைகளில் மட்டுமே இருக்கிறார் என்று தீர்மானித்த சாத்தான், தானும் மிருகம்/ கள்ள தீர்க்கதரிசி/ பிசாசு என்னும் மூன்று நிலைகளில் செயல்பட்டு ஜனங்களை வஞ்சித்து வருகிறான். அனால் உண்மையில், பிசாசு இன்னும் எத்தனை விதமான நிலையில் அல்லது தன்மைகளில் செயல்பட்டாலும் தேவன் அதற்க்கு அதிகமான நிலையில் செயல்பட முடியும் என்பது அவனுக்கு தெரியும். ஆகினும் விசுவாசிகளை அவர் வெறும் மூன்று நிலைக்குள்தான் இருக்கிறார் என்று நம்பவைத்து தேவனை ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்து அவர் செயல்பாட்டை மட்டுபடுத்த முயல்கிறான். அவரவர் விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே தேவன் கிரியை செய்ய முடியும் என்பதை நாம் இயேசு தன் சொந்த ஊரில் அதிக அற்ப்புதம் செய்யமுடியாமல் போன சம்பவத்தின் மூலம் அறியமுடியும். இங்கு விசுவாசம் மட்டுபடுவதன் மூலம் அவன் தேவனின் செய்கையை மட்டுபடுத்துகிறான்
2. பத்து கற்பனைகளில் முதல் கற்ப்பனையாகிய "உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்" என்ற கற்பனையை மீற வழி செய்கிறான். ஓன்று, புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவும் பழைய ஏற்பாட்டில் வரும் கர்த்தரும் ஒருவர்தான் என்று எடுத்து கொண்டாலும் "நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்" என்று கற்பனையின்படி எண்ணுவதில் எந்த தவறும் இல்லை. சிலர் சொல்வதுபோல் இயேசுவும் கர்த்தரும் சமம் என்று எண்ணினாலும் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் என்ற கற்பனையை அப்படியே ஏற்ப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இங்கு அநேகர் அப்படி எண்ணுவதே இல்லை! காரணம் இயேசுவை தேவனுக்கு சமமாக்குவதன் மூலம் சாத்தான் சுலபமாக தேவனின் முதலாம் கற்பனையை மீறவைத்து விடுகிறான். அதன் அடிப்படையில் சிலர் தேவனாகிய கர்த்தரை ஒரு தனித்துவம் வாய்ந்த தேவனாககூட எண்ணுவதே இல்லை! அதனால் இயேசுவுக்குகூட தெரியாத அவரின் வருகை போன்ற சில காரியங்களை தான் மாத்திரமே அறிந்திருக்கும் மேன்மையான தேவனைப் பற்றிய காரியங்கள் தெரியாமல் மறைக்க பட்டுவிடும்! தன்னை தக்கவைத்துக்கொள்ள அது ஒன்றே சாத்தானுக்கு போதும்! எனவே யாரும் தேவனை அறிந்துவிடகூடாது என்ற விஷயத்தில் சாத்தான் ஜாக்கிரதையாக இருக்கிறான்.
3. அடுத்து இங்கு சாத்தானின் தந்திரம் என்னவெனில் இயேசுவை தேவனுக்கு சமமாக்கி தேவனுக்கு பயப்படும் பயத்தை இல்லாமல் ஆக்கிவிடுவதே! இயேசு பாவங்களுக்காக மரித்துவிட்டார் இனி எந்த பாவம் செய்தாலும் பயமில்லை என்பது போல் ஒரு தத்துவத்தை உண்டாக்கி ஜனங்களாய் கெடுத்து வருகிறான். ஆதியில் ஆதாம் ஏவாளிடம் கர்த்தர் சொன்ன கட்டளையில் இருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை வேதம், தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடக்க திரும்ப திரும்ப போதிக்கிறது. அனால் இன்றைய அனேக கிறிஸ்த்தவர்கள் தேவனின் கற்பனைகள் படியும் நடப்பதில்லை இயேசுவின் வார்த்தைகள் படியும் நடப்பதில்லை அப்போஸ்த்தலர்கள் வாழ்ந்த வாழ்கையும் வாழ்வதில்லை ஆனால் அவர்களிடம் வேதத்தில் உள்ள ஏதாவது ஒரு தேவனின் வார்த்தையை சொல்லி இதை நீங்கள்
கைகொண்டு நடக்கிறீர்களா? என்று கேட்டால் "அது இதுக்கு இல்லை பிரதர், இது அதுக்கு இல்ல பிரதர்" என்று சொல்லி எவ்விதத்திலாவது மழுப்பத்தான் பார்க்கிறார்களயன்றி யாரும் துணிந்து தாவீது சொல்வது போல் " நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும் போது, வெட்கப்பட்டுப் போவதில்லை.சங் 119:6 என்று சொல்ல முடிவதில்லை. அட்லீஸ்ட் தேவன் வெறுக்கும் ஒரு சாதாரண காரியமாகிய பொய் சொல்வதை விடுவதற்குகூட அவர்கள் பிரயாசம் எடுப்பது இல்லை. அப்படி ஒரு மழுங்கிய கிறிஸ்த்தவர்களால் இன்று உலகத்தை நிரப்பிவிட்டான்.
வேத வார்த்தைக்கு முழுமையாக கீழ்படிய விரும்பினாலே போதும் தேவன் தெரிவிக்கவேண்டிய உண்மைகளை நிச்சயம் தெரிவிப்பார். "நாங்கள் கீழ்படியவும் மாட்டோம், யார் சொல்வதையும் (இயேசு "என் பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்வ்தைகூட) நம்பவும் மாட்டோம், ஆனால் நாங்கள் அறிந்ததுமட்டும்தான் உண்மை மற்றவர்கள் எல்லோரும் தப்பு" என்று உறுதியாக தீர்மானித்து இடறிபோகிறவர்களை வைத்து தேவனால் என்ன செய்யமுடியும்?
திரித்துவம் என்று ஒரு கொள்கையை சொல்லி, தேவனையும இயேசுவையும் ஆவியானவரையும் தனித்தனியாக பிரித்து தனிதனி தேவனாக்கி கொள்கை உருவாக்கி வைத்திருப்பவர்களை முற்றிலும் தவறானவர்கள் என்று நான் சொல்லவரவில்லை. அதில் உள்ள உண்மையை புரியாமல் இருக்கிறார்கள் ஒரே ஒரு சின்ன புரிதல் தவறுதான் அங்கு இருக்கிறது. ஆகினும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்குமேல் ஏறி முன்னுக்கு வரமுடியாதவர்கள் என்பதும் அதற்க்கு மேல் உணரும் இருதயம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதும்தான் உண்மை.
அதாவது ஒரு பெரிய பில்டிங் கட்டப்படும்போது அதில் வங்கிகள், முதலாளிகள், என்ஜினியர்கள், பணியில் இருந்து கொத்தனார்கள் சித்தாள்கள் பணிவரை அவரவர் தகுதிக்கு தகுந்த பணி உண்டு! பெரிய பணியில் இருப்பவர்கள் அந்த கட்டிடம் பற்றியும் தான் ஓணர் பற்றியும் அதிகம் உண்மையை அறிந்திருப்பார்கள் ஆனால் சிறிய பணியை செய்பவர்களுக்கு அவ்வளவு விபரம் தெரியாவிட்டாலும் அவர்களும் இந்த கட்டிடம் கட்டப்பட கடுமையாக உழைப்ப்பார்கள்.
அதுபோல் தேவ ராஜ்யம் கட்டப்படுவது என்பது ஒரு மிகப்பெரிய பிராஜெக்ட் வேலைக்கு சமமானது. அதில் அவரவர் தகுதிக்கு தகுந்த அனேக வேலைகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் மேலான வேலைக்கு முன்னேறி வரமுடியாது. ஆகினும் அவர்களின் பணியும் முக்கியமான ஒன்றும் தேவ ராஜ்ஜியம் கட்டபடுவதில் பங்கும் பாத்திரமும் அவர்களுக்கும் உண்டு. எனவேதான் எப்பொழுதுமே நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்புவதில்லை. அவரவர் தகுதிகள் எண்ணங்கள் இருதய சிந்தனைகள் விசுவாசம் மற்றும் வேண்டுதல்கள் கீழ்படியும் நிலை, இவற்றிக்கு தகுந்தால்போல்தான் தேவன் தன்னைப் பற்றி வெளிப்படுத்துவார்!
எனவே அன்பானவர்களே திரித்துவம் என்ற வேதத்தில் இல்லாத கொள்கையை ஒழிப்போம்!
இயேசு வழியாக தேவனை தொழுவோம், தேவன்தான் இயேசு என்று சொல்லுவோம்! ஆவியானவரே தேவன் என்று துதிப்போம்!தேவன் ஒருவரே!
-- Edited by SUNDAR on Saturday 31st of December 2011 11:17:10 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//நான் மீண்டும் சொல்வது "தேவன் ஒருவரே" என்று வேதம் திட்டமாக சொல்வது போல் எடுத்துகொண்டால், தேவனின் இன்னொரு ஆள்த்துவமான இயேசுவும் தேவனும் ஒருவரே என்று எடுத்து கொள்ளுங்கள். //
//அல்லது தேவனும் இயேசுவும் தனிதனி என்று எடுத்து கொண்டால் இயேசுவை தேவனுக்கு சமம் என்று சொல்லாதீர்கள் என்பதே வேதத்தின் அடிப்படையிலான என்னுடய கருத்து. //
என்ன பிதற்றல் இது??? "தேவன் ஒருவரே" என்று வேதம் திட்டமாக சொன்னால் இயேசுவும் தேவனும் தனி என்று எப்படி சொல்லலாம்? ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்!
//திரித்துவம் என்ற கருத்தை தவறு என்று நான் இங்கு சொல்ல வரவில்லை!//
//திரித்துவம் என்று ஒரு கொள்கையை சொல்லி, தேவனையும இயேசுவையும் ஆவியானவரையும் தனித்தனியாக பிரித்து தனிதனி தேவனாக்கி கொள்கை உருவாக்கி வைத்திருப்பவர்களை முற்றிலும் தவறானவர்கள் என்று நான் சொல்லவரவில்லை.//
//எனவே அன்பானவர்களே திரித்துவம் என்ற வேதத்தில் இல்லாத கொள்கையை ஒழிப்போம்! //
நீங்க என்ன சொல்லுறிங்க என்பது உங்களுக்கு புரிந்து தான் எழுதுகிறீர்களா?? திரித்துவம் என்பது சரியா? தவறா?
//அதேபோல்தான் தேவத்துவமும்! "ஒரே கடவுள்" என்று எடுத்து கொண்டால், இயேசு, ஆவியானவர், தேவன் எல்லோரும் ஒருவரே. இல்லை நீங்கள இயேசுவை தனித்தாய பிரித்துதான் பார்ப்போம் என்று சொன்னால் அவர் தேவனுக்கு சமம் என்று சொல்வது "பிதா என்னிலும் பெரியவர்" என்ற இயேசுவின் வார்த்தையே பொய்யாகிவிடும். //
இயேசு, ஆவியானவர், தேவன் எல்லோரும் ஒருவரே என்றால் அப்புறம் எப்படி பிதா கிறிஸ்துவிலும் பெரியவராய் இருக்க முடியும்? இருவரும் ஒருவரே என்றால் இயேசு யாரிடம் ஜெபிக்கிறார்? யாரிடம் ஆவியை ஒப்படைக்கிறார்? ஒருவர் என்றால் ஒன்று என்பது தங்களுக்கு தெரியுமா?
// யார் சொல்வதையும் (இயேசு "என் பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்வ்தைகூட) நம்பவும் மாட்டோம்//
பிதா இயேசு கிறிஸ்துவிலும் பெரியவர் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஒருவர் மற்றொரு வரை விட பல்வேறு விதங்களில் பெரியவராகவோ அல்லது சிறியவராகவோ இருக்கலாம். நீங்கள் உங்கள் நண்பரை விட உயரத்தில் பெரியவராய் இருக்கலாம் ஆனால் இருவரும் மனிதர்களே!
சரி கிழே உள்ள வசனங்களில் இயேசு என்ன சொல்லுகிறார்?
இயேசு நல்லவரா?
மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;
என்ன பிதற்றல் இது??? "தேவன் ஒருவரே" என்று வேதம் திட்டமாக சொன்னால் இயேசுவும் தேவனும் தனி என்று எப்படி சொல்லலாம்? ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்!
நீங்க என்ன சொல்லுறிங்க என்பது உங்களுக்கு புரிந்து தான் எழுதுகிறீர்களா?? திரித்துவம் என்பது சரியா? தவறா?
தேவன் மூன்று ஆளத்துவமாக அல்லது திரித்துவமாக செயல்பட்டார் என்பது சரியே! ஆனால்அந்த திரித்துவ்த்துக்குள் தேவனை மட்டுபடுத்த நினைப்பது சரியல்ல!
காரணம் அவர் மனுஷ கணிப்புக்கு அப்பாற்பட்டவர்.
சகோதரர் ஜான் அவர்களே நான் என்ன எழுதுகிறேன் என்பதை புரிந்து பலமுறை நிதானித்து அறிந்துதான் எழுதுகிறேன் வசனத்தை படித்து நமது மூளை அறிவை வைத்து தேவனை அறியவிரும்பினால் என்னுடைய வார்த்தைகள் பிதற்றலாகதான் தெரியும். தேவனை அறிந்துவிட்டு பின்னர் வசனத்தை படியுங்கள் அது வேறு விதமாக தெரியும்.
புரியாதவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் என்ன விளக்கினாலும் அது தங்களுக்கு புரியப்போவது இல்லை.
கர்த்தருக்கு சித்தமானால் எனக்கு தெரிந்த வேறு எதாவது ஒரு உதாரணத்தின் மூலம் சரியாக விளக்க முயல்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனை பற்றிய திரித்துவ நிலையை விவரிக்க ஒரு ஐஸ் கட்டியை உதாரணமாக கூறுவது உண்டு. அதாவது ஐஸ் கட்டியானது ஒரே நேரத்தில் திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளில் இருக்கும் அது போன்று ஒரே தேவனும் மூன்று நிலைகளில் இருக்கிறார் என்று விளக்குகிறோம். இங்கு அதன் அடிப்படையிலேயே நானும் ஒரு விளக்கம் தருகிறேன்.
ஆதியிலேயே தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடினார் - அது வாயு நிலை
பின்னர் கண்ணுக்கு தெரியாத தேவன் கண்ணுக்கு தெரியும் மாம்சாமானர் - திட நிலை.
பின்னர் ஆயத்தமானவர்கள் மேல் பாய்ந்தோடும் நதியாகிய ஆவியானவராகிறார் - திரவ நிலை.
என்னுடய கருத்துப்படி மூன்று நிலையில் செயல்பட தேவன் மூன்று பேராக மட்டும்தான் இருக்கமுடியும், இருக்கவேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. தேவனுடய ஆவியை யாரும் அளவிட்டு கூறிவிட முடியாது!
ஏசாயா 40:13கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
என்று வேதம் சொல்லியிருக்க, இங்கு அவரது ஆவியை ஒருஅளவுக்கு கொண்டுவர அவரை ஒரு வரையறைக்குள் கொண்டுவர அநேகர் முயல்கின்றனர்.
சாதாரணமான மண்ணை எடுத்து அதில் மனுஷனை படைத்து அவன் நாசியில் சுவாசத்தை ஊத, அவன் ஒரு ஆளத்துவமுள்ள மனுஷனாக எழுத்து நின்றான். அவன் விலா எலும்பில் இருந்து மனுஷியை படைக்க அவள் ஒரு ஆளத்துவமாக உருவானாள். அந்த இருவர் மூலம் கோடானுகோடி ஆள்த்துவங்களை தேவன் இந்த உலகத்தில் உருவாக்கியிருக்க, அனைத்து ஆள்த்துவத்தையும் உண்டாக்கிய அவரை மூன்று ஆள்த்துவத்துக்குள் அடக்குவது தேவனை அறியாமல் அவரை மட்டுபடுத்தும் செயல். அவர் நினைத்தால் எத்தனை ஆள்த்துவமாகவும் உருவெடுக்க முடியும். உங்களுக்கு மூன்று ஆள்த்துவமான அடக்கத்துக்குள் தெரிகிறார் என்றால் நீங்கள் அளவிட முடியாத தேவனை அளவிட்ட அறிவாளிகள் அதை உங்களுடையே வைத்து கொள்ளுங்கள் அதை அடுத்தவருக்கு போதனைஆக்க வேண்டாம்.
கொரிந்தியர் 12:6எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
என்ற வசனத்தை நான் கீழ்கண்ட விதத்தில் விளக்குகிறேன்
தேவனாகிய கர்த்தர் இவ்வாறு சொல்கிறார்:
ஏசாயா 44:24உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். ஏசாயா 43:10கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
இங்கு இரண்டுமுக்கிய காரியங்களை கர்த்தர் சொல்கிறார்
1. அவர் ஒருவராய் வானங்களை படைத்து பூமியை பரப்பினவர்
2. அவருக்கு முன்னால் ஏற்ப்பட்ட தேவன் இல்லை அவருக்கு பின்னர் இருக்கபோவதும் இல்லை.
இங்கு வசனம் தெளிவாக சொல்கிறது அவர் ஒருவர்தான் என்று இரண்டு மூன்று என்ற பேச்சுக்கே இடமில்லை!
இவ்வாறு நான் ஒருவர்தான் என்று சொல்லும் கர்த்தர் சிலஇடங்களில் இயேசுவை பற்றி குறிப்பிடும்போது அங்கு தன்னையே ஒப்பீடாக கூறுகிறார்.
சகரியா 11:12உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பதுவெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
சகரியா 11:13கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு;
இங்கு முப்பது வெள்ளிக்காசுக்கு மதிக்கபட்டவர் இயேசு ஆனால் கர்த்தரோ தன்னை முப்பது வெள்ளிக்காசுக்கு மதித்ததாக தன்னையே இயேசுவின் இடத்தில் நிறுத்தி கூறுகிறார்.
அடுத்து இயேசுவின் இரத்தமானது தேவனின் சுய இரத்தத்துக்கு
ஒப்பீடாய் கூறப்பட்டுள்ளது
அப் 20:28தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
எனவே, ஒரே தேவன் தன்னை பலவித பரிணாமங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நம்முடய மனுஷ கணக்கு படி ஓன்று என்றால் ஒரு மனுஷனுக்கு ஒரே ஆவி, ஒரே உயிர், ஒரே சரீரம் எனவே ஓன்று என்று பொருள் படலாம். ஆனால் தேவனை அவ்வாறு அளவிட்டுவிட முடியாது! ஒரே ஆவியானவர் இந்த உலகில் இயேசுவை ஏற்றுக்கொண்ட எந்தனையோ
கோடி மக்களுக்குள் தனிப்பட்ட ஆள்துவமாக தங்கியிருந்து ஒவ்வொரு வரையும் நடத்தவில்லையா? அதுபோல் உலகில் இத்தனை கோடி ஆள்த்துவங்க்ளை உருவாக்கியிருக்கும் தேவனை மூன்று ஆள்துவத்துக்குள் அடக்க முடியாது! அவ்வாறு அடக்கி அவரை அளவிட நான் விரும்பவில்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேதம் காட்டும் தேவனின் ஆள் தத்துவங்கள் மூன்று.. மூன்று ஆள் தத்துவங்களும் பரிபூரனமானவர்களே.. (வேத ஆதாரம் தங்களுக்கு தேவை என்றால் தருகிறேன்)
மிருகங்களின் ஆவிக்கும்,மனிதனுடைய ஆவிக்கும்,தேவ ஆவிக்கும் வித்தியாசம் உண்டு..தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்..
மனுஷனுடைய ஆவி,மிருகங்களின் ஆவி அநித்தியமானது.. தேவ ஆவி நித்தியமானது..மற்றுமல்லாது பூரணமானது...
நாம் நாம்மை தேவன் முன்பாக புல்லிற்கு சமானமாய் தாழ்துவதே நல்லது.. அவருடைய ஆள் தத்துவத்திற்கு உதாரணமாக நம்மை கூறிக்கொள்ள நாம் தகுதியற்றவர்கள் என்றே நான் கருதுகிறேன்..அவர் கர்த்தர்..நாம் அவர் கரத்தின் ஒரு கிரியை..
தேவ ஆவி ஒருவரே..ஆனால் பூரணமானவர்..எலும்புகளையும் கண நேரத்தில் உயிரடைய செய்கிறாரே!!..
///மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே..////
எனவே அனேக ஆள் தத்துவங்களை வேதம் சொல்லாத போது நாம் கவலைப்பட அவசியம் இல்லை சகோதரரே..
////வேதம் காட்டும் தேவனின் ஆள் தத்துவங்கள் மூன்று.. மூன்று ஆள் தத்துவங்களும் பரிபூரனமானவர்களே.. (வேத ஆதாரம் தங்களுக்கு தேவை என்றால் தருகிறேன்)////
நல்லது சகோதரரே! தாங்கள் இவ்வளவு உறுதியாக/ தெளிவாக விசுவாசிக்கும் பட்சத்தில் நான் எதுவும் மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை. தங்கள விசுவாசத்தின்படியே தங்களுக்கு இருக்கட்டும்.
JOHN12 wrote:
////மிருகங்களின் ஆவிக்கும்,மனிதனுடைய ஆவிக்கும்,தேவ ஆவிக்கும் வித்தியாசம் உண்டு..தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.. மனுஷனுடைய ஆவி,மிருகங்களின் ஆவி அநித்தியமானது.. தேவ ஆவி நித்தியமானது..மற்றுமல்லாது பூரணமானது...நாம் நாம்மை தேவன் முன்பாக புல்லிற்கு சமானமாய் தாழ்துவதே நல்லது.. அவருடைய ஆள் தத்துவத்திற்கு உதாரணமாக நம்மை கூறிக்கொள்ள நாம் தகுதியற்றவர்கள் என்றே நான் கருதுகிறேன்..அவர் கர்த்தர்..நாம் அவர் கரத்தின் ஒரு கிரியை. தேவ ஆவி ஒருவரே..ஆனால் பூரணமானவர்..எலும்புகளையும் கண நேரத்தில் உயிரடைய செய்கிறாரே!!.///
சகோதரர் அவர்களே! நான் மனுஷஆவியை/ ஆள்த்துவத்தை தேவனோடு ஒப்புட்டு பார்க்க இந்த கருத்தை கூறவில்லை. மாறாக ஒரே தேவன் தன்னை இன்னும் எத்தனை ஆள்த்துவமாகவும் காட்டமுடியும் (அவரை அளவிடமுடியாது) என்று வேதம் சொல்லும் கருத்தை வலியுருத்தவே முயல்கிறேன்.
JOHN12 wrote: /////எனவே அனேக ஆள் தத்துவங்களை வேதம் சொல்லாத போது நாம் கவலைப்பட அவசியம் இல்லைசகோதரரே.////
நிச்சயம் சகோதரரே! அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை, அவரை ஆராயவும் நான் விரும்பவில்லை. என்னுடய விசுவாசம் "காணக்கூடாத தேவனை ஆராய்ந்து அறிந்து அளவிடமுடியாது" என்பதுதான் அதற்க்கான வசன ஆதாரம் இதோ!
சங்கீதம் 145:3கர்த்தர்பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்;அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
ஏசாயா 40:13கர்த்தருடையஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
ஆனால் தேவன் வேதாகமத்தில் தன்னை மூன்றுவிதமாக வெளிப்படுத்திஇருக்கிறார் அதை நான் ஏற்கிறேன் ஆனால் "நான் மூன்றாக இருக்கிறேன்" என்றோ "எனக்கு மூன்று ஆள்த்துவம்தான் உண்டு" என்றோ தெளிவாக சொல்லாத பட்சத்தில் தாங்கள் அவரை மூன்று மட்டுமே என்று உறுதியாக தீர்மானித்து,அதற்குமேல் இன்னொன்று இருந்துவிடகூடாதுஎன்று தாங்கள்தான் கவலைப்படுவது போல் எனக்கு தெரிகிறது சகோதரரே.
தேவன் மூன்று ஆள்த்துவத்துக்கும் மேல் இருக்கிறார் என்பதற்கு நான் வசன ஆதாரம் தரவேண்டிய அவசியம் இல்லை காரணம் "யோபு 36:26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது;"என்று வேதம் சொல்வதால் என்னால் அவரது மகத்துவத்தை ஆராய்ந்து சொல்ல முடியவில்லை என்று பதில் சொல்ல முடியும்.
ஆனால் அவர் மூன்றாகத்தான் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருக்கும் தாங்கள் தங்களுடைய
விசுவாசத்துக்கு நேரடியான வசனம் எதுவும் இருந்தால் தெரியபடுத்துங்கள். ("பரலோகத்தில் சாட்சியிடுபவைகள் மூன்று" என்று சொல்லப்படும் வசனம் பிராக்கெட்டுக்குள் போடப்பட்டு பின்னாளில் சேர்க்கப்பட்டது. மேலும் மூவர் சாட்சியிவார்கள்என்றால் பரலோகத்தில் மொத்தம் மூன்றுபேர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று நாம் பொருள்கொள்ள முடியாது. பரலோகத்தில் மனுஷனை குறித்தோ அல்லாது தேவனைகுறித்தோ சாட்சியிடுபவைகள் மூன்றாக இருக்கலாம். அதற்கு மேலும் அந்த சாட்சிகளை கேட்கிறவர் ஒருவர் இருக்கலாமே! எனவே வசனம் தேவத்துவத்தை பற்றி இவ்வளவுதான் அறுதியிட்டு சொல்லாத பட்சத்தில், நமது முடிவாக எதையும் அளவிட்டு தீர்மானிக்க முடியாது)
தேவனை அளவிட முடியாது என்ற என்னுடய கருத்துக்கும் வசன ஆதரம் தந்துவிட்டேன்! தாங்கள் பிடிவாதம் பிடிக்கும் "தேவன் மூன்றுபேர்" என்ற கருத்துக்குநேரடி வசன ஆதாரம் தாருங்கள்!
இயேசு தன்னுடய வாயால் சொல்லும் போது நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னதோடு அவர்கள்இருவர்என்றும் சொல்லியிருக்கிறார்.
யோவான் 8:16.நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை,நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்
17இரண்டுபேருடையசாட்சிஉண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
அல்லாமல், தேவனுக்கு ஏழு ஆவிகள் உண்டு என்று வெளிப்படுத்தின விசேஷம்சொல்கிறது
வெளி 4:5அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடையஏழுஆவிகளாகியஏழுஅக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
இன்னிலையில் தேவனுக்கு மூன்ற ஆள்தத்துவம் மட்டும் தான் என்று சொல்லி எதன் அடிப்படையில் பிடிவாதம் பிடித்து தேவனை மட்டுபடுத்துகிரீர்கள்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தரை உயர்வாக என்னுதால் நிச்சயம் நல்லது..மாற்று கருத்து இல்லை.. நாம் உயர்வாக கருதுவது உண்மையில் கர்த்தருக்கு மகிமையை உண்டாகுவதா என்பதையும் நாம் கவனிக்கவேண்டும் அல்லவா.
அல்லாமல், தேவனுக்கு ஏழு ஆவிகள் உண்டு என்று வெளிப்படுத்தின விசேஷம் சொல்கிறது
Bro.Sundar Wrote////வெளி 4:5 அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
இன்னிலையில் தேவனுக்கு மூன்ற ஆள்தத்துவம் மட்டும் தான் என்று சொல்லி எதன் அடிப்படையில் பிடிவாதம் பிடித்து தேவனை மட்டுபடுத்துகிரீர்கள்?////
நான் மட்டுபடுதுவதாக நீங்கள் கருதுகிறீர்கள் அவ்வளவே!
சாலமோனின் ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சியை நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்..பிரதிச்டையின் பின் கர்த்தர் பின்வருமாறு கூறுகிறார்..
II நாளாகமம் 7:16 என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
தேவநாமம் தரிபிக்கபட்ட எந்த சபையிலும் தேவ கண்களும் இருதயமும் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்களாக..
இந்த ஏழு சபைகளிலும் கர்த்தர் ஏழு கண்களை வைத்திருப்பார்.. இந்த ஏழு கண்களே ஏழு ஆவிகள் என்பதயும் அறிவீர்களாக..
வெளி 5:6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
அவர் ஆலயமான நம் மீதிலும் கண்களை வைத்து ஆலோசனை சொல்லுகிரவராய் இருக்கிறாரே..(ஆவியை வைத்து)
சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து(ஆவியை வைத்து), உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
Bro.Sundar////தேவன் மூன்று ஆள்த்துவத்துக்கும் மேல் இருக்கிறார் என்பதற்கு நான் வசன ஆதாரம் தரவேண்டிய அவசியம் இல்லை காரணம் "யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது;" என்று வேதம் சொல்வதால் என்னால் அவரது மகத்துவத்தை ஆராய்ந்து சொல்ல முடியவில்லை என்று பதில் சொல்ல முடியும்.///
சகோதரரே யோபு ஆகமத்தில் யோபு பேசின வசனங்களை கூறாமல் நிதானமில்லாமல் பேசிய யோபுவின் நண்பன் எலிகூ கூறியதை தான் நீங்கள் காண்பித்துள்ளீர்கள்..எனவே இப்போது தாங்கள் அனேக ஆள்தத்துவத்திற்கு ஆதாரம் தரலாம்..
Bro Wrote////தேவனை அளவிட முடியாது என்ற என்னுடய கருத்துக்கும் வசன ஆதரம் தந்துவிட்டேன்! தாங்கள் பிடிவாதம் பிடிக்கும் "தேவன் மூன்றுபேர்" என்ற கருத்துக்குநேரடி வசன ஆதாரம் தாருங்கள்! ///
சகோதரரே..நான் பிடிவாதம் பிடிக்கவில்லை..நான் எப்போது மூவர் என்றேன்? ஒரே தேவன் மூன்று ஆள்ததுவமாய் கிரியை செய்கிறார் என்கிறேன்..இம்மூன்று ஆள்தத்துவமும் தனி தனியே பரிபூரனமானவர்கள்..ஒன்றாகவே தேவன் இருக்கிறார்..
தேவன் தமது சாயலாய் ஒருவனை படைத்தது ஆசிர்வாதமான சந்ததியை வரவழைத்தார்..
ஆவியால் நடத்தப்படும் நாமும் கூட தேவ சாயலுள்ளவர்களே!!!
தகப்பனின் மகத்துவும் அறியாத பிள்ளைகளாக நாம் இருக்க அவர் விரும்புகிறதில்லை..
நம் சாயலை கொண்டு கூட நாம் தேவசயாலை அறியலாம்.. அவர் நம்மை தேவ சாயலை படிக்காவிடில் அவர் எவ்வாறு மனிதராக தம்மை தாழ்த்த இயலும்!!
ஆகவே மனிதர்கள் எனபடுகிற நாம் ஆவி ஆத்மா சரீரம் ஆகியவைகளின் அடக்கம்..
ஒன்று குறைவுபடுமானால் நாம் மனிதர் அல்லவே..
(ஆனால் ஆவியற்றவர்கள் என வேதம் குறிபிடுகிற மனிதர்களும் உண்டு..
யூதா 1:19 இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.)
ஆவி,ஆத்மா சரீரம் இமூன்றும் சேர்ந்தால் தான் ஒரு கிரியை நம்மால் செய்ய முடியும்..
ஆனால் நம் தேவன் தனித்தனியே கிரியை செய்ய வல்லமையுடையவர்.. இம்மதிரிகளை கொண்டு நீங்கள் தேவன் மூன்று ஆள் தத்துவமாய் கிரியை செய்வதை அறியலாம்..
அளவில்லாத ஆவி என நீங்கள் குறிப்பது தேவ ஆவியின் மகத்துவத்தையே அன்றே அனேக ஆள்தத்துவங்களை அல்ல..
உலகெல்லாம் சுற்றி பார்க்கிற அவரது கண்களையே நீங்கள் அளவில்லாத ஆவி என்கிறீர்கள்..
Bro Wrote///இன்னிலையில் தேவனுக்கு மூன்ற ஆள்தத்துவம் மட்டும் தான் என்று சொல்லி எதன் அடிப்படையில் பிடிவாதம் பிடித்து தேவனை மட்டுபடுத்துகிரீர்கள்?////
மூன்று என்பதை எண்களின் அடிபடையில் பார்க்காதீர்கள் சகோதரே.. எல்லாம் வல்ல தேவனின் மூன்று பரிபூரண தேவ ஆள்தத்துவங்களாக பாருங்கள்..மேற்சொன்ன ஆள்தத்துவங்கள் பரிபூரனமானவர்கள் என நீங்களே விசுவசிகிறீர்களே..
அவ்வாறிருக்க எதற்க்காக அனேக ஆள் தத்துவங்கள் என கூறி மூன்று ஆள் தத்துவங்களின் தேவ தன்மையின் பூரணத்துவத்தை மீறி பேசுகிறீர்கள்..
அனேக ஆள் தத்துவங்கள் என்பது கற்பனையே!!! அனேக ஆள் தத்துவம் என்போமாகில் நாம் தேவசாயல் அற்றவர்கள் என மறுதலிகிறவர்களாவோம்...
தேவன் மிக பெரியவர்..பரிபூரணமானவர்..
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
இந்த வசனம் நம் இயேசு கொடுத்த கட்டளை.. பரிபூரண தேவதன்மையின் சொருபமான அவர் கொடுத்த கட்டளை..இதில் அநேகம் ஆள்ததுவதை பற்றி எங்குள்ளது..மூன்று ஆள்ததுவதை பற்றி தானே உள்ளது..
இனி தங்களின் இஷ்டம் ஏற்றுகொல்வதும்,ஏற்றுகொள்லாததும்...
கர்த்தர் சரியான பாதையில் நம் அனைவரையும் வழிநடத்துவாராக..